வெள்ளி, 3 அக்டோபர், 2014

கைப்பை -3





 டைரி 

                  வரவர நிறைக்குட்டி பேச்சில்  நகைச்சுவை ஊற்றெடுக்கிறது. ஒரு செருப்புக்கடையை  கடந்த போது சொன்னாள் "அம்மா, இந்த செப்பல் கடைகாரர் நல்ல புத்திசாலிதான். நான் "ஏன்டா அப்டி சொல்லுற?" பாருங்கம்மா கோவிலுக்கு பக்கத்துல வைச்சுருக்காரே! அங்க செப்பலை தொலைச்சவங்க, இங்க வாங்கிக்குவாங்க இல்ல".



ரசித்த கவிதை 


யதார்த்தம் 



வெகுநேரமாகியிருக்கலாம்
அம்மரத்தடியிலமர்ந்து
கண் விழிக்கையில் என்னை சுற்றிலும்
பரவிக்கிடந்தன
சருகுகளும்,பூக்களும்
நிமிர்ந்து பார்கிறேன்
அது புளிய மரமாகவே இருக்கிறது
நான் கிரிதரனாகவே இருக்கிறேன்
                                               -யாழி

தெரியுமா?



ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் இருக்கும் எலும்புகளும்  நம்ம கழுத்தில் இருக்கும் அதே போல ஏழு எழும்புகள் தானாம். ஆனா அது ஒவ்வொன்னும் பத்து இன்ச் நீளத்தில் இருக்குமாம்!!!!!

நிலைத்தகவல் 


பிள்ளைகள் வளரும் போது நம் பேர்கூட சமயங்களில் ஆடம்பரப் பொருளாகி விடுகிறது# நிறையம்மா, மகியப்பா:))

அழைப்பிதழ் 






இது நம்ம வீட்டு விசேஷம்:)

ஒரு பாடல் 







மிக மிக மென்மையாய் அறிமுகப்படுத்தபடுகிற காதல் உணர்வை எப்படி அதிரடியா கற்பனை செய்த அந்த கவிஞர் யாருன்னு தெரியலை:(( உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.

இது கைப்பை 2

34 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி யை தவிர வேற என்னவேணா சொல்லுங்க அண்ணா! அட! ரெண்டு வாரத்தை திட்டக்கூட செய்யுங்க, ரொம்ப பார்மலா இருக்கு அண்ணா:))

      நீக்கு
    2. அண்ணன் எல்லாம் திட்ட மாட்டாரு... தம்பி நாங்கதான் திட்டனும்..( எனக்கு என்றும் பதினாறு வயதுதான்)

      நீக்கு
  2. கதம்பம்
    படித்ததுமே,
    ரசித்ததுவே,
    மணத்ததுவே...
    இதுவெல்லாம்
    கற்பனைதானோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்ல அண்ணா ! எல்லாமே FACT :) நன்றி அண்ணா!

      நீக்கு
    2. சகோதரி தவறாக நினைக்கவேண்டாம் நான் எழுதியது பாரதியின்...
      நிற்பதுவே..
      நடப்பதுவே...
      பறப்பதுவே...
      மாதிரி எழுதினேன்.

      நீக்கு
  3. #ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் இருக்கும் எலும்புகளும் நம்ம கழுத்தில் இருக்கும் அதே போல ஏழு எழும்புகள் தானாம். ஆனா அது ஒவ்வொன்னும் பத்து இன்ச் நீளத்தில் இருக்குமாம்!!!!!#
    எண்ணிக்கையில் ஒன்றுபோல இருந்தாலும் மனுசன்தான் அடுத்தவர் பிரச்சினையில் கழுத்தை நீட்டுறான் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. **எண்ணிக்கையில் ஒன்றுபோல இருந்தாலும் மனுசன்தான் அடுத்தவர் பிரச்சினையில் கழுத்தை நீட்டுறான் **
      எப்படி பாஸ் இப்படி எல்லாம், செம , கலக்கீடிங்க போங்க:))

      நீக்கு
    2. மதுரைக்காரர்களுக்கு கலக்க சொல்லியாத்தரனும்

      நீக்கு
  4. *உங்களுக்கு வயசாகி, நீங்க தத்துவம், ஆன்மீகம் எல்லாம் பேசி போர் அடிக்க ஆரம்பிச்ச பிறகு இடத்தைக் காலிபண்ணிட்டு "நிறைக் குட்டி" ப்ளாக் வாசிக்கப் போயிடுவேன். புத்திசாலியாக இருக்கிறாள். உங்களைவிட நல்லாவும் எழுதுவாள்! :) அழாதீங்க. அதுக்கு இன்னும் ரொம்பக் காலம் இருக்கு. அப்புறம் அழுதுக்கலாம்! :))

    * உங்க அண்ணா ஒரே நேரத்தில் மூனு புத்தகங்கள் வெளியிடுறாராக்கும்? வாழ்த்துக்கள்! வாத்துக்கள் அவருக்கு மட்டுமில்லை.. வரப்போற உங்க புத்தகங்களுக்கும் இப்போவே சேர்த்து..

    * பொதுவாக நீங்க கொடுக்கிற பாடல் காணொளியைப் பார்ப்பதில்லை! என்ன இன்னொரு காதலாயிருக்கும் னு ஒரு சலிப்பு! "ஆதிமனிதன் காதலுக்கு முன் அடுத்த காதல் இதுதான்னு"தான் எல்லாரும் சொல்றாங்க! கொஞ்ச நாளைக்கு..

    இங்கே Michael Kors "hand bag" தான் ரொம்ப பாப்புளர். ஒரு கைப்பை விலை $300 தான்.

    http://www.michaelkors.com/bags/_/N-283g

    இதுக்கு செலவழிக்க மட்டும் பொறுப்பான பெண்களுக்கும் "பெரிய மனசு" வந்துடும்! நான் எதுவும் தப்பா சொல்லவில்லை. என் பணம் இல்லை! அவங்க ஆத்துக்காரர் பிரச்சினை இது.. நமக்கென்ன? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பேச்சு கா:(( நிறை பதிவை படிப்பேன்னு சொன்னதுக்கு இல்ல, என் பதிவை படிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு:(( ஆனா ஒன்னு வயசானாலும் நான் ஆன்மீகம் எழுதமாட்டேன். நான் என்ன மஞ்சள் துண்டு பார்ட்டின்னு நினைசீங்களா:))
      **வரப்போற உங்க புத்தகங்களுக்கும் இப்போவே சேர்த்து..** ஏன்பா இந்த கொலைவெறி??
      **இன்னொரு காதலாயிருக்கும் னு ஒரு சலிப்பு!** இப்போ உங்களுக்குத்தான் வயசாயிடுசோன்னு தோணுது:) பின்ன உலகம் கலர்புல்லா இருகிறதே இந்த மேட்டர்ல தானே:) ஓகே பாஸ் ! அடுத்த HANDBAG ல காதல் பற்றி இல்லாத ஆனா நான் காதலிக்கிற ஒரு விஷயத்தை பற்றிய பாடலை பகிர்ந்துக்குறேன், ஓகே வா:)
      **Michael Kors "hand bag" ** பார்த்தேன் வருண், ஒன்னு ஜஸ்ட் இருபதாயிரம் தான் வருது,கலைவாணி படம் பார்த்தீங்களா வருண், அதுல ஒரு டைலாக் வரும்,"அத்தாச்சி ரேசன் அரிசிக்கு திண்டாடுது, ஆட்டகாரிக்கு ஐந்நூறு தரியா பஞ்சாயத்து:(( வேறன்ன சொல்ல **பொறுப்பான பெண்களுக்கும் "பெரிய மனசு" வந்துடும்!** இதை நானும் வழிமொழிகிறேன்:)

      நீக்கு
    2. அது கலைவாணி படம் இல்ல, களவாணி:))

      நீக்கு
    3. ஓகோ அம்முவும் புத்தகம் வெளியிடுறாங்களா ? சொல்லவே இல்ல ம்..ம்..ம்.. thanks வருண் எதுக்கா அதான் இந்த தகவல் தந்தமைக்கு. மிக்க மகிழ்ச்சி வருண்.

      நீக்கு
    4. ///உங்களுக்கு வயசாகி, நீங்க தத்துவம், ஆன்மீகம் எல்லாம் பேசி போர் அடிக்க ஆரம்பிச்ச பிறகு இடத்தைக் காலிபண்ணிட்டு///

      பாஸ் என்னவோ நீங்க சின்னவயசு ஆளுன்னு நினைச்சுகிட்டு இருக்கிறார் போல.....

      நீக்கு
    5. ஆளுக்கு ஆள் புத்தகம் வெளியிட்டா போதாது பாவப்பட்ட அமெரிக்க தமிழர்களுக்கு அதுல ஒரு காப்பி இங்கே அனுப்பி வையுங்க

      நீக்கு
  5. கைப்பை நன்று... பிள்ளைகள் வளர நம் பெயரும் ஆடம்பரமாவது உண்மைதான்.. எங்க வீட்டில் என் மனைவி ஸ்ருதி அப்பா என்றால் விஷால் அப்பான்னு சொல்லுங்கன்னு மகன் கத்துவான்...

    முத்து நிலவன் ஐயாவின் புத்தக வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    நிறைக்குட்டிக்கு எனது வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அண்ணனையும், உங்க மருமகளையும் வாழ்த்தியதற்கு நன்றி அண்ணா!

      நீக்கு
  6. சிறப்பான பகிர்வு ! விழா சிறப்பாக நிகழ என் இனிய வாழ்த்துக்களும்
    தோழி .

    பதிலளிநீக்கு
  7. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. நிறை செம டைம்லி ப்பா....

    கவிதை...அருமை...

    ஆமாம் பிள்ளைங்க பேரைச் சொல்லித்தான் அம்மா, அப்பா, ......

    அதே போன்று ஒரு பெண் தன் கணவனை என்னதான் நேசித்தாலும் அதற்காக mrs. ..........(திருமதி என்று ஆரம்பித்து கணவனின் பெயர் ) போட வேண்டுமா? இப்படித்தான் சமூகம் அழைக்கின்றது! இது பெண்ணின் ஐடென்டிட்டி மிஸ் ஆகின்றது இல்லையா?

    முத்துநிலவன் ஐயாவின் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

    கைப்பையில் நல்ல விஷங்களை வைத்து வழங்கியுள்ளீர்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுல பாதி தோழியோட கமென்ட் போல இருக்கே????
      **நிறை செம டைம்லி ப்பா....** ஆமா சகாஸ் பல நேரம் எனக்கே பல்பு கொடுக்கிறாள். இப்படியே கொஞ்ச நாள் போன நான் வாங்குற பல்பை வச்சு மைதிலி சீரியல் செட் கடையே வச்சுடலாம் போல அவ்வ்வ்வவ் :))
      விழாவை வாழ்த்தியமைக்கு நன்றி சகாஸ்!!

      நீக்கு
  9. கைப்பையில் - டைரி!..

    அருமை.. நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. கைப்பையில் நிறைவு.
    புத்தக வெயிட்டு விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    வாழ்த்துக்கள் தோழி நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இதோ வந்திட்டேன் அம்மு.கொஞ்சம் busy தான்ம்மா அது தான் வரமுடியல நீங்க கேட்டு அப்புறம் தாமதம் செய்யலாமா அதனால உடனேயே பதிவு போட்டு விட்டே வருகிறேன். ஹா ஹா எப்பிடி.

    விளையும் பயிரை முளையிலேயே தெரிகிறதே. செம கேள்வி ரொம்ப விபரம் அம்மு உண்மையில் நான் இப்படி இப்பவும் சிந்திக்க மாட்டேன். really great அம்மு. அம்மாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்குடா ஹா ஹா ... இப்படி சொன்னால் சகோதரர் மது அவர்கள் கவலை படப் போகிறார்களே பறவாய் இல்லை இல்லையா அம்மு.
    நிலவன் அண்ணவின் புத்தக வெளியீட்டு விழாசிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள்...!
    நல்ல பதிவும் பாடலும்.அம்மு.தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  12. கைப்பையில் அழகான பொக்கிஷங்கள் வைத்திருக்கிறீங்க. உங்கள மாதிரியே நிறை இருக்கா.நகைச்சுவை மிளிர வாழ்த்துக்கள்.
    முத்துநிலவன் ஐயாவின் புத்தக வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. திரு முத்துநிலவன் ஐயா அவர்களின் புத்தக வெளியிட்டிற்கு வருகின்றேன் சகோதரியாரே
    தங்களையும்
    நண்பரையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன்

    பதிலளிநீக்கு
  14. முத்து நிலவன் அவர்களின் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்,பாட்லை எழுதிய கவிஞர் என்ன செய்வார் பாவம்,காட்சிபடுத்திய விதம் அப்படி/

    பதிலளிநீக்கு
  15. உங்கள் பெண்ணின் டைம்லி ஜோக் வியக்க வைத்தது! கைப்பையில் சிறப்பான பொருட்களை தந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. நிறையம்மா இப்ப ரொம்ப குறைவாக எழுதுறாங்க மகியப்பா மைதிலியம்மாவை தூக்கி சாப்பிட்டு இன்னும் கூடிய சிக்கிரத்தில் இணையத்தில் நம்பர் 1 ஆக ஆகிவிடுவார் போலிருக்கிறதே...

    ///வரவர நிறைக்குட்டி பேச்சில் நகைச்சுவை ஊற்றெடுக்கிறது.//
    கிளிக்கு இறக்கை முளைச்சிடுச்சு.......

    உங்க அண்ணண் புத்தக விழா போஸ்டர் பார்த்தேன்...அதில அண்ணன் சிரிக்கிறார் பாரதியார் முறைக்கிறார். அப்பட் பாரதியார்முறைக்கிற படி அண்ணன் என்ன காமெடி பண்ணிட்டார்


    என்னங்க பாடலுக்கு விளக்கம் மேலே கொடுத்து இருக்கலாம் அல்லவா? கிழே உள்ள விளக்கத்தை படிக்காமல் வீடியோவை பார்த்துட்டேன்...காதலை இப்படி கடித்து குதறி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  17. முன்னால எல்லோரும் ஷ்ரேயா டாடின்னு கூப்பிட்டாங்க ஆனால் இப்போ சன்னி டாடின்னு கூப்பிடுறாங்க animalலை பிடிக்காதவங்க ஒரு மாதிரி பார்க்குறாங்க ஹீஹீ

    பதிலளிநீக்கு
  18. தங்களைச் சந்தித்தது குறித்த பதிவொன்றைக் காண “ மணவை“யாரின் வலைத்தளத்திற்கு வருகை தாருங்கள்.
    http://manavaijamestamilpandit.blogspot.in/2014/10/blog-post_20.html

    பதிலளிநீக்கு
  19. இந்த காலத்து குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் தங்களின் குழந்தைகள். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களை சொல்லுங்கள். மேலும் அவர்களுக்குள் இருக்கும் இந்த திறமையை வளர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள்.

    அப்புறம் டீச்சர், இந்த மாதிரி தெரியுமான்னு எல்லாம் கேக்காதீங்க, வெறும் பதிலை மட்டும் சொல்லுங்க, ஏன்னா நீங்க கேட்பது எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அதனால நான் தெரிஞ்சமாதிரி யோசிக்க வேண்டாம் பாருங்க!!!!

    பதிலளிநீக்கு