தொடர்பு எல்லைக்கு வெளியே
தொலையநேரிட்ட காலையில்
ஒரு சுய உற்சாகமூட்டலாய்
நீங்கள் ரசிக்கத்தொடங்கிய நொடியில்
கவனம் பெற்றிருக்கும் அந்த காட்டுப்பூ
பார்த்தபின், பறித்த பின்
நுகர்ந்து பார்ப்பீர்
வண்ணத்தில் இருந்த வசீகரம்
வாசத்தில் இல்லை!!
வீடு திரும்பிய பின்
நாட்குறிப்பில் பத்திரப்படுத்தி
பின் மறந்தும் போவீர்கள்
அடுத்த முறை நீங்கள்
நாட்குறிப்பை திறக்கும் போது
அறைமுழுதும் நெடிபரப்பும்
நாட்குறிப்பில் நசுங்கிய காட்டுப்பூ!!
உங்கள் கவனத்திற்கு
காட்டுப்பூக்கள் காகிதப்பூக்கள் அல்ல!!
தொலையநேரிட்ட காலையில்
ஒரு சுய உற்சாகமூட்டலாய்
நீங்கள் ரசிக்கத்தொடங்கிய நொடியில்
கவனம் பெற்றிருக்கும் அந்த காட்டுப்பூ
பார்த்தபின், பறித்த பின்
நுகர்ந்து பார்ப்பீர்
வண்ணத்தில் இருந்த வசீகரம்
வாசத்தில் இல்லை!!
வீடு திரும்பிய பின்
நாட்குறிப்பில் பத்திரப்படுத்தி
பின் மறந்தும் போவீர்கள்
அடுத்த முறை நீங்கள்
நாட்குறிப்பை திறக்கும் போது
அறைமுழுதும் நெடிபரப்பும்
நாட்குறிப்பில் நசுங்கிய காட்டுப்பூ!!
உங்கள் கவனத்திற்கு
காட்டுப்பூக்கள் காகிதப்பூக்கள் அல்ல!!
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குவழக்கம் போல் அசத்தி விட்டீர்கள். அழகான சிந்தனை. ஆழமான வரிகள். கவிதையின் பல வரிகளில் உங்கள் தனித்துவம் ரசிக்க வைக்கிறது. தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி.
ஆஹா! சகோ உடனடி கமென்ட் !
நீக்குநன்றி நன்றி !!
அருமை ரசிக்க வைக்கும் படத்துடன்...!
பதிலளிநீக்குநன்றி டி.டி.அண்ணா !
நீக்குநாட்குறிப்பில் நசுங்கிய காட்டுப்பூ!! இது தலைப்பிற்கும் உகந்தது வித்தியாசமான சிந்தனை அழகான படமும் தோழி வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குஅட ! ஆமாம்!
நீக்குநன்றி தோழி!
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி அண்ணா !!
நீக்குஅய்யோ! அந்தப் பொண்ணு மேல ஒரு பட்டாம் பூச்சி... தட்டிவிடலாம்னு தட்டினா.. அது பெரிசாயிருச்சி! கவிதை -ஆங்கில விளக்கத்தால்- வேறு பொருளும் பெற்று, ஒப்பீட்டுச் சிந்தனையுடன் உயிர்பெற்றது! ( எனக்கு English அவ்வளவு நல்லாத் தெரியாது இருந்தாலும் ஒரு சந்தேகம் -wild எனும் சொல் இந்த இடத்தில் பொருத்தம்தானாம்மா? Famelier, Notified விததியாசம் போல wild, brave ரெண்டுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டுன்னு நினைக்கிறேன்...)
பதிலளிநீக்குwild என்பதற்கு வகைப்படுத்தமுடியாத, காத்திரமான என்ற கவித்துவமான பொருளும் இருக்கிறது அண்ணா. அதுமட்டுமில்லாமல் brave எனும் சொல் கொஞ்சம் ஆண் தன்மை மிக்கது என்றும் courageous, bold என்பதே பொருத்தமாக இருப்பதாகவும் எனக்கு தோன்றுகிறது அண்ணா. நன்றி அண்ணா !
நீக்குஅப்படின்னா “வொயில்ட் அனிமல்ஸ்“ அப்படின்னு சினிமால பாத்துப் பாத்து “கொடுமையான மிருகங்ககள்“னு என் மனசுல பதிஞ்சதும் ஒரு காரணமா இருக்குமோ? இருக்கும் (நான் இங்லீஷ் டீச்சர் இல்லாம பி.ஈ.ட்டி. டீச்சர் கிட்ட குட், குட்டர்,, குட்டஸ்ட்... னு டிகிரிஆஃப் கம்பேரிசன் படிச்சவனாக்கும்! )
நீக்குஆனால் எனக்கு அமைந்த தமிழய்யா அருமையானவர்!
நீக்குநான் தான் தேறாம போய்டேன்!?
வண்ணத்தில் இருந்த வசீகரம்
பதிலளிநீக்குவாசத்தில் இல்லை!!
காட்டுப்பூக்கள் காகிதப்பூக்கள் அல்ல!! என
கவனத்திற்கு வந்த காட்டுப்பூக்களின்
களிப்பூட்டும் வாசத்தில் சொக்கிப்போனேன்..
கனிவான பாராட்டுக்கள்..!
//கவனத்திற்கு வந்த காட்டுப்பூக்களின்
நீக்குகளிப்பூட்டும் வாசத்தில் சொக்கிப்போனேன்.//நன்றி மேடம் ரசித்தமைக்கும் , கருத்திட்டமைக்கும்!
நல்ல கவிதை...
பதிலளிநீக்குநன்றி அண்ணா !
நீக்கு//வண்ணத்தில் இருந்த வசீகரம்
பதிலளிநீக்குவாசத்தில் இல்லை!!//
வாஸ்தவம்...நன்று
நன்றி சார்!
நீக்குWow! Fantastic! ஐயோ! ஆங்கிலம் வந்துவிட்டதோ! ரொம்ப நல்லாருக்குங்க அருமையான கவிதை! ரசித்தோம்!
பதிலளிநீக்கு//Wow! Fantastic! ஐயோ! ஆங்கிலம் வந்துவிட்டதோ!//
நீக்குCAPTION நை பார்த்ததும் வந்திருக்கும்!
நன்றி நண்பர்களே!
Wow! Fantastic! ஐயோ! ஆங்கிலம்! மிக அருமையான கவிதை! மிகவும் ரசித்தோம்ங்க!
பதிலளிநீக்குநச்..மிக அருமை தோழி..வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குநன்றி கிரேஸ்!
நீக்குசிறப்பானதொரு கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சார்!
நீக்குஎண்டுல வச்சுகின பாரு ஒரு டுச்டு (அத்தாம்மே டுஸ்ட்டு).... அங்கனே நிக்கிறமே நீ...!
பதிலளிநீக்குடாங்க்ஸ் வாத்தியாரே !
நீக்குஎப்டிப்பா இப்படி ஒரு சிந்தனை.....
பதிலளிநீக்குரசித்தேன் ரசித்தேன்....
ரசனையில் கண்களில் சிக்கிய காட்டுப்பூ
ரசிக்க தகுந்தவை மறதியினால் எங்கோ புத்தகத்துக்கு இடையே வைத்துவிட்டாலும் அது தன் மணத்தை இழப்பதில்லை..
திறமைகளை முடக்க நினைத்தால் எப்படி வீறுக்கொண்டு அது இன்னும் பன்மடங்கு பெருகுமோ அதுப்போல்...
அடக்கிவைத்து ஆள நினைத்தால் எப்படி இன்னும் பிரகாசமாய் தன் இருப்பை நிலைநாட்டுமோ அதுப்போல்...
சிந்தனை களஞ்சியத்தின் வரிகள் ஒவ்வொன்றும் சிறப்பு...
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் மைதிலி....
அதே அதே தான் சகோதரி , கொஞ்சம் முற்போக்கான பெண் என்றால் அப்படி இப்படி என்று நினைபவர்களுக்கான எச்சரிக்கை தான். நன்றி சகோதரி, ரசித்து கருத்திட்டமைக்கு!
நீக்குஅற்புதமான கவிதை
பதிலளிநீக்குஇக்கவிதை கூட காட்டுப் பூ தான்
காகிதப் பூ அல்ல
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அருமையான கவிதை. வாழ்த்துக்கள் சகோ.
பதிலளிநீக்குதேர்ந்த ரசனை ... நானும் ரசித்தேன் மகிழ்ந்தேன்...
பதிலளிநீக்குவணக்கம்..