திங்கள், 30 ஜூன், 2014

வனமாகும் சுவர்கள்!!

நுகர்ந்த நொடியில்
சுவைமொட்டுகள் விரியும்
சுகம் இழந்தது சமையலறை
தேவியக்காவிற்குப் பின்


தீபம் துலங்க, பத்தி மணக்க
ஒளிர்ந்த  பூஜையறை
விசும்பியது
இந்துமதியின்
இடமாறுதலுக்குப் பின்

விழி மலர்த்தும்
ரோசாக்கள் அற்று
வெறிச்சென்றிருந்தது
பூரணியின் பிரிவுக்குப்
பின்னான பால்கனி

ஆனால் ஒவ்வொருமுறை
வண்ணம் தீட்டப்படும்போதும்
ஒரே எதிர்பார்ப்புத்தான்
எல்லாச் சுவர்களுக்கும்

எங்கே வரையப்பட போகின்றன
மற்றொரு யானையும்
மலைகளும், நதிகளும்
மழலை கைத்தடங்களும்

மற்றொரு மானோ மயிலோ
நுழையாத வரை ஏங்கி நிற்கும்
வனமாகும் வரமின்றி
சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!!








25 கருத்துகள்:

  1. என்ன அழகான சிந்தனை... குழந்தைகளின் படைப்புகளை பெற்றவர்கள்தான் ரசிக்கணுமா என்ன...? சுவர் என்னமா ரசிக்குது... வனமாகும் வரமின்றி சுவராகவே வாழ வேண்டிய சுவர்கள் - சூப்பர்மா.

    பதிலளிநீக்கு
  2. எப்படி மைதிலி இவ்வளவு அழகா அருமையா கவிதை எழுதுறீங்க?
    வாழ்த்துகள்!

    நிறைக்கும் மகிக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன், :)
    http://thaenmaduratamil.blogspot.com/2014/06/tissue-roll-flowers.html

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. #சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!!#
    இருந்த போதிலும் சுவர் இருந்தால் தானே சித்திரமே வரைய முடியும் ?
    த ம 5

    பதிலளிநீக்கு
  5. சமகாலப் போக்கில்
    நிறுவனங்களின் விளம்பரங்களா
    இயற்கை கொஞ்சும் அழகு
    வண்ணம் தீட்டப்படும் சுவர்களா

    பதிலளிநீக்கு
  6. நினைவு தடமாய் நெருடவே கண்கள்
    அணையை உடைத்திட்ட தே!

    மலரும் நினைவுகள் மகத்தானவை தோழி!

    அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. அழகா அருமையா கவிதை எழுதுறீங்க... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. மிகச்சிறப்பான கரு! கவிதையாக அழகாக உருமாறியது சிறப்பு! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. சின்னக் குழந்தைகள் சுவற்றில் வரையும் ஓவியங்களை ரசிப்பதில் இருக்கும் சுகம்.... அடடா....

    மேலே கொடுத்திருந்த ஓவியமும் அழகு...

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. அழகான கவிதை...

    //மற்றொரு மானோ மயிலோ
    நுழையாத வரை ஏங்கி நிற்கும்
    வனமாகும் வரமின்றி
    சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!!///

    அருமையான வரிகள்....

    "அற்புதமான படைப்பாளி"

    பாராட்டுக்கள்....மைதிலி

    பதிலளிநீக்கு
  11. இந்திய நாட்டில் இயற்கை காட்சியை சுவற்றில்தான் பார்த்து ரசிக்க முடிகிறது

    பதிலளிநீக்கு
  12. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொர் ஏக்கம்!
    தன்னுள் உயிர்ப்பற்றிருந்தும் உயிர் பற்றத் துடிக்கும் சுவர்களின் ஏக்கம் உங்கள் காதுகளுக்குக் கேட்டது ஆச்சரியம்தான்!
    வனமாகும் கனவு விரைவில் கைகூடும்!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  13. மிக அருமையான வரிகள்...

    உறவுகளின் இருப்பிடம்
    உணர்வுகளின் இருப்பிடம்..

    பதிலளிநீக்கு
  14. இப்படி எல்லாம் என் அமுக்குட்டிக்கு மட்டும் எப்படி தோன்றுகிறது. உண்மையில் ஆச்சரியமாகவே உள்ளது. அருமையான சிந்தனைகள்.

    சுவர்கள் சித்திரத்தை
    கண்டு பெறும் ஏக்கம்
    உன் கவிதை கேட்டு தீரும்

    சிந்தனைக்குயிலே நீ செப்புவதெல்லாம் முத்துக்களே ! வாழ்த்துக்கள் செல்லம் ...!

    பதிலளிநீக்கு
  15. ரசித்தேன். இன்னும் முயற்சிக்கவும்.

    பதிலளிநீக்கு
  16. அழகியகவிதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. வரிகள் அனைத்தும் கவி பாடுகிறது.

    "//வனமாகும் வரமின்றி
    சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!!//"

    ஆஹா, அருமை என்ன ஒரு சிந்தனை. வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  18. மிக வித்யாசமான அருமையான கவிதை !

    " சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!! "

    கடைசி வரிகள் மொத்த கவிதைக்குமான‌ விளக்கமாக அமைந்தது திட்டமிட்டா இல்லை அப்ப‌டி அமைந்துவிட்டதா ?!

    சமையலறையில் சுவை மணக்க தேவியக்கா வேண்டும்...
    பூஜையறையின் தீபம் தூண்ட இந்துமதி வேண்டும்...
    மலர்ந்த ரோசாக்கள் பால்கனியில் நிறைந்திருக்க பூரணி வேண்டும்...
    இல்லையென்றால் அத்தனையும் சுவராகவே வாழ விதித்த சுவர்கள்தான் !

    அருமை !

    " நீங்க வேற சகோ :)) நான் எல்.போர்டு தான்!!... "

    நீங்களாச்சும் எல் போர்டு... நானெல்லாம் சைக்கிள்தான் ! அதுவும் குரங்கு பெடல் சகோ !!! :)) :)) ( சகோதரரின் சுருக்கம் சகோ என்றால் சகோதரிக்கும் அதே தான் இல்லையா ? ஆண் பெண் இரு பாலாருக்கும் பொதுவாக ஒரே வார்த்தை ! எப்பூடீ ? )

    " தேர்தல் திருவிழாக்கள் படிக்க ஆவலாக உள்ளேன்!! ... "

    http://saamaaniyan.blogspot.fr/2014/04/blog-post_18.html

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  19. மற்றொரு மானோ மயிலோ
    நுழையாத வரை ஏங்கி நிற்கும்
    வனமாகும் வரமின்றி
    சுவராகவே வாழவேண்டிய சுவர்கள்!!
    //
    ஆஹா அருமையான வரிகள்! டச்சிங்... டச்சிங்க்....பல அர்த்தங்களைச் சொல்லுகின்றன இந்த வரிகள்!!!! குழந்தைகளின் கைவண்ணங்கள் மிளிராத சுவர்கள் உண்டோ? வீடுகள்தான் உண்டோ?!!!!! நல்ல ரசனை!!!

    மிகவும் ரசித்தோம்! அருமை! சகோதரி!

    தாமதத்திற்கு மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  20. அரசு சுவர்கள் எல்லாவற்றையும் இவ்வாறு மாற்றிவிடலாம் போலிருக்கிறது, விளம்பரங்களை ஒழிக்க ! அருமையான கவிதை.... வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  21. வண்ணம் தீட்டப்படும் வனங்கள்
    மனம் நிறைக்கின்றன..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு