விகடனில் விமர்சனம் படித்துக்கொண்டிருந்தேன்(படம்_குக்கூ). பாடல்களை பற்றி குறிப்பிடும் கடைசி பத்தியில் 'கோடை மழை போல' பாடலை பாடியதற்காக வைக்கம் விஜலக்ஷ்மியை கொஞ்சம் தூக்கலாய் புகழ்ந்திருந்தார்கள். ஏதோ மேட்டர் இருக்கு என்று தோன்றினாலும் வேறு சில கட்டுரைகள்(ப்ராயிலர்பள்ளிகள், மீத்தேன்) என்னை திசை திருப்பியதால், அந்த பேரை நினைவில் குறித்துக்கொண்டு நகர்ந்துவிட்டேன்.
விடுமுறை தினத்தின் வழக்கமாய், நேற்று மியூசிக் சேனலை ஒலிக்கவிட்டு சமயலறையில் இருந்தேன். 'புதிய உலகை புதிய உலகை' எனும் கோடை குயில் ஒன்றின் குரல் என்னை ஹாலுக்கு இழுத்து வந்தது(ஸ்டவ்வை சிம்மில் வைச்சுட்டு தான்). பார்த்தநொடி மனம் வலிக்கத்தொடங்கியது. 'என்னமோ ஏதோ' படத்திற்காக இமாம் ஆல்பம் ஸ்டைலில் அமைத்திருந்த பாடலை பாடிக்கொண்டிருந்த அந்த குயில் பார்வைத்திறன் அற்று இருந்தது. பாடலுக்கு இடையே வீணை போன்ற ஒரு இசை கருவியை வைத்து மீட்டவும் சேர்த்தார் அவர். அடுத்த நிமிடம் அந்த பாடலை என் கைபேசியில் தரவிறக்கி என்னை தாலாட்ட வைத்தேன். அப்போது தான் தெரிந்தது அவர் பெயர் தான் வைக்கம் விஜயலட்சுமி.
ஆர்வம் உந்தித்தள்ள நம் wiki அண்ணாவை மேல் விபரம் கேட்டேன். வைக்கம் மில் பிறந்த விஜயலட்சுமி மீட்டுவது ஒற்றை கம்பி காயத்ரி வீணை. செல்லுலாய்ட்எனும் மலையாள பாடத்தில் 'காற்றே காற்றே' பாடலுக்கு ரெண்டு விருதுகள் பெற்றிருக்கிறார் என்றது விகடன் சினிமா. கடப்பவர்களை எல்லாம் திரும்பிப்பார்க்கவைக்கும் திறமை கொண்ட விஜயலட்சுமி பெண்ணாய் பிறந்தால் சாதிக்க முடியாது, மாற்று திறனாளிகள் சாதிக்க முடியாது என ஒடுங்கிப் போவோர்க்கு ஒரு உற்சாக டானிக் !! என் இரவுகளின் தந்திகளை குரலால் மீட்டும் வைக்கம் விஜயலட்சுமி உங்கள் பாடலை கேட்கையில் இறந்து பின் பிறந்து வந்ததாய் உணர்கிறேன் !!

நம்பிக்கை பெண்மணிக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார்!
நீக்குநானும் அவரது பாடலைக் கேட்டேன்.... மிக அருமை...
பதிலளிநீக்குசெல்லூலாயிடில் வரும் காற்றே... காற்றே... கேட்கக் கேட்கப் பிடிக்கும் பாடல்....
நானும் கேட்டுப்பார்கிறேன் அண்ணா!
நீக்குவருகைக்கு நன்றி !
மிக நல்லதொரு பதிவு! //கடப்பவர்களை எல்லாம் திரும்பார்க்கவைக்கும் திறமை கொண்ட விஜயலட்சுமி பெண்ணாய் பிறந்தால் சாதிக்க முடியாது, மாற்று திறனாளிகள் சாதிக்க முடியாது என ஒடுங்கி போவோர்க்கு ஒரு உற்சாக டானிக் !! // 100 க்கு 100 உண்மை!
பதிலளிநீக்குமிக்க நன்றி இவரைப் பற்றி எழுதிப் பகிர்ந்து கொண்டதற்கு!
உங்க ஊரு தான் நண்பர்களே! நீங்க எழுதியிருந்தால் இன்னும் விரிவாக எழுதியிருப்பீர்களே என்ற உணர்வோடு தான் எழுதினேன். நன்றி நண்பர்களே!
நீக்குவைக்கம் விஜயலட்சுமி போற்றப்பட வேண்டியவர்
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
ஆம் அண்ணா அவர் போற்றப்படவேண்டியவர் தான்.
நீக்குதங்கள் வருகைக்கு நன்றி அண்ணா!
நான் இதுவரை அந்த பாடலை கேட்டதில்லை. தங்களின் இந்த பதிவு மூலம் தான் அவருடைய பாடலை கேட்டேன். அவருடைய தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். இப்படி ஒரு அரிய செய்தியை பகிர்ந்துக்கொண்டதிர்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி சகோ.
நானும் சற்று தாமதமாகத்தான் பார்த்திருக்கிறேன் சகோ.
நீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி சகோ!
அல்பம் ஆல்பம் ஆயிடுத்து போலேயே .. GOOD :)
பதிலளிநீக்குஇப்பொழுதுதான் கேட்கிறேன் ..
oh! I caught red handed:((
நீக்குஎன்றாலும் கலாய்க்காமல் விட்டதற்கு தேங்க்ஸ் bro!
விஜயலட்சுமிக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றி ராஜி அக்கா!
நீக்குவிகடனில் நானும் படித்தேன் மைதிலி அந்தப் பெண்ணை வியந்தேன். ஆனால் பாடல் கேட்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இப்போது கேட்கையில் ரம்யம். விஜயலட்சுமி இன்னும் நிறைய வெற்றிகளைக் குவிக்கட்டும். பாராட்டப்பட வேண்டிய பெண்.
பதிலளிநீக்குநானும் சற்று தாமதமாக கேட்டு விட்டதாக உணர்கிறேன். காற்றே காற்றே பாடலையும் கோடை மழையும் கேட்கவேண்டும் அண்ணா. நிச்சயம் பாராட்ட வேண்டியவர் தான் விஜயலட்சுமி!
நீக்குவைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி அண்ணா அவரை வாழ்த்தியமைக்கு !
நீக்குதிரும்பி பார்க்க வைக்கும் மயில்கள் உள்ள திரை உலகத்தில் ,ஒரு குயிலும் நுழைந்து வெற்றி பெற்று இருப்பது பாராட்டுக்குரியது !
பதிலளிநீக்குசரியா சொன்னீங்க பாஸ்! இவரது வெற்றி பாராட்டுக்குரியது மட்டும் அல்ல, முன்னுதாரணமாய் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதும் கூட!!!
நீக்குமிக்க நன்றி தோழி ! தங்கள் பதிவின் மூலம் அறியத் தந்தமைக்கு. அருமையான பாடல் இதை காலையில் பார்த்தேன் மெய் சிலிர்த்து கண்கள் கலங்கின.அற்புதமான குரல் வளம். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..!
பதிலளிநீக்குஎன் இனிய தோழிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!
http://www.youtube.com/watch?v=LJZar6Gvgsk
இதை சும்மா கேட்டு பார்த்து எப்படி என்று சொல்லுங்கள் தோழி. பயப்படாதீர்கள் அவ்வளவு மோசமாக இருக்காது. என்று நினைக்கிறேன்.ஹா ஹா ...
ஆஹா,,நீங்க பாடின பாட்டா?!!! load ஆகமட்டேணுது. கண்டிப்பா கேட்டுட்டு சொல்லறேன். but எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் அது தோழி.
நீக்குகேட்டுட்டேன் இனியா ,ஒரு சின்ன நடுக்கம் இருக்கு but ஸ்வீட் வாய்ஸ்!!
நீக்குஆஹா ஏமாந்து போனீர்களா எனக்கு தெரியும் நீங்கள் அப்படித் தான் நினைப்பீர்கள் என்று அது என் பெரிய மகள் பாடியது. நன்றிம்மா!
நீக்குவைக்கம் விஜயலட்சுமி பற்றி இப்போதுதான் அறிகிறேன். நன்றி மைதிலி. தன்னம்பிக்கை நிறைந்து வெளிப்படும் அற்புதக் குரல்! அவருக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து வெற்றிச்சிகரங்களை எட்டட்டும்!
பதிலளிநீக்குஆம் கீதா அக்கா விஜலட்சுமி மென்மேலும் உயரம் தொடவேண்டும். தங்கள் வருகைக்கு நன்றி!!
நீக்குஇனிமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநன்றி ராஜிம்மா!
நீக்குமிக அருமையான பாடல்.நான் பலதடவை கேட்டுவிட்டேன். எனக்கும் பிடித்துவிட்டது பாடல்.முன்பே இவரைப்பற்றி டிவியில் அறிந்திருக்கேன். இப்போ கேரள அரசின் விருதினையும் பெற்றிருக்காங்க. வாழ்த்துக்கள் அவங்களுக்கு. நன்றி உங்களுக்கு பகிர்ந்தமைக்கு.
பதிலளிநீக்குநன்றி தோழி ! உங்கள் மூன்று கருத்திற்கும் இங்கேயே நன்றியை கூறிக்கொள்கிறேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி!!
நீக்கு“விஜயலட்சுமி பெண்ணாய் பிறந்தால் சாதிக்க முடியாது, மாற்று திறனாளிகள் சாதிக்க முடியாது என ஒடுங்கிப் போவோர்க்கு ஒரு உற்சாக டானிக் !! “ - உண்மைதான் மைதிலி... சில நேரம் கை கால் உறுப்பெல்லாம் சரியாயிருந்தும் உருப்படியாக ஏதும் செய்யாமலே காலம்கழிப்போரிடையில் விஜயலட்சுமிகளை வாழ்த்தி வளர்க்க வேண்டும் நல்ல பகிர்வுப்பா.
பதிலளிநீக்கு“தேனூறும் பாட்டொன்று“ கேட்டேன்... “மதுரிக்கும்“ குரல்தான் சந்தேகமிலலை. “மல்லிகை என் மன்னன் மயங்கும்“-எனும் வாணி ஜெயராமை நினைவூட்டியது. இசை மொழி கடந்ததுதான் என்றாலும், வரிகள் ஆழமானவை என்பது ஜெயராம் கண்களில் தெரிந்தது... ஒருவேளை மொழி தெரிந்திருந்தால் நம் கண்ணும் கலங்கியிருக்கலாம்.நல்ல குரலைத் தேடி அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது மைதிலி... தேடல் தொடரட்டும்.
பதிலளிநீக்குஇனிமையான பாடல்.... சிறப்பான பாடகி.
பதிலளிநீக்குசெல்லுலாய்ட் படம் வந்த போதே எனது பக்கத்தில் அவர் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்...... http://venkatnagaraj.blogspot.com/2013/02/blog-post_25.html