வெள்ளி, 14 நவம்பர், 2014

நாங்க எல்லாம் அப்பவே அப்புடி!
                       அப்போ ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தேன். (போய்க்கிட்டிருத்தேன் னு சொல்லு ஆனா படிச்சுக்கிட்டுன்னு மட்டும். இப்போவே ஆரம்பிச்சுட்டீங்களா?? ஒ! அது என் மைன்ட் வாய்ஸா). எங்க இங்கிலிஷ் சார்
அதான் சிவா சார் லகின்வார் பாடலை உணர்வுபூர்வமா நடத்திக்கிட்டு இருந்தார். பாடல் முடியப்போகும் நேரம் விஜி கேட்டாள் "ஏன் மைதிலி ஒருவேளை இந்த பாட்டை எழுதின வால்ட்டர் ஸ்காட்  தன்னோட சொந்த கதையை தான் பாட்டா பாடியிருப்பாரோ?? நான்"இருக்காது விஜி லகின்வார் தான் கடைசில செத்துப் போயிட்டாரே!! மைதிலி இது சிவா சாரின் கர்ஜனை. get out of the class both of you !!!!!! என வகுப்பு வெளியே அனுப்பிவைத்தார். (அப்பவே அவுட் ஸ்டாண்டிங் ஸ்டுடன்ட் நாங்க!) வகுப்பு முடிந்து போகும் போது சாபத்திற்கு ஒரு தள்ளுபடி தந்துவிட்டு சென்றார். அதாவது இங்கிலீஷ் கிளாஸ் ல மட்டும் வெளில நின்னா போதும் என்பது தான் அது. இப்படியே இரண்டு ஆங்கிலப்பாடவேளை  நின்ற பின் மூன்றாம் வேளையில் "உள்ளே வா"(எஸ்!! பாட்சா ரஜினி ஸ்டைல் ல தான்! நம்ம சிவா சார் ரஜினி ரசிகராச்சே!!) சம்மரி எழுவிட்டு அதை விளக்கிக்கொண்டிருந்தவர் ஒரு குறுகுறுப்பில் என்னை எழுப்பிக்கேட்டார்" அப்படி என்ன தான் பேசிக்கிட்டு இருந்தீங்க?". நான் "இல்ல சார்! விஜி லகின்வார் என்பது ஸ்காட் தானோன்னு கேட்டா?" என்றேன் பம்மிய படி. ஒடனே சார் " அதான் அவன் கடைசில செத்து போய்டுவானே"என்றார். இதையே தான் சார் நானும் சொன்னேன் என்று நான் முடிக்கும் முன்னரே சாருக்கு சிரிப்பு வந்துவிட்டது. சிரித்து முடிக்கையில் சற்றே குற்ற உணர்ச்சியுடன் "இனி நான் பாடம் நடத்தும் போது இப்படி பேசக்கூடாது" என்று கூறி மன்னித்துவிட்டார். இப்படிதான் பார்க்கிற விளம்பரத்தில் இருந்து அம்மாவோட அட்வைஸ் வரை (நான் எங்க மம்மியை தான் சொன்னேன்) அத்தனையையும் கலாய்த்தபடி திரிகிற என்னிடம் நிலவன் அண்ணா "மைதிலி ! சந்தம் உனக்கு இயல்பாவே வருது, மரபு கத்துக்கோ என்று என்னையும் ஒரு ஆளா மதிச்சு சொல்லிகிட்டே இருப்பார். நானும் காமராசர் பாணியில் ஆகட்டும் பார்க்கலாம் என காலம் கடத்தி வந்தேன்.

          ஒரு நாள் யாப்பு சூக்குமம் எனும் தலைப்பில் விஜு அண்ணா ஒரு பதிவு போட்டிருந்தார். விஜூ அண்ணா சிம்பிள் மேட்டரை வைத்து சீனச்சுவர் எழுப்புவதிலும், அப்படக்கர் விசயங்களை அசால்ட்டாக அடிப்பதிலும் வித்தைகாரர். வெண்பா எழுத கத்துத்தரேன்னு சொன்னார். அதுவும் ஒன்னு ரெண்டை வைத்து!! அவரை நம்பி முயற்சியில் இறங்கினேன். அதுவரை இலக்கணம் ரொம்ப கஷ்டம். கத்துக்கிட்ட எழுதுறது ஈசி னு நினைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் தான் தெரிந்தது இலக்கணம் ஈசி, எழுதுறது தான் கஷ்டம்னு. இந்த இளமதி, இனியா, கிரேஸ் எல்லாம் எப்படித்தான் இப்படி கலக்குறாங்களோ!! வார்த்தைகள் பிரிப்பது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார். சத்தியமா ரெண்டு நாளாய் பேசுகிற சொல்லெல்லாம் என்னை அறியாம பிரிச்சுக்கிட்டே இருந்தேன்!! அது தொடர்பா அவர் மூணு பதிவு போட்டு முடிக்கிறதுக்குள்ள நாலு வெண்பா பாடி அவரை நோகடுச்சுடேன்!! மனுஷன் ரொம்ப நல்லவர். கடைசியா நான் எழுதின மூணு வெண்பா சரியா இருக்குன்னு சொல்லிட்டார். so இப்போ வெண்பா!!

முத்துநில வன்அண்ணா பன்நாளாய் தூண்டிட 
கொத்து முடிபோனா லும்சரியென் றேநான்
துணிந்தேன் சரிவெண்பா கற்கலாம் என்றே 
பணிந்தேநின் றேன்நான்வெண் பாக்கனவு நாடி
ஒருவழியாய் கற்பித்து தேர்ச்சி எனவே   
திருவாய் மொழிந்தார் குரு  !!

 

48 கருத்துகள்:

 1. குருவே சரின்னு சொல்லிட்டாரா , இனிமே கச்சேரியை ஆரம்பீங்க :)
  த ம 1

  பதிலளிநீக்கு
 2. ஆக, "குறும்பா மைதிலி" "வெண்பா மைதிலியாக" மின்னுகிறார் இப்போது!

  "கார்பன்" ஆக இருந்த அவரை வைரமாக செதுக்கிய பெருமை அவர் "குருக்களுக்கே" சேரும்!

  நீங்க வெண்பா கற்று தேர்ச்சி பெற்று இருக்கீங்க. நானும் தப்பில்லாமல் தமிழில் ஒரு பின்னூட்டமிட்டு தேர்ச்சி பெற்றுவிட்டேன் போல! :)
  அவரவர் தகுதிக்கேற்றார்போல எதிலாவது தேர்ச்சி பெற வேண்டியதுதான். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. **ஆக, "குறும்பா மைதிலி" "வெண்பா மைதிலியாக" மின்னுகிறார் இப்போது! **
   இதெல்லாம் எனக்கு ஓவர் வருண்:)) மேட்டர் தெரிஞ்சவங்க பார்த்து டென்சன் ஆகிட போறாங்க:))

   நீக்கு
 3. வெண்பா
  அன்பாதான்
  இருக்கு

  த ம 1

  பதிலளிநீக்கு
 4. அன்புச் சகோதரி,

  வெண்பாவில்...உன்பாவில்...என்பாவில்....
  தளை தட்டியது என்று தலைதட்டிச் சொன்னாலும் தப்பில்லை!
  குரு பாவிலேயே தளைதட்டும் போது...
  நம் பாவில் தளைதட்டினால் ஒன்றும் குடி முழுகிப்போமோ?

  முயற்சி திருவினையாக்கும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா அண்ணா. இப்போ நாம எல்லாம் ஒரு கிளாஸ் மாணவர்கள் இல்லையா:))))) நன்றி அண்ணா!

   நீக்கு
 5. பா மைதிலி வெண்பா மைதிலி ஆயுட்டீங்களா? கலக்குங்க..
  //அப்புறம் தான் தெரிந்தது இலக்கணம் ஈசி, எழுதுறது தான் கஷ்டம்னு.// இதப் படிச்சு சிரிச்சுட்டே வந்தா ....என் பெயர இழுத்து விட்டுருக்கீங்களே..இனியா, இளமதி சரி..இவங்களோட நானா?
  யாப்பு சூக்குமம் பார்த்து நானும் முயன்றேன்..மற்ற இரு பதிவுகளையும் இனிதான் படிக்க வேண்டும்..ஹோட்டலிலும் நண்பர்கள் வீட்டிலும் இடையிடையே வந்து இணையம் பார்த்துக் கொண்டிருந்தேன்..இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டிற்குச் சென்று விடுவேன்..அப்புறம் மூன்று நான்கு நாட்கள் இடைவெளி...இணையம் வந்தபிறகு மீண்டும் படிப்பேன் உங்கள் வெண்பாக்களை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் இப்படி ஆளாளுக்கு கலாய்கிறீங்க ப்பா:((( நன்றி டியர்:))

   நீக்கு
 6. அட.. அட.. என்ன ஒரு திறமை உங்க கிட்ட தோழி..!
  பாருங்க அப்பவே முத்துநிலவன் ஐயாவுக்கு தெரிஞ்சிடிச்சே..
  நீங்க ரொம்ம்ம்ப சூட்டி.. கெட்டி..ன்னு..:)
  அதான் உங்கள மரபு கத்துக்கச் சொல்லியிருக்கார்..!
  பாருங்க.. சட்டுன்னு இத்தனை வெண்பா இயற்றி அப்பிடி.. ஊதித் தள்ளீட்டீங்க!.. அசத்திட்டீங்க போங்க தோழி!.. விஜு ஐயா இருக்க பயமேன்னு இறங்கியாச்சு களத்தில.. இனி சமர்தான்..!
  வெளுத்துக் கட்டுங்க..:))

  அருமையாக இருக்கு! வாழ்த்துக்கள்! தொடருங்க.. தோழி!

  // இந்த இளமதி, இனியா, கிரேஸ் எல்லாம் எப்படித்தான் இப்படி கலக்குறாங்களோ!!..//

  என்னதூஊஊ...! யார் சொன்னா நான்லாம் கலக்குறேன்னு…
  கலங்கிக்கிட்டு இருக்கேனாக்கும்.. ம்க்கும்..!..:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களே கலங்கினா!!!!! இது தன்னடக்கமா??? அவையடக்கமா?? தோழி:)))
   மிக்க நன்றி!

   நீக்கு
 7. //சிம்பிள் மேட்டரை வைத்து சீனச்சுவர் எழுப்புவதிலும்//

  இயல்பா வருதுப்ப உனக்கு ...
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு பாவையும் எழுதி முடித்து எந்நேரம் ஆனாலும் என்னங்க ! என்னங்க!னு தூங்கவிடாமல் நான் தொணத்த இந்த வாரத்தைய கண்டுபிடிச்சவனை கொன்னா தான் என்னங்கனு நீங்க புலம்பின மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கலைனா நினைசீங்க!! அந்த டென்சன்ல தானே இந்த பல்பு:)))

   நீக்கு
 8. குரு மெச்சிய சிஷ்யைக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே
  வெண்பா தொடரட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா! இப்படி தொடர் பதிவில் மாட்டிவிட்டுடீங்களே!!:)))

   நீக்கு
 9. வால்டர் ஸ்காட்டின் லாகின்வார் ஒரு அழகான கவிதை. அதை விளக்கிச் சொன்ன என் ஆசிரியரை அப்படியே கண் முன் கொண்டுவந்ததற்காக உங்களுக்கு எனது நன்றி. இதே போல அல்பிரெட் நொயெசின் ஹைவேமன் என்ற கவிதையும் மனதை உருக்கும். லாகின்வாருக்கே லாக்கா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹைவேமென் தேர்வுக்கு படித்தது:)) வேகுநாளுக்கு முன்(இல்ல சாய்ஸ் ல விட்டுடேனோ??) அவசியம் படிக்கிறேன். தங்கள் முதல் பின்னூட்டம் மகிழ்வளிக்கிறது:) நன்றி!

   நீக்கு
 10. இனிமையான வெண்பா முயற்சி சகோதரி....
  வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 11. //அப்பவே அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட் நாங்க!...//

  அசத்தல்.. கவியின் நடை அழகு!..

  பதிலளிநீக்கு
 12. இனிய வெண்பா......வாழ்த்துகள்...........

  பதிலளிநீக்கு
 13. காரிகைக் கற்று கவி பாடுவதைவிட பேரிகைக் கொட்டி பிழைப்பது மேல் என்பது முற்காலம்! அதனை மாற்றி எளிமையாகத் தருவதற்கு, தம்பிமுத்து நிலவனும், அன்பர் விஜுவும் வாழ்வது தற்காலம் !வெண்பா கற்க முயலுவார்க்கு இதுவே பொற்காலம்

  பதிலளிநீக்கு
 14. பிரமாதம் மைதிலி... அழகான வெண்பாவாலேயே ஆசான்களுக்கு நன்றிப்பா. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 15. உங்களுக்கான வெண்பா என் பதிவின் பின்னூட்டத்தில். ( என் பரிசு!!??)

  பதிலளிநீக்கு
 16. வெண்பாவின் ஓசை செப்பல் என்கிறார்கள் இலக்கணக்காரர்கள்.
  ஆனால் உங்கள் பாடலில் துள்ளல் தெரிகிறது.
  பார்க்க வேண்டும்.
  உங்களப் பாக்கும் போதுதான் சீனப்பெருஞ்சுவரைச் சிம்பிளா கட்டின மாதிரி தெரியுது.
  இலக்கணம் கஷ்டம் இல்லை.
  அது ஒரு மூலையில் இருந்திட்டுப் போறது.
  அதப் படி படி ன்னு படுத்தி வைக்கிறதுதான் கஷ்டம்.
  இப்பத் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.

  சரி இனி கொஞ்சம் சீரியஸ்..

  வெண்பா செய்வது எப்படி என்று சொல்லி நீங்கள் “செய்து“ விட்டீர்கள்!
  சரி அதை உயிர்பிக்க வேண்டாமா?
  எங்கே போய்விட்டது உங்கள் கவிதைக் காற்று?
  ஊதி உயிர்ப்பிக்கப் பாருங்கள்!
  வார்த்தைகள் வடம் தான். கவிதைத் தேரை இழுக்கத் தேர் தான் வேண்டும்!
  வடத்தை இழுத்துக் கொண்டு போனால் தேரெங்கே என்று கேட்பார்கள்.
  வடம் பழையது. தேர்தான் ஒவ்வொரு முறையும் புதிதாய் ஆவது.
  ஒவ்வொரு தேரிலும் விதவித சிற்பங்கள் .... கம்பீரமாய் ஒரு உற்சவர்.

  இந்த வடங்களை முறுக்கேற்றி வைத்திருங்கள்.

  தேர் திரளும் நேரம் பிடித்திழுக்கப் பயன்படும்.

  கயிறில்லாமல் தேரோட்டும் திறமை உங்களுக்கு இருக்கிறது.

  பின் கயிறெதற்கு என்று கேட்பீர்களாகில் பிடித்திழுத்த பல்லாயிரம் கைகளில்

  நம்கையும் ஒன்றாய் இணைந்திருத்தல் சுகம்.

  வலிதந்தால் பின் விட்டுவிடலாம்.

  வடம்பிடித்துத் தேரிழுக்கத் தெரியாதவள் என்று யாரும் சொல்ல முடியாதில்லையா?
  சொன்னால் நம் கைக்காய்ப்புக் காட்ட இம்முயற்சி பயன்படும்.

  என்னடா...
  இவ்வளவு சிரமப்பட்டு இதை எழுதி , இவனையும் பாராட்டிச் சொல்லி ஒரு வரி கூட வாழ்த்திப் பேசாமல் இப்படிப் பின்னுட்டமிடுகிறானே என்று நினைத்தால் .......................... பாராட்ட வேண்டியதை அந்தந்த இடங்களில் பாராட்டி விட்டேன்.
  குழந்தை வளர்ந்த பிறகும் தவழ்ந்து கொண்டிருந்தால் அதை ரசிக்க முடியாதுதானே........?
  உங்களுக்குப் பிடித்த அல்லது உங்களைப் பிடித்ததைப் பற்றிப் பத்து வெண்பா எழுதுங்கள்.
  அதில் ஆகச் சிறந்த ஒன்றை அடுத்த பதிவில் இடுங்கள். பார்ப்போம்.
  நிச்சயம் கருத்திட வருவேன்.
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொன்ன கருத்தை மனதில் இருத்தியிருக்கிறேன் அண்ணா! கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்! என் சிந்தனைகுருவிகளை வெண்பா கூட்டுக்கு இடம் மாற்றி பார்த்தபின் நீங்கள் கருத்துசொல்ல தகுதியுள்ள வெண்பா ஒன்றோடு மீண்டும் உங்களை இங்கு சந்திக்கிறேன்:)) மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 17. விஜூ அண்ணா சிம்பிள் மேட்டரை வைத்து சீனச்சுவர் எழுப்புவதிலும், அப்படக்கர் விசயங்களை அசால்ட்டாக அடிப்பதிலும் வித்தைகாரர். //

  ஆமாங்க சுவர் மட்டுமா....அதை ஏற நாங்க எவ்வளவு கஷ்டப்படறோம் தெரியுமா.....ஹஹஹ்ஹ

  நீங்க வெண்பா எழுதுவதில் வெற்றி கண்டு விட்டீர்கள்! கலக்குங்க!! நாங்க இப்பாதான் மெதுவா கவிழ்ந்து படுக்க ஆரம்பிச்சுருக்கோம்....வரதுக்கு நாளாகும்....ம்ம்ம்

  "பா" அருமை! பா

  னீங்க தப்பா எழுதினா கூடத் தெரியாது பா.....ரசிக்க மட்டுமே தெரிந்தவர்கள் பா....ஹஹஹஹ....கலக்குங்க பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கப்பா!! நாம சேர்ந்தே கத்துக்கலாம் :)) நன்றி சகாஸ்!!

   நீக்கு
 18. என்ன என் பெயர் அடிபடுது ம்..ம்..ம்.. யாரது சென்று தான் பார்ப்போமே.
  ஓ நம்ம அம்மு அது தானே பார்த்தேன். ok ok ..\\\.இந்த இளமதி, இனியா, கிரேஸ் எல்லாம் எப்படித்தான் இப்படி கலக்குறாங்களோ!!..///அதெல்லாம் சரி தான் இதில இனியா எங்க வந்தாங்க. அவங்க தான் இன்னும் வரவே இல்லையே அப்புறம் எப்படி குரு இன்னும் ok சொல்லவே இல்லியே. ம்..ம்..
  கலக்ககிட்டி......ங்கம்மா கொத்தோட முடி போனாலும் சிரித்து ஓயவில்லை இன்னும் நான் என்ன நினைத்தேன் தெரியுமா தலையே போனாலும் பரவாய் இல்லை என்றல்லவா தொடர்ந்தேன். ஹா ஹா .... நான் ஒன்று சொல்லட்டுமா அம்மு உங்கள் ஸ்டைல் of றைட்டிங் குட் for வெண்பா சோ நீங்க கலக்கலாம் வெகுவாக.
  ஆமா குரு என்ன தான் சொல்கிறார் தேர் என்கிறார் வடம் என்கிறார் தெருவிலே இழுத்து விட்டாரா ம்..ம்.. இனி என்ன தயங்காமல் ஓடுங்கள். அவர் இருக்க பயம் ஏன்? குருவைத் தான் சொல்கிறேன் ( பயமா எனக்கா அதெல்லாம் நான் ஜெயிச்சிடுவேன்ல ) ///அப்பவே அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட் நாங்க! ///தெரியும் இல்ல இப்பவும் தானே? அது தானே மைதிலியா கொக்கா இல்ல அம்மு அதெல்லாம் ஜமாய் ச்சிடுவீங்கஅம்மு.ok வா வெண்பா விற்பகியாக வாழ்த்துக்கள் ....! தாமதத்திற்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னிப்பா!! தோழி கேட்கலாமா:((( என் செல்லம் எப்போ வந்தாலும் ஓகே:)) நெசமாவே கொத்து முடி கொட்டும் அளவு யோசிக்கவேண்டியிருக்கு இனியாச்செல்லம் :(((
   **அம்மு உங்கள் ஸ்டைல் of றைட்டிங் குட் for வெண்பா சோ நீங்க கலக்கலாம் வெகுவாக. ** செம caption மக்களே!! கலக்கிபுட்டீகளே:))

   நீக்கு
 19. உன் ஆர்வத்திற்கும் விடா முயற்சிக்கும் என் வாழ்த்துகள் பா.
  ஆனால்
  வெற்றுப் புகழ்ச்சியை நீ விரும்பமாட்டாய் என்பது தெரிந்து சொல்கிறேன்-
  இன்னும் கடும்உழைப்பை
  உன் கவிதை கேட்டு நிற்கிறது.
  அவ்வளவுதான் சொல்லலாம்.
  மற்றவற்றை விஜூ சொல்லிவிட்டார்.
  “வார்த்தைகள் வடம் தான். கவிதைத் தேரை இழுக்கத் தேர் தான் வேண்டும்!
  வடத்தை இழுத்துக் கொண்டு போனால் தேரெங்கே என்று கேட்பார்கள்.
  வடம் பழையது. தேர்தான் ஒவ்வொரு முறையும் புதிதாய் ஆவது.
  ஒவ்வொரு தேரிலும் விதவித சிற்பங்கள் .... கம்பீரமாய் ஒரு உற்சவர்.“
  இதே வெண்பாவை, எதுகை மோனையை இயல்பான அழகோடு அமைத்து, வகையுளியே இல்லாமல் “வரைந்து“ பார். உனக்கே தெரியும்.
  உன்னால் முடியும். சைக்கிள் ஓட்டப் பழகும்போதுதான் இடுப்பு தேவையில்லாமல் திரும்பும் வலிக்கும். பழகிய பிறகு சிறகு முளைக்கும்.
  நன்றாக ஓட்டப்பழகி அத்துப்படி ஆனபிறகு, இந்த இடத்தல் திரும்ப வேண்டும் திரும்பவேண்டும் திரும்பவேண்டும் என்றா சொல்லிக்கொள்கிறோம்?
  திரும்ப வே்ண்டும் என்று நினைப்பது கூட இல்லை...கை லாவகமாக அதுபாட்டுக்குத் திருப்பும்ல... அந்த லாவகம் மரபிலிருந்து புதுக்கவிதைக்கு வரும்போதுதான் தெரியும். கஷ்டம்தான் ஆனால் முடியாததல்ல...
  கஷ்டப்பட்டுப் படிக்காதே! இஷ்டபப்பட்டுப் படி.. எதுவும் எளிதாகும்.
  4,5நாள் சும்மா விடு அப்புறம் நீயே திரும்ப எழுதிப்பார். ஜெயித்துவிடுவாய்.
  அதற்காக இப்போது தோல்வியடைந்துவிட்டதாக அர்த்தமில்லை.
  வெறும் இலக்கணம் வெண்பா ஆகாது அல்லவா? அழகு, உயிர்..கவிதை?
  திரும்பவும் வருவேன்.. உனக்கான பரிசை எடுத்து வைத்திருக்கிறேன்.
  எப்போது தருவது என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும். வாழ்த்துகள்டா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பா!! எனது மனதை படித்தது போல் சரியான அறிவுரை தான் அண்ணா! ஆனால் ஒன்றே ஒன்று. தோல்வி என்று நான் என்றுமே கருதியதில்லை:) தள்ளிபோடபட்ட , பயிற்சி தேவைபடுகிற வெற்றி இல்லையா:)) நல்லதொரு வெண்பா படைத்த பின் பரிசை வந்து பெற்றுகொள்கிறேன் அண்ணா!

   நீக்கு
 20. உற்சாகப் படுத்திய நண்பர்களுக்கு நன்றி.
  உற்சாகம்தான் உறுதியான வெற்றிக்கு வழிகாட்டும்.

  பதிலளிநீக்கு
 21. வெண்பாவில் பூத்த
  உங்கள் பா அருமை.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 22. வணக்கம்
  துள்ளல் இசையில் யார்த்த பாக்கள் எல்லம்
  மெல்லல் இசையில் துதிபாட
  கண்டு கழித்தது மனம்.

  அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 23. இப்படியெல்லாம் கூடவா வெண்பா எழுத முடியும்.
  சூப்பர் சகோ.

  பதிலளிநீக்கு