ஐந்தாம் வகுப்போ என்னவோ அப்போது அப்பா எனக்கு அக்பர் பீர்பால் கதைகள் ஆயிரம் என்ற புத்தகத்தை கோடை விடுமுறையில் வாங்கித் தந்தார். ஆர்வமாய் அந்த விடுமுறை முழுவதும் அதை வாசித்துத் தீர்த்தேன்.
இப்போது கண்ணெதிரே வரலாற்றுத் திரிபுகளை பார்க்க முடிகிறது. அதிலும் கலாம் ஐயா மேல் என்ன தீராத காதலோ! இரண்டு பகிர்வுகள். இரண்டு ஆண்டுக்கு முன் என நினைவு. யாரோ ஒரு அப்பிராணி முகநூல் நட்பு சின்னஞ்சிறு வயது கலாமும் அவரது தாயாரும் இருக்கும் அரிய புகைப்படம் என ஒன்றை Reshare பண்ண “என்ன சகோ கலாம் அம்மா பொட்டு வச்சிருக்காங்க? “ என நான் கேட்க, அவர் அந்த பதிவை அழித்ததாக நினைவு. போன வருடம் அதே படம் கலாமை வளர்த்த இந்து தாயுடன் என வேறு இடத்தில் பார்த்தேன். இரண்டு ரூபாய் Group. தொலையட்டும் என விட்டுவிட்டேன். அதே படம் சில காலத்துக்கு முன் மோடியும், அவரது ஏழைத்தாயும் என பகிரப்பட்டது.
இப்போ லேடஸ்டா அரிய பழைய புகைப்படங்களின் தொகுப்பு ஒன்று வலம் வருகிறது. அதில் ஊடுபாவாக இரண்டு போலிக்கருத்துகள் கலக்கப் பட்டிருக்கிறது. அறியாமல் தான் நம் நண்பர்கள் பலரும் பகிர்கிறார்கள். பேப்பர் போடும் பையனாக இளவயது கலாம் எனும் ஒரு படம். அந்த பேப்பர் போடும் பையன் நவீன சைக்கிள் வைத்திருக்க Google reverse image search செய்தால் அது Fake என ஆதாரத்தோடு வருகிறது. ஏன் இந்த வேலை! எதற்காக இப்படியான திரிபுகள்!! மற்றொரு போலித்தகவல் என்னவென கேட்கவில்லையே! ஜெயலலிதா அவர்களுடன் எழுத்தாளர் சிவசங்கரி இருக்கும் படத்தை சிறுவயது நிர்மலா சீதாராமன் என்கிறார்கள்! இது இட்லினா சட்னியே நம்பாது மொமண்ட்!
இப்போ என்னதான் சொல்லவர? என இங்க வரை கேட்குது. அதாச்சும் "அவசரப்பட்டு பகிர்ந்து வரலாற்றுத் திரிபுக்கு நம்மை அறியாத துணை போகாதிருப்போம்!" டாட்
அட இங்க கூட நீங்க பதிவு எழுது போஸ்ட் பண்ணுறீங்களா? ஆச்சரியமாக இருக்கே? எப்போதெல்லாம் வரலாறுகள் திரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதை பற்றிய உண்மைகளை ஆராய்ந்து இங்கே பதிந்து வைத்தால் வருங்காலத்தில் யாரவது ஆராய்ச்சி செய்தால் அவர்களுக்கு பயன்படும்தானே
பதிலளிநீக்குஆமா சகோ! எப்போ எழுதுறோமோ இல்லையோ இதையெல்லாம் எழுதிடனும் தானே!😂😂
பதிலளிநீக்குஆத்தாடி நாளை எனக்கும் இப்படித்தான் செய்வாங்களோ... ?
பதிலளிநீக்குஉடனே சிறுஅகவை புகைப்படங்களை இணையத்தில் வெளியிடணுமே...
உங்கள போல பிரபலங்களுக்கு இந்த மாதிரி பிராப்ளம் வராம இருக்கனும்ன இப்பவே வெளியிட்டுவிடுங்க அண்ணா
நீக்குமெய்ப்பொருள் காண்பது அறிவு...
பதிலளிநீக்குஅதே! அதே! நன்றி அண்ணா
நீக்குஇணையத்தில் இருக்கும் பல விஷயங்கள் உண்மையல்ல! புரிந்தவர்கள் வெகு சிலரே என்பதே வேதனையான உண்மை.
பதிலளிநீக்குஆமாங்க அண்ணா. உண்மை தான்
நீக்குஎது!! நிர்மலா சீதாராமனா!! நல்லவேளை செயலலிதா இல்லை. இருந்திருந்தால் இந்தப் பொய்யனைக் கட்டி வைத்துத் தோலை உரித்திருப்பார்.
பதிலளிநீக்கு‘"என்ன சகோ, கலாம் அம்மா பொட்டு வச்சிருக்காங்க?" என நான் கேட்க,’ - எப்படித்தான் உங்களுக்கு இப்படியெல்லாம் நுட்பமாக ஆராயத் தோன்றுமோ! ஆனால் இணையத்தின் பொய்களுக்கு அளவே கிடையாது சகா! இது போல் நிறையப் பார்த்திருக்கிறேன் நானும். பகிரும் முன் சிந்திப்போம்!
ஹாஹாஹா!!!!! அது Fakeன்னு எங்கேயாவது பதிந்துவிட வேண்டும் சகா. தோளிருக்க சுளை முழுங்கும் சில கூட்டம்
பதிலளிநீக்குஉண்மையை புறக்கணித்து பொயையை நம்புகிறவர்களை எல்லாம் நாம் சாதாரணமாக டே டு டே வாழ்க்கையில் பார்த்து வரத்தான் செய்கிறோம். ஏமாறுகிறவர்கள் இருக்கவரை ஏமாத்துறவங்க இருக்கத்தான் செய்வாங்க.
பதிலளிநீக்குவேலை மாற்றம், ஊர் விட்டு ஊர் மாறுதல்னு என் பர்சனல் வாழ்க்கைல ஏற்பட்ட மாற்றங்களால் என்னால் வலைப் பக்கம் வர இயல வில்லைங்க. நலம்தானே, மைதிலி? பொதுவாக ஒருவர் அடுத்தவங்க நலம் விசாரிச்சாங்கனா அவங்க நல்லா இருக்காங்கனு அர்த்தம்னு சொல்லுவாங்க. நான் நலமே! :)
ஆஹா!!!! Is it Varun!! A complete tamil comment!! I really missed your sincere comments for post and worried about you. And it's nice to hear from you. Let the change brings you all happiness. Take care and stay safe. 😊
நீக்குபொய்யான உலகம் இது
பதிலளிநீக்குhttps://vannasiraku.blogspot.com/2018/04/2.html