ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சொக்கா!!! சொக்கா!! 50000ரூபாய் .............50000ரூபாய் ............!!!!!!

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!

ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி-கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி.அழகொளிரும் தலைப்போடு

போட்டி விதிகள்
(1)   படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.
(2)    இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.
(3)   “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை  மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
(4)   வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.
(5)    படைப்பு வந்துசேர இறுதிநாள்30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)
(6)   11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழா- 2015இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL VIRTUVAL ACADEMY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.
(7)   உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும்) அனுப்பிப் பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் தொடர்பு மட்டுமே.  மின்னஞ்சல் bloggersmeet2015@gmail.com
(8)   தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது,  பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.
(9)   வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.
(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.
-----------------------------------------------------------------
அன்பான வேண்டுகோள் ஐந்து -
(1)   போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.
(2)   விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.
(3)   அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!
(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள்-  -http://bloggersmeet2015.blogspot.com
(5)உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய இவ் வலைப்பக்கத்தை இணைப்புத் தந்து அனைவர்க்கும் அறிமுகப்படுத்தி வாருங்கள்..! இணையத் தமிழால் இணைவோம்.

54 கருத்துகள்:

 1. பரிசு பெற இருக்கும் திறமையாளர்களுக்கு
  முன்னதாகவே நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 2. இந்த தலைப்பை நான் உபயோகிக்க நினைத்து இருந்தேன் என் மனதில் இருந்து திருடிய சகோவிற்கு கடும் கண்டனங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை!!! அப்டியா!! இதுக்குதான் பந்திக்கு மட்டும் அல்ல பதிவுக்கும் முந்தணும் :)))

   நீக்கு
 3. பெண்கள் முன்னேற்றம் பற்றி ஒரு பதிவு எழுதப்போறேன் ஆனால் அது போட்டிக்கு அல்ல என் தளத்திற்குதான்... கண்டிப்பாக வந்து படிக்கனும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பா!!! அதவிட வேறென்ன வேலை:) ஆனா ஒரு சின்ன request ... அதை போட்டிக்கும் அனுப்பனும் தல:)

   நீக்கு
 4. மாபெரும் கலைஞர்கள் நாகேஷ் சிவாஜி நடிப்பில் அந்தப் பகுதியே காவியமாய் மனசில் நிலைத்த படமாச்சே! அசத்தல் தலைப்பு போ! ஆமா இந்தப் போட்டிகளில் கட்டுரை, கவிதை மாதிரியே தலைப்புக்கும் தனி முக்கியத்துவம் உண்டுபோல பதிவு வேகத்தோடு படைப்பு(கள்) வரணும் இன்றே இரண்டு போட்டிப் படைப்புகள் வந்தாச்சுப்பா..சரியா? கலக்குடா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்புக்கு முக்கியத்துவமா??? அவ்வ்வ்வ் !! அதுல நம்ம ஏரியா கொஞ்சம் வீக்கே!!! அண்ணா சொன்னதுக்கு அப்புறம் தயங்கக்கூடாதே!!!ஓகே! DONE அண்ணா!

   நீக்கு
 5. மறக்காம மதுவின் முகநூல் நண்பர் பட்டாளத்திடமும் கொண்டு சேர்க்கச் சொல்லவும்..அது பெரிய படையில்ல..!

  பதிலளிநீக்கு
 6. மைத்தூ எங்கள் அடுத்த பதிவிற்கு இதைப் பகிர இதே தலைப்புதான் யோசித்திருந்தோம்....அட!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. you too கீத்து!!!! தமிழனும் இதே தலைப்பை தான் நினைத்தாராம்:))

   நீக்கு
 7. நம்மளுக்கு சிறுகதைப் போட்டியின்னா கலந்துக்க முடியும்.. இதெல்லாம் யோசிக்க வேண்டிய விஷயம்.. இப்ப இருக்க சூழல்ல முடியாதுன்னுதான் நினைக்கிறேன்...
  கலந்து கொள்ளும் நட்புக்களுக்கு இப்பவே வாழ்த்துச் சொல்லிக்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க எழுதிய சில வாழ்கை அனுபவங்களை தான் படித்திருக்கிறேன் அண்ணா! உங்களால் இந்த போட்டியில் கலந்துகொள்ள முடியும். முயன்றுதான் பாருங்களேன்!

   நீக்கு
  2. ஆமாம் நண்பர் குமார்.
   இதை வழிமொழிகிறோம். அவசியம் எழுதவேண்டும்.

   நீக்கு
 8. மக்கா மக்கா நமக்கு கிடைக்குமா ஆயிரமும் பொன்னாச்சே ஆயிரமும் பொன்னாச்சே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே!!! அதே!!! தீயா வேலசெய்யணும் செந்தில் குமார் சகோ!!!

   நீக்கு
 9. தலைப்பில் பொருள் குற்றம் இல்லாவிடினும் சொல் குற்றம் உள்ளது போல் தெரிகின்றதே..

  "சொக்கா சொக்கா..".என்பதற்கு பதிலாக " சொக்கா .. சோமநாதா ..." என்றல்லவா தலைப்பிட்டு இருக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா!! பாட்டுப்பாடி பரிசு பெறுவோர் சிலர்!!! பாட்டில் குற்றம் கண்டுபிடித்தே.......ஹாஹாஹா!!!! j.k அண்ணா:)) seeing you after a long tym!! feeling great!! how do you do anna???

   நீக்கு
  2. எழுத்துவதை தான் சற்று நிறுத்தி வைத்துள்ளேன். மற்றவர்களின் படைப்புகளை படித்து கொண்டு தான் இருகின்றேன்.

   நீக்கு
  3. அப்படியா அண்ணா! ஆனாலும் நீங்க போட்டியில் கலந்துக்கொள்ளவேண்டும். இது தங்கையின் வேண்டுகோள்:)

   நீக்கு
 10. கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும், வெற்றி பெறப் போகிறவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த ரெண்டு லிஸ்டிலும் உங்க பேர் இருக்கிறதா பட்சி சொல்லுதே:)

   நீக்கு
 11. சொக்கா சொக்கா
  என மகிழ்ச்சியில் கூவி அழைத்ததில்
  போட்டி பற்றிய செய்தி அனைவருக்கும் தெரிந்து விட்டதே
  சகோதரியாரே
  அருமை
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அண்ணா! முதல் நாள் முதல் போட்டிபதிவு போட்டு கலக்கிடீங்க !!! செம!செம!!

   நீக்கு
 12. வாய்ப்பு தேடி வருகிறது. பயன்படுத்திக்கொள்வோம். வெற்றி பெறுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க அய்யா!! எல்லோரும் கலந்துகொண்டு பயனடையும்!!

   நீக்கு
 13. நன்றிகள் பல...

  நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி என்று ஆரம்பித்து பதிவு செய்யலாம் என்றிந்தேன்... UPDATE வேலை அதிகம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணா! பதிவர் விழாவிற்காக அயராது பாடுபடும் தங்கள் அற்பணிப்பை இந்த பதிவுலகே வியந்து பார்க்கிறதே!! அதற்கிடையே இப்படி பின்னோட்டம் அளித்து உற்சாகப் படுத்தவேறு செய்கிறீர்கள்!! கிரேட் அண்ணா!

   நீக்கு
 14. கலந்து கொள்ள முடியுமா தெரியவில்லை.... பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விழாவிலா??? போட்டியிலா!!! எதுவா இருந்தாலும் கலந்துக்கணும் சகோ!! இது நம்ம ஊர் திருவிழா சொல்லிப்புட்டேன்:))

   நீக்கு
 15. நீங்கள் கலந்து கொள்கிறீர்களா? அக்கா. கலந்துகொண்டால் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கையே!!! இம்புட்டு பாசமா ஒரு தங்கை கிடைக்க நான் என்ன தவம் செய்தேன்!!! அப்புறம் நீங்களும் கலந்துகங்க சிஸ்டர்!! அந்த பாப்பா அழகா இருக்கா!!

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 16. தகவலுக்கு நன்றி.

  போட்டியில் கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. அருமைம்மா,
  வாழ்த்துக்கள், வெற்றி பெற,
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கள், வெற்றி பெற*** அப்ப்டிங்குறீங்க !!! உங்க அன்புக்கு என்ன கைமாறு செய்வேன்!!! பதிவர் விழாவுக்கு வாங்க... உங்கள ஸ்பெஷல கவனிக்கிறேன்.

   நீக்கு
 18. சொக்கா!!! சொக்கா!!
  50000ரூபாய்............. 50000ரூபாய்............!!!!!!
  அப்படியா
  திருவிளையாடல் உரையாடலா
  இல்லை
  புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்பின்
  அதியுச்ச வெளியீடா
  எப்படியோ
  போட்டியில் பங்குபற்றுவோர் பெருகட்டும்!

  பதிலளிநீக்கு
 19. மதுரை சொக்கன்னு ஒருத்தர் பதிவு எழுதறாரு.அவரையா கூப்பிடறீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒ!! அப்டி ஒருத்தர் இருக்கறா?? எல்லாரையும் தெரிஞ்சு வச்சுருகீங்களே!!! சூப்பர்!! அய்யா! போட்டிக்கு நீங்க கட்டுரையும்,கவிதையும் எழுதணும் என்பது என் ஆசை. பரிசை உங்களுக்கு பதிலா நான் வேணா வாங்கி..........உங்களுக்கு அனுப்பிடுறேன்னு சொல்லவதேன்.

   நீக்கு
  2. இவரே அவர்...
   அவரே இவர் குட்டிம்மா...

   நீக்கு
  3. அனைவருக்கும் வாழ்த்துகள் பா.

   நீக்கு
  4. அவரை எனக்குத் தெரியாம இருக்க முடியுமா?!

   நீக்கு
  5. ஒ!!! அப்படியா அக்கா!! ரொம்ப தேங்க்ஸ்....இப்போதான் எனக்கு தெரியுது.
   **அவரே இவர் குட்டிம்மா...*** :)))) ச்சோ ஸ்வீட்!! அக்கா தேங்க்ஸ் again.
   அய்யா!!@பேரை சொல்லிட்டேன் கோச்சுக்காதீங்க!!! போட்டியில் களம் இறங்குங்கள் c.p. சார்!!

   நீக்கு
 20. UPDATED...

  நன்கொடை விவரங்களை அறிய இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/blog-page_29.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைசித்தர் என்றால் சும்மாவா??? என ஸ்பீடு!!! நன்றி அண்ணா!

   நீக்கு
 21. எனக்கில்லை..எனக்கில்லை என்று தோன்றினாலும் பதிவு போட்ருவோம் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேராசான் மீரா விருதை தன் முதல் புத்தகத்திலேயே, புரட்சித்தென்றல் கீதாக்காவுடன் பகிர்ந்து கொண்ட புலவரே!!! இதற்கு பெயர்தான் தனடக்கமா???!!!!!

   நீக்கு
 22. என்னம்மா கண்ணுகளா ரொம்பக் குஷியா இருக்கீங்க போல ம்..ம் எல்லோரும் சரி சரி என்னமோ அசத்துங்கள் நாம தள்ளி நின்று வேடிக்கை தான் பார்க்க முடிகிறது.அடுத்த வரடம் நாம எல்லாம் அங்கே இருப்போம் ஆக்கும் அட ...போன வருடமும் இதையே தான் சொல்லி இருப்போமோ எதுக்கு வம்பு பார்க்கலாம் ...விதி இருந்தா ...சரி அம்மு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்மா எதற்க்கா போட்டியில கலந்து கொள்வதற்குத் தான்.. நன்றி!. தாமதத்திற்கு மன்னிக்கணும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனியாச்செல்லம்!!! மன்னிப்பெல்லாம் நமக்குளா no...no...பதிவர் விழாவில் தான் கலந்துக்க முடியலை.. போட்டியில் கலந்துக்கலாம் இல்லையா!! உங்க பதிவாக காத்திருக்கிறேன்:)

   நீக்கு