புதன், 12 நவம்பர், 2014

தோழி கிரேஸ் கொடுத்த நினைவுப்பரிசு!




அந்த கண்ணாடிப்பேழையை
திறக்கும்போதெல்லாம் கமழ்கிறது
உன் நட்பின் மணம்!!

செதுக்கிய இடத்தில் எல்லாம்
ஒளிர்கிறது வைரம்போல்
உன் நட்பின் ஒளி !!

நினைவே பரிசென்ற போதும்
நினைவு பரிசொன்று தந்தாய்
கங்காருகுட்டியாய் அதை சுமக்கிறது
என் கைப்பை !!

நீ அன்பளித்த ஆறாம்விரலை
மேகம் கருக்கையில் எடுக்கிறேன்
அது எழுதும் கவிதையாய்
உன் பெயர்!!

சந்தனத்தை நுகர்கையில் உன் முகமும்
உன்னை நினைக்கையில் அதன் மணமும்
நல்லதொரு பரிசுதான் நம்  நட்பை போலவே!!


 

76 கருத்துகள்:

  1. ஓ,,, கவிதை எழுத நினைவுப்பரிசாகப் பேனாவைக் கொடுத்தது யாராயிருக்கும்?
    இன்னெரு பேனாவிரும்பியாகத்தான் இருக்கும்?
    பட்டாம் பூச்சி பறந்துபோனதோ?
    படத்தில் மட்டும் இருக்கும்படி எங்கப்பா சுட்ட? ரொம்பஅருமைடா!
    சந்தனம் னா... சரிதான் ... புரியுது.
    ஆனா -
    சந்தனத்தை நுகர்கையில் உன் முகம் - முகமும் எனவும்,
    உன்னை நினைக்கையில் அதன் மணமும் - ஓ.கே.
    நல்லதொரு பரிசுதான் நான் நட்பை போலவே!! - நம் நட்பை எனவும் வந்திருந்தால் இன்னும் சரியாக இருக்குமோ? (கட்டுரை நோட்டுத் திருத்தித் திருத்தி இந்தப் புத்தி ஆறுமாசமாகியும் போகமாட்டேங்குதே?)
    பழையபடி தலைப்புத்தான் கட்டுரைத்தலைப்பு மாதிரியிருக்குடா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ விரிவா என்ன எதுன்னு புரியிரமாதிரி தலைப்பு வைத்துவிட்டேன் அண்ணா! பிழைகளையும் திருத்திவிட்டேன். தங்கள் விழாவால் வாய்த்ததது தான் அந்த கவிதை கணம். அதற்கு மிக்க நன்றி அண்ணா!

      நீக்கு
  2. ஆஹா .அந்த ஆறாம் விரல் வரைந்த ஓவியம் அருமை !
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. அடடா ஒரு பரிசைக் கொடுத்து ஒரு அழகான கவிதையை வெளிக்கொண்டு வந்துவிட்டார், கிரேஸ்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா வருண், கிரேஸ் ரொம்ப ஸ்மார்ட் தான்:)

      நீக்கு
    2. வருண், நான் ஸ்மார்ட் இல்லை...பேனாவுக்கு பா கொடுத்த மைதிலி தான் :))

      நீக்கு
  4. தோழி கொடுத்த நினைவுப் பரிசுக்கு சந்தனமாய் ஒரு கவிதை...
    அருமை சகோதரி.

    பதிலளிநீக்கு
  5. நட்பின் மனதோடு நற்பரிசு தந்தாரோ!
    இட்டமுள தோழிநீ என்று!

    அருமை!
    உங்கள் கவியும் கனிந்த உங்கள் நட்பும்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. நினைவுப்பரிசு என்றும் நினைவில் நிற்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. தோழி கிரேஸ் கொடுத்த பரிசுக்கு கண்டனம். அவர் மட்டும் பரிசு கொடுக்கவில்லை என்றால் இப்படி ஒரு கவிதையை படிக்கும் நிலை எங்களுக்கு ஏற்பட்டு இருக்காதே ஹும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரி இனிய கவிதைகளுக்கு மேலும் மேலும் பல பரிசுகள் தரலாம் நண்பரே

      நீக்கு
    2. கேட்டுகோங்க மிஸ்டர் லைட்:) thanks கிரேஸ் டியர்:)

      நீக்கு
  8. பரிசு கொடுத்தாதானா கவிதை அப்ப நம்ம பாஸ் வருண் & மதுரைத்தமிழன் பற்றி கவிதை எல்லாம் கிடையாதா நாங்க இருவரும் நல்ல நட்பை பரிசாக தந்து இருக்கிறோமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவு எழுதும்போதே இந்த பின்னூட்டத்தை உங்களிடம் எதிர் பார்த்தேன்:))

      சென்ற பதிவே ராஜாராம் உங்கள் மோடி பதிவுக்கு கொடுத்த பின்னூட்டத்தில்(வருன்கூட அதை படிச்சுட்டு டென்சன் ஆனாரே) எழுந்த அறசீற்றம் தான். so அந்த பதிவு தான் உங்களுக்கான பரிசு. பின்ன உங்களுக்கு தான் கவிதை பிடிக்காதே. அதனால் பிடித்த பரிசாய் தரலாம் என்று தான் அரசியல் பதிவை அன்பளித்தேன்.
      _________
      அப்புறம் ஒரு மூத்த பதிவர் வருணை வெளிநாட்டில் வாழும் அனானி என்று திட்டியிருந்தார். வெளிநாட்டில் வாழ்தால் ஆனானி என்றால் அது ஒன்று தரக்குறைவான சொல் அல்ல என எடுத்துச்சொல்ல நினைத்தேன். ஏன் என்றால் வருண் நீங்கள் உட்பட எனக்கு வெளிநாட்டில் வாழும் நிறைய நண்பர்கள்(இனியா,இளமதி, இப்போ கிரேஸ்) இருக்கிறார்களே!! so அனானி யை சப்போர்ட் பண்ணும் கோட் ஒன்றை என் கடந்த கைப்பையில் இட்டேன்.ஆனால் வருணுக்கு அந்த வார்த்தையே பிடிக்கவில்லை. பிடிக்காத பரிசை கொடுப்பதை விட அதை ஒளித்துவைப்பதே மேல் என்று விட்டுவிட்டேன். வெளிநாட்டில் வாழும் என் எந்த நட்பிடம் இதை சொன்னாலும் வருன்கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க. ஓகே வா:))

      நீக்கு
    2. சரி நான் என்ன கருத்து போடுவேன் என்று உங்களுக்கு பதிவு எழுதும்போதே தெரிந்துவிடுகிறது அதனால் பதிவு போடும் போது இது மதுரைத்தமிழனின் கருத்து என்று நீங்களே போட்டுவிடுங்கள். இந்த மதுரைத்தமிழனுக்கு வேலைமிச்சம் ஹீஹீஹீ

      நீக்கு
    3. ///(வருன்கூட அதை படிச்சுட்டு டென்சன் ஆனாரே)///
      பாஸ் வருண் என்றும் டென்சன் ஆகமாட்டார் ஆனால் அவர் என்ன சொல்லுவாரோ என்றுதான் பல அதிலும் தமிழகத்தில் உள்ள பல பதிவர்கள் டென்சன் ஆகுகிறார்கள் என்பதுதான் உண்மை

      நீக்கு
  9. //அந்த கண்ணாடிப்பேழையை
    திறக்கும்போதெல்லாம் கமழ்கிறது
    உன் நட்பின் மணம்!!//

    திறக்காத போது என்ன மணம் வீசுகிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி இடக்கு முடக்காக எல்லாம் கேள்விகள் கேட்கப்படாது சகோ ok வா .அப்புறம் உங்க மனைவிகிட்ட சொல்லிக் கொடுத்து விடுவோமில்ல.

      நீக்கு
  10. ஆறாம் விரலை பரிசளித்த தோழிக்கு, தாங்கள் அதனைக் கொண்டு எழுதிய கவிதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ!! இப்போ நீங்க பெரிய கவிஞர் ஆகிடீங்க!! so நீங்க சொன்னா சரிதான் இருக்கும்:)) நெஜமாவே உங்க கவிதை நல்ல இருந்தது சகோ!

      நீக்கு
  11. வாவ் செம ட்ரீட் டியர்..
    //நல்லதொரு பரிசு தான் நம் நட்பைப் போலவே// உங்கள் நட்பு எனக்கு அருமையான பரிசு.
    கவிதை ரொம்ப அருமை டியர்..சிறு பரிசு அருமையான கவிதையை எனக்குப் பரிசளித்துவிட்டதே..கிரேஸ் ஹாப்பி :) நன்றி டியர்

    பதிலளிநீக்கு
  12. கவிதை அருமை.
    "நினைவே பரிசென்ற போதும்
    நினைவுப் பரிசொன்று தந்தாய்
    கங்காருகுட்டியாய் அதை சுமக்கிறது
    என் கைப்பை !!"....கவித்துவமான வரிகள்!
    ....நினைவிருக்கிறதா.தங்கையே ...."எண்ணப் பறவையை"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா!!
      இந்த சோம்பல் தங்கையை மன்னியுங்கள். இப்போ பார்த்துட்டேன். பின்னூடமும் இட்டுவிட்டேன்! பாராட்டியமைக்கு நன்றி!

      நீக்கு
  13. சிறு பரிசொன்று கொடுத்தேன்..அதற்கு இப்படி ஒரு அருமையான கவிதையா? உங்கள் நட்பிற்கு எந்த பரிசும் நிகரில்லை டியர்

    பதிலளிநீக்கு
  14. ஆஹா நினைவுப் பரிசு நின்றுவிட்டதோ எண்ணத்திலும் வண்ணத்திலும். அம்முவுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான் இல்ல அம்மு அப்படி இருக்கிறது கவிதை. எப்படித் தான் இப்படி சிந்திக்கிறீர்களோ? சொக்க வைக்கிறது கவிதை என்னை. வாழ்த்துக்கள் அம்மு தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனியாச்செல்லம்
      இது தான் நல்ல நட்பு. மதுரை தமிழன் கிட்ட எனக்காக கத்தி சுத்திட்டு, இப்போ வாழ்த்துறீங்க:)) ரொம்ப தாங்க்ஸ் டா செல்லம். கீழே இருங்காங்க பாருங்க அனிதா, அவர்களை பத்துநாளுக்கு முன் முதல்முறையா சந்தித்தேன். அவங்க நம்ம ரெண்டு பேரும் அடிக்கடி பார்த்துகொள்ளும் தோழிகளா என்று வியப்பாய் கேட்டார்!!! ஹா...ஹா...ஹ...பலரும் இப்படிதான் நினைப்பாங்க இல்லையா!!!! கண்ணேறு படாமல் காத்துக்கொள்ள வேண்டும் நம் நட்பை:)

      நீக்கு
  15. கவிதை நன்றாக எழுதியிருக்கிறீங்க. வைரம் போல் ஒளிரும் நட்பு நீடித்திருக்க உங்களிருவருக்கும் வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
  16. உண்மையில் இந்தக் கவிதை மிக சிறந்த நினைவுப் பரிசு. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. மனதில் என்றும் தங்கும் நல்ல நட்பு கிடைப்பதே ஒரு வரம் தான்.

    பதிலளிநீக்கு
  18. பரிசு தந்த கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  19. அன்புச் சகோதரி,

    செதுக்கிய இடத்தில் எல்லாம்
    ஒளிர்கிறது வைரம்போல்
    உன் நட்பின் ஒளி !!

    நினைவே பரிசென்ற போதும்
    நினைவு பரிசொன்று தந்தாய்...

    தங்களின் வைரவரிகளில் நட்பின் ஒளி மிளிர்கிறது.
    கவிதையில் அன்பின் ஆழம் தெரிகிறது.

    அருமை!

    பதிலளிநீக்கு
  20. ஆஹா ..அருமைடா..திறந்தால் வாசம் தீருமென்று திறக்காமல் காக்கின்றேன் ...நானும்

    பதிலளிநீக்கு
  21. வார்த்தை ஜாலங்கள் ஏதுமில்லை, வந்து விழுந்த வசீகரமான வரிகள்! கவிதைக்கு நன்றி!
    த.ம.7

    பதிலளிநீக்கு
  22. பேனா நட்பு போல தோழி தந்த
    பேனாவும் பரிசு போற்றும் செயல்!

    பதிலளிநீக்கு
  23. ஹலோ மைக் டெஸ்டிங்க் மைக் டெஸ்டிங்க் கிரேஸ் மேடம் எங்கிருந்தாலும் இங்கு வரவும்
    ஹலோ மைக் டெஸ்டிங்க் மைக் டெஸ்டிங்க் தேங்க்ஸ்கிவ்விங்க் கிறிஸ்துமஸ் புத்தாண்டுகள் வெகு சீக்கிரத்தில் வருகின்றன
    ஹலோ மைக் டெஸ்டிங்க் மைக் டெஸ்டிங்க் பரிசுகள் வரவேற்க்கப்படுகின்றன
    ஹலோ மைக் டெஸ்டிங்க் மைக் டெஸ்டிங்க் பரிகள் ரொக்கமாகவோ அல்லது ஐபோனோ ஆப்பிள் கணணியோ அல்லது காரோ எற்றுக் கொள்ளப்படும்
    ஹலோ மைக் டெஸ்டிங்க் மைக் டெஸ்டிங்க் சொன்னது எல்லாம் காதுல விழுந்துச்சா
    ஹலோ மைக் டெஸ்டிங்க் மைக் டெஸ்டிங்க்
    ஹலோ மைக் டெஸ்டிங்க் மைக் டெஸ்டிங்க்
    ஹலோ மைக் டெஸ்டிங்க் மைக் டெஸ்டிங்க்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா!!! ஊருக்கே கேட்டிருக்கும், கிரேஸ் க்கு கேட்டிருகாதா???

      நீக்கு
  24. உங்களின் நட்பு கவிதை
    எங்களுக்குப் பரிசாக......

    வாழ்த்துக்கள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்களின் நட்பு கவிதை
      எங்களுக்குப் பரிசாக....///

      அருணா செல்வம் உங்களுக்கு பரிசு கிடைத்துவிட்டது என்று கருதி அதுக்கு நன்றி சொல்வதாக ஒரு கவிதையோட வந்து நிக்காதீங்க

      நீக்கு
  25. வெகுநேரம் அந்தப் படத்திலிருந்து கண்ணை நகர்த்த முடியவில்லை.
    உங்கள் கவிதைகள் வெல்லட்டும்.
    வாழ்த்துகள்.
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ இந்த முறை படம் என் கவிதையை வேன்றுவிட்டது என்று பொருளோ:(( ஓகே அண்ணா! நன்றி!!

      நீக்கு
    2. சாரி , அதை வென்றுவிட்டது என வாசிக்கவும்:)

      நீக்கு
  26. வாழ்க்கையில் எப்பவுமே தனி இடமுண்டு நண்பர்கள் தரும் பரிசுகளுக்கு... நல்லதொரு படைப்பு .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. மனதில்
    அந்தப் பட்டாம்பூச்சி
    ஒரு கவிதையாய் ஓடிக் கொண்டிருக்கிறது.
    கவிதை
    அந்தப் பட்டாம்பூச்சி போல்
    சிறகடித்துக் கொண்டிருக்கிறது.
    அருமை சகோதரி.
    இப்படி ஒரு கவிதை கிட்டுமானால் , இன்னும் கொடுக்கலாம் பரிசு.






    மனதில்
    அந்தப் பட்டாம்பூச்சி
    ஒரு கவிதையாய் ஓடிக் கொண்டிருக்கிறது.
    கவிதை
    அந்தப் பட்டாம்பூச்சி போல்
    சிறகடித்துக் கொண்டிருக்கிறது.

    அருமை சகோதரி.
    இப்படி ஒரு கவிதை கிட்டுமானால் , இன்னும் கொடுக்கலாம் பரிசு.













    பதிலளிநீக்கு
  28. தங்கள் ஆறாம் விரல் எழுதிய கவிதை அருமை! அதுவும் தோழியின் பரிசல்லவா?!! மணக்க மணக்க எழுதியிருக்கின்றது! மணம் இங்கு வரை வீசுகின்றதே!

    பதிலளிநீக்கு
  29. இப்பரிசுக்கு ஈடு எதுவும் இல்லை. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு