குருதி தொட்டும், எழுத்தில் அடங்காது
என்னை சூழழ்ந்து கிடக்கும் உனக்கான சொற்களை
மொழிபெயர்க்கும் வழியறியாது திகைத்து நிற்கும் - என் இரவுகள்.
நினைவடுக்கில் நீந்தும் உன்னை
திருத்தி பின் அச்சாய்த்தீட்டாமல்
தொடங்காது முடியாது என் நாட்கள்!
உன்விரலசைவுகளுக்குக்கட்டுண்டு
இயங்குகின்ற என் வாழ்வு -லயமற்று திணறும்
உன் இசைக்குறிப்பின் இடறல்களால் ...
நீ ஆள்கையில் மாள விரும்பாது
அகலுகயில் மீளவும் விரும்பாது
உன் மடியே சுவர்க்கம் என சுற்றுகிறதென் மனம்.
உன்னையும் என்னையும் சிறகுகளாய் மாற்றி
பறக்கத்தொடங்குகிறது என் உயிர்க் குருவி - இறுதிக்குவளை நீராய்
இனிக்கும் விசமாய் இன்னும் கொஞ்சம் திட்டு !!!
என் கரைகள் தகர்க்கும் உன் நினைவலைகள்
எனினும் உன்னை நிரப்பி, நிரம்பி தளும்பும்
என்னை எட்டிப்பார் உன் பிம்பம் தெரியும்.....
நினைவால் அணைக்கிறாய், பற்றுகிறது கவிதைத்தீ
உன் நினைவுச்சுழலில் சிக்கித் தடுமாறும் -
உன்னையே இலக்காய்க் கொண்ட என் பாய் மரங்கள்
எது செய்த போதும் உன்னை வெறுக்காது
நீ எறிகின்ற சொல் அனைத்தும்
இழுத்துக்கொள்ளும் என் மனக்குளம்.....
பி.கு
இந்த கவிதை விஜு அண்ணாவின் உயிர் திரும்பும் சந்தக்கவியின் தாக்கத்தால்.( ஓகே யா அண்ணா)
அப்புறம் சந்தக்கவிதை, படிமக்கவிதைனா என்ன என்று கேட்ட நண்பர்களுக்கு; ரைமிங்கா கிளாசிக்கா இருந்தால் அது சந்தக்கவிதை.
லேயர்சா, trendyயா இருந்தா படிமக்கவிதை:))) நல்ல விளக்கம் வேனும்ன இங்க சொடுக்கி பின்னூட்டத்தில் விஜு அண்ணா நிறைய தனடக்கத்தோடு எழுதி இருப்பார் பார்த்துகோங்க!!!
மோசமான கவிதையை சற்று மாற்றி நல்ல கவிதையாக மாற முடியும் . நல்ல கவிதையை மோசமாகவும் மாறமுடியும். ஆனால் நல்ல கவிதையை அதன் நயம் மாறாமல் இன்னொரு விதமாகத் தருவது அவ்வளவு எளிதன்று.அதை வெற்றிகரமாக செய்வதற்கு பாராட்டுக்கள். நல்ல முயற்சி வரவேற்கிறோம்.
பதிலளிநீக்குஅய்யா,
நீக்குவணக்கம். தங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி!
அண்ணா!
நீக்குமுதல் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி! ஆனா அந்த கவிதைகளை படிமம் ஆக்கிறது அவ்ளோ கடினமா இருந்தது ! விஜு அண்ணாவின் செறிவான பதிவு ! இல்லையா அண்ணா?
அருமை
பதிலளிநீக்குநன்றி அண்ணா!
நீக்குஆஹா ஆஹா அம்முக்குட்டி....பிரமிக்கும் படியாய் எவ்வளவு அமைதியா ஆர்பாட்டமே இல்லாமல் தன்னிச்சையா எழுதிறீங்கடா. என் அம்முகுட்டியால் மட்டும் தான் முடியும். wow தொடர வாழ்த்துக்கள்....!
பதிலளிநீக்குஅப்புறம் சந்தக் கவிதை படிமக் கவிதை பற்றி தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றிம்மா.! டீச்சரம்மா டீச்சரம்மா தான் பார்த்தீங்களா.
thanks டா செல்லம்!!
நீக்கு**அப்புறம் சந்தக் கவிதை படிமக் கவிதை பற்றி தெளிவு படுத்தியமைக்கு**
தெளிஞ்சுடுச்சா?? ரொம்ப thanks டா!
சொற்கள் அனைத்தையும் இழுத்துக் கொள்ளும் மனக் குளம் ,இதற்கும் 'பெர்முடா முக்கோணத்'தின் பண்பு இருக்கும் போலிருக்கே !
பதிலளிநீக்குத ம 1
அது தான் பாஸ்!! நச்சுனு சொன்னீங்க போங்க!! நன்றி!
நீக்குமுதல் பார்ட்ல விழுந்தீங்க. சரி எழுந்து இனிமேல் கவனமாக நடப்பீங்கனு பார்த்தால் மறுபடியும் விழுந்துட்டீங்களா? :-)
பதிலளிநீக்கு******************
இது வெறும் ட்ரைலர் விமர்சனம்தாம்மா!
கவிதையை நல்லாப் படிச்சுட்டு வர்ரேன் கருத்துச் சொல்ல! அப்புறம் இருக்கு முழு பிக்சர் பத்தி விமர்சனம்! :)
வருண் பார்த்துப்பா புள்ள பயந்திடுமில்ல என் அம்முகுட்டிய கலாய்காவிட்டால் தூக்கமே வராதில்ல ம்..ம்..ம்..
நீக்குநல்ல சொன்னீங்க செல்லம்:) எப்போ பார் டரியல் ஆக்குறது:)) @ இனியாச்செல்லம்.
நீக்குவாங்க சார்! பிக்சர் பார்க்க ஆவலா இருக்கேன்:) @ வருண்.
இனியா: நான் பார்த்து கவனமாகவே எழுதுறேன். :) உங்க அம்முக்குட்டியை நெனச்சு ரொம்ப கலங்காதீங்க! :)
நீக்கு*****************************
தற்போது காதலில் லயித்து இருப்பவர்களுக்கு இக்கவிதை ஆயிரமாயிரம் உணர்வுகளைக் கொடுக்கும்/தூண்டிவிடும் னு நினைக்கிறேன்.
உயிர்குருவி, மனக்குளம் போன்ற வார்த்தைகளை இப்போத்தான் கற்றுக்கொள்கிறேன்.
மற்றபடி கவிதை காதல் ரசம் சொட்டச் சொட்ட நல்லாவே இருக்கு, மைதிலி! :) வாழ்த்துக்கள்!
வெற்றிகரமான முயற்சி சகோதரி! ரொம்ம்ம்பவே ரசித்தோம்......
பதிலளிநீக்கு//எது செய்த போதும் உன்னை வெறுக்காது
நீ எறிகின்ற சொல் அனைத்தும்
இழுத்துக்கொள்ளும் என் மனக்குளம்.....// பின்னிட்டீங்க போங்க....!!
ஆஹா!! சகாஸ்!!
நீக்குநன்றி ! நன்றி!
அய்யோ,
பதிலளிநீக்குசகோதரி
படிமம் சந்தம் விளக்கம் என்றெல்லாம்
என்னை இப்படி மாட்டிவிடாதீர்கள்!
பாவம் நான்!
ஏதோ பிழைத்துப் போகிறேன்.!
மற்றபடி,
எனது எழுத்தின்
உள்ளடக்கம் மீறியே
சிறப்பாகப்
பயணிக்கின்றன தங்களின் கவிதைகள்!
படிமங்கள் சிலவற்றை அப்படியே விட்டுவிடலாம் எனத்தோன்றுகிறது.
விளக்க வேண்டியதில்லை.
விளக்கினால் உருவகம் ஆகிவிடும் அபாயம் உண்டு!
“இனிக்கும் விசமாய் இன்னும் கொஞ்சம் திட்டு“ என்னும் உங்களின் வரிகள்,
...நீ
..கொடுத்தது விஷம்தான்!
..ஆனாலும்
..எவ்வளவு குடித்தும்
..தாகம் அடங்கவில்லை!
..இன்னும் கொடு!
என்ற என் பதிவுவொன்றின் வரியை நினைவூட்டுகின்றன.
தயங்காது தொடருங்கள்!
நன்றி!
இல்லை அண்ணா. நீங்க ஏற்கனவே எழுதிய பின்னூட்டத்தை தான் குறிப்பிட்டேன்:) சென்ற பதிவில் பின்னூட்டத்திற்கு பதிலே போட முடியாத அளவு பிஸி! ஆனா ரொம்ப மனக்குறையா இருந்தது! அண்ணா படிக்கப் படிக்க பல நூறு உணர்வுகள் தருகிறது உங்க கவிதை. சில வரிகளை படிக்கும் போது தெரியாம மாட்டிகிட்டோமொன்னு மிரள வைக்கிறது வரிகள். அதை அதே அளவு இல்லாவிட்டாலும் கொஞ்சம் நெருக்கமான சுவையோடு சொல்ல முயல்கிறேன்:)
நீக்குஉங்களை போலவே உங்கள் கவிதைகள் மீதான மதிப்பும் உயர்ந்துகொண்டே போகிறது:)
நன்றி அண்ணா!
என் கரைகள் தகர்க்கும் உன் நினைவலைகள்
பதிலளிநீக்குஎனினும் உன்னை நிரப்பி, நிரம்பி தளும்பும்
என்னை எட்டிப்பார் உன் பிம்பம் தெரியும்.....
நான் மிகவும் ரசித்தேன்.
தங்களுக்காக எனச்சொல்லி இட்டபதிவு.
சுட்டபழம். காண்க...
எனக்கு பிடித்த வரிகள் உங்களுக்கும் பிடிச்சிருக்கு அண்ணா! ரொம்ப நன்றி! பதிவை பார்த்துட்டேன்!!
நீக்குசிறந்த முயற்சிக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குமரத்தை மறைத்தது மாமத யானை!
பதிலளிநீக்குமரத்துள் மறைந்தது மாமத யானை!
ஆழ்ந்த பொருள். அருமையான கவிநடை!
மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் தோழி!
பாகம் ஒன்றில் இதே கருத்தை வெளியிட்டார் விஜூ அண்ணா!!!
நீக்குமிக்க நன்றி தோழி!!
எதைக் குறிப்பிட்டுச் சொல்ல? ஒவ்வொரு வரியும் வாசகரை ஒவ்வொரு தளத்துக்கு அழைத்துச்செல்லும் அதிசயம். பாராட்டுகள் மைதிலி.
பதிலளிநீக்குநன்றி அக்கா!
நீக்குஓ அப்போ நான் சந்தக்கவி என்று அறிந்திருந்தது சரிதான்..நன்றி தோழி :)
பதிலளிநீக்கு//என் கரைகள் தகர்க்கும் உன் நினைவலைகள்
எனினும் உன்னை நிரப்பி, நிரம்பி தளும்பும்
என்னை எட்டிப்பார் உன் பிம்பம் தெரியும்.....// அட அட
எவ்வளவு அழகா இருக்கு தோழி, கவிதை என்று சொல்லிக்கொண்டு நான் எழுதுவதை விட்டுவிடலாம் என்று தோன்றுகிறது...உண்மையாகவே தோழி நீங்கள், கீதா, இளமதி, கீதமஞ்சரி இன்னும் சில பேர் எழுதும் கவிதைகள் படிக்கும்போதெல்லாம் எனக்கு இப்படித் தோன்றுகிறது..
த.ம.6
வாழ்த்துக்கள் டியர்
சும்மா விளையாடாதீங்க கிரேஸ்:))
நீக்குநன்றி!
நிஜமா :)
நீக்குகவிதைக்களத்தில் ஆடல் மகளாகவும் அந்தப்புரத்தில் கூடல் மகளகவும் உருமாறியிருக்கிறாய்,,வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநன்றி அம்மா!
நீக்குஆஹா ஆஹா அம்முக்குட்டி....பிரமிக்கும் படியாய் எவ்வளவு அமைதியா ஆர்பாட்டமே இல்லாமல் தன்னிச்சையா எழுதிறீங்கடா. என் அம்முகுட்டியால் மட்டும் தான் முடியும். wow தொடர வாழ்த்துக்கள்....!
பதிலளிநீக்குஹீஹீஹீ லேட்டா வந்து படித்ததினால் இனியாவின் கருத்த இங்கு காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன்
ஹலோ! அது இனியாவிற்கும், கிரேஸ் க்கும் மட்டுமே லைசென்ஸ் கொடுக்கப்பட்ட வார்த்தை. அப்புறம் கோர்ட்ல கேஸ் போடுவோம் பார்த்துகோங்க:)
நீக்குஆங்கில டீச்சர் அம்மா, எப்பொழுதிலிருந்து தமிழ் டீச்சராக உருவெடுத்தீர்கள்?
பதிலளிநீக்குஇந்த மாதிரி எல்லாம் நீங்கள் எழுதினால், உங்களின் கவிதைகளை நான் இரண்டு மூன்று முறை படித்து பார்த்து பொருள் அறிந்துக்கொள்ள வேண்டும் போல இருக்கே.
அந்த கடைசி பத்தி மிக அருமை.
வாழ்த்துக்கள்.
ஆஹா! அப்படியா !! நன்றி சகோ!
நீக்கு"எது செய்த போதும் உன்னை வெறுக்காது
பதிலளிநீக்குநீ எறிகின்ற சொல் அனைத்தும்
இழுத்துக்கொள்ளும் என் மனக்குளம்..." என
பாவரிகளின் சிறப்புத் தெரிகிறதே!