வெள்ளி, 18 ஏப்ரல், 2014

குறும்பா-ii



சித்திரக்கூடத்தை ரசிக்க வருபவனும்
அதை பராமரித்து சலித்தவனுமாய்-பலவேளைகளில்
திருமணத்திற்கு முன்னும் பின்னுமான காதல் !  
-----------------------------------------------------------------------------

புதைத்து விட்டு, வழிபடும் மரபினர் நாம்
அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
வகுத்தவர்களை வழிபடுகிறோம் !!
 ------------------------------------------------------------------------------

முட்டாள் என்று பெயரெடுத்ததைவிட வலிமிகுந்தது
முட்டாளாய் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம்
என்று உணரும் தருணம் .
 ----------------------------------------------------------------------------------------

தெருநாய்கள் மீது கல் எறிவோர் கவனத்திற்கு
அவை மட்டும் இல்லை என்றால்
குனிந்து கல் எடுக்க தகுதியற்றிருக்கும் உங்கள் தெருக்கள்!
 ---------------------------------------------------------------------------------------------------

முன்பு புத்தம் சரணம்
பின்பு யுத்தம் மரணம்
என்று ரத்தம் ரணம்
புத்தர் என்றோ ஜென் நிலையடைந்துவிட்டார்
 ----------------------------------------------------------------------------------------------------

உன் கல்கண்டுப்புன்னகையை
கொட்டிவைக்கும் இடமா?
உன் கன்னக்குழி

43 கருத்துகள்:

  1. Its cute..
    உன் கல்கண்டு புன்னகையை
    கொட்டிவைக்கும் இடமா?
    உன் கன்னக்குழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ! உங்களது பகிர்வுகள் மிகவும் அருமையாக இருக்கிறது. முதன் முறையாக ப்ளாக் வந்து கருத்திட்டமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!

      நீக்கு
  2. பதில்கள்
    1. வழிபடுதல் அவரவர் விருப்பம் அண்ணா. ஆனால் புத்தனின் அன்பையும், அமைதியும் புதைத்துவிட்டு அவரை வழிபடுபவர்களை கண்டால் கேலிகூத்தாக இருக்கிறது!

      நீக்கு
  3. ///புதைத்து விட்டு, வழிபடும் மரப்பினர் நாம்
    அதனால்தான் கொள்கைகளை புதைத்துவிட்டு
    வகுத்தவர்களை வழிபடுகிறோம் !!////
    ஆம் சகோதரியாரே உண்மை உண்மை
    இன்னும் சில ஆண்டுகளில் பெரியார் கூட தெய்வமாக
    வணங்கப்படலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ ! பெரியாருக்கு கோவில்:((
      நினைக்கவே முடியவில்லை அண்ணா!
      செய்தாலும் செய்வார்கள். தங்கள் வருகைக்கு நன்றி அண்ணா!

      நீக்கு
  4. அடடா எப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள் தோழி ! அனைத்தும் அருமை அருமை
    புத்தம் சரணம் கச்சாமியை
    யுத்தம் சரணம் கச்சாமி என்று மாற்றி மனனம் செய்து விட்டார்கள் போலும் உண்மையை புதைத்துவிட்டு. உண்மை தான் தோழி! ஆமா கற்கண்டு புன்னகையை கன்னக் குழியிலா வைத்திருகிறீர்கள் தோழி அவசியம் பார்க்க வேண்டும் ! அது தான் கற்கண்டு போலவே இருக்கிறீர்களா தோழி இப்பதானே தெரிகிறது ரகசியம்.நன்றி !வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மகி குட்டிக்கு எழுதிய கவிதை !
      அவளுக்கு குழி விழும் !
      ரசித்து ரசித்து கருத்திட்ட தோழிக்கு நன்றி!

      நீக்கு
    2. அது மகி குட்டிக்கு எழுதிய கவிதை !
      அவளுக்கு குழி விழும் !
      ரசித்து ரசித்து கருத்திட்ட தோழிக்கு நன்றி!

      நீக்கு
  5. முட்டாளாக ஆக்கப்பட்டதை உணரும் தருணம் மரணத்தின் வலியுடன்.நல்ல பதிவுகள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் டீச்சர்!
      தங்கள் வருகைக்கு நன்றி!

      நீக்கு
  6. ..முட்டாள் என்று பெயரெடுத்ததைவிட வலிமிகுந்தது
    முட்டாளாய் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம்
    என்று உணரும் தருணம் .//

    ஆம். ஆம்.
    ஆனா,
    மணிக்கு ஒரு தரம் அந்த பீலிங் வருதே !!
    என்னத்தை சொல்ல ?

    சுப்பு தாத்தா
    www.movieraghas.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா...
      உங்கள் கருத்துக்களில் என்ன கூர்மை. நன்றி சார்!

      நீக்கு
  7. \\முட்டாள் எனும் பெயரெடுத்ததைவிட வலி மிகுந்தது
    முட்டாளாய் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் //
    உண்மைதான் டீச்சர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டீச்சர்! சேம் பீலிங்க்ஸ்:((
      நன்றி டீச்சர்!

      நீக்கு
  8. எல்லா வரிகளும் அருமையாக இருக்கிறது சகோ.

    "//முட்டாள் என்று பெயரெடுத்ததைவிட வலிமிகுந்தது
    முட்டாளாய் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம்
    என்று உணரும் தருணம் //"

    - சத்யமான வார்த்தைகள். நீங்கள் உணர்து தான் எழுதினீர்களா என்று தெரியவில்லை. ஆனால் நான் உணர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் வரும் பொதுவான வலிதான் சகோ. உணர்ந்து தான் எழுதினேன்! நன்றி சகோ நீங்களும் உணர்ந்து கருத்திட்டமைக்கு!

      நீக்கு

  9. வணக்கம்!

    குறும்பா படித்தேன்! அருந்தேன் குடித்தேன்!
    பெறும்..பா பெருமைப் பெருக்கு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வாழ்த்துற அளவில் வந்திருக்கிறதா குறும்பா?!
      மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  10. ஒரு மாத காலமாக என் பதிவுகளை படிக்காததின் பலன் உங்களிடம் தெரிகிறது. ரொம்ப சிந்திக்க ஆரம்பித்துவீட்டீர்கள். அது ரொம்ப ஆபத்து அதனால் விரைவில் பதிவிட தொடங்குகிறேன்...ஹீஹீஹீ


    கருத்துக்கள் அனைத்தும் மிக அருமை.....பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. wooooow!! தமிழன் சகோ warm welcome.
      v missed u a lot! நீங்களும் ,குடும்பத்தினரும் நலம் தானே சகோ!
      என்ன இப்படி தேர்தல் fever உச்சத்தில் இருக்கும்போது இப்படி லீவ் எடுத்துடிங்களே!! //விரைவில் பதிவிட தொடங்குகிறேன்// சீக்கிரம் சகோ , v r waiting:)

      நீக்கு
  11. வலிக்கும் வரை கை கொடுக்காலம் முதல் மூன்று குறும்பாவிற்கும் - அட்டகாசம் Sis..


    அடுத்த ரெண்டும் நம்மக்கு ஒன்னும் வெளங்கல . கடசி as usual கிளிசே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!! அவ்ளோ நல்ல இருக்கா?! thanks bro!!
      கடைசி கிளிசே தான் , ஆனால் என்ன செய்ய? மகிகுட்டி அப்படி சர்க்கரையாய் சிரிக்கிறாளே! :)

      நீக்கு
  12. இங்கு நாயும் கல்லும் ஒரு உருவகம்தானே?
    நல்ல சொல் உருவாக்கங்கள்.வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ உங்களுக்கு அந்த கவிதை பிடிக்குமென பதிவிட்டும் போதே நினைத்தேன். மிகுந்த மகிழ்ச்சி விமலன் அண்ணா!

      நீக்கு
  13. அத்தனையும் அருமை

    அழகிய குறும்பா
    மெழுகிய கவியில்
    உளமது நெகிழ்ந்தது
    உயிர்வரை தொடர்ந்தது ..!

    அருமை அருமை படித்தேன் ரசித்தேன்
    இனிய வாழ்த்து சகோ வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. 1.முதல் கவிதைக்கான பதில் உனது ஆறாம் கவிதை.
    2.வழிபடுவதே, புதைத்ததற்கான பரிகாரம்தானே? (அம்மன் வழிபாடு வரலாறு)
    3.வலியின் ரணம்தான் இதிகாசங்கள் (வான்மீகி திருடனாகவும், வியாசர் குருடராகவும் இருந்தாராமே?) அதோடு, கண்ணதாசன் நிம்மதியின்றி எழுதியவற்றைத் தான் தமிழ்த்திரை உலகம் தன் நிம்மதிக்காக ரசித்தது.
    4.இந்த வரிசையில் என்னைக் கவர்ந்த கவிதை இதுதான்.
    5.நாலாவது வரி மிகை
    ஐக்கூவைத்தான் கவிஞர் மீரா குறும்பா என்றார். இது புது வகையா இருக்கே? சின்னக் கவிதைன்னு அர்த்தமா? பெரிய கவிதைக்கான உள்ளடக்கம். நல்லாஇருக்குன்னு நான் சொல்றது வழக்கம்தானே என்று நினைக்க வேண்டாம் எல்லாரும் சொன்ன பிறகுதான் சொல்கிறேன். தொடரட்டும்.
    ஆனால், முதல் கவிதையை நான் ரசிக்கவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா , இப்படி வரிக்கு வரி தராசில் வைத்து நீங்கள் கருத்திடாவிட்டால் எனது பதிவு முழுமையடையவில்லை என்றே கருதுகிறேன். வழக்கமாக சொல்கிறேன் என நினைக்காதீர்கள் அண்ணா, எத்தனை பேர் சொன்னாலும் அண்ணன் என்றுமே அண்ணன் தான்:) ஜெயாம்மாவிடம் சொன்னதைத்தான் சொல்கிறேன், எனக்கு சோர்வு வரும் போதெல்லாம் எதிரொலிக்கும் "பேனாவை காயவிடாதே தாயே" எனும் அண்ணனின் சொற்கள் தான் என்னை தொடர்ந்து எழுத தூண்டுகிறது.,,,,நன்றி அண்ணா!

      நீக்கு
  15. அழகிய தமிழில் வலம் வரும் முத்தென உணரப்பெற்றேன் வறுமையில்லாத
    வளமான ஆக்கங்கள் கண்டு வாழ்த்துக்கள் தோழியே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்!

      நீக்கு
  16. முதலாவதும் கடைசியதும் வெகு ரசனை. மற்ற நான்கும் யோசிக்க வைத்தன. அசரடித்தன. அந்த நான்கிற்காக ஜீவன் சொன்ன மாதிரி அழுத்தமான கை குலுக்கல்களுடன் பரிசும் வழங்கலாம் மைதிலி. சூப்பர்ப்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலை உலகம் தந்த உங்களை போன்றோர் நட்பை விடவா பெரியது பரிசு!
      ரொம்ப தாங்க்ஸ் பாலா அண்ணா!

      நீக்கு
  17. குறும்பா அனைத்துமே அருமை..... அதிலும் அந்த இரண்டாவதும் கடைசியும்.....

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரி
    அனைத்தும் மிக மிக அழகு என்று சொல்லலாம் என்று பார்த்தால் முதல் கவிதை தான். அதும் நான் அதை ஏத்துக்க முடியுமா! அப்பறம் உங்கள் நாத்தனார்கிட்ட அடி வாங்கிறது யாராம்? ஆனாலும் இன்று காதலின் பாதை மாறி விட்டது உண்மை நீங்கள் கூறுவது போல தான். சிறப்பான சிந்தனைகள் சகோதரி. நன்றி.
    ---------
    நலம் தானே! சகோவைப் பார்த்து விடுகிறேன் தவறாமல் ஒவ்வொரு நாளும் விடைத்திருத்தும் மையத்தில். அங்கே அவர் தான் ஹீரோ.

    பதிலளிநீக்கு
  19. குசும்பா அல்லாம் சோக்கா கீது டீச்சர்...!

    அடடே...! நம்பளே மாறி நெரியா முட்டாள்ஸ் கீறாங்க போல...?!

    பதிலளிநீக்கு
  20. காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள் அனைவரும் முதல் கவிதையைப் படித்தவுடன், 'அட, நம்ம சொல்ற மாதிரி இருக்கே'
    கொள்கைகளைப் புரிந்துகொண்டால் ஏன் இந்த நிலைமை நாட்டில்?
    மிக உண்மை...வலிமிக்கதும் சினமூட்டுவதும் இது.
    நான்கிலும் ஐந்திலும் சிந்தனை அருமை..
    ஆறு, அட மிகவும் தித்திப்பு..
    வாழ்த்துகள் மைதிலி :)

    பதிலளிநீக்கு