குழந்தைகளுக்கு விடுமுறை தொடங்கிவிட்டது. இன்னும் எனக்கு தான் ஸ்கூல் முடியல. ஆனா அதுக்காக அவங்க (குட்டீஸ்) பஞ்சாயத்துக்கு லீவா விடுவாங்க? இதோ சில ஜாலியான நிறை, மகி மொமென்ட்ஸ் ....
நிறை கார்டூன் பார்த்துப்பார்த்து போர் அடிச்சு எதுலயாவது நான் பார்க்க அனுமதிக்கிற மாதிரி பாட்டு வருதான்னு தேடிக்கிட்டு இருந்தாள். வசந்த் டி.வி.ல தாய்மை போற்றுதும் என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி ஆளுங்களா புடிச்சு அவங்க அம்மா பற்றி பேட்டி எடுத்து கூடவே நல்ல நல்ல பாட்டா போட்டுக்கிட்டு இருந்தாங்க. எல்லாமே அம்மா பாட்டு. நிறை கேட்குறா"அம்மா இவங்க போடுற பாட்டுல வரது இவங்க அம்மாவா, இல்ல ஜெயலலிதா அம்மாவா? தேர்தல் ஜுரம் எப்படி என் மகளை தாக்கியிருக்கு பாருங்க!
நிறைக்கும் மகிக்கும் வழக்கம் போல பைட்டு.
நிறை மகியை பார்த்து" நீ மகி இல்ல மங்கி ".
மகி "சொல்லிக்கோ நான் மங்கி நீ பூனை.
நிறை " பூனை ரொம்ப அழகா இருக்குமே"
மகி "ஆனா என்ன அப்பத்தா கதை சொன்னாங்கள்ல பூனையோட அப்பம் எல்லாம் குரங்கு தான் சாப்டிடுச்சு! நிறை அதிகபட்ச வால்யுமில் "ஆம்மாஆஆஆஆஆஆஆஆஆஅ"
நான்@#@#@@#
பூரி செய்து கொண்டிருந்தேன். மகி எல்லா பூரியையும் எடுத்து அவள் தட்டில் வைத்துக்கொண்டாள். பத்து நிமிடம் கழித்து எல்லாவற்றும் அவளால் சாப்பிட முடியாது என ஞானம் வந்திருக்கும் போல "அப்பா இந்த பூரிகிட்ட பிரவுன் னா இருக்கு. இது ரெண்டை மட்டும் நீங்க வச்சுகோங்களே". அக்கா நீ இன்னும் சாப்பிடலையா(அவ்வளவும் உன்தட்டுலஇருக்கே) இந்தா நீ வைச்சுக்கோ
இப்போ என்னை பார்த்தாள். நான் முறைத்துக்கொண்டிருந்தேன்,அவளோ கன்னம் குழிவில புன்னகைத்தபடி " அம்மா இந்த பூரி பெருசா இருக்கு, இதுஅம்மா, இதுசின்னதாஇருக்கு. இது பாப்பா . அவள் அறிவை நான் மெச்சிக்கொண்டிருந்தேன். அம்மாவை நீங்க சாப்பிடுங்க , பாப்பா எனக்காம். (மகி பெரிய அக்கா ஆகிவிட்டாள் ஏன்னா அவள் u.k.g போறாளாம்)
(இதை படிச்சுட்டு மகிக்கும், நிறைக்கும், அவங்க சமாளிக்கிற எனக்கு இனியா கொடுக்கப்போற பூச்செண்டுக்கு நன்றி ...நன்றி..ஹா...ஹா..)

ஆஹா .குழந்தைகள் உலகம் அருமையானது.மிகவும் ரசித்தேன் பஞ்சாயத்து தலைவர் பாடு கடினம் தான் .பாவம் அம்மாக்கள்.விடுமுறையில்.நன்றும்மா
பதிலளிநீக்குநீங்க சொல்லுறது சரிதான் , நன்றி டீச்சர் !
நீக்குஇனிமை...
பதிலளிநீக்குரசித்தேன்...
நன்றி டி.டி.அண்ணா!
நீக்குஇனியா மட்டுமென்ன... நான் தர்றேன்மா கேக்கோட சேர்த்து பூச்செண்டு... இந்தாம்மா... குட்டிகளின் சுட்டித்தனம் ரசிக்க வைக்கிறது. மகியால மகிழ்நிறை தருணங்களால்ல ஆகியிருக்குது/ஆவப்போகுது விடுமுறை.
பதிலளிநீக்குஆமாங்க அண்ணா! அவர்களால் தான் இது மகிழ்நிறை! நன்றி அண்ணா!
நீக்குஇரண்டு குட்டிஸும் அழகு. பேசாமல் நீங்கள் ஸ்கூளுக்கு லீவு போட்டு பஞ்சாயத்தை தீர்த்து வைங்க. (நிறைய எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் இல்ல!!!) அப்பத்தானே நானும் என்னோட இரண்டு வாண்டுகளையும் உங்கள் வீட்டுக்கு அனுப்ப முடியும்.
பதிலளிநீக்குஅல்ரெடி பன்னிரண்டு வருசமா குட்டீஸ் மேக்கிற அனுபவம் இருக்கு. எலிமெண்டரி டீச்சரா இருந்ததையும் சேர்த்து சொல்லுறேன். நீங்க தாராளமா அனுப்பலாம் என் மருமகள்களை!
நீக்குஹாஹா குட்டீஸின் பஞ்சாயத்து கலக்கல்..enjoy :)
பதிலளிநீக்குநன்றி கிரேஸ். ஒய் ப்ளட் சேம் ப்ளட் :)))
நீக்குக்யூட் குட்டீஸ்! பூனை குரங்கு கதைக்கு இப்படியொரு பயனா? மகிழ்நிறைத் தருணங்கள்... மனம் நிறைக்கும் நிகழ்வுகள்! சுட்டிக் குழந்தைகளுக்கு என் ஆசிகள்!
பதிலளிநீக்குநீங்க வேற , உங்க குக்கூபாரா கதையா படிச்சதிலே இருந்து நிறை அவள் அப்பாவை அப்படிதான் கூப்பிடுறா (அதை போலவே சிரித்து அவளை கலாய்ப்பது அவள் அப்பாவின் ஹாபி ஆச்சே:)) நன்றி அக்கா!
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
குழந்தைகள் செய்யும் குறும்புகள் நெஞ்சுள்
பழமாய் இனிக்கும் பழுத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நன்றி அய்யா!
நீக்குகுழந்தைகளின் குறும்பே அழகுதான்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் சார்!
நீக்குகுட்டிகளின் சுட்டித்தனம் ரசிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குநன்றி ராஜிம்மா !
நீக்கு:) :) குழந்தையின் சண்டைகளில் எப்போதும் நாம் avargalaagavum avaragl naamgavum marri karpikkum paadangal arumaiyanavai :) :)
பதிலளிநீக்குஉண்மைதான் சகோ . நன்றி
நீக்குஅடடா தோழி sorry ம்மா இப்பதான் பார்க்கவே முடிஞ்சுதும்மா நேற்று முழுவதும் busy காலையில் வெட்டிங் பின்னேரம் ரிசெப்சன் அப்புறம் இன்னிக்கு இப்பதான் வேலையால வந்தேன்.
பதிலளிநீக்குஅதுசரி அம்மாவும் பொண்ணுங்களும் படும் பாட்டை வெகுவாகவே ரசித்தேன். மகி ரொம்ப சமத்து தான் எவ்வளவு சமயோசித புத்தி அந்த இடத்தில் தன்னை விட்டுகொடுக்காமலும் அதை காட்டிகொடுக்காமலும் கெட்டித்தனமாக பகிர்ந்து சமாளித்தது வியப்பே. அந்த புத்திசாலித் தனத்தை ரசித்த அம்மாவுக்கு நிச்சயம் பூச்செண்டு கொடுக்கவே வேண்டும். குட்டிகள் so cute நன்றாக வருவார்கள் புத்திசாலிக் குட்டிகளை பெற்ற என் தோழிக்கு தங்க சங்கிலியே போடலாம் வரும் போது கொண்டு வருகிறேன். ஹா ஹா
நன்றி தோழி! ரொம்பவே சந்தோஷமாக உள்ளது தோழி. என் மீது கொண்ட அன்பால்.
வாழ்க வளமுடன்....!
இப்படி பட பட பட்டாசு தோழியால் களைகட்டுகிறது இடம், இனியாவே தங்கம் தானே:)) அருமை தோழியை காண காத்திருக்கிறேன்!
நீக்குகுழந்தைகளுடன் இப்படி மகிழ்ச்சியாய் இருப்பதில் பெரிய குதூகலம்....
பதிலளிநீக்குமகிழ்ச்சியாக இருக்கிறது படிக்கும் எங்களுக்கும். குழந்தைகளுக்கு எனது ஆசிகள்.
நன்றி அண்ணா! ரோஷினி நலம் தானே?
நீக்கு'கரும்புகளின் குறும்புகள்
பதிலளிநீக்குகசக்கும் போதெல்லாம்
“புத்தகத்தை எடுரா” என்பதே
உச்சபட்ச தண்டனை! “ நீ இந்தமாதிரித் தண்டனை தராத டீச்சர்+அம்மால்ல? குழ்ந்தைகளின் உலகைப் புரிந்துகொள்ள பெற்றோர்கள் டீச்சராகணும், டீச்சர்கள் பெற்றோராகணும்னு நா எப்பவும் சொல்றது! ஐன்ஸ்டீன் குழந்தைகளிடம் கொள்ளைப் பிரியமா இருப்பாராம்! மேதைகள் எல்லாம் அப்படித்தான்! வீட்டுக் கோவிலின் கர்ப்பக் கிரகமே குழந்தைகள்தானே? நீ கொடுத்து வைத்தவளா? இல்லை என் மருமக்கள் கொடுத்துவைத்தவர்களா? நாலுபேரும்தான் என்று கஸ்தூரியின் குரல் கேட்கிறது! நல்லாஇருக்கணும்பா
அண்ணா, எத்தனை பெரிய வாழ்த்து. கண்கள் நிறைந்து விட்டது அண்ணா! கஸ்தூரி விளையாட்டாய் சொல்வதுண்டு வண்டியை கவனமா ஓட்டு, உனக்கு வீட்டுலயும் ரெண்டு பிள்ளைகள் இருக்குறாங்கனு....மனதுக்கு பிடித்த பணி மகிழ்ச்சியா செய்யவேண்டியது தானே!
பதிலளிநீக்குலேட்டானதுக்கு சாரி. க்யூட்டான அழகான குழந்தைங்க உங்களுக்கு . அவங்களோட குறும்பு மிகவும் ரசிக்கலாம். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி வணக்கம்
பதிலளிநீக்குஎன் மருமகள்களைப் பார்த்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி என்னுள் எட்டிப்பார்ப்பதை எப்படிச் சொல்வது! இருவரும் மிக அழகாக அதே சமயம் அறிவாக இருப்பது சிறப்பு. இவர்களின் சேட்டைகள் சோலைக்குள் ரீங்காரமிடம் பறவைகளின் சப்தத்தைப் போன்றது எப்பவும் திகட்டாது. இசையாய் நம் காதுகளை நிரப்பிக் கொண்டே இருக்கும் அவர்களின் சேட்டைகள் மறைந்த பின்பும். எனது மருமகள்களை எப்போது வீட்டிற்கு அழைத்து வரப் போகிறீர்கள்? விரைவில் வர வேண்டும் அக்கா. அழகான குடும்பம் எனது சகோவையும் சேர்த்து தான் சொல்றேன் அவரை முறைக்க வேண்டாம்னு சொல்லுங்க. அழகான பெயர் இருவருக்கும். இருவரும் அகிலம் போற்றும் அற்புதமான சாதனையாளர்களாக வர வேண்டும் என்பதே எனது விருப்பம். நிச்சயம் நிறைவேறும் அதை அருகிலிருந்து நான் பார்ப்பேன் என்பது கூடுதல் சிறப்பு. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் சகோதரி. வேலைப்பழு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. விரைவில் நேரில் சந்திப்போம் நன்றி சகோதரி..
ஹா ஹா ஹா.......என் அழகு தங்கைகளின் சுட்டிதனம் என்றும் ரசிக்கத்தக்கது.
பதிலளிநீக்கு