திரும்பிய பக்கம் எல்லாம் கலாம்!!! இத்தனை அபிமானிகள் எத்தனை நாளாய் எங்கிருந்தார்களோ!!!!! டாக்டர் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக பிரபலங்கள் அனைவரும் ட்விட் முதல் கவிதை வரை பலவிதமாக தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
கமல்ஹாசன் தனக்கே உரிய நடையில் ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் மேலும் பலரை சென்றடையும் என்று நண்பர் வருண் கருத்துத் தெரிவிக்க, நானும் முயன்று பார்த்தேன்.
இது கமலின் கவிதை.
கலாம்களும் கமால்களும்கமல்களும்இலாதுபோகும்நாள்வரும்இருந்தபோதுசெய்தவைஅனைத்துமேகணிப்பதுஹெவன்என்றுஒருவனும்பரம் என்று ஒருவனும்ஜன்னத்தென்று ஒருவனும்மாறி மாறிச் சொல்லினும்இகத்திலேயவன்நடந்த பாதையேபுகழ் பெறும்நிரந்தரம் தேடுகின்றசெருக்கணிந்தமானுடர்தொண்டருக்கடிப்பொடிஅம்மெய்யுணர்ந்த நாளிதுபுகழைத் தலையிலேந்திடாதுபாதரட்சையாக்கியகலாம் சாஹெப்என்பவர்க்குசலாம் கூறும் நாளிது
ஒருவர் ஒரே நதியில் இரண்டு முறை நீராட முடியாது என்பார்கள். ஏனென்றால் நொடிக்கு நொடி நீர் நகர்ந்து கொண்டே இருக்கும் அல்லவே? அதே போல ஒரே கவிதை நம் வயது, அனுபவம், மனநிலை, அறிவு விசாலம் ஆகிய காரணிகளால் வெவ்வேறு பொருள் தரக்கூடும்(கமல் மாதிரியே பேசுறேனோ?!) இந்த நொடியில், இன்றைய பக்குவத்தில் எனக்குத் தோன்றியதை மொழிபெயர்த்திருக்கிறேன். கமல் அளவு செவ்விய மொழியை நான் இதில் கையாளவில்லை. மாணவர்கள் புரிந்துகொள்ளும் விதமாக எளிதாக இருக்கவேண்டும் என்பதற்காக எளிய நடையை தான் பயன்படுத்தி இருக்கிறேன். கவிதையின் தரம் குறைந்துவிட்டதென்று யாரும் கோபித்துக்கொள்ளாதீர்கள். அதை ஆங்கில ஆசிரியர்கள் பதிவெழுதும் tronbrook எனும் வலைப்பூவில் பகிர்ந்திருக்கிறேன். படித்துப்பார்த்து கருத்திட்டு, ஊக்குவியுங்கள் நண்பர்களே.
Im coming soooon......
பதிலளிநீக்குT.M 1
கமலின் பேச்சும், கவிதையும் தமிழில் படித்தாலே எனக்குப் புரியாது!
பதிலளிநீக்கு:)))))
ஸ்ரீராம்: தமிழில் படித்தாலே எனக்குப் புரியாது! :)))) அதே நிலை தான் இங்கேயும்......
பதிலளிநீக்குஉங்கள் ஆங்கில கவிதையைப் படிக்க இதோ வருகிறேன்.....
வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குதம +1
அப்படியும் எனக்கு எட்லைப்பா உயரம்...
பதிலளிநீக்குதம +
உங்க தளத்தில் அனானிமஸ் ஆப்ஷன் திறந்து வச்சா, கமலே அனானிமஸா வந்து பாராட்டிவிட்டுப் போவார், மைதிலி :)
பதிலளிநீக்கு----------------
கமல் இப்போலாம் தான் இல்லாதபோது (கமல்கள் இல்லாத போதுனு சொல்லியிருக்காரு இல்லையா?) இவ்வுலகம் எப்படியிருக்கும்னு யோசிக்க ஆரம்பித்துவிட்டார்.
போற போக்கைப்பார்த்தால் திடீர்னு ஆத்திகனாகவோ அல்லது ஆன்மீகவாதியாகவோ இல்லைனா பண்டாரமாகவோ ஆகிவிடுவாரோனு எனக்கு பயம்மா இருக்கு! :)))
ஹாஹ்ஹா! நன்றாகச் சொன்னீர்கள் போங்கள்!
நீக்குவருண் சார் பதிவில் கவிதை படிச்சப்போ எனக்கு எதுவுமே
பதிலளிநீக்குபுரியாம இருந்திச்சு. காரணம்
கவிதைக்கும் எனக்கு ரொம்ப தூரம்:-)
மேடம் உங்க ஆங்கில Translation கவிதை சூப்பர்!
உங்கள் மொழிபெயர்ப்பு நன்று. கலாம் இருந்தபோது புகழைக் கிரீடமாக அணியாமல் செருப்பாக அணிந்தார் என்கிறாரா கமல் ஆயிரம் இரங்கல்கள் இருக்கும் போது கமலின் எழுத்து மட்டும் எடுத்துக்காட்டாவது அது அரிதாரம் பூசப்பட்டது என்பதாலா.
பதிலளிநீக்குமுழுமையாக மொழிபெயர்ப்பைப் புரிந்து கொள்ள அறிவில்லா விட்டாலும் உணர்வு பூர்வமாக மகிழ்கிறேன் பா.
பதிலளிநீக்குதங்கை கிரேசும் நீயும் இந்த வகையில் என் வியப்புக்குறிகள்.
தொடர்ட்டும் உன் பணிகள் அண்ணனின் வேண்டுகோளும் ஒன்றுண்டு. நம் வலைப்பதிவர் திருவிழாவுக்கு வலை மக்களை அழைத்து உன் பாணியில் ஒரு பதிவு போடணும்
வணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
மொழியாக்கம் செய்து பார்வைக்கு தந்தமைக்கு நன்றி த.ம11
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள் சகோ,
பதிலளிநீக்குதளம் சென்று வந்தேன்
பதிலளிநீக்குஅங்கு சொல்லி விட்டேன்
பதிலளிநீக்குஅட அம்முக்குட்டி அசத்திட்டடா. ஆங்கில டீச்சர்ரும் ரோம்ப அவசியம் தான் பார்த்தீர்களா. ம்..ம் very குட் ம்மா. எங்கள் தமிழ்ழை ஆங்கிலத்திலும் மிளிரச் செய்யலாம் இல்ல. தேனு மாதிரி ... இருவரும் சேர்ந்து அசத்துங்கம்மா. நன்றி ! வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குநல்ல கவிதைம்மா....மொழியாக்கமும் அருமைடா
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஐயா வணக்கம்!
இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html
வாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குகமல் கவிதையை விடவும் உங்கள் ஆங்கிலக் கவிதை புரிதற்கு எளிதாக உள்ளது மைதிலி. நல்லதொரு முயற்சி. பாராட்டுகள்.
பதிலளிநீக்குபடித்துவிட்டேன் மேடம்... அருமை
பதிலளிநீக்குகவிதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அளவுக்கு மீறி எளிமைப்படுத்தி விட்டதாகத் தென்படுகிறது. அதாவது, இந்தத் தமிழ்க் கவிதைக்கு ஆங்கிலத்தில் பொருள் கூறியது போல இருக்கிறது. எனக்கு ஆங்கிலம் அவ்வளவு தெரியாது, புரிந்த வரை சொல்கிறேன். :-)
பதிலளிநீக்கு