வெள்ளி, 13 ஜூன், 2014

வரலாறு முக்கியம் பாஸ்- நண்பன் விஜய்யும், friends வடிவேலுவும்

                    ஆங்கிலப்பாடத்தோடு எட்டாம் வகுப்பிற்கான சமூக அறிவியலும் எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் இல்லையா? எனக்கு history நடத்துறதுல ரொம்ப பிடிச்ச விஷயம் என்னன்னா நாம படிச்ச கல்கி, ரா.கி.ரங்கராஜன், பிரபஞ்சன் என்னும் பல விஷயத்தை கேட்க நமக்குன்னு சில அடிமைகள் சிக்குவது தான்.


            
                         

                                                                                                                                                                            ஆனா புத்தகத்தில் இல்லாத பல விசயங்களை ஏன் சொல்லுறேன் என்கிற அலைவரிசையை மாணவர்களிடம் உருவாக்கினால் தான்
வள ஆதாரம் என்னும் பாடத்தில் மீதேன் சுரங்கம் பற்றிய விவாதத்தில் பொறி பறக்க பங்கெடுப்பார்கள். அதற்காக வரலாற்றின் முக்கியத்துவத்தை பற்றி எட்டாம் வகுப்பின் முதல் வரலாற்று பாட வேளையில்  பேசத் தொடங்கினேன்.

               முன்னெல்லாம் போகி கொண்டாடும் போது பழைய பொருட்களை நெருப்பில் போடும் ஐதீகம் என்ற பெயரில் மதிப்புமிக்க ஓலைச்சுவடிகளை நம்ம ஆளுங்க எரிச்சுட்டாங்க, ஆனா அதன் மதிப்பு தெரிந்த உ.வே.சு ஐயாவால் தான் மீதி ஓலைச்சுவடிகளைஆவது மீட்க முடிந்தது. அப்போ ஒரு பொருளோட மதிப்பு தெரியனுமா அதோட வரலாறு தெரியனும் இல்லையா? நான் கேட்டு முடித்த போது வகுப்பில் ஒரு சில கண்களில் மட்டும் சீரியல் பல்ப் வெளிச்சம். so பலரும் இன்னும் பார்ம் க்கு வரலை.

           இப்போ இதை ட்ரை பண்ணிபார்க்கலாம். டே! நண்பன் படத்தில் இலியானா ஒரு பார்ட்டில ஒரு பழைய வாட்ச் கட்டியிருக்குமே அப்போ அந்த பாரின் மாப்பிள்ளை என்ன சொல்லுவார்.

ஏ! எங்கே நான் வாங்கி தந்த வாட்ச்? எதுக்கு இப்படி பழைய வாட்ச்சை போட்டுருக்க? அப்படின்னு சொல்வான் மிஸ்.

விஜய் என்ன சொல்வார்?

நீங்க அம்மாவை மிஸ் பண்ணுறீங்களா? இது உங்க அம்மா வாட்ச் தானே?
அப்டின்னு கேட்பான் மிஸ் ( பாரபட்சம் இல்லாம மரியாத கொடுக்கிறாங்கப்பா)

அப்படிதான் ஒரு பொருளோட மதிப்பு தெரியாதவங்க அதை பழசுன்னு தூக்கி வீசுறாங்க, அதன் மதிப்பு தெரிஞ்சவங்க கொண்டாடுறாங்க,

நான் முடிக்கும் முன்னரே சித்திக் எழுந்து மிஸ் அப்படிதான் friends படத்தில் கூட ஒடஞ்சு போன வாட்ச் நானூறு வருஷம் பழையது அப்டின்னு ராதாரவி புலம்பும் போது வடிவேல் "அப்படி நான் கூட புதுசோன்னு நினைச்சேன்" சொல்லுவான்.

                                                   இப்போ எல்லா கண்ணுலயும் பல்பு வெளிச்சம். ஒரு விஷயம் தெளிவான வருகிற இந்த விழிகளின் வெளிச்சம் இருக்கே, அடடா!
நட்ட செடி பூத்த மாதிரி ஒரு பரவசம். பசித்தவனுக்கு உணவளித்தவன் பெரும் திருப்தி அந்த நொடியில் கிடைப்பது தான் என் job satisfaction.

நான் தொடர்ந்தேன். அப்படி தான் நம் நாட்டின் வரலாற்றும். நாம் தெரிந்து கொண்டால் அதன் மீது மதிப்பு அதிகரிக்கும். நாட்டின் முழு வரலாறையும்  தெரிஞ்சுக்கிட்டு ஹீரோ ஆகலைனாலும், நீங்க ஒண்ணுமே தெரியாமல் பழசு என்று நம் நாட்டை  தூக்கி வீசும் காமெடியன் ஆககூடத்தில்லையா? (ஏனோ மசூதி இடிப்புகளும், ரயில் எரிப்புகளும் நினைவுக்கு வந்தன) அதனால வரலாறு முக்கியம் அமைச்சரே! மாணவர்கள் கலகலப்பாய் வகுப்பை கவனிக்கத் தொடங்கினார்கள்.

(இந்த கிளாஸ்interestடா இருந்தா சொல்லுங்க. நான் ஒவ்வொரு  வகுப்பும்  முடிந்த உடன் உங்களுக்கும் இப்படி கலந்து கட்டி, கதை சொல்றேன், இல்லேன்னா அப்பீட் ஆகிக்கிறேன்)
 


51 கருத்துகள்:

  1. ஆசிரியை ஆயிருக்கனும்னு தோண வைச்சிட்டீங்க...வகுப்பு அருமை டீச்சர் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! அப்டியா! நன்றி தோழி! ஊரெல்லாம் அப்டி தான் கூப்பிடுது :) நீங்க தோழி என்றே சொல்லுங்கப்பா:)))

      நீக்கு
    2. ஓ..தோழி என்றே கூப்டுறேன்...
      வகுப்பு அருமைனு ஒரு flowla சொன்னேன் :)

      நீக்கு
  2. சினிமாவோடு இணைத்து சொல்லப்படும் கருத்துக்கள் மாணவர்களுக்கு எளிதில் மனதில் பதியும் என்பது உண்மை.
    வரலாறு பாடத்திற்கு அதிக முக்கித்துவம் கொடுக்கப் படவேண்டும். வரலாறு கற்பிக்க பெரிய அளவுக்கு அறிவு தேவை இல்லை என்ற தவறான கருத்து உள்ளது.சிறந்த ஆசிரியர்கள் மூலமே இப்பாடம் கற்பிக்க தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில் நல்ல ஆசிரியருக்கு பாடம் கொடுக்கப் பட்டிருகிறது. வாழ்த்துக்கள் .
    என்னைப் பொறுத்தவரை சமூக அறிவியல் பாடமே அனைத்துப் பாடங்களையும் விட சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! A.E.E.Oசார் இதை சொல்லும்போது கேட்கவே சந்தோசமா இருக்கே:) எல்லாரும் ஓகே சொல்றதால இதை தொடரலாம்னு பார்கிறேன். உங்களை போன்ற கல்வியாளர்கள் தரும் கருத்துக்கள் என் கற்பித்தலை கூர் படுத்திக்கொள்ள மிகுந்த உதவியா இருக்கும் சார்.கணக்கை தவிர வேற எதை கொடுத்தாலும் நடத்த பிடிக்கும். ஏன்னா எனக்கும் கணக்குக்கும் ரொம்ப ரொம்ப தூரம்:))

      நீக்கு
  3. பழமையான பொருட்கள் மட்டுமல்ல சகோதரி, பழமையான மனிதன் என்பதற்காக மரியாதைகூட சமூகத்தில் மறுக்கப்படுகிறதே அதுதான் வேதனை.
    Killergee
    www.Killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் சகோ! இந்த நிலையை மாற்ற முயல்வதே இந்த பதிவின் நோக்கம்:) நன்றி சகோ தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

      நீக்கு
  4. உங்கள மாதிரி (எல்லா மாணவர்களுக்கும் கிடைத்தால்)ஆசிரியர் கிடைக்க உண்மையிலேயே அந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். சிறப்பாக பாடம் எடுக்கின்றீங்க. உங்க க்ளாஸ் very interestநீங்க இப்படியான நிகழ்வுகளை கண்டிப்பா எழுதுங்க தோழி.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி தோழி . கொஞ்சம் பயந்துட்டே தான் தொடங்கினேன் போர் அடிச்சுடுமோனு? தொடர்ந்துட்டா போச்சு:))

      நீக்கு
  5. /இப்போ எல்லா கண்ணுலயும் பல்பு வெளிச்சம். ///
    இருண்டு கிடக்கும் தமிழகத்தில் வெளிச்சம் தர முடியதவராக தமிழக முதல்வர் இருக்கும் போது இந்த டீச்சரம்மா தனது கல்வி திறமையால் மாணவர்கள் மூலம் வெளிச்சத்தை கொண்டுவருகிறார்கள். பாராட்டுக்கள் டீச்சரம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுபோலும் கருத்துகள் தங்கள் நடுநிலையை காட்டுகின்றன:)
      தங்கள் பாராட்டுக்களை தலை வணங்கி ஏற்கிறேன் சகா:)))

      நீக்கு
    2. //தங்கள் பாராட்டுக்களை தலை வணங்கி ஏற்கிறேன் சகா///

      டீச்சரம்மா தப்பு பண்ணுறீங்க பாராட்டுக்களை தலை குனிந்து ஏற்க்க கூடாது தலை நிமிர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்

      நீக்கு
  6. (இந்த கிளாஸ்interestடா இருந்தா சொல்லுங்க. நான் ஒவ்வொரு வகுப்பும் முடிந்த உடன் உங்களுக்கும் இப்படி கலந்து கட்டி, கதை சொல்றேன், இல்லேன்னா அப்பீட் ஆகிக்கிறேன்)///

    இந்த முதியோர் பள்ளிக் கூடத்தில் கிளாஸ்interestடா இரூக்கு டீச்சர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! நன்றி சகா! ஆனால் ஒரு சின்ன திருத்தம். இப்படி பல வயதுடையோர் சேர்ந்தது படிப்பது முறைசாரா கல்வி:)
      டீச்சர் தொல்லை தாங்க முடியலைப்பா என்னும் உங்க மைன்ட் வாய்ஸ் இங்க கேட்குது.முதியோர் கல்வின்னு சொன்னா பல யூத் மனங்கள் உடையக்கூடும் இல்லையா:)))

      நீக்கு

    2. //டீச்சர் தொல்லை தாங்க முடியலைப்பா என்னும் உங்க மைன்ட் வாய்ஸ் இங்க கேட்குது.///
      நான் என்ன ரஜினியா வாய்ஸ் கொடுக்குறதுக்கு....பாராட்டுனா கூட அது ஏத்துக்க மாட்டிங்கிறேங்களே

      முதியோர் கல்வின்னு சொன்னா பல யூத் மனங்கள் உடையக்கூடும் இல்லையா:)))

      யூத்தான எனக்கு மனம் உடையவே இல்லையே

      நீக்கு
  7. அடடா தொடருங்கள் தோழி எனக்கு உங்க கிளாஸ்ல இருக்கிறது மாதிரி ஒரு பீலிங் வருதில்ல. நாமும் சரித்திரம் தெரிஞ்சு கொள்வது நல்லது தானே . நாமும் குழந்தைகள் போல கொஞ்ச நேரம் மகிழ்ந்திடலாமே. இல்லையா. தொடக்கமே நன்றாக உள்ளது.அசத்துங்க செல்லம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேங்க்ஸ் செல்லம். இப்டி தைரியம் கொடுக்க தோழிகளும், நண்பர்களும், சகோக்கள் இருக்கையில் தொடங்கிட வேண்டியது தான். அப்புறம் ஹோம் வொர்க் தரட்டுமா:)))

      நீக்கு
  8. இண்ரஸ்ட்டாகவே உள்ளது
    இனிப்பு தடவிய மாத்திரைப் போல
    தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒ! மிக்க நன்றி ரமணி சார் :)
      த.ம விற்கும். ஒரே சிஸ்டம் பயன்படுதரதால கஸ்தூரியால் மட்டும் தான் த.ம. வாக்களிக்க முடிகிறது. என்னை அனுமதிக்க மாட்டேன்கிறது. டி.டி அண்ணா எதாவது ஐடியா தந்த நல்ல இருக்கும். பாருங்க என்னால் ஓட்டு போடமுடியாலைன்னு வருத்தமா இருக்கு. ஆனா நீங்க ஒட்டு போட்டு என்னை உற்சாகப்படுத்தியதற்கு நன்றி சார்!

      நீக்கு
    2. ஒரே கணினி என்பதால் பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறேன் தோழி..தமிழ்மணம் பயனர் பெயர் உள்நுழைந்து தானே வாக்களிக்க முடியும்? ஒருவேளை வெளியேறாமல் மூடிவிட்டால் அப்படி எடுத்துக் கொள்கிறதோ? கஸ்தூரி அவர்கள் முடித்தவுடன், வெளியேறி மீண்டும் உங்கள் பயனர் பெயரில் உள்நுழைந்து முயற்சித்துப் பார்த்தீர்களா? ஏதோ எனக்குத் தோன்றியது :)

      நீக்கு
  9. வணக்கம்

    உண்மைதான் வரலாறுதான் ஒரு இனத்தின் தடயம் ... தடயம் அழிந்து விட்டால் அந்த இனமே அழிந்து விடும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் சகோ! த,ம விற்கும் வருகைக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  11. பசங்களோட மனப்போக்கை அறிஞ்சு ட்ரெண்டியா அவங்களோடவே கலந்துபேசி பாடத்தின் பக்கம் அவங்களைத் திருப்பற நல்ல டீச்சர் என் சிஸ்டர். நான் படிக்கிற காலத்துல எனக்கு ஒன்றிரண்டு சுவாரஸயமான இந்தமாதிரி டீச்சர்கள் கிடைச்சிருக்காங்க் படிக்கையில எல்லாரும மனசுல வந்து போனாங்க. நீங்க இப்படியே சுவாரஸ்யமா கிளாஸை கண்டின்யூ பண்ணுங்க மைதிலி டீச்சர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா நீங்க முரளி சார் ப்லாக்ல என் கவிதையை தங்கையின் கவிதைன்னு mention பண்ணினத பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டேன். உங்களை மாதிரி உற்சாகம் தர ஆள் இருக்கையில் தொடரலாம் னு தான் பார்கிறேன்.:)

      நீக்கு
  12. நல்லாவே கலந்துகட்டு அடிக்கிறீங்க... தொடருங்க...

    ரவசமான job satisfaction... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா ரமணி சார் க்கு போட்ட கமெண்டை கோச்சுக்காம கொஞ்சம் படிச்சு பாருங்களே. அண்ணா சொல்லீட்டிங்களா தொடர்ந்துடுவோம்:)

      நீக்கு
  13. பதில்கள்
    1. நீங்களே சொல்லறது மகிழ்ச்சி! நன்றி அண்ணா த,ம விற்கும் சேர்த்து !

      நீக்கு
  14. சூப்பர்மா.குழந்தைகள் விரும்பும்படி நடத்தினால் வேறென்ன வேண்டும் அவர்களுக்கு.சூப்பர்

    பதிலளிநீக்கு
  15. இது வரை ஆங்கிலம் கற்றுக் கொண்டிருந்த நான் இப்போது வரலாறும் கற்றுக் கொள்ள போகிறேன். மிக்க மகிழ்ச்சி சகோ. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா...முதலில் எனக்கும் அந்த தயக்கம் தான் இருந்துச்சு. இந்த பக்கம் வரவங்கள எல்லாம் பாடம் நடத்தியே விரட்டிடுவோமொன்னு :)) நன்றி சகோ. தொடர்கிறேன்.

      நீக்கு
  16. நல்லாவே சொல்லிக் கொடுக்கிறீங்க டீச்சர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சுரேஷ் சார் தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்!

      நீக்கு
  17. கல்லூரி நாள்களில் (1976-79) எங்களுக்கு இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்ற பாடத்தை எடுத்த ஆசிரியர் பாடம் முடிந்த பின் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய செய்தியைக் கூறுவார். செய்தியுடன் பாடமும் பதிந்துவிடும். தங்களது பதிவின் மூலுமாக அந்த நினைவு எனக்கு தற்போது வந்துவிட்டது.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார். இத்தனை ரசித்து கருத்திட்டதற்கு.

      நீக்கு
  18. பழுசு?

    பாடத்த பாடமா நடத்தாம படமாவே நடத்தீட்டீங்க போல . :)

    இந்த மாதிரி சமகால விஷயங்களை கலந்து கட்டி பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு எப்பவுமே மாணவர்கள் மத்தியில் நல்ல பெயருண்டு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பழுசு?//
      திருத்திட்டேன்:) same backspace same blood :))

      நன்றி சகா:)

      நீக்கு
  19. ஓ நீங்கள் ஆசிரியரா.. எனக்கு மிகவும் படித்த ஒரு பணி.. உங்களைப் போன்ற ஒரு எதார்த்த ஆசிரியர் தான் தற்போதைய தேவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹப்பா ! நன்றி சகோ:)
      இப்போல்லாம் டீசெர்சை கிண்டல் பண்றவங்க தானே அதிகம்.
      மேலும் கருத்திட்டமைக்கும் நன்றி:)

      நீக்கு
  20. எனது பெருமதிப்பிற்குரிய பேராசிரியர்களில் ஒருவர் ஜம்புநாதன். அவர் சொல்வார்
    எக்காரணம் கொண்டும் சினிமா விசயங்களை பாடம் நடத்துவதற்காக வகுப்பறையில் பயன்படுத்தக் கூடாது என.

    ஆனால் உங்களுக்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் உங்களை ஊக்குவிக்கின்றன. வாழ்த்துக்கள்.

    நானும் சில நேரம் சினிமாக் காட்சிகளை சொல்வது வழக்கம்தான்.
    அது என்போன்ற எல்.போர்டு ஆசிரியர்களுக்கு சரி.
    உங்களுக்கு அது சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியர் சொல்லி தப்பாகுமா?
      ஆனா மொத்த வகுப்பும் ஏனோ தானோன்னு கவனிக்கிறத விட ஒன்னுரெண்டு பேர் டைவர்ட் ஆகும்போது சமாளித்துக்கொள்ளலாம் எனும் ஆர்வகோளாறு ஒரு காரணம் :)
      //அது என்போன்ற எல்.போர்டு ஆசிரியர்களுக்கு சரி//.
      கற்றுகொண்டே இருக்கும் ஆசிரியர் ஓடிக்கொண்டே இருக்கும் நதி போன்றவர் என்பார்கள். எல் போர்டா இருக்கிறது தானே ஒரு நல்ல ஆசிரியர்க்கு அழகு. so என்னையும் எல் போர்ட் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளும்படி விண்ணப்பிக்கிறேன்:))

      நீக்கு
    2. ///பேராசிரியர் சொல்லி தப்பாகுமா?////

      ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும் என்பது அந்த கால பேராசிரியர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். காலம் மாறிப் போச்சு அதனால் சொல்லித் தரும் வழிகளும் மாறனும் இளைய சமுதாயத்தை சேர்ந்த உங்களை போல டீச்சர்கள்தான் புதுமையாக காலத்துக்கு ஏற்ப மாணவர்களின் மனநிலைகளை பரிந்து சொல்லி தரமுடியும் சொல்லித் தரணும்

      நீக்கு
  21. மாணவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை முன் நிறுத்தி பாடம் எடுத்தாலே அது வெற்றிதான்.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. அற்புதம் மைதிலி.....எனக்கு பிடிச்ச பாடம். அதான் ரொம்ப ஆர்வமாயிருக்கு....உனக்குள் எவ்ளோ நல்ல கருத்துக்கள், எண்ணங்கள்...உன்னை எப்போதும் சின்ன பிள்ளை போலவே பார்ப்பேனா... ஆனா அவ்ளோமெச்சூர்டா இருக்கு உன் பதிவுகள்...( ஒரு வழியா இப்படி வர கத்துக்கிட்டேன் பாத்தியா?)

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரி
    வரலாறு தெரியாதவனால் வரலாறு படைக்க முடியாது என்பது அம்பேத்கார் கூற்று. நாம் புதிய வரலாறு படைக்க வேண்டுமானால் நம் சமூகத்தின் வரலாற்றை நன்கு அறிந்திருந்தால் அது சாத்தியமாகும். நான் கூட சென்ற வாரம் ஓய்வு பாடவேளையின் போது 7 ஆம் வகுப்பிற்கு சென்று தென்னிந்திய அரசுகள் பாடத்திற்கு சில முன்னுரைகள் சொல்லி விட்டு வந்தேன். தங்கள் அனுபவம் உங்கள் தம்பிக்கு உதவும் அல்லவா! தொடர்ந்து பகிருங்கள். நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  24. ஒரே சிஸ்டம் என்றால் (த.ம.) வாக்களிக்க முடியாது...

    ஒரு லேப்டாப் வாங்கித்தர சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  25. அருமையா இருக்கு வகுப்பு ... முதல் நாள் வகுப்பு சினிமாவை உவமை படுத்தி ஆரம்பிச்சுடீங்க .. ஆனால் சில வரலாற்று கதாபாத்திரத்தை மாணவர்கள் புரிந்து கொள்ளும்படிச் செய்தால் சினிமாவை நாட வேண்டி இருக்காது என்று நினைக்கிறேன்..தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  26. எதை வைத்துச் சொன்னால் மாணவர்கள் கவனிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்வதே ஆசிரியரின் வெற்றி. அந்த வகையில் உங்களிடம் படிக்கும் மாணவர்கள் ரொம்ப குடுத்து வச்சவர்கள் டீச்சர். ம்ம் கலக்குங்கள்...

    பதிலளிநீக்கு
  27. வரலாறு என்றாலே அப்படி ஒரு கசப்பு எனக்கு - காரணம் எனக்கு வந்த வரலாறு ஆசிரியர்! :)))) பாடத்தை அப்படியே படிச்சு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு போயிட்டு இருப்பார்.

    இப்படி சுவைபடச் சொல்லிக் குடுத்தால் மீண்டும் வரலாறு படிக்கலாம்!

    பதிலளிநீக்கு