ஞாயிறு, 21 ஜூலை, 2019

கொரில்லா - திரைப்பார்வை

         லிக்கர் ட்ரிங்கிங் இஸ் இன்சூரியஸ் டூ ஹெல்த் என மொட்டை ராஜேந்திரன் வாய்ஸோடு தொடங்கும் போது தியேட்ரே சலம்புகிறது.
     
               இன்றைய ட்ரெண்டாக ஒரு அனிமேசன் பின்னணியில் ப்ளாஷ்பேக். ஆயாவீட்டுக்கு வெக்கேசன்ல போறது பெருமையா?? நம்ம கடமை. அம்மாவை இழந்த கொரில்லா ஹீரோவையே சின்னம்மாவா நினைச்சு அவன் காலையே கட்டிப் புடுச்சிக்கிட்டு இருந்துச்சாம் என இடைவெளியே கொடுக்காமல் காமெடியில் அடித்து ஆடுகிறார்கள். ஜீவா மற்றும் அவரது நண்பர்கள், நாம நல்லாயிருக்கணும்ன எதுவும் தப்பில்லை தத்துவம் கடைபிடிக்கும் இன்றைய பல இளைஞர்களின் பிம்பம்.

        சீட்டிங் பார்ட்டி என தெரிந்தே அவரை காதலிக்கும் ஹீரோயின் என்ன லாஜிக்கோ என்றெல்லாம் கேட்கப்பிடாது. M.C என்கிற மீம் கிரியேட்டர்கள் காலத்தில் படமே மீம் போல நாம் சிரித்துக்கடக்கயில் இன்ட்ரோ கொடுக்கிறார் அந்த விவசாயி. அட!! நம்மூர்காரர் மதன். வேலை போனதற்கு ட்ரீட் கேட்கும் நண்பர்கள், தற்கொலை செய்துக்கப் போறேன் என புலம்பும் நண்பனிடம் சைடுடிஷ் சொல்லு மச்சான் என எதையும் எளிமையாய், கேலியாய் கடக்கும் நண்பர்கள் குழுவோடு ஒரு வங்கியை கொள்ளையடிக்க கிளம்புகிறார் அந்த. பொறுப்பான விவசாயி. அவரது வசனங்கள் ஏழைவிவசாயின் கதறலாக இருக்கிறது. அவரை இஸ்லாமிய விவசாயியாய் காட்டியமைக்கு இயக்குனருக்கு ஸ்பெசல் பொக்கே ஒன்று பார்சல். என்ன ஒன்னு மதன் சௌக்கார் ஜானகி ரேஞ்சுக்கு ஆல்வேஸ் அழுதபடி இருக்கிறார். பாத்திரம் அப்படி. 
     
          யோகிபாபு வங்கி நடைமுறைகளை செம்மயா கலாய்கிறார். ஆனாலும் திரும்பத்திரும்ப அவரை கொரில்லாவோடு ஒப்பிடுவது பலநேரம் சிரிப்புக்கு பதில் ஒருவர் தோற்றத்தை கேலி செய்து கொண்டே இருப்பது சரியா என்ற கேள்வியையே எழுப்புகிறது. மொட்டை ராஜேந்திரனின் கடைக்கு ஒயின் ஷாப் திறக்கும் வரை ரெஸ்ட் எடுக்கவரும் சதீஸ் மற்றும் ஒரு நம்ம ஊர்காரர். ஸ்க்ரீனை மறைக்கும் அத்தனை அடர்த்தியான முடியோடு க்ளோசப் காட்சி. ஊர்கார சகோக்கள் இருவருக்கும் தொடர்ந்து வெற்றிப்படங்கள் கிடைக்க வாழ்த்துகள்.

         Back to சினிமா. வசனங்கள் படத்துக்கு கைத்தட்டலை வாங்கி கொடுத்தபடியே இருந்தது. காங் பாத்திரத்தில் ஒரு சிம்பான்ஸி அட!! நல்லாதான் நடிச்சிருக்கு. எடிட்டர் இன்னும் கொஞ்சம் வெட்டியிருக்கணுமோ?? திரைக்கதையில் சில இடங்களில் ஊசலாடுது.

           சுயநலமாய், விளையாட்டாய் தொடங்கிய செயல் சில நிமிட புகழ் வெளிச்சத்தில் எப்படி அந்த இளைஞர்களை மாற்றுகிறது என்று காட்டியிருக்குறார்கள். லாஜிக்கே இல்லாமல், அழுத்தம் இல்லாமல் இத்தனை விளையாட்டாய் விவசாயப் பிரச்சனையை கையாள்வதா என சில குற்றச்சாட்டுகளை சில விமர்சனங்களில் பார்க்க முடிகிறது. போகிற போக்கில் அமித்ஷா, அப்போல்லோ, தெர்மாகோல் என ராவடி செய்திருக்கிறார்கள் படக்குழு. இந்தப் படத்தை கொஞ்சம் சீரியஸா எடுத்திருந்தாலும் அரசியல் நெருக்கடிகளை சந்தித்திருக்கும். கொரில்லா மொத்தத்தில் நல்லதொரு பொழுதுபோக்கு திரைப்படம்.

12 கருத்துகள்:

  1. கொரில்லா - ஒரு சில காட்சிகள் காணொளியாக யூவில் பார்க்க முடிந்தது. முழுவதும் பார்க்க இங்கே வாய்ப்பில்லை.

    ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம் இணையம் வழி இங்கே பார்க்க முடியுமா என.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பொழுதுபோக்குத் படம் அண்ணா.ஒரு முறை பாக்கலாம். வருகைக்கு நன்றி அண்ணா.

      நீக்கு
  2. ஹலோ வாங்க வாங்க

    //சீட்டிங் பார்ட்டி என தெரிந்தே அவரை காதலிக்கும் ஹீரோயின் என்ன லாஜிக்கோ என்றெல்லாம் கேட்கப்பிடாது//

    சீட்டிங்க் பார்ட்டி என்று தெரிந்துதான் தமிழ் பெண்கள் காதலிப்பார்கள்...அது லாஜிக் உடனே உங்க மனைவி காதலித்தது சீட்டீங்க் காதலனையா என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் இங்கே வர கேட்குது சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. சீட்டிங்க் பார்ட்டி என்று தெரிந்துதான் தமிழ் பெண்கள் காதலிப்பார்கள்** மாமியை எப்படி மைதிலி மறந்தாய்!!!!

      கேட்டுடுச்சா !!! அப்போ சரி

      நீக்கு
    2. உங்களிருவரின் அரட்டைகளை மிகவே மிகவும் மிகமிக மிஸ் செய்தேன்

      நீக்கு

  3. ஹலோ பதிவு போட்டால் பாரா பாராவா பிரித்து எழுதுங்கள் சகோ ஹும்ம் டீச்சரம்மாவிற்கே இந்த மதுர பாடம் நடத்த வேண்டியிருக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினி பழுது சகோ, அதனால் தான் மறுமொழி கூட தட்ட முடியவில்லை. மன்னியுங்கள்.

      நீக்கு
  4. அமேசான்ல வரட்டும்.. பார்த்துடுவோம்!

    பதிலளிநீக்கு
  5. பாத்திடலாம்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  6. ஸாரி மைத்து கொரில்லாவுக்கு வர வேண்டிய கமென்ட் இங்க வந்துருச்சு...எல்லாம் இந்த கணினியின் செயல்பாடுகள் நானும் கவனிக்காம போட்டுவிட்டேன்...

    இதுக்கு கமென்ட் அந்தப் பதிவுல இருக்கு..மைது.ஸாரி ஓகே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. டேட்டிங்கில் தெரியாமல் போய்விடுகிறது சீட்டிங்.
    யோகி பாபு உருவத்தை கேலி செய்தே பல படங்களில்..யாரும் சொல்வதில்லை, யாரும் கேட்பதில்லை. எங்கெங்கு நான் இவற்றைப் பேசுகிறேனோ அங்கெல்லாம் என்னை மனதை லேசாய் வைத்துக் கொள், எதற்கும் சீரியஸ் இருக்கக்கூடாது என்று அறிவுரை வரும் பாருங்க...அப்போதான் டென்சன் ஏறும் :)

    பதிலளிநீக்கு
  8. அருமை ... தொடரட்டும் உங்கள் பணி ..
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு