வியாழன், 28 ஆகஸ்ட், 2014

பிள்ளைக்கதைகளும், பெருவணிகமும்!!

                                                                                                                                                                                                  

சின்ட்ரெல்லாவை நினைவுபடுத்தும்
இளம்சிவப்பு சோயாக்கள்
நார்ச்சத்து மிகுந்ததென நம்பவைப்பேன் என்னையே !!ஸ்னோஓய்டின் செவ்விதழாய்
வெள்ளை ஓட்ஸ்சில் ஸ்ட்ராபெரி
கொலஸ்ட்ரால் குறையுமென்றே கூறிக்கொள்வேன் !!

நீள்குழல் ரபென்ஷால் நினைவோடு நூடில்ஸ்
மக்காலே பிரபுவே உணவுமேசைவரை
மகத்தாய் இன்னும் உங்கள் பாடத்திட்டம் !!

வடை சுட்ட பாட்டி முதியோர் இல்லத்தில்
அதரிபச்சா கொழுக்கட்டை கதை சொல்ல
அத்தையும் இல்லை ,சித்தியும் இல்லை!!

பணியாரமழை பொழிந்த மரியாதைராமன் கதை
பாடப்புத்தகத்தில் வந்திடவுமில்லை
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்றெதுவும் இன்றில்லை !!

கவுன் அணிந்த பாட்டி
ஸ்பூன் கொண்டு ஊட்ட
செழிப்பாய் வளர்கிறார்கள் மறத்தமிழர்கள்!!
39 கருத்துகள்:

 1. வணக்கம்
  சகோதரி
  சபாஷ் சரியான அறை கூவல் நன்றாக உள்ளது தாங்கள் செப்பிய வரிகள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. //அத்தையும் இல்லை ,சித்தியும் இல்லை!!///
  அதுதான் இங்கிலீஸ் டீச்சர் நீங்க இருக்கிங்களே அப்புறம் என்ன குறை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கிலீஷ் டீச்சர்கள் கதை கேட்டு தான் இந்த நிலைன்னு தானே புலம்புறேன்:)) ஒ! நீங்க ஸ்ரேயா வை பற்றி குறிப்பிடுகிறீர்களா?:)) அப்போ இருந்த சுரேஷ் சார் பாப்பாமலரில் நல்ல நல்ல கதையா போட்டிருப்பார் போய் படிச்சு ரெடியாகிகிறேன்:)) ரொம்ப நன்றி சகா (நன்றி சொன்ன ரொம்ப பார்மலா இருக்கோ?)

   நீக்கு
 3. உணவு முறை மாறிவருவதை அழகாக உணர்த்திவிட்டீர்கள்....அந்த கடைசி பாரா அருமை சகோதரி...

  பதிலளிநீக்கு
 4. எப்புடீ!...:)
  இதுகூட நல்லாத்தான் இருக்கு! அருமை தோழி உங்கள் சிந்தனை!
  மனசில் நிற்க வரைந்த வரிகளும் அற்புதம்!

  அத்தனையும் உண்மை!

  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 5. வடை சுட்ட பாட்டி முதியோர் இல்லத்தில்
  அதரிபச்சா கொழுக்கட்டை கதை சொல்ல
  அத்தையும் இல்லை ,சித்தியும் இல்லை!!

  பணியாரமழை பொழிந்த மரியாதைராமன் கதை
  பாடப்புத்தகத்தில் வந்திடவுமில்லை
  ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்றெதுவும் இன்றில்லை!//

  அருமை அருமை.......உணவுப் பழக்கம் மட்டும் மாறல....நம்ம வாழ்க்கை முறையும் நம்ம பாடத் திட்டமும் அப்படி ஆகிப் போச்சுனு......சூப்பரா கலந்து கட்டி அடிச்சுட்டீங்க...ஒரே போடு அந்த இறுதிப் பாரா வரிகள்!!!!

  பதிலளிநீக்கு
 6. வித்தியாசமான சிந்தனை.
  வாழ்த்துக்கள் தோழி.

  பதிலளிநீக்கு
 7. ஆஹா தமிங்லீஷ் அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. அக்கிரிபச்சா!!!! :) கலக்கிட்டீங்க டியர்... உங்க வகுப்பில் நீங்க சொல்லிக்கொடுத்துடுங்க...
  த.ம. 4

  பதிலளிநீக்கு
 9. உணவு வணிகத்தை
  உரிய சொற்களால்
  செதுக்கிய விதம் அருமை ..

  சினத்தின் அக்னியை
  சேர்த்து இன்னும்
  கொதிக்க வைத்திருக்கலாம்..

  பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்ய ? எனக்கு ரொம்ப கோபம் வரமாடேங்குது:(( வருத்தம் தான் இருக்கு> நன்றி சகோ!!

   நீக்கு
 10. ஆஹா....
  அருமையான கவிதை...
  உண்மையை உரக்கக் கூவிகிறது சகோதரி....

  பதிலளிநீக்கு
 11. நான் சொல்லல வித்தியாசமான சிந்தனை என்னால் விபரிக்கவே முடியாத வார்த்தைகளும் விடயங்களும் அசத்தல். எவ்வளவு இலகுவாக அருமையாக வருகிறது. அது தான் சொன்னேன். போட்டிக்கு கவிதை எழுதும்படி. போடாமல் அங்கு என்ன தான் செய்கிறீர்கள் அம்முகுட்டி. என்னை டென்ஷன் படுத்தமால் எழுதிப் போடும்மா ok வா.பார்த்திட்டே இருப்பேன். good girl.
  வாழ்த்துக்கள் அம்முக்குட்டி ...!

  பதிலளிநீக்கு
 12. மைதிலி!

  உங்க" நாகரிக உலகில்

  * வடை பீட்ஸா ஆயிடுச்சாக்கும்!

  * கொழுக்கட்டை சீரியலாயிடுச்சாக்கும்!

  ஆமா, சேலையும் தாவணியும் சல்வார்காமீஸ், ஜீன்ஸாவும் டீஷர்ட்டாகவும் ஆகும்போது இதெல்லாம் ஆகத்தானே செய்யும்???!!

  ஜீன்ஸ் உடுத்தினால் முன்னேற்றம்னு நெனைக்கிற அதே "மனநிலை"தான் இங்கேயும் னு நான் சொல்லணுமா என்ன?? :)))

  ----------------------

  ஆமா, சித்தியும் அத்தையும் எங்கே போனாங்க?
  ஓ "நவநாகரீக ஆண்ட்டி" களாக ஆயி டி வி சீரியலில் மூழ்கிட்டாங்களாக்கும்?!! :)))


  ---------------------

  வளர்கிறவர்கள் மறத்தமிழர்களாக இருக்கலாம்.. ஆனால் இப்படி பீட்ஸா, சீரியல், ஓட்ஸ்னு "ஹை குவாலிட்டி" ஊட்டச்சத்து உணவு கொடுத்து வளர்ப்பவர்கள் மறத் தமிழச்சிகள்தான் னு மட்டும் சொல்லாமல் விட்டுட்டீங்களே!! இது நியாயமா? :(
  ---------------------------
  வித்தியாசமான சிந்தனை, மைதிலி! வஸிஸ்டரே பாராட்ட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிட்டீங்க! :))) வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெல்கம் வருண்,
   உங்ககிட்ட மூணு விஷயங்கள்:)
   1.வடையும், கொழுக்கட்டையும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் பெண்கள் உடுத்திய புடவையை இப்போ உடுத்தின இன்னும் தான் சமூக சீர்கேடு வரும்(உடையால் மட்டுமே சமுதாயம் கெடுகிறது என நினைத்தால்) ஏன்னா அப்போ மேல்தட்டு பெண்களுக்குமட்டும்தான் அதுவும் வரி செழுத்தின மட்டும் தான் மேலாடை போட முடியும் என்ற நிலை தமிழக கிராமங்களில் பரவலா இருந்தது. அதுவும் இல்லாமல் செல்வசெழிப்பான பெண்கள் கூட முதல்மரியாதை ராதா போல தான் புடவை உடுத்தி இருந்தனர் .இப்போ நாங்க புடவை உடுத்துற விதம் சந்திரகுப்தரின் காதல் மனைவி, கிரேக்கத்து செல்யுகஸ் நிகோடரின் தங்கை நம் நாட்டுக்கு அறிமுகப்படுத்திய விதம் தான். உடை வரலாறை பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் தான் அடைந்திருக்கிறோம். சொல்ல இன்னும் நிறைய இருக்கு. அது தனி பதிவாகிவிடும் ஆபாயம் கருதி அடுத்த மேட்டர்:)
   2. chair person என்பது போல் இருபாலரையும் குறிக்கும் படிதான் தமிழர்கள் என்று எழுதினேன். அன்பான ஒரு குடும்பத்தில் ஒரு தப்பு நடந்தா அதுக்கு கணவன் மனைவி ரெண்டு பேருமே பொறுப்பு ஏற்பார்கள்:) நீங்களே விரும்பினா கூட என்னால் ஆண்களை வெறுக்க முடியாது. ஏன்னா எனக்கு கிடைத்த அப்பா, கணவர், சகோதர்கள், நண்பர்கள் எல்லோரும் ரொம்ப நல்லவர்கள்:)))(ப்ராமிஸா இது ஐஸ் இல்லை:)
   3. **வஸிஸ்டரே பாராட்ட வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிட்டீங்க! :))) வாழ்த்துக்கள்!** மிக்க நன்றி நண்பனே

   நீக்கு
 13. தொலைந்து போனவை வெறும் உணவுகள் மட்டும் தானா...
  அது ஒரு புள்ளி மட்டுமே!
  இரண்டு நாட்களுக்கு முன்புதான் என் அண்ணனோடு இருக்க,
  சிறு வயதில் விளையாடிய விளையாட்டொன்றைப் பற்றிய பேச்சு வந்தது.
  கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.“ நல்ல முட்டையத் தின்னுட்டு.....“
  “காலாட்டு கையாட்டு... காலாட்டு கையாட்டு...“ என்றெல்லாம்! பின் பல விளையாட்டின் பெயர்கள் இன்றைய தலைமுறைகள் அறியாதன பற்றித் தொடர்ந்தது பேச்சு!
  உங்களுடைய முந்தைய பதிவுகளிலும் இது போன்ற பால்யத்தின் நினைவுகளைப் படித்திருக்கிறேன்.
  நம்முடைய குழந்தைகள் அனுபவிக்கின்ற அநேக வசதிகளை பார்த்து மகிழும் அதே நேரம் நாம் பட்ட சுகங்களை இவர்கள் உணர வாய்ப்பில்லாமல் போகிறதே என்ற அங்கலாய்ப்பையும் உங்கள் கவிதை ஏற்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் அண்ணா! எவ்வளவோ இழந்துவிட்டோம். மரபை, மருத்துவத்தை , சொல்லிக்கொண்டே போகலாம்:) மாயனூர் என்று குறிபிடுகிறீர்கள் அங்கே டயட்டில் பணிபுரிந்தீர்களோ? எனில் ஒரு விஷயம் நான் திருச்சி பெரியாரில் தான் ட்ரைனிங் படித்தேன்:))
   **உங்களுடைய முந்தைய பதிவுகளிலும் இது போன்ற பால்யத்தின் நினைவுகளைப் படித்திருக்கிறேன்.** மிக்க நன்றி அண்ணா தொடர்ந்து படிப்பதற்கு:))

   நீக்கு
 14. ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்றெதுவும் இன்றில்லை !!
  ஆமாம்..பா. படிப்பு, விளையாட்டு, எல்லா்மே பணம்பற்றிய கணக்காய்ப்போக, குழந்தைகள் இழப்பது நம் விழுமியங்களை என்பதை எந்தப் பள்ளிக்கூடமும் வீடும் உணராத குரோட்டன்ஸ் உலகில் மூக்குகள் கூட வீண்தானோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா இத்தனை பிஸியான நேரத்திலும் இப்படி நேரம் ஒதுக்கி என்னை ஊக்குவிப்பதற்காகவே அண்ணாவிற்கு அன்பு தங்கையின் ஆயிரம் நன்றிகள் அண்ணா:))
   **குரோட்டன்ஸ் உலகில் மூக்குகள் கூட வீண்தானோ?** செம்ம !!
   அருமையா சொன்னீங்க அண்ணா!!

   நீக்கு
 15. உணவு முறை இன்று மாறித்தான் போய்விட்டது சகோதரியாரே
  அருமை

  பதிலளிநீக்கு


 16. நற்தலைப்பில் இட்டகவி நாட்டுநிலை மாற்றியினி
  வெற்றிவழி காணும் விரைந்து !

  நல்லவரி நாவினிக்க நாளும் முயன்றிங்கு
  வல்ல தமிழில் வடி!

  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. **நல்லவரி நாவினிக்க நாளும் முயன்றிங்கு
   வல்ல தமிழில் வடி!**
   ஆசை தான் சகோ!! ஆனா நம்ம சரக்கு அம்புட்டுதான் சகோ!!
   நன்றி!!

   நீக்கு
 17. இந்தக்காலத்துச் சாப்பாடுகளை அதுவும் வெளிநாட்டில் எமக்குக் கிடைக்கும்
  சாப்ப்பாட்டு வகைகளை எண்ணிப் பார்க்கையில் அணில் கோதிய அந்த
  மாம்பழங்களும் இயற்கை உரத்தை உறிஞ்சி வளர்ந்த தாவர வகைகளும்
  வெறும் கனவாகக் கானல் நீராக நின்று கவலையைத் தான் தருகிறது தோழியே உறவுகளோடு கூடியிருந்து சாப்பிட்ட நிலாச் சோற்றுக்குத் தான் மனம் இன்னும் ஏங்குகின்றது ! அருமையான சிந்தனையிநூடாக வடித்த கவி மனதைத் தொட்டுச் சென்றது வாழ்த்துக்கள் தோழியே .த .ம .7

  பதிலளிநீக்கு