செவ்வாய், 8 ஜூலை, 2014

களவாடிய பொழுதுகள்! (STOLEN HEART)

களவு கொடுத்தலும், களவாடுதலும்
வாடிக்கை தான் நமக்கு !!

களவுப்பொருளை பதுக்கும் இயல்போடு
விழி விளிம்பில் ஒளித்துவைப்பாய்
அந்தமந்திரப்புன்னகையை
மனத்திரையில் தீட்டி
தேடுவதாய் நானும்
தொலைந்த பொருளுக்கு
வருந்துவதாய் நீயும்
அரங்கேற்றுவோம்
ஒரு அழகியநாடகத்தை !!

எத்தனையோ முறை
நீ பதைபதைத்தும்
காட்டிக்கொண்டதே இல்லை
நான் களவு கொடுத்ததையும்
சமயங்களில் களவாடியதையும் !!


55 கருத்துகள்:

 1. “தேடுவதாய் நானும்
  தொலைந்த பொருளுக்கு
  வருந்துவதாய் நீயும்“
  ம்...ம்... நடக்கட்டும்
  உணர்வுகளை மென்மையாகச் சொல்ல ஒரு தனித்திறன் வேண்டும் பா.
  உனக்கது இயல்பாய் இருக்கிறது. அதனால் உலகத்தையே புரட்டி நடத்தும் உணர்வுகளையும் மெல்லிசாய்ச் சொல்ல முடிகிறது. மலரினம் மெல்லிது!... “களவு“ன்னு வச்சாம்பாரு நம்ம தாத்தன்மார்! பெரிய களவாணிக தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா இத்தனை பணிகளுக்கு நடுவே எழுதியதே நீங்கள் தந்த உற்சாகத்தில் தான் அண்ணா! நேற்று உங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் பேசநேர்ந்தபோது அவங்க சொன்னாங்க. உன்னை மட்டும் இல்ல , எப்படியே என்கரேஜ் பண்ணி அவரு ஒரு நூறு பேரையாவது வளர்த்திருப்பார்ப்பா என்று. ஸ்பெஷல் தாங்க்ஸ் அண்ணா!

   நீக்கு
 2. ஆக, காவல்துறைக்கு வேலை இல்லாமல் பண்ணீட்டீங்க போல! ரொம்ப பெரிய மனசுதான் "ரெண்டு பேருக்கும்"! நல்லாயிருங்கப்பா "திருட்டுப் பசங்களா"!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. \\இதை பார்த்து சிரிப்பு அடக்கவே முடியவில்லை. சொன்ன விதம் நன்று nice ரசித்தேன் //

   நீக்கு
  2. எப்டி வருண் சகா, ரெண்டு மொழியிலும் இவ்ளோ friendlyயா கருத்து சொல்லமுடியிது:)) நன்றி சகா!!

   நீக்கு
 3. ///காட்டிக்கொண்டதே இல்லை
  நான் களவு கொடுத்ததையும்
  சமயங்களில் களவாடியதையும் !!////

  எல்லோரும் இப்படிதான் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கின்றனர்...

  நல்ல கவிதை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெமினி, கமல், சிம்புவுக்கு பின் நீங்கதான் வலை உலகில் ஒரு talk இருக்கே. நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்:)

   நீக்கு
 4. நானும் கவிதை படிச்சுட்டேன் ,....நானும் கவிதை படிச்சுட்டேன்

  இதை ஆத்தா நான் பாஸாகிட்டேன் என்ற சினிமா வசனம் போல படிக்கவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹப்பா! ஒரு வழியா கவிதை படிசிட்டார்பா. நன்றி சகா!

   நீக்கு
 5. அடடா, என்னமா ஒரு மென்மையான கவிதை.
  இந்த நாடகத்தை நானும் பார்த்துட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனையோ முறை
   நீ பதைபதைத்தும்
   காட்டிக்கொண்டதே இல்லை
   நான் களவு கொடுத்ததையும்
   சமயங்களில் களவாடியதையும் !!
   என் அம்மு ரொம்ப சுட்டி தான். களவாணிப் பொண்ணு காட்டி கொண்டதே இல்லை.
   வர வர ரொம்பவே அசத்திறீங்கம்மா . எப்படி எல்லாம் சித்தனை துளிர் விடுகிறது அம்முவுக்கு. வாழ்த்துக்கள் ....! வாழ்த்துக்கள் ....!

   நீக்கு
  2. அச்சச்சோ! பார்த்துடீங்களா! நன்றி சகோ அண்ட் செல்ல இனியா!

   நீக்கு
 6. இனிய தோழி!...

  கொடுத்த களவு! எடுத்த கணக்கு!
  தொடுத்த உணர்வின் தொகுப்பு!

  இத்தனை இலகுவாக இயல்பாக எழுத
  உங்களால்தான் இயலும்... மிக மிக அருமை!

  ரசித்தேன்!... நிறைத்தேன் நெஞ்சத்தில்...

  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதைக்கு கவிதை அட்டகாசம் தோழி! பொழுது கிடைக்கவில்லை! உங்களிடம் பேச நிறைய இருக்கு தோழி! விரைவில் chatவோம்:))

   நீக்கு
 7. அழகான உணர்வுகள். வெளிப்படுத்தப்பட்ட விதம் மிகவும் மென்மை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. ஆளுக்காள்
  களவெடுப்பதும் களவுகொடுப்பதும்
  காட்டிக்கொடுக்காமல்
  அவரவர் அன்பை ஆய்வு செய்யவா?

  பதிலளிநீக்கு
 9. அருமை.....

  அழகான நாடகம்! அதில் தான் எத்தனை அன்பு....

  பதிலளிநீக்கு
 10. ரசிக்க வைத்தது கவிதை. சூப்பர்மா.

  பதிலளிநீக்கு
 11. களவுக்கோர் கவிதையா ? அருமை.
  சகோதரி எனது பதிவு தற்போது ''எனக்குள் ஒருவன்'' படிக்க என வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 12. களவும் கற்று மற என்று இதற்குத்தான் சொன்னார்களா ?
  த ம 1 2 3 4 5 6 முக்கியமான என் ஏழாவது வாக்கு !

  உங்களுக்கு என் நன்றி ,காண்க >>>http://www.jokkaali.in/2014/07/blog-post_8.html

  பதிலளிநீக்கு
 13. நல்ல பொழுதுகள்!!

  வாழ்த்தக்கள் தோழி.

  பதிலளிநீக்கு
 14. அற்புதம்
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்குக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. //தேடுவதாய் நானும்
  தொலைந்த பொருளுக்கு
  வருந்துவதாய் நீயும்
  அரங்கேற்றுவோம்
  ஒரு அழகியநாடகத்தை !!// அழகு நாடகம்..அருமை தோழி..வாழ்த்துக்கள்!
  த.ம.9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கிரேஸ்! போன பதிவிற்கே உங்களுக்கு thanks சொல்ல நெனச்சேன். நிஜமாவே பிஸி:(( சாரி டா:( and thanks :)

   நீக்கு
 16. அருமையான அழகிய கவிதை.நன்றி சகோதரியே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்!!

   நீக்கு
 17. மௌனமான நேரம்
  மௌனமாக ஒரு காதல் நாடகம்
  மௌனமாக அரங்கேறியது!

  மிகவும் ரசித்தோம்!

  //தேடுவதாய் நானும்
  தொலைந்த பொருளுக்கு
  வருந்துவதாய் நீயும்
  அரங்கேற்றுவோம்
  ஒரு அழகியநாடகத்தை !!

  நீ பதைபதைத்தும்
  காட்டிக்கொண்டதே இல்லை
  நான் களவு கொடுத்ததையும்
  சமயங்களில் களவாடியதையும் !

  இந்தப்பதிவைக் க்ளிக்கிய போது கணினியின் நினைவாற்றல் மங்கிப்போனதால் கஸ்தூரி அவர்களின் செல்ஃபோன் கவிதைக்கு வழி காட்டிச்சு.....கவிதை...கிடைக்க....ஆஹா நினைவு தப்பினாலும் நம்ம கம்ப்யூட்டர் ஒரு நல்ல கவிதைய காமிச்சுருக்கேனு அதை ரொம்பவே ரசித்தோம்!!!! கணினியின் அல்ஜிமர் வாழ்க!

  பதிலளிநீக்கு
 18. நன்றி சகா! நான் கூட நினைத்தேன் ஏன் இப்டி கமென்ட் போடீங்கனு:)) கஸ்தூரி என்கிற பேரில் கவிதை எழுதியது நான் தான்:)) அவர் என் pet name மது என்கிற பேரில் எழுதுறார். ரொம்ப குழப்புகிறோமோ?:))

  பதிலளிநீக்கு
 19. ரசித்து 2முறை வாசித்தேன். அழகான கவிதனை நன்றாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 20. களவும் கற்று மற, என்பதின் அர்த்தமே இன்றுதான் புரிந்தது. அது சரி... இது களவாடியா இதயங்கள் தானே.. எப்படி பொழுது ஆகியது? ஒ.. ஒருவேளை இதயமே ஒரு பொழுதோ?

  பதிலளிநீக்கு
 21. களவாடிய பொழுதுகள் ரசிக்க வைத்தது.
  அருமை.

  பதிலளிநீக்கு
 22. ரசித்தேன்
  மகிழ்ந்தேன்
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 23. “ பூக்களும் வண்ணத்துப் பூச்சியும் “
  .................................................................
  ..........................................................................
  கவிதையை உணர்ந்தேன்!
  அருமை சகோதரி!

  பதிலளிநீக்கு
 24. வலைச்சரத்தில் தங்களைக் கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து படிப்பேன். வாழ்த்துக்கள்.
  www.drbjamblingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  பதிலளிநீக்கு
 25. நாடகம் நன்றாக இருந்தது.... ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி

  பதிலளிநீக்கு
 26. கவிதை அருமை.

  வலைச்சரம் வழியே தங்கள் வலையை அறிந்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 27. வாழ்க நலம்..
  அன்புடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி..
  தங்களின் எழுத்தில் - எண்ணங்களின் உயர்வு தெரிகின்றது..
  அபிராமவல்லி என்றென்றும் துணையிருப்பாளாக!..
  வாழ்க பல்லாண்டு!..

  பதிலளிநீக்கு
 28. //காட்டிக்கொண்டதே இல்லை
  நான் களவு கொடுத்ததையும்
  சமயங்களில் களவாடியதையும்!..//

  அழகிய சொல்லாட்சியுடன் மனம் கவர்கின்றது - கவிதை..

  பதிலளிநீக்கு
 29. உங்கள் கவிதைகளின் ரசிகராகி விட்டேன். தேர்ந்த கவிஞரால் மட்டுமே இப்படி எழுத முடியும். பாராட்டுக்கள்
  பொதுவாக பெண்கள் இதுபோன்ற கவிதைகளை எழுதும்போது ஆண்கள் மனநிலையில் உள்ளது போலவே எழுதுவார்கள். அல்லது பெண்ணிலையை உரைப்பதாக அமையும் ஆனால் இந்தக் கவிதை அப்படி இல்லமல் இருபாலரின் மனநிலைக்கும் பொருந்துகிறது.

  பதிலளிநீக்கு
 30. சகோதரி,

  முத்துநிலவன் அய்யா அவர்களின் பின்னூட்டத்தை படித்த பிறகு நான் சொல்ல ஒன்றும் இல்லை என தோன்றிவிட்டது !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு