சென்ற வருடம் நான் எழுதிய கவிதையில் இடம் பெற்ற இல்லைகள் இப்போ எத்தனை தொல்லைகளை வரவழைத்திருக்கிறது பாருங்கள்!!
சில சமயங்களில் இப்படி நிகழ்ந்து விடுவதுண்டு. பெருநகர மழை என்றொரு வார்த்தை என் புத்திக்குள் இருந்து கொண்டு என் எல்லா கவிதைகளில்
தலை
நீட்ட தொடங்கியது சில காலமாய். பின் அதன் தொந்தரவு தாங்காது அதற்காகவே
ஏதேனும் எழுதிவிடலாம் என தோன்றிய நாளில், காத்திருந்த தென்றலாய் பேனாவை
தழுவிது இக்கவிதை!?
பெருநகர மழை நாட்கள்!கை நீட்டி களித்திருக்க
உழவர் பெற்ற மக்கள் இல்லை
காகிதத்தில் கப்பல் விட
முற்றம் வைத்த வீடு இல்லை
ஓய்ந்தபின்பு பார்த்திருக்க
ஒளிர்பச்சை இலைகள் இல்லை
சாலை எங்கும் நீர் பெருக
சாக்கடையும் அடைத்துக்கொள்ள
வேலைநாளில் வந்துவிட்ட
வேண்டாத விருந்தினர் போல்வெறுப்புக்கும், சலிப்புக்கும்
ஆளாகிறது -பெருநகரில் என்
விருப்ப மழை நாட்கள் !!
மீள்பதிவு தான் மேலும் வருத்தத்துடன்......
கவிதை அருமை
பதிலளிநீக்குதமிழனே சொல்லிட்டார்!!!!!
நீக்கு/// வேலைநாளில் வந்துவிட்ட வேண்டாத விருந்தினர் போல் வெறுப்புக்கும், சலிப்புக்கும்ஆளாகிறது ///
பதிலளிநீக்குஉங்கள் வீட்டிற்கு வரும் போது கண்டிப்பாக விடுமுறை நாளாக பார்த்து வருகிறேன். இல்லையென்றால் உங்களின் வெறுப்புக்கும், சலிப்புக்கும் நான் இலக்காகிவிடுவேன்
நீங்க வந்த அந்த நாள் மற்றவர்களுக்கு மட்டுமே வேலை நாளாய் இருக்கும் சகா:)) always welcome!
நீக்குஅன்புச் சகோதரி,
பதிலளிநீக்குஇன்றைக்கு நடப்பதை அன்றே சொல்லிவிட்டீர்கள் பெருநகரில் வெறுப்பு மழை நாட்கள் ! அருமை!
த.ம.1
எவ்வளவு தூரம் ஆகும் என நினைக்கவில்லை அண்ணா:(
நீக்குவாக்குக்கும் நன்றி!
அம்முக்குட்டி முதலில் ரொம்ப sorryம்மா தவிர்க்கமுடியாத காரணங்கள் மா நான் வேணுமின்னா தோப்புக்கரணம் போடவா ? பாவம் இல்ல நானு இந்த வயசில .....ம்..ம் என் அம்முக்குட்டி அப்பிடிக் கேட்க மாட்டா தானே?
பதிலளிநீக்குவிரும்பும் மழையை வெறுக்க யார் காரணம்.? ம்..ம்....
கவிதை அருமைம்மா அம்மு !நிலைமைக்கேற்ப பொருத்தமான கவிதை செம... அதென்ன .............. நானும் வருவேனாக்கும் முற் கூட்டியே சொல்லிட்டு தான் லீவு பார்த்து ok தானே அம்மு ....நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ....!
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குஆஹா அருமை அருமை,
பதிலளிநீக்குவேண்டாத விருந்தாளிப் போல் ஆனது,,,,
ம்ம்,,,
வாழ்த்துக்கள்.
அன்று சொன்னது, பல்கிப் பெருகி, அழிவுமழையாகி விட்டதே! எதுக்கும் இனிமேல் இந்த தீர்க்க தரிசனப் பார்வையைக் கொஞ்சம் கவனமாகவே கவிதையாக்கணும் இதைத்தான் அறம்பாடுவது என்கிறார்கள் இதுபற்றிக் கருத்துக் கூறுவதை அறத்துன்பம் என்கிறார்கள். சரியா?
பதிலளிநீக்குகவிதை செம சகோ... ஏதோ ஒரு உள்ளுணர்வு இருந்திருக்கிறது பாருங்களேன்.. :(
பதிலளிநீக்குகருத்து பொதிந்த வரிகள் அருமை சகோ
பதிலளிநீக்குதமிழ் மணம் 3
அளவோடு இருந்தால் எல்லாவற்றையும் ரசிக்கலாம்
பதிலளிநீக்குவருத்ததிற்கு காரணம் நாம் எனும் போது மழையை ஏன்மா குறை சொல்லனும்....சென்னை மழையை புதுகைக்கு திருப்பி விட்டிருந்தால்...நம் நிலம் மகிழ்ந்திருக்கும்ல..
பதிலளிநீக்குகவிதை சிறப்பு.
பதிலளிநீக்குபல நாள் வெயிலை தாங்கிக்கொள்கிறோம். சில நாள் மழையில் படாத பாடுகிறோம்.
முதல் நாள் மழை சொர்க்கம்
இரண்டாம் நாள் மழை இனிமை
மூன்றாம் நாள் மழை தொல்லை
நான்குக்கு மேல் நரகம்
த ம ஒட்டுபோடும்போது No such post என்று தெரிவிக்கிறதே . சிறிது நேரத்திற்குப் பிறகு முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்கு