திங்கள், 15 டிசம்பர், 2014

அப்பாட்டக்கருக்கு ஆங்கிலத்தில் என்ன ? கொஞ்சம் English - PART 10

       வழக்கம் போல பாட ஓய்வு வேளையில் சோறுபோடும் மொழி அறிவை வளர்த்துக்கொள்ளவும், அறிவுக்கு கொஞ்சம் சோறுபோடவும் dictionary யை புரட்டிக்கொண்டிருந்தேன். crow's feet என்றொரு சொல் இருந்தது. காக்கா காலுக்கெல்லாம் வெளக்கமா ?? என சிரித்தபடி இந்த phrase என்ன விளையாட்டு காட்டபோகிறது என்ற ஆவலுடன் படித்தால், இதே போல சில எல்லோருக்கும் தெரிந்த, எனக்கு தெரியாத  bird name phrase களை தொகுக்கலாமே என தோன்றியது!! நீங்களும் பாருங்க


crow's feet - உடலுக்கு மட்டும் வயதானால் கூட, கண்ணுக்கு அருகே விழும் சுருக்கங்களை கவனித்திருக்கிறீர்களா? அட, அடுத்தவங்க கண்ணை தான்ங்க. அவர்கள் சிரிக்கையில் காக்கைகள் பாதம் விழியின் ஓரத்தில்  வந்துபோகிறது இல்லையா?


 eat crow- இது காக்கா பிரியாணி இல்லங்க. வேற வழியே இல்லாமல் சுவிஸ் வங்கிகளின் துணையில்லாமல் கருப்பு பணத்தை எங்களால் மீட்க முடியவில்லைன்னு when pigs fly மோடி வெள்ளையறிக்கை வெளியிட்டால் அப்போ அவர் காக்காவை தின்னுட்டார் னு அர்த்தம்.(இதுக்கு நீ வெளக்காமலே இருந்திருக்கலாம்:((


Our teacher  was forced to eat crow when he discovered that the problem he solved  was totally wrong.

 goose bumps- இந்த ரசிகர்களோட பக்தியை பார்த்து உங்களுக்கு புள்ளலரிக்குதா?? அப்போ அதுதான்  goose bumps.



 I got goose bumps as I watched the terrific accident. 

 

duck soup - இது சப்ப மேட்டரு என சொல்லவேண்டுமா ?? அப்போ duck soupஅப்டின்னு சொல்லுங்க.

The competition  was duck soup. I am sure that I will win the prize. 




chicken-livered - அவர் சரியான பயந்தாகொலியா?? அப்போ அவர் chicken-livered தான்.

she called his brother  chicken-livered which made him very angry.




cock of the walk- இவரு தாங்க இங்கலிஷ் அப்பாட்டக்கர்.

My class leader thinks that he is cock of the walk. He thinks that he can do anything that he wants.

(பள்ளியில் சிந்தித்தால் இப்படி தான் பச்சபுள்ளைக்க எடுத்துகாட்டா வருது:)

 


bird-dog-  வேட்டைநாய் போல  வேருச்சு வெருச்சு பார்க்கிறது இல்ல  லோலோன்னு அலையிறது இப்படி நாய்ப்பாடு பட்ட இந்த verb பை பயன்படுத்துங்க.

these days you have to bird-dog  to get anything to be done perfectly


இன்னும் நிறைய பறவைகள் இருக்கு, ஆனா எல்லாம் திசைக்கொன்னா பறந்துட்டு இருக்கு. அடுத்த முறை பிடித்துவருகிறேன். கமென்ட் போடுறது தான் உங்களுக்கு duck soup ஆச்சே! நீங்க வேலைய ஆரம்பிங்க!

கொஞ்சம் English-part ix படிக்க இங்க சொடுங்க.

44 கருத்துகள்:

  1. சூப்ப்பபர்ர்ர்ர்ர்ர்.........!நல்லதொரு இங்கிலீஷ் டீச்சர் கிடைச்சாச்சு.

    பதிலளிநீக்கு
  2. அடாடா, வித்தியாசமாக இருக்கிறதே... இன்றைய வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்,

    பதிலளிநீக்கு
  3. ங்கொக்கமக்கா .. இதுக்கு இங்க்லிஷ்ல என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. niece and nephew. ஆமா நீங்க அக்கா பெற்ற மக்களை தானே கேடீர்கள்:)

      நீக்கு
  4. அப்பாட்டக்கருக்கு ஆங்கிலத்தில் UP(அப்) Singer(பாட்டக்கருக்கு) நமக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சொல்லிட்டேனுங்க் டீச்சர் தப்பா இருந்தா காதை பிடிச்சி திருகாதீங்க டீச்சர்

    பதிலளிநீக்கு
  5. chicken-livered க்கு இப்படி அர்த்தமா? என் மனைவி இதை அடிக்கடி என்னை பார்த்து சொல்லுவா. நானும் அவ என்னை பெருமையா ஏதோ சொல்லுறான்னு நினைச்சு தேங்க்யூ என்று பதில் சொல்லுவேன். இதுக்குதானுனங்க உங்களை மாதிரி டீச்சரிடம் பாடம் படிச்சிருக்கனும்.... ஹும்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போல இந்த அவர்களின் உண்மையை நான் நம்பிட்டேன்:))

      நீக்கு
  6. நீங்க ஒரு duck soup ம் இல்ல
    goose bumps ம் இல்ல
    chicken liver ம் இல்ல
    cock of the walk ம் இல்ல
    you are a bird dog ok.
    என்னப்பா முழிக்கிரீங்க புத்தகத்த அதுவும்
    புதுப் புத்தகத்தப் பாத்தா.....))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி கவுத்துபுடீகளே டீச்சர:))) நன்றி டீச்சர்:)

      நீக்கு
  7. வணக்கம்
    கருத்துகள் சிறப்பாக உள்ளது... என்ன புதிய நாணயம் வந்து விட்டதா இந்தியாவில்... இருந்தால் அனுப்புங்கள் பார்க்கலாம் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. அப்படின்னா ,அப்பாடக்கர் இங்கிலீஷ் இல்லையா :)
    த ம 4

    பதிலளிநீக்கு
  9. அறியாத பல ஆங்கில மொழி தகவல்கள்.

    ஒரு ஆச்சரியம்...

    இந்த ஆங்கில வரிகள் அனைத்தும் நம் சமூகத்தின் அரைவேக்காட்டு தனங்களுக்கு பொருந்தி போகிறதே !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr


    பதிலளிநீக்கு
  10. டீச்சர், இன்னைக்கு வகுப்புல நிறைய புது புது ஆங்கில வார்த்தைகளை கத்துக்கிட்டேன்.

    "chicken-livered " - இதை படிச்கவுடனே, எனக்குத் தெரிந்த இன்னொரு ஆங்கில வார்த்தை தான் ஞாபகம் வந்துச்சு.

    "henpecked husband" - கல்யாணம் ஆன நிறைய ஆண்கள் இப்படித்தானே இருக்காங்க. அது தான் உடனே இந்த வார்த்தை ஞாபகத்துக்கு வந்துச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வார்த்தையை போடலாம்னு நினைத்தேன். பூரிக்கட்டை நினைவுக்கு வந்தது, அவர்கள் கோபித்துக்கொள்ள கூடாதில்லையா அதான் விட்டுட்டேன்:)))

      நீக்கு
  11. சூப்பர்! சகோதரி! நம்ம தொழிலுக்கு ஜஸ்டிஃபை பண்ணிட்டீங்க.....துளசி டீச்சர்...கீதா? டீச்சரில்ல ஆனா டீச்சர்.....

    நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
  12. அடடா... அருமை!
    இப்படி இங்கே பாடம் நடத்துறீங்கன்னு
    இத்தனை நாளா எனக்குத் தெரியாம போச்சே!..:)

    இனி ஒழுங்கா வகுப்புக்கு வந்துடறேன் டீச்சர்..:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! இது பத்தாவது கிளாஸ்:)) லிங்க் கொடுத்திருக்கேன். டைம் கிடைக்கும் போது பழைய பதிவை படிச்சுபாருங்க:)) நன்றி தோழி!

      நீக்கு
  13. ஆஹா சூப்பர்மா எங்களைப்போன்ற தமிழாசிரியர்களுக்கெல்லாம் கைக்கெட்டாத தூரத்தில் தான் இன்னமும் உள்ளது இங்கிலீசு...கூறியுள்ள விதம் நகைச்சுவையா ...அருமைடா.

    பதிலளிநீக்கு
  14. சூப்பரான தொகுப்பு...
    புதிய வார்த்தைகளை அறியத் தந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. கொஞ்சம் வேலை அதிகம். பதிவுலகில் ரொம்ப உலவ முடியலை. :)

    ------------------------

    தான் கற்றதை கற்றுக் கொடுப்பவர்தான் நல்ல டீச்சர். :)) நெறையா கற்றுக்கொண்டேன், மைதிலி டீச்சர். (இங்கே டீச்சர் அவசியம் என்பதலால் சகித்துக்கொள்ளவும், மைதிலி :) )

    -----------------

    அப்புறம்...

    அருணாவின் "காக்கா பிரியாணி" ரொம்ப பாப்புளர் ஆயிடுச்சு போல! :)

    இனிமேல் அருணானா யாருனு கேட்டால், ரஜினி ரசிகை அல்லது பிராண்ஸ்ல இருக்காரே அவரு, அதான் ஆண்களை சறுக்க வைத்து, பெண்களை மிதிக்க வைத்து கதை எழுதுவாரே? னு சொல்றதுக்கு பதிலா, அதான் நம்ம "காக்கா பிரியாணி அருணா" னு சொல்லலாம் போல இருக்கு! :) (இதை மட்டுறுத்தாமல் வெளியிட்டால் உங்களுக்குத்தான் அருணாவிடம் இருந்து அடி விழும்) :)))

    பதிலளிநீக்கு
  16. இந்த ஆங்கில டீச்சருக்கு தமிழ்ல எழுதிறதுன்னா எல்லாம் duck soup மாதிரி தான் என்று எனக்கு தெரியுமே. அதனால அவங்க பதிவை பார்க்கும் போதெல்லாம் goose bumbs வருதே. ஆச்சரிப் பட்டுப் போகிறேன் ஒவ்வொரு தடவையும் ஹா ஹா... மிக்க நன்றி !அம்மு அசத்தல்டா.

    பதிலளிநீக்கு
  17. சிறப்பா விளக்கம் சொல்வதோடு போரடிக்காம சொல்றதுதான் உங்கள் ஸ்பெஷாலிட்டி! அருமை!

    பதிலளிநீக்கு
  18. பலவும் அறியாதவையே!
    அறியத் தந்தமைக்கு நன்றி சகோ!

    ( இப்பதான் நேரம் கிடைச்சதான்னா இல்ல..... என்னடா கமெண்ட் போடுறதுன்னு யோசிச்சே பத்து பதினைஞ்சு வாட்டி வந்து போயிருப்பேன்)
    நன்றி
    த ம 11

    பதிலளிநீக்கு
  19. பயன் தரும் கருத்துக்கள்!
    அருமை!
    அறியாத செய்திகளை

    புரியும் வகை தரும் சிறப்பு பாங்கு!

    நன்றி
    புதுவை வேலு
    எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய்! அய்யா! வாரய்!)

    பதிலளிநீக்கு
  20. நியூ போர்ட் க்குப் போகணுமே அந்த மீட்டுக்கு.
    அங்கன எல்லாரும் பேசற இங்க்ளிசு நமக்குப் புரியாதே
    என்று திங்கிட்டு இருந் ஹனி ஆ !!
    டயத்துக்கு வந்து ஹெல்பிட்டீங்க. தாங்க்யூ.

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு