வெள்ளி, 26 செப்டம்பர், 2014

சிதைக்கப்ப(ட்)ட முடியாதவளின் சின்ன அறிவுரை!!





 *எனது வலி உனது வலி அல்ல என்பதை
உனது செய்கையால் காட்டியபின்
உன்னை நிராகரித்த என் முடிவு சரிதான் என
அழுத்தமாய் நிறுவியதற்கு நன்றி!



*நீ சிதைத்துக் காட்டியபின்
உலகுக்கு மட்டுமல்ல
உனக்கே புரிந்திருக்கும்
நீ என்னிடம் எதை நேசித்தாய் என!!

*நல்ல வேளை நான்
என்னை இழக்கவில்லை
உன்னை நிராகரித்ததால்
என் முகத்தை மட்டுமே இழந்திருக்கிறேன்!!

*ஒன்றை கவனித்தாயா
அந்த அமிலவீச்சுக்குபின்
முன்பைவிட அருவருப்பாய் இருக்கிறது
உனது மனம்!!!பாவம்!

*சிதலமடைந்திருக்கும் உன் ஆத்மாவை
சிகிச்சைக்கு அனுப்பிவை.
இது இந்த சிதைக்கப்பட முடியாதவளின்
சின்ன அறிவுரை!!

27 கருத்துகள்:

  1. படமும், உங்க கவிதையும் மனதை பாதிக்குது! :(

    கடுமையான சட்டமும், இதுபோல் குற்றங்களுக்கு துரிதமாக எடுக்கப்படும் கடுமையான தண்டனையும்தான் இதைச் சரி செய்ய முடியும், மைதிலி.

    பதிலளிநீக்கு
  2. #*சிதலமடைந்திருக்கும் உன் ஆத்மாவை
    சிகிச்சைக்கு அனுப்பிவை#
    இப்படிப் பட்ட பாவிகளை நடுத்தெருவில் நிறுத்தி கொளுத்தி விட வேண்டும் ,அதற்கு அப்புறம் ஆன்மாவுக்கு சிகிச்சை தரலாம் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அக்கா
    பெண்ணாய் பிறந்தததைத் தவிர என்ன பாவம் செய்திருப்பார்கள் நம் உடன்பிறவா சகோதரிகள். மனதில் வன்மமும் கொடூரமும் கொண்ட இப்படிப்பட்ட ஆண்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல் அமைந்திருக்கிறது தங்களது வரிகள். சமூகத்தின் அவலங்களைக் கருபொருளாக கொண்ட கனமான வரிகள். தொடருங்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  4. விருது பகிர்ந்துள்ளேன் மனமுவந்து ஏற்று கொள்ளுங்கள். வந்து வாசித்து கருத்து இடுகிறேன் செல்லம் கோவிக்கதடா.

    பதிலளிநீக்கு
  5. தலைப்பே கவிதைதான்!
    அடைப்புகள் நீங்க எழும் உறுதியும்........
    அடைப்புகளோடு சேர்த்துக்காண அழுகையும்....
    நிஜமாய் இப்படி ஒரு தலைப்பை நினைக்கத் தோன்றவில்லை.
    நிறைய யோசிக்க வைக்கிறீர்கள்.
    முதல் இருபத்திகளை வெகுநேரமாய்க் கடக்க முடியவில்லை.
    தொடர்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சின்னப் புத்தியும் சிதிலமடைந்த
    மனதும் கொண்டவர் ஈனச் செயல்கள்!
    எண்ணுவரோ இது தனக்கானால் எப்படியென!..

    அருமையான கவியினால் உளம் நெகிழ்த்தினீர்கள் தோழி!
    வரைந்த உங்கள் புலமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. படங்கள் உண்மையிலேயே பாதித்துவிட்டது சகோ, அதற்கு உங்களின் வரிகள் சாட்டையடி... எவ்வளவு நாள் தான் அடி வாங்குவது என்றாவது ஒரு நாள் யாராவது ஒரு பெண்ணாவது அமிலத்தை அந்த கயவர்களின் முகத்தில் அடிக்கும் போதுதான், அவர்கள் படும் நரக வேதனையை அனுபவிக்கும் போதுதான் தான் இவர்களைப்போன்றவர்களுக்கு புத்திவரும்... நல்ல பதிவு சகோ...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் !
    நெஞ்சை உருக்கி எடுக்கின்றது வலி நிறைந்த கவிதை வரிகள் !
    வாழ்த்துக்கள் தோழி சமூகத்தின் அவல நிலை கண்டு பொங்கி
    எழுந்து இது போன்ற கவிதைகள் தொடர்ந்தும் தங்கள் ஆளுமையினால்
    படைக்கப்பட வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை :(

    பதிலளிநீக்கு
  9. சிதலமடைந்திருக்கும் உன் ஆத்மாவை
    சிகிச்சைக்கு அனுப்பிவை.
    இது இந்த சிதைக்கப்பட முடியாதவளின்
    சின்ன அறிவுரை!!//

    எங்கேயோ போய்ட்டீங்க சகோதரி! அருமை அருமை! நிகழ்வை விட தங்கள் கவிதை மிகவும் மனதைத் தொட்டது!

    பதிலளிநீக்கு
  10. ஒரு வேளை அதுதான் எழுத்தின்வலிமையோ?!!!!!1

    பதிலளிநீக்கு
  11. மனதைப் பாதிக்கும் படமும் கவிதையும்.... வலிக்கிறது...

    பதிலளிநீக்கு
  12. ஐயோ என்ன கொடுமை இது படு பாவிகள் மனதை அரிக்கும் நிகழ்ச்சி அல்லவா.
    முன்பை விட அருவருப்பாய் இருக்கிறது உன் மனம். உண்மை தான் அம்மு அழுக்கு நிறைந்த உள்ளம் போலும் வரிகள் அனைத்தும் சிறப்பே வார்த்தை யாடலின் வல்லமை கண்டு ரசிக்கிறேன் அம்மு வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொரு வரியும் சாட்டையடி! மிகவும் அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்! இந்த மன உறுதி இருந்தால் எதையும் சாதிப்பர் பெண்கள்! அருமை!

    பதிலளிநீக்கு
  14. இரண்டாம் உலகப்போரின் கொடுமையை இன்றும் காட்டிநிற்கும் அந்த உலகப் புகழ்பெற்ற புகைப்படம் (குண்டுப் புகைசூழ்ந்த பின்னணியில் ஒரு சிறுமி அலறியபடி நிர்வாணமாக ஓடிவருவாளே?அது..) போல இந்தப் படமு்ம் அமிலவீச்சால் எந்த அழகையும் சிதைக்க முடியாது என்று காட்டும் அற்புதமான படம் பா. அதற்குத் தக, நெஞ்சை உருக்கும் வரிகளில் கவிதை. தலைப்பும் கடைசி 2வரிகளும் என்றும் நிற்கும், அந்தப் படம்போலவே! அந்தப் பிள்ளைகளின் பெயரையும் போட்டிருக்கலாம். விநோதினி மட்டுமே இவர்களுக்கான அடையாளமாகிப்போனாலும், போராடி வாழும் இவர்களின் பெயர்களையும் சொல்லி வாழ்த்த வேண்டும். அருமை டா.

    பதிலளிநீக்கு
  15. உணர்வை வெளிப்படுத்த உருவாகிய கவிதை
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு
  16. மனதை தொட்டு சென்ற வரிகள். நல்லாவே சிந்திக்கிறீர்கள்

    ///ஒன்றை கவனித்தாயா
    அந்த அமிலவீச்சுக்குபின்
    முன்பைவிட அருவருப்பாய் இருக்கிறது
    உனது மனம்!!!பாவம்!

    *சிதலமடைந்திருக்கும் உன் ஆத்மாவை
    சிகிச்சைக்கு அனுப்பிவை.
    இது இந்த சிதைக்கப்பட முடியாதவளின்
    சின்ன அறிவுரை!!///

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள திருமதி.மைதிலி,
    சிதைக்கப்பட்ட முகங்களின் சிதைக்க முடியாத அறிவுரைகள் அருமை. மனித மனங்களுக்கு மருத்துவம் செய்கிறது கவிதை. இதயம் கனத்ததால் வந்த கவிதை கல்வெட்டுகளில் பதிக்கப்படவேண்டியது.

    பதிலளிநீக்கு
  18. மனம் கனத்து விட்டது சகோ.
    சட்டங்கள் இன்னும் கடுமையாக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்மா ...வலைச்சரத்தில் உங்கள் பதிவு இணைக்கப்பட்டுள்ளது...

    பதிலளிநீக்கு
  20. படிப்பவர்களின் மனம் படும் வேதனை அளவிடற்கரியது.

    பதிலளிநீக்கு
  21. மனம் கனத்ததால் மெளனமாகிவிட்டேன் ...எழுத இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  22. சரியான சாட்டையடி வரிகள். வீரியமான வரிகள். மனதைத் தொட்டன.

    பதிலளிநீக்கு
  23. மனம் கனத்து விட்டது.

    தலைநகரில் இப்படி அமில வீச்சுக்கு ஆளான ஒரு பெண்ணை நேரில் பார்த்ததுண்டு. எப்போதும் மறக்க முடியாத ஒரு சந்திப்பு அது....

    பதிலளிநீக்கு