யாரோ போல தான் நீயும் -என
நான் கருதும் நாளில்- புத்தனுக்கு
புதிய போட்டியாக இருப்பேன் நான்
*************************************
போராடி பெற்று பின் புறக்கணிக்கப்படுவதில்
நம் தேச விடுதலைக்கும், என் நேசத்திற்கும்
ஏதேனும் வேறுபாடு இருக்கிறாதா என்ன?
**************************************
திரும்பி வந்த உன்னிடம்
தேடிக்கொண்டிருக்கிறேன்
நான் தொலைத்த பழைய உன்னை.
**************************************
என் மௌனத்தை
புரிந்துகொள்ளாத உனக்கு
என் வார்த்தைகள் மட்டும் புரியபோகிறதா என்ன?
**************************************
ஒரு தேநீரை போல் அந்தமழைக்கு
என்னை அருந்த கொடுத்தபின்
தெளிந்திருக்கிறது மனமும் ....
குறும்பா -2
அருமை
பதிலளிநீக்குஅருமை சகோதரியாரே
நன்றி அண்ணா!
நீக்குதம 2
பதிலளிநீக்குநன்றி :)
நீக்குகுறும்பாக்கள் அனைத்துமே அருமை....
பதிலளிநீக்குபுறக்கணிக்கப்பாடுவதில்?
புரிந்துகொள்ளதா?
நான் படித்ததில் தவறா இல்லை, நீங்கள் பதிந்ததில் தவறா?
டீச்சரே தப்பாக எழுத மாட்டாங்கன்னு நினைக்கிறேன்... :)))))
நான் தான் தவறு செய்திருக்கிறேன். பல முறை இப்படி கவன குறைவுகள் விடுவதுண்டு. வேலைப்பளுவும் ஒரு காரணம் என்று நொண்டி சறுக்கு. சொல்லலாம்.:))
நீக்குநன்றி அண்ணா!
1,4.5 மிக அருமை.....பாராட்டுக்கள்
பதிலளிநீக்குபார்ரா !!! சகா கவிதையை பொறுமையா படிச்சு, பாராட்டவும் செய்திருகிறாரே! நன்றி சகா!
நீக்குசிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் தோழி !
பதிலளிநீக்குமிக்க நன்றி தோழி!
நீக்குஐந்தும் அருமை டியர் ..
பதிலளிநீக்குநன்றி டியர்:)
நீக்குஅருமையான கவிதைகள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சார்!
நீக்கு“என் மௌனத்தை
பதிலளிநீக்குபுரிந்துகொள்ளாத உனக்கு
என் வார்த்தைகள் மட்டும் புரியபோகிறதா என்ன?
எப்படிப்பா...? ரொம்பப் பெரிய புரிதல் அல்லவா இது?
உன் கவிதைக்கு நான் பக்கம் பக்கமாக உரையெழுத வேண்டும்போல ஆசையா இருக்கு (ஆனால் அதுதான் தேவைப்படாமலே எளிமையா எழுதிடுறியே...) விரைவில் தொகுப்பு வெளியிட வாழ்த்துகள்...
**ஆனால் அதுதான் தேவைப்படாமலே எளிமையா எழுதிடுறியே..** எல்லாம் உங்களை போன்றோரின் ஊக்கத்தால் வந்தது தானே அண்ணா!
நீக்கு**விரைவில் தொகுப்பு வெளியிட வாழ்த்துகள்...**
அயையோ ! அத்தெல்லாம் பெரிய ஆளுங்க பேட்டை:))
நன்றி அண்ணா! உங்க புத்தகத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நம்ம ஊர் தேர்தல் தான் உப்புசப்பு இல்லாம முடிஞ்சுடிசே!
சிந்திக்க வைத்தன நல்லகவி வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎனது புதிய பதிவு.
ஒண்ணு, ரெண்டு, மூனு, நாலு குறும்பாக்களில் "மகிழ்நிறை" இல்லை! மாறாக ஐந்தாவது ஒன்றில் மழையும், மனமும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கின்றன!
நீக்குஉங்களை இனிமேல், "குறும்பா மைதிலி" பெருமையுடன் விளிக்கலாம்னு தோணும் அளவுக்கு இருக்கு உங்க கவித்துவம், மைதிலி! :)
நன்றி கில்லர் அண்ணா:)
நீக்கு**ஒண்ணு, ரெண்டு, மூனு, நாலு குறும்பாக்களில் "மகிழ்நிறை" இல்லை! **
**
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
அதுவும் ஒரு மகிழ்ச்சி தான் என உணர்தவர் தெளிவர்! ஊடல் இன்பம்னு சொல்வாங்க (குறள் கூகிள்ல தான் சுட்டேன்)
**உங்களை இனிமேல், "குறும்பா மைதிலி" பெருமையுடன் விளிக்கலாம்னு தோணும் அளவுக்கு இருக்கு உங்க கவித்துவம்**
மிக்க நன்றி வருண்:)
”மழைக்கு என்னை அருந்த “அருமைமா...
பதிலளிநீக்குநன்றி அக்கா:)
நீக்குஅனைத்தும் அருமை ! அதிலும்""என் மௌனத்தை
பதிலளிநீக்குபுரிந்துகொள்ளாத உனக்கு
என் வார்த்தைகள் மட்டும் புரியபோகிறதா என்ன?""
இரண்டு வரியில் எவ்வளவு பெரிய அர்த்தங்களை விளக்கிவிடலாம்... சூப்பர்
ரசித்தமைக்கு நன்றி சகோ!
நீக்குகுறும்பாக்கள்
பதிலளிநீக்குபெருங்கதைகளைச் சொல்லிச் செல்கிறது.
அருமை. வாழ்த்துக்கள் தோழி.
த.ம. 7
அப்படியா! நன்றி தோழி:))
நீக்குகுறும்பா மூலம் கொட்டும் குறும்பு அப்படித் தானே செல்லம். பொல்லாத குறும்புகாரி எவ்வளவு அழகா திருக்குறள் மாதிரி சிந்திக்கவைக்க...ம்...ம்... சிரிக்கவும் ரசிக்கவும் செய்கிறேன் அம்மு. வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்குவாங்க செல்லம்:) நன்றி டா அம்மு:)
நீக்குஒவ்வொரு வரிகளும் மிக அருமை. ரசித்து படித்தேன் சகோ.
பதிலளிநீக்குஇப்படி எழுதுவதற்கு, வீடு வசதியாக இருக்குமா அல்லது பள்ளிக்கூடம் வசதியாக இருக்குமா? (ஒரு வேளை, வகுப்பில் மாணவர்களிடம் எதையாவது படிக்க சொல்லிவிட்டு, நீங்கள் யோசித்து யோசித்து எழுதுகிறீர்களோ!!!)
எந்த முன் அறிவுப்பும் இல்லாத புயல் போல அவை வந்துவிடுகின்றன சகோ:)) நன்றி!!
நீக்குஅரும்பாக்கள் தன்னை அழகாய்ப் படைத்தே
பதிலளிநீக்குகுறும்பாக்கள் என்பதோ கூறு!
மிக மிக அருமை அத்தனையுமே!
வாழ்த்துக்கள் தோழி!
குறள் பின்னூட்டம் !!! நன்றி தோழி!!
நீக்குஅனைத்துமே அருமை! சகோதரி! ரொம்பவே ரசித்தோம்.....ஷேக் ஹான்ட்ஸ்!
பதிலளிநீக்குநன்றி சகாஸ்:)
நீக்குவணக்கம் சகோதரி..
பதிலளிநீக்குஅழகான வரிகளும் அழுத்தமான உணர்வுகளும் ஒரு சேர அமைந்திருப்பது கண்டு ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது. முத்துநிலவன் அய்யா குறிப்பிட்டது போல நானும் உங்கள் கவிதை தொகுப்பு வெளிவர விண்ணப்பம் செய்கிறேன். சீக்கிரம் நடக்கட்டும். பல கவிதைகளில் ஒரு வெறுமை தெரிகிறதே யாரிடமும் வருத்தம் இல்லையே அக்கா? தம்பி என்பதால் உரிமையுடன் கேட்டு விட்டேன். தவறெனில் மன்னிக்க.. வழக்கம் போல் அசத்துங்கள். பகிர்வுக்கு நன்றிகள் அக்கா.
உரிமையோடு கேட்டமைக்கு நன்றி சகோ:) உண்மையில் விஜூ அண்ணாவின் விட்டு விடு எழுதிய தாக்கம் என்று கூட சொல்லலாம். அது ஒரு கவி வகை. பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே எழுதும் ஒரு வகை. ஜஸ்ட் முயன்று பார்த்திருக்கிறேன். ஜீவி நலாமா சகோ:)
நீக்குவணக்கம் அக்கா.
நீக்குஅனைவரின் நலம். அதிலும் உங்க நாத்தனார் ரொம்ப ரொம்ப நலம்.
நன்றி சகா:)
பதிலளிநீக்குகுறும்பாக்கள் எல்லாமே அருமையா வந்திருக்கு. புத்தகம் வெளியிடறதுங்கறது பெரியவங்க பேட்டைல்லாம் இல்லம்மா. என்ன மாதிரி ஆளுங்க ஈஸியா செஞ்சு முடிச்சிருவோம். அதனால டோண்ட் வொர்ரி.... தங்கையின் புத்தகம் சிறப்பாக வெளிவர நான் ஏற்பாடு பண்றேன். ஜமாச்சிரலாம்.
பதிலளிநீக்குஉண்மையில் ஜோதிஜி அண்ணாவின் ஒரு பதிவை பார்க்கும் வரை எனக்கும் புத்தகம் குறித்த ஆசைகள் எல்லாம் இருந்தது. கவிதை புத்தகம் என்றால் ஈ.புக் போதும் என்பது போன்ற அவருடைய பதிவை படித்த பிறகு நாம சமுதாயத்திற்கு பெருசா என்ன சொல்லிடோம்னு தோணுது அண்ணா! ஆனா உங்க சொற்களில் தங்கை என என்னை சொல்வது வெறும் வார்த்தை இல்லைன்னு உணர்கிறேன். மிக்க நன்றி அண்ணா! தாமத மறுமொழிக்கு மன்னியுங்கள்:))
நீக்குதாமத வருகைக்கு நானும் மன்னிப்புக் கேட்கிறேன்.
நீக்குமுன்பே படித்து விட்டேன்.
அப்போதெழுதிய பின்னூட்டம் நீட்டி முழக்கித் தனிப்பதிவாகும் அளவிற்குப் போய்விட,
சுருக்கமாக எழுதிவிடலாம் என்று விட்டு விட்டேன்.
ஆனால் அதுவும் முடியவில்லை.
மனதாழத்திலிருந்து கொப்புளித்து வரும் குமிழிகள் மேற்பரப்பை உடைத்துக் காற்றோடு கலக்கும் சத்தத்தை வாசிப்போனுக்குக் கேட்கச் செய்கின்றன தங்களின் கவிதைகள் என்பேன்.
அலங்கார சொற்கட்டிலில்ல,
இது போன்ற பூச்சற்ற வார்த்தைகளிலிருந்தும் உணர்வுகளைச் சொல்லும் வரிகளை எழுப்ப முடியும் என்பதற்கு உங்கள் குறும்பாக்கள் சாட்சி!
மீண்டும் தாமதம் பொறுக்க!
நன்றி!
**மனதாழத்திலிருந்து கொப்புளித்து வரும் குமிழிகள் மேற்பரப்பை உடைத்துக் காற்றோடு கலக்கும் சத்தத்தை வாசிப்போனுக்குக் கேட்கச் செய்கின்றன தங்களின் கவிதைகள் என்பேன்.* என்னவொரு சொல்லாக்கம் !! உரைநடையே கவிதையாய் இருக்கிறது அண்ணா! மிக்க நன்றி அண்ணா!
நீக்குஅன்புள்ள வணக்கம்.
பதிலளிநீக்குஒரு தேநீரை போல் அந்தமழைக்கு
என்னை அருந்த கொடுத்தபின்
தெளிந்திருக்கிறது மனமும் ....
இந்தக் கவிதை நிரம்பவும் பாதித்த கவிதை. இதுகுறித்து ஒரு கட்டுரை எழுதலாம். தொடருங்கள்.
அனைத்தும் அசத்தல்
பதிலளிநீக்குகுறிப்பாக
//போராடி பெற்று பின் புறக்கணிக்கப்படுவதில்
நம் தேச விடுதலைக்கும், என் நேசத்திற்கும்
ஏதேனும் வேறுபாடு இருக்கிறாதா என்ன?//
என்ற வரிகள் மிகவும் அருமை நேசத்திலும் தேசத்தை இணைத்த பாங்கு கண்டு வியந்தேன்.
கவிஞர் ஐயா சொன்னது போல் நூல் வெளியிடுங்கள்