புதன், 6 ஆகஸ்ட், 2014

ஒரு கோப்பைத்தேநீருக்கு நேரம் ஒதுக்குங்கள் !

  

          ஒரு காபி குடிக்கலாமா? பெரும்பாலான சினிமாக்களில் ஒரு யுவதியை கவர நாயகன் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் நான் வளர்ந்த சூழலில், வாழ்கிற சூழலில் பெரும்பாலான பெண்கள் தேநீர் குடிப்பதையே பார்த்துவருகிறேன். என் ஆரம்பப்பள்ளி நாட்களில் எனது பாட்டியும் அவரது தோழிகளும் ஒரே நாளில் அடிக்கடி தேநீர்க் குடிப்பதை பார்த்திருக்கிறேன். பல நேரம் உணவு கூட தேவைப்படாது அவர்களுக்கு. அப்படி கூடி, கதை பேசும் அவர்களை எரிச்சலை அடக்கிக்கொண்டு கடக்கும் மருமகள்களையும் கவனித்ததுண்டு.பின் காலங்கள் மாறி, நான் உயர்நிலை வகுப்புக்கு செல்லத்துவங்கிய போது என் அத்தைகளும், அம்மாவும் அம்மாவின் வயதினரும் அப்படி தேநீர் குடிக்கத்தொடங்கி இருந்தனர். அறிதான சில நாட்களில் அம்மாவும், பாட்டியும் (அவரது மாமியார்) சேர்ந்து தேநீர் குடிக்கும் பொழுதுகளில் ஒரு ஒத்த அலைவரிசை அவர்களிடையே இழையோடுவதை அறிய முடிந்தது! வாசிப்பு கொஞ்சமும், வாழ்க்கை நிறையவுமாக கற்றுக்கொடுத்திருக்கும் இந்த  சூழலில் ஓடுகின்ற உலகம் எனக்கும், என் தோழிகளுக்கும் அதற்குள்ளாகவே தேநீர் தருணத்தை தந்துவிட்டது! புரியவில்லை அல்லவா? ENGLISH VINGLISH ஸ்ரீதேவி, HOW OLD ARE YOU? மஞ்சுவாரியர், பிரிவோம் சிந்திப்போம் சினேகா என வெகு சில கதாபாத்திரங்களே வெளிச்சம் பாய்ச்சிய, பெண்கள் காலாகாலத்திற்கும் கடந்துவரும் ஒரு மௌனப்பெருமூச்சு தான் அது!

எத்தனை வயது வரையும் பதவி உயர்வு, ஊக்க ஊதியம் என ஏதாவது ஒரு இலக்கு, தேடல், என கொண்டாட்டம் நிறைந்ததாக மாற்றிக்கொள்ளும் ஆண்களின் சாமர்த்தியம், சூழ்நிலை, பெரும்பாலான பெண்களுக்கு அமைவதே இல்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் இனி தனியா சாதிக்க என்ன இருக்கு என்ற விரக்தி நிலைக்கு தன்னையே தள்ளிக் கொள்கிறார்கள் .
மீறி தலையெடுக்கும் பெண்கள் நேரடியாகவோ, முதுகுக்குபின்னோ  தன்னைப்போலவே மற்றொரு பெண்ணால் கேலிசெய்யப்படுகிறார்கள், தூற்றப்படுகிறார்கள். இதுக்கு மேல நம்ம பிள்ளைக சாதிச்சா போறதா? என அக்கறையோடு அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தனைக்கும் மேல் ஏதேனும் சாதிக்க முடிந்தாலும் அவளது கற்பே அதன் விலை என்றோ குடும்பப் பொறுப்பற்ற பெண் என்றோ கேட்டுக்கொள்ள வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள். உணவை வெறுத்து, தேநீரை சரணடைகிறார்கள். மாறிவரும் ஆண்களின் மனநிலையில் தன் மனைவியின் பொழுதுகளை இனிமையாக, பயனுள்ளதாய் மாற்றிக்கொள்ள பெரும்பாலான ஆண்கள் இன்று குறுக்கீடுகள் தருவதில்லை. என்ற போதும் பெண் அதுபோன்ற செலவுகள் செய்வது பொறுப்பற்ற செயல் என்று ரத்தத்திலேயே ஊறிவிட்ட மனோபாவம் அவர்களை மேலும் மேலும் விரக்தியை நோக்கியே தள்ளுகிறது. நகைமுரண் என்னவென்றால் கணவரின்  பணத்தை மிச்சம் பிடிக்கிறேன் பேர்வழி என்று எப்போதேனும் குடும்பத்தோடு சேர்ந்து அனுபவிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதுகூட எரிந்துவிழுந்து மனக்கசப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

கொஞ்சம் விரைந்து முடிவெடுக்கும் விவேகம் நிறைந்த பெண்கள் தன் நிலை உணர்ந்து , தனக்கு பிடித்த துறையில் மனதை திருப்புகிறார்கள் அல்லது பொழுதுபோக்கை அமைத்துக்கொள்கிறார்கள். பரிதாபத்திற்குரிய பலரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். நீங்கள் பெண்ணாக இருந்தால் இனி ஒரு நாளைக்கு எத்தனை முறை தேநீர் தேடுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். ஆண் என்றால் உங்க மனைவி, அம்மா என்கிற சக தோழிகளோடு ஒரு கோப்பைத்தேநீருக்கு நேரம் ஒதுக்குங்கள். அந்த பொழுதை அவர்கள் ருசிக்கத்தொடங்கினால் நீங்கள் இல்லாத நேரத்தில் தேநீர் குடிப்பதுகூட பிடிக்காது போகும் அவர்களுக்கு.


பி.கு
ஆண்களுக்கு மன அழுத்தங்கள் இல்லையா?  இது என்ன பெண்ணியக்கட்டுரை என்றெல்லாம் பொங்கித் தீற்காதீர்கள் நண்பர்களே. அதிகாலையில் பரபரப்பாய் அரசியல் பேசிய படி டீ
குடிக்கும் ஆண்களை பார்க்கும் ஒரேயொரு தருணம் மட்டும் ஆணாக பிறக்கவில்லையே என நினைப்பேன். so உங்க தேநீர் தருணம் பற்றி எனக்கு தெரியாது:) ( என்னாது அந்த பொறாமைல தான் வீட்ல டீ குடிக்க சொல்றேன்னா சொன்னீங்க? விடுங்க பாஸ் தோதுபட்ட ஒரு வேலையை வீட்ல இருக்கிற உங்க கேர்ள் பிரண்டு அதான் அம்மா, மனைவி இவங்க கூட ஷேர் பண்ணிக்கங்க. ஏன்னா ஷேரிங் பத்தி டீச்சர் தானே சொல்லிக்கொடுக்கனும்;)

51 கருத்துகள்:

 1. வீட்டில் இருக்கும் பெண்கள் யாரும் டீக்கு அடிமையான மாதிரி தெரியலியே !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சபாஷ்! எல்லாம் பாஸ் எழுதும் ஜோக்குகளை படித்து ஸ்ட்ரெஸ் ப்ரீயா இருக்காங்க னு தெரியுது!

   நீக்கு
 2. அருமையான கட்டுரை! (இனிமேல் இப்படி உதட்டளவில் பேசும் பின்னூட்டங்கள் இட்டு நான் நல்லவனாக நடிக்கப் போறேன்!)

  அப்பாவி வருண்! எதையும் மனதாற பாராட்டுவதைத்தவிர அவருக்கு எதுவுமே தெரியாதே னு ஒரு "பிம்பம்" உருவாக்க முதல் பின்னூட்டம் இது!

  மைதிலியின் தளத்தில் ஒரு பெண்ணியக்கட்டுரையில் பிள்ளையார் சுழி (உ) போட்டாச்சு! :)

  It is not too late to convince everybody that Varun is a great guy "image"? Right, Mythily? :)))

  பதிலளிநீக்கு
 3. அட நீங்க பதிவுலகத்தை விட்டே போயிட்டீங்கள் என்று அல்லவா நினைத்தேன் உங்கள் வருகைக்கு நன்றி.
  யாரையாவது கலாய்க்கவிட்டால் தூக்கம் வருவதில்லை. பிரியாணிக்கு ஆடு வந்து மாட்டிகிடுச்சு..

  பதிலளிநீக்கு
 4. /// ஒரு காபி குடிக்கலாமா? பெரும்பாலான சினிமாக்களில் ஒரு யுவதியை கவர நாயகன் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று///

  நல்ல வேளை சினிமாக்களில் என்று சொன்னதால் நீங்கள் தப்பித்தீங்க... இந்த காலத்தில் கமான் யா ஜில்லுன்னு ஒரு பீர் அடிக்கலாமா என்று கேட்பார்கள்

  பதிலளிநீக்கு
 5. ///பாஸ் தோதுபட்ட ஒரு வேலையை வீட்ல இருக்கிற உங்க கேர்ள் பிரண்டு அதான் அம்மா, மனைவி இவங்க கூட ஷேர் பண்ணிக்கங்க. ///
  அட நீங்க எந்த காலத்துல இருக்கீங்க.... நீங்க சொன்னதில் ஒரு சின்ன திருத்தம் கேர்ள் பிரண்டு அம்மா, மனைவி என்கிறதுக்கு பதிலாக பாய்பிரண்டு அப்பா, கணவன் என்று மாற்றி பதியவும் இந்த காலத்துல பாஸ் என்பது மனைவியை குறிக்கும்

  மைதிலி மேடம் உங்க உடம்புக்குள்ள ஏதோ அந்த காலப் பெண்ணின் ஆவி புகுந்துடுச்சு போல உங்க கணவரிடம் சொல்லி நல்ல ஆவி ஓட்டுபவரை போய் பாருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல வேளை, என்னையே அந்த காலத்து ஆள் என்று சொல்லாமல் விட்டீங்களே!

   நீக்கு
 6. என்னடா நாம சீரியஸான பதிவு போட்டு இருக்கிறோம் நம்ம பாரட்டாம இப்படி மதுரைத்தமிழன் கலாய்க்கிறானனே என்று நினைக்காதீங்க....இப்படி கலாய்ப்பது என்பதுதான் மதமிழன் பாராட்டுக்கள் பாணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை எக்ஸ்ப்ளைன் பண்ணி நட்பை கொச்சைபடுத்தாதீங்க சகா! ஐ அண்டர் ஸ்டாண்ட்:))

   நீக்கு
 7. வீட்டுப் பெண்களுக்கு டீக்காக நேரம் ஒதுக்குங்கள் என்பதில் அவர்கள் மீதான அக்கறையை நாம் வெளிப்படுத்தும் வழிகளில் அதுவும் ஒன்று என்பது புரிகிறது டீச்சரம்மா. நல்ல விஷயத்தைப் பகிர்ந்திருக்கீங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...ஹா...ஹா..
   அண்ணா நீங்க டீச்சர், டீச்சர்னு கூப்பிட்டு கலாய்க்காதீங்க ப்ளீஸ்! உங்களுக்கு தங்கை தான்:)

   நீக்கு
  2. ரைட்டு. இனி என் தங்கைய நான் கலாய்க்க மாட்டேன் நிச்சயமா.

   நீக்கு
 8. தேநீரை வைத்து இவ்வளவு விஷயம் எழுத முடியும்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் டீச்சர்.

  எனக்கு அந்த மாதிரி டீ குடிக்க கொடுப்பினை எல்லாம் இல்லை. ஆனால், இன்றைக்கு அலுவலகத்தில் நான் போட்ட டீயை குடித்துக்கொண்டே தான் இந்த பதிவை படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. *****இன்றைக்கு அலுவலகத்தில் நான் போட்ட டீயை குடித்துக்கொண்டே தான் இந்த பதிவை படித்தேன்.***
   ஒ! மேட்டர் அப்படி போகுதா? நடத்துங்க , நடத்துங்க:)
   நன்றி சகோ!

   நீக்கு
 9. ஆஹா அருமைமா....தேநீர்..அருந்த வரலாமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்டுவிட்டு நேரே வந்து தேநீர் அருந்திவிட்டு சென்ற சகோதரிக்கு மிக மிக நன்றி:)))

   நீக்கு
 10. அம்முக் குட்டி ஆஹா எவ்வளவுடா அவ்ளவும் உண்மை நியாயமானதும் கூட
  ஆனால் ஒரு சிக்கல் கூடி பேசி மகிழ்வது நல்லது தான் மனதிற்கு அமைதியும் சந்தோசமும் வரும்படி பொதுவாக பேசினால்..சந்தோஷம் ... ஆனால் சிலர் அப்படி இருந்து யாருடைய தலையை யாவது உருட்டுவார்கள் பாருங்கள் அம்மாடியோவ் .....அப்போ குழப்பங்கள் தான் கூடும். அதை தான் அம்மு நான் வெறுக்கிறேன். மற்றும்படி எனக்கும் விருப்பம் தான் தேநீர் குடிக்க. எப்போ வரட்டும் அம்மு. சக்கரை யோடு கிடைக்கும் இல்ல. ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டார்லிங்க்கு இல்லாத டீயா? எப்போவேணா வரலாம் செல்லம்:)

   நீக்கு
 11. வணக்கம்
  அருமையான தகவல் தந்தமைக்கு நன்றிகள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 12. யாதார்த்தத்தை எளிமையாக,நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தோழி.நன்றி.

  பதிலளிநீக்கு
 13. எப்படி மைதிலி!!, கையில் தேநீர்க் கோப்பையுடன் வந்து ப்ளாக் திறந்தா உங்க பதிவு தேநீர் பற்றி :)

  பதிலளிநீக்கு
 14. இதச் சொல்ல மறந்துட்டேன் மைதிலி . உணவை வெறுத்து எடுத்த தேநீருடன் அல்ல, கணவர் போட்டுக்கொடுத்த அருமையான தேநீருடன் படித்தேன் :)

  பதிலளிநீக்கு
 15. டீ க்கு பின்னால் தாங்கள் சொல்லும் விசயங்கள் ஒழிந்திருப்பதும் உண்மையே....
  மேலே படத்தில் இரண்டு டீ கப்பு இருக்கவும் தேனீர் அருந்தலாமென்று நினைத்தேன் பிறகுதான் தெரிந்தது ஏட்டுச்சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்று.

  பதிலளிநீக்கு
 16. சரி நம்ம யூசுவல் ஸ்டைல்க்கு போயிடலாம்.. :)

  *****மீறி தலையெடுக்கும் பெண்கள் நேரடியாகவோ, முதுகுக்குபின்னோ தன்னைப்போலவே மற்றொரு பெண்ணால் கேலிசெய்யப்படுகிறார்கள், தூற்றப்படுகிறார்கள். இதுக்கு மேல நம்ம பிள்ளைக சாதிச்சா போறதா? என அக்கறையோடு அறிவுறுத்தப்படுகிறார்கள். *****

  ஒரு பெண் ஃபைனானிஸியல் இண்டிப்பெண்டெண்ட்ஸ் பெற்றுவிட்டால், இந்த தூற்றல் எல்லாம் ரொம்ப நாளைக்கு நிக்காது என்பதே உண்மை. அதைத்தான் இன்றைய நடப்பில் பார்க்கிறோம்.

  பணம் பத்தும் செய்யுதோ இல்லையோ, அவளை நிச்சயம் ப்ரட்டெக்ட்ப் பண்ணும்.So, financial independence is something women need to even have a cup of coffee and chit-chat with a friend. Once she gets financial independence, she can do as she wishes and can show a deaf ear to the criticisms and "blames" come from other conservative women! இவங்க இப்படியெல்லாம் சொல்றாங்களேனு அழுது அதுது கிடக்காமல், they should go by their conscience!

  ****இத்தனைக்கும் மேல் ஏதேனும் சாதிக்க முடிந்தாலும் அவளது கற்பே அதன் விலை என்றோ குடும்பப் பொறுப்பற்ற பெண் என்றோ கேட்டுக்கொள்ள வேண்டிய நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள்.****

  That is because, they know this is an abusive men world. They have prejudice against men. It is true. I am reading blogs, even some female bloggers tell that they were inappropriately approached by their well-known facebook friends or blog-world friends. அவர்கள் பயப்படக் காரணம் இது பயங்கரமான ஆண்கள் நிறைந்த உலகம் என்பதால்தான். இது பெண்கள் மேலே உள்ள அவநம்பிக்கையால் அல்ல. வேலைக்குப் போகும்போது அவர்கள் "இண்டெராக்ட்" செய்யும் ஆண் மிருகங்கள் அவர்களை நிம்மதியாக வாழவிடாது என்கிற பயம்னு சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. this is the spirit!!!
   ***ஒரு பெண் ஃபைனானிஸியல் இண்டிப்பெண்டெண்ட்ஸ் பெற்றுவிட்டால், இந்த தூற்றல் எல்லாம் ரொம்ப நாளைக்கு நிக்காது என்பதே உண்மை. அதைத்தான் இன்றைய நடப்பில் பார்க்கிறோம். ***
   நீங்க நடப்பில் பார்க்கும் பெண்கள் எல்லோரும் அப்படி இருப்பது ரொம்ப சந்தோசம்:)
   so அப்படி அட்வைஸ் செய்யும் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள். அவர்களில் மூணு பிரிவெல்லாம் கிடையாது. அவர்களது அனுபவப்பாடத்தில் இருந்து தான் இப்படியெல்லாம் நல்ல நோக்கில் அறிவுரை கூறுகிறார்கள். ஓகே! வருண் :))

   நீக்கு
 17. ****மாறிவரும் ஆண்களின் மனநிலையில் தன் மனைவியின் பொழுதுகளை இனிமையாக, பயனுள்ளதாய் மாற்றிக்கொள்ள பெரும்பாலான ஆண்கள் இன்று குறுக்கீடுகள் தருவதில்லை. என்ற போதும் பெண் அதுபோன்ற செலவுகள் செய்வது பொறுப்பற்ற செயல் என்று ரத்தத்திலேயே ஊறிவிட்ட மனோபாவம் அவர்களை மேலும் மேலும் விரக்தியை நோக்கியே தள்ளுகிறது.***

  இது பல கோணங்களில் பார்க்கவேண்டிய ஒரு விடயம். பெண்களில் பல வகை உண்டு- ஆண்களைப் போலவே! தம்பதிகளில் ஒரு ஆண் ஊதாரியாகவும் பெண் பொறுப்புள்ளவளாகவும் இருக்கலாம். அதே சம்யத்தில் ஒரு பெண் ஊதாரியாகவும் அவள் கணவன் பொறுப்புள்ளவனாகவும் இருக்கலாம்.

  ஒரு பெண் ஊதாரியாக இருக்கும்போது, பொறுப்பில்லாமல் செலவழிக்கும் ஒரு வீக்னெஸ் அவளிடம் இருக்கும்போது. "இல்லை இவள் பெண் என்பதால்தான் இவளை "செலவழிக்க விடமாட்டேன்கிறாங்க" என்று பெண்ணியவாதிகள் நியாயப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

  There are some women are irresponsible but using "such weapon" against men for their survival. "Women freedom" comes with a responsibility. So, they have to be responsible in financial matters as well. I am not talking about a cup of tea she has with her friend here. You can not go ahead and use "poor women weapon" to justify her irresponsibility. Let us be careful NOT GENERALIZING that all women are perfect. OK? :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்க ஒரு விஷயத்தை நான் நல்லா எக்ஸ்ப்ளைன் பண்ணலைன்னு புரியுது. வேற யாரோ தடுக்குராங்கனு நான் சொல்லவரலையே! சிக்கனமா இருக்கேன்னு அவங்களே அப்படி அதாவது ஒரு நேரம் வெளில சாபிடலாமா என கேட்கும் கணவரிடம் அது தண்டசெலவு என ஆத்திரப்பட்டுவிட்டு உடல் மன சோர்வோடு ஒரு வேளை சமைத்துவிட்டு ரெண்டுநாள் படுத்துக்கொள்ளும் பெண்களைப்பற்றி தானே சொன்னேன்!
   ***Let us be careful NOT GENERALIZING that all women are perfect. OK? :)**
   then, shall we generalize all women are imperfect ??:)

   நீக்கு
  2. அதெல்லாம் வேணாம். உங்களுக்கு வேணாம், எனக்கும் வேணாம், பர்ஃபெக்ட், இம்பெர்ஃபெக்ட் ரெண்டையும் கூட்டி "மீன்" எடுத்தால் சரியா வரும்! :))

   நீக்கு
  3. அந்த நல்ல மீன் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்! I mean that mean:))

   நீக்கு
 18. This article has been carefully written supporting women by a "feminist"(no offense here :) ). Just like men, there is a spectrum of women too (good, bad and not-good at all). There are women who abuse freedom they earned today, and being irresponsible too. Let us not forget that! Other than that, of course, I am always for "poor women" who have been abused and treated "unfairly" in the "men dominated world"! Nevertheless, let us not forget all kinds of women to make this world! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. really I cant understand this varun! help me friend:) vats wrong vit dis??
   I shared my experience as how I came out of my stress vit my reference to my mom and granny! I thought this ll help the woman who read this if she has same problem. or else some of my friends will make use of it if any of their mother or wife with this same problem. you know something PERIYAR is the greatest feminist I had read so far ever:)
   *** Let us not forget that! Other than that, of course, I am always for "poor women" who have been abused and treated "unfairly" in the "men dominated world"! Nevertheless, let us not forget all kinds of women to make this world! :)***
   hats off dear friend:) i hope these arguments never disturb our friendship:) good night!

   நீக்கு
  2. அம்மா தாயே! நீங்கல்லாம் கொஞ்ச நேரம் போயி கொஞ்சம் காஃபி குடிச்சுட்டு வந்து ரிலாக்ஸ் பண்னுறது தப்புனு நான் சொல்ல வரலை. It is your right (of course our mother and grand mother's right) to go get a cup of coffee with some fresh air whenever they feel like. I DO NOT SAY anything against that. சரி விடுங்க! We will talk about it elsewhere!

   *** i hope these arguments never disturb our friendship:) good night!***

   Never worry about that. Even if you keep away from me, I would say a "hi" to you! And come back for more debates and arguments! :-)))).

   நீக்கு
 19. உளந்தொட்ட உளவியற் பகிர்வு தோழி!
  உள்ளது சொன்னால் நான் எத்தனை கப் ரீ குடிக்கின்றேன் என்று
  எப்போ?.. எப்படி?.. நீங்கள் பார்த்தீர்கள் என்னும் வியப்பில் நான்....

  //ஷேரிங் பத்தி டீச்சர் தானே சொல்லிக்கொடுக்கனும்//
  ஆமாம்! அருமையான ஷேரிங் தான் இது...:)

  மிக்க நன்றியுடன் வாழ்த்துக்களும் தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ அடுத்த டீ தோழி கூட குடிக்கனும்னு போலவே:))
   வரவா?
   நன்றி தோழி!!

   நீக்கு
 20. இதுதான் அனுபவக்கட்டுரை என்பது. பெண்கள் கதாலையில் எழுந்ததும்,
  டீ கடைக்குப்போய் டீ குடிக்க விரும்புவதை திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ பாலபாரதி ஒரு கவிதையாகவே எழுதியிருக்கிறார்கள் தெரியுமா மைதிலி!
  அதே போல நான் “டீ குடிப்பது என்பது டீ குடிப்பதல்ல..“ என்று தொடங்கி, -1985-86 ஜேக்டீ போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்களையும் இழுத்துச் சென்ற கதையைக் கவிதையாகச் சொல்லியிருக்கிறேன்... நீயும் டீ குடித்த் அனுபவத்தை அதாவது கஸ்தூரி டீ போட்டு, நீயும் மகி-நிறைக் குட்டீசும் குடித்த அனுபவத்தை எழுதலாம்ல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா!! எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து!!!! அந்த கவிதையை படிக்க ஆசை அண்ணா!
   கஸ்தூரி டீ போட்டு கொடுத்ததில்லையே தவிர கவிதையான பல தேநீர் தருணங்களை பரிசளித்ததுண்டு:)) கொட்டும் மழைக்கு ஒதுங்காமல் டூ வீலரில் போய் ஈரம் சொட்டச்சொட்ட டீ குடித்த அனுபவத்தையும் சேர்த்து:))))

   நீக்கு
 21. ஒரு நாளைக்கு ரெண்டு தடவையாவது என் அம்மாவால் கேட்கப்படும் கேள்வி.. தேநீர் (டீ) போட்டுதரட்டுமாடா?..
  நீங்க நல்ல நல்ல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருங்கள்.. நாங்கள் இந்த தேநீரையும் பருகுவோம்.

  பதிலளிநீக்கு
 22. என் அம்மாவு ஒரு நாளுக்கு குறைந்தது மூன்று முறை டீ சாப்பிட்டு விடுவார். வீட்டில் இருக்கும் நாட்களில் நானும் அதே தான். டீக்கடையில் சென்று தான் டீ குடிக்க வேண்டும் என்று இல்லை. இன்று நிறைய காபி சாப்களில் ( பெரு நகரம் ) ஆண்களை விட பெண்களைத் தான் அதிகம் காண முடிகிறது. அப்புறம் நீங்கள் சொல்லும் பெண்ணுரிமை எல்லாம் வர குறைந்தபட்சம் 10 வருடங்களாவது ஆகும். சிறிய இடைவெளி. இனி வழக்கம் போல் தொடருவேன், நீங்களும் ?

  பதிலளிநீக்கு
 23. நல்லா சொல்லிருக்கீங்க ......ஆனா இங்க அந்தப் பிரச்சினை இல்ல......ஆனா நிறைய பெண்கள் காஃபிக்கோ, டீயிற்கோ அடிமையாகிடறாங்க...அப்படின்னு சமீபத்துல வாசிக்க நேர்ந்தது.....ஸ்ட்ரெஸ்னால......அப்படினு உளவியல் சம்பந்தப்பட்ட ஒரு கட்டுரை....

  ஓ அப்ப how old are you பாத்தீங்களா......மஞ்சுவாரியார் ரொம்ப நல்ல நடிகை......

  பதிலளிநீக்கு