செவ்வாய், 23 ஏப்ரல், 2019

இஸ்லாம் என் சகோதர மார்க்கம்

திருப்பூர் குமரனோடு கொடி காத்து நின்று சிறை சென்ற ஐந்து இஸ்லாமிய விடுதலைப் போராட்டவீரர்கள் குறித்து எந்த பாடப்புத்தகமும் நமக்கு சொல்லித்தந்ததில்லை.

 2014ஆண்டின் கணக்கின்படி 29000 இந்திய இஸ்லாமிய ராணுவவீரர்கள் பற்றியும் தெரியாது.
 ஆனால் எனக்கு ஒரு கடமை இருக்கிறது.

 இந்த ஆண்டு பொங்கல் விழாவிற்காக அண்ணன் Shaik Dawood Basheer Ali என் பள்ளி மாணவிகளுக்கு புத்தாடை வழங்கினார். நன்றி சொல்ல தொலைபேசியில் அழைத்த போது, என்னம்மா அண்ணனின் பொங்கல் சீர் கிடைத்துவிட்டதா என்று தான் பேச்சைத் தொடங்கினார். குரல் கட்டிக்கொண்டது எனக்கு. ஆம் அது சகோதர மார்க்கம் தான்.

பள்ளி கல்விச்சீர் என என் பங்குக்காய் நான் அணுகியது இரண்டே பேரைத்தான். முதலில் பஷீர் அண்ணா, அடுத்து மேனாள் வட்டாச்சியரும், கௌன்சிலருமான நூர் அய்யா. பள்ளி புரவலர் கூட்டத்தில் தேவைப்பட்டியலை வாங்கிப் பார்த்தார் நூர் அய்யா. பட்டியலிலேயே அதிக பட்ச செலவு வைக்கும் போர்ட்டபிள் மைக் மற்றும் ஸ்பீக்கரை வாங்கித் தந்தார். ஆம் அது ஈகையை ஊக்குவிக்கும் மதம் தான்.

மூன்று வருடத்திற்கு முன் ஒரு ரம்ஜானுக்கு Rafeeq Sulaiman அண்ணா வீட்டிற்கு குடும்பத்தோடு போனோம். அன்றில் இருந்து எனக்கு கூடுதலாய் ஐந்து சகோதரிகள் கிடைத்தார்கள். இது உனக்கு மற்றொரு தாய் வீடு என என் கன்னம் தடவி அன்பின் இதம் ஊட்டினார் அம்மா. ஆம் அது அன்பின் மார்க்கம் தான்.

"தலையை வெட்டினாலும் தயங்காமல் சொல்வேன் நான் முஸ்லீம் என்று" என இருந்த வாட்ஸ்அப் Dpயை பார்த்த நொடி"இதையா உனக்கு கற்றுத்தந்தேன் அசார்? என செய்தி அனுப்பினேன். அடுத்த நொடி அம்மாவும், குழந்தையுமான Dp மாற்றிவிட்டு  "சாரி அம்மா" என செய்தி அனுப்பினான்.

என் தம்பிக்கும் இன்னொரு தாயாய் இருந்த நிசார் அம்மா, என் கணவருக்கு மகனைப் போல் ஃபைசல், என் மகளாய் நிலா என நான் கொஞ்சும் நிலோபர் நிஷா. பள்ளிக்காலங்களில் உணவை பங்கிட்டுக் கொண்ட பரகத், அக்கா Whatsapp dpய மாத்துங்க. புகைப்படம் வைக்காதீர்கள். யாரையும் நம்பமுடியல என பதறிச் செய்தி அனுப்பும் ஃபெனாஷிர். இந்த கோடை முழுவதும் மாணவர்களுக்கு மோரா, தர்பூசணியோ தினமும் வழங்கிய இலாஹி டீச்சர் மற்றும் சமீம் டீச்சர் இவர்கள் எல்லாம்
நேற்றைப் போல், இன்றைப் போல் என்றும் என் குடும்பத்தினர். இவர்கள் தான் இஸ்லாமியர்கள். (நான் என்னை இந்து என்று உணராதபோதும்). அவர்கள் வெறும் தீவிரவாதிகள்.

பி.கு: உங்கள் அனுமதி இன்றி இன்ன மதம் என பிரித்துக் காட்டிவிட்டதாக எண்ணாமல், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் உறவுகளே! இது காலத்தின் தேவை #Islamismybrotherhood
என் முகநூல் பகிர்வு

17 கருத்துகள்:

 1. அருமை மைதிலி.

  எங்களுக்கும் நல்ல நட்புகள் சகோதர சகோதரிகள் பலர் உண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
 2. கடைசி வரிகளில் நீங்களே சொல்லி இருப்பது போல நானும் மதம் பார்த்து நட்பு வைப்பதில்லை. சாதிபார்த்தும் நட்பு வைப்பதில்லை. தீய குணங்கள் மக்களின் மனதில் இருக்கிறதே தவிர மதத்தில் இல்லை. மனம் கெட்ட மக்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் புரிதலைத் தான் உலகம் (மனிதம்)எதிர்பார்க்கிறது சகோ.கருத்துக்கு நன்றி

   நீக்கு
  2. சாதி, மதம் பார்த்து இல்லை நட்பு மனம் பார்த்தே என்று சொல்ல நினைத்து விட்டுப் போச்சு.

   இப்ப வந்தா ஸ்ரீராமும் அதே....ஸோ ஸ்‌ரீராமின் கருத்தை மீண்டும் நான் டிட்டோ செய்கிறேன்...

   கீதா

   நீக்கு
 3. அன்பு கமழும் அதே நேரம் அடி நீரோட்டமாய் உரைப்பு இழையோடும் பதிவு!

  திடீரென இப்படி ஒரு பதிவு ஏன் எழுதினீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் அதைக் கேட்கவும் போவதில்லை. ஏனெனில் இசுலாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என முத்திரை குத்தும் நாட்டில், அப்படி முத்திரை குத்துபவர்களே அரியணையை அழுக்காக்கும் (அலங்கரிக்கும் என எழுத முடியாதில்லையா!) நாட்டில் இப்படிப்பட்ட பதிவுகள் கட்டாயம் தேவை! எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கிஸ்தவத்திற்கு எதிரானவள் அல்ல சகா, ஆனால் மூளை சலவை செய்யப்பட்ட முட்டாளுக்காய் ஒட்டு இஸ்லாமிய சமுகமும் குறைகூறப்படுவதை என்னால் ஏற்க முடியவில்லை சகா. எனவே இந்தப் பதிவு

   நீக்கு
  2. புரிகிறது சகா!

   //நான் கிஸ்தவத்திற்கு எதிரானவள் அல்ல சகா// - சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

   நீக்கு
 4. சிறுவ்யதில், பள்ளி, கல்லூரிகளில் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் இஸ்லாமியர்கள்தான். உயிரா இருப்பாங்க. நட்புனா என்னனு அவர்களிடம் இருந்து கத்துக்கனும். எனக்கு கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை எல்லாம் இல்லை என்பதால், மதநம்பிக்கை உள்ள இந்துக்கும் இஸ்லாமியருக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது.

  பதிவுலகில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நெறையா அடி தடி எல்லாம் போட்டு இருக்கேன். ஒரு முறை இலை மடிப்பது பத்தி ஒரு பஞ்சாயத்து. இஸ்லாமிய நண்பர் ஒருவர் பதிவுலக கூட்டத்தில் சாப்பிட்ட இலையை இவனு மடிப்பதுபோல் மடிக்காமல் வேற மாதிரி மடிச்சதும், அதை ஒரு குறையாகப் பேசிக்கொண்டு அலைந்தார்கள். இதெல்லாம் சாதாரண பழக்க வழக்கங்கள். நம்ம அம்மா அப்பா மாமிசம் சாப்பிட்டால் நாம் சாப்பிடுவோம், அவர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ அது போல் மடிப்போம். எப்படி மடித்தால் என்ன? சிந்தாமல் இலையை எடுத்தால் போதும்னு கூட யோசிக்கத் தெரியாமல் பதிவு மேலே பதிவு எழுதறாங்க. ஒரு சாதாரண பழக்க வழக்கம்னு போகாமல் இதை வச்சு இவனுக அடிச்ச கூத்து இருக்கே...அடேங்கப்பா!

  பதிலளிநீக்கு
 5. வளர்ந்த சூழல்களிலும், கருத்துகளிலும் பல நேரம் நாம் ஒத்துப்போகிறோம் இல்லை வருண்.Give je five

  பதிலளிநீக்கு