வியாழன், 27 பிப்ரவரி, 2014

என் செல்ல டைனமைட் (part ii)

பிப்ரவரி 28.  இந்த நாள் இந்தியாவின்  தேசிய அறிவியல் தினம். இந்தநாளில் தான் நோபல் பரிசை தனக்கு வென்று தந்த ராமன் விளைவை சர் சி.வி.ராமன் அவர்கள் நிறுவினார்கள்.  so அவருக்கு சமர்ப்பிக்கும் விதமாய் இந்த பதிவு. பார்ட் -1 போட்டு எவ்வளோ நாள் ஆச்சு எப்போ பார்ட் -2 எழுதப்போறிங்க என பலதரப்பினரும் கேட்க தொடங்கிவிட்டனர். (மைதிலி உனக்குள்ள இருக்கிற பவர் ஸ்டாரை அடக்கு). ஓகே மைன்ட் வாய்ஸ் மானே தேனே னு திட்டுது. நான் கட்டுரைக்கு போறேன். ஓவர் டு நோபல்

மேரி க்யுரி யின் குடும்பம்

            நோபல் பரிசு எவ்வளோ பெரிய விசயம்னு நமக்கு தெரியும். அது ஒரேயொரு தடவை கிடைக்காதான்னு பலரும் தலையால தண்ணிகுடிக்க (அதுக்கு அர்த்தம் கேட்காதிங்க. பழமொழி சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது) சில பேரு அசால்ட்டா (அட ஆங்கிலத்தில் அசால்ட்டுன்னா அதிரடி னு அர்த்தம்ங்க ) ரெண்டு  தடவை நோபல் பரிசு வாங்கியிருக்காங்க. அவங்கள பத்தி தெரிஞ்சுகுவோமா?

பல தடவை வென்றவர்கள் !!
 
Marie curie -இவங்க ரெண்டுதடவை ப்ரைஸ் அடிச்சுருக்காங்க . அதுவும் Physics, Chemistry னு வெவ்வேறு சப்ஜெக்ட் ல

Linus Pauling - இவர் ரெண்டு தடவை  நோபல் வாங்கிருக்கார். ஆனா
அண்ணன் வாங்கின ரெண்டு நோபால் ல அமைதிக்கான நோபல் அவரே அவர்க்குதான். அதாவது தனியா சாதனை படைச்சுருக்கார் (unshared). இன்னொன்னு chemistryக்கு .

John Bardeen -இவர் ரெண்டு தடவையும் Physics க்காக நோபல் வாங்கியிருக்கார்.

Frederick Sanger - இவர் chemistry க்காக ரெண்டு முறை நோபல் வாங்கியிருக்கார்.

  
கலக்கல் குடும்பம் !!

           நோபல் பரிசு வாங்கினவங்களை (laureates) லாரேட்ஸ் அப்படின்னு சொல்லுறோம். குடும்பத்தோடா நோபல் பரிசு வென்ற அட்ராசிட்டி குடும்பம் ஒன்னு இருக்குங்க . அது நம்ம மேரி க்யுரி குடும்பம் தான் .

மேரி யும் அவரது கணவர் பிறீ (Pierre curie )யும் சேர்ந்து ஒரு தடவை நோபல் வாங்கின்னாங்க . அவங்களுக்கு ரெண்டு பொண்ணு (ஹை ,நம்ம இனம் )
முதல் மகள் Irene Joliot  தன் கணவர் Frederic Joliot உடன்  இணைந்து chemistry க்கு நோபல் பரிசு வெல்ல, அவரது தங்கை UNICEF பில் டைரக்டர் ராக இருந்த Hendry Labouisse என் வழி தனி வழி என அமைதிக்கான நோபல் பரிசை தட்டியிருக்கிறார். இன்னும் சில குடும்பங்களும் இதுபோல் பரிசு வென்றிருந்தாலும் ஐந்து எனும் அதிக எண்ணிக்கையில் நோபல் பரிசு வாங்கி மேரி க்யுரி குடும்பம் முன்னணியில் உள்ளது. நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்று இவங்க குடும்பத்தை பார்த்து தான் சொல்லியிருப்பாங்களோ ?

இது தொடர்பான முதல் பதிவு

31 கருத்துகள்:

 1. தகவல் பெட்டகம்..அருமை மைதிலி..
  தலையால தண்ணி குடிக்குறதா? ஒரு விசயத்துலையே மூழ்கிப் போறதுன்னு சொல்வாங்களே..அதுவோ இது? :)

  பதிலளிநீக்கு
 2. தகவல்கள் அனைத்தும் அசால்ட்டா (இது நம்ம ஆளுங்க சொல்ர அசால்ட்) சொல்லிட்டு போயிட்டூங்க. நீங்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது. சொல்ல வந்த சப்ஜெக்ட்டை எப்படி அவ்ளோ இலகுவா சொல்ல முடியும் என்பதை உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ நீங்க வேற . நாம எல்லாம் ஒரு இனம் ,குணம்.
   உங்ககிட்ட கத்துக்க எத்தனையோ இருக்கு!!!
   நன்றி சகோ!

   நீக்கு
 3. எனக்கு சம்பந்தமில்லாத சப்ஜெக்ட்.. அதனால வந்ததுக்கு அடையாளமா ஒரு கருத்து சொல்லிட்டு போறேன் நல்லா கேட்டுகோங்க..

  நோபல் பரிசு வாங்கிறது என்னமோ பெரிய கஷ்டம் போல பலர் நினைக்கிறாங்க அது ரொம்ப எளிமையானது வேணும் என்றால் எனக்கு கொடுக்க சொல்லுங்க நான் அலட்டிக்காம வாங்கி காட்டுறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழன் சகோவிற்கு இலக்கியத்திற்கான நோபல் ஒன்னு பார்சல் !!
   //நான் அலட்டிக்காம வாங்கி காட்டுறேன்.// இத தான் தாங்க முடியல :(((

   நீக்கு
 4. நான் இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் ரொம்பவும் மக்குங்க. உங்க புண்ணியத்துல இன்னைக்கு இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன்.

  வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரைத்தமிழன் மக்கு என்றால் யாரும் மறுக்காமல் ஒத்துக் கொள்வாங்க.. ஆனா நீங்க உண்மையானவன் என்று பெயரை வைத்துக் கொண்டு மக்கு என்று பொய் சொல்லலாமா?

   நீக்கு
  2. இதை நான் ஏற்றுகொள்கிறேன் . (இதுக்கு தான் நாங்க விவரமா அவர்கள் உண்மைகள் னு பேர் வைச்சுருக்கோம் ! இல்ல சகோ?)
   நன்றி சகோதரர்களே !

   நீக்கு
 5. மேரி குறித்து எராளமாய் சிலிர்க்கும் தகவல் இருக்க இன்னும் கொஞ்சம் தாரளம் காட்டியிருக்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காட்டியிருக்கலாம் ஆனா பதிவு தடம் மாறுமோ னு ஒரு குழப்பம் .
   முதன்முறையாக ஆன் த ரெகார்ட் கருத்து கூறிய கஸ்தூரி அவர்களுக்கு நன்றி நன்றி !!!!! (ஒரு வழியா இதுவும் ஒரு blog னு அப்ரூவல் கிடைச்சுருக்கு)

   நீக்கு
  2. அப்பாடா! சகோ வந்து முதல்முறையா கருத்திட்டதும் சகோதரியின் முகத்தில மகிழ்ச்சியைப் பாருங்க!!! எப்பவோ அப்ருவல் வாங்கின பிளாக்க்கு சகோ இப்ப தான் வருகை தந்துருக்காருனு தான் நான் சொல்வேன். இருப்பினும் தம்பதியினரின் இலக்கிய தேடல்கள் தொடரட்டும். பதிவுகள் வளரட்டும். அவைகள் அனைவருக்கும் பயன்படட்டும். நன்றி.

   நீக்கு
  3. நெகிழ்வாய் இருக்கிறது . நன்றி சகோ!!

   நீக்கு
 6. அறியாத புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
 7. அன்பான தோழியே !
  தோழி இது எவ்வளவு பெரிய விடயம் என்று புரியுதும்மா. ஆனா என்ன செய்யிறது தோழி நாங்க எவ்வளவு தான் தலையால கிடங்கு கிண்டினாலும் நமக்கு தரமாட்டாங்க, ஏன்னா நாங்க தான் மேரி பாமிலி இல்லையே ஹா ஹா ...
  நன்றி ! தோழி வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...ஹா...ஹா..
   விடுங்க நாம கொடுத்துடுவோம்!
   தோழி இனியாவிற்கு ஒரு நோபல் பார்சல்!

   நீக்கு
 8. சுவையான செய்திகளை சுவைப்பட சொல்லியிருக்கீங்க. பாராட்டுகள்.

  உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்!

  பதிலளிநீக்கு
 9. பல நல்ல புதிய தகவல்கள்! சகோதரி! சகோதரி மதுரைத் தமிழனுக்கு போட்டியா நீங்களும் நோபல் பரிசு வாங்கப் பாருங்கள்! சகோதரி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா, நமக்கு சிபாரிசுபண்ண ஆள் இருக்க ?!
   தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன் சகோ!

   நீக்கு
 10. தோன்றிற் புகழோடு தோன்றுக.............நல்ல தகவல்
  இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. சிறப்பான தகவல்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி மைதிலி.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் மைதிலி கஸ்தூரி ரெங்கன் - பதிவு அருமை - மேரி க்யூரி குடும்பத்தில் 5 நோபல் பரிசுகளா ? இப்பொழுது தான் தெரிகிறது - யார்யார் எவ்வளவு பரிசு பெற்றார்கள் என்று - பரவாய் இல்லையே - ஆசிரியப் பணி ஆய்வு செய்யவும் செய்கிறது - தங்கள்தளத்திற்கு இப்பொழுது தான் வருகிறேன் - இன்னும் நேரம் ஒதுக்க வேண்டும் - செய்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு