ஞாயிறு, 2 மார்ச், 2014

உங்கள் உடையின் மூலம் என்ன சொல்லவிரும்புகிறீர்கள் ?

                                 திங்கள்கிழமை எனக்கு ரொம்ப பிடிக்கும். மனசுக்கு  பிடிச்ச வேலையே தொடங்க போறோம்னு ஒரு உற்சாகம். போன வாரம் கிளாசில் ரொம்ப லேட்டா வகுப்புக்கு வந்த விக்கி தயங்கி தயங்கி "மே ஐ கம் இன் மிஸ்"என்றான். ஒண்ணுமே சொல்லாமல் அவனை தலையில் இருந்து கால் வரை ஒரு லுக் கொடுத்தேன். குனித்து பார்த்து வேகவேகமாக தன் சட்டையின் முதல் பட்டனை போட்டுகொண்டு, சாரி மிஸ் என்றான். அவனை அனுமதித்து அட்டன்டன்ஸ் முடித்தவுடன் "மிஸ் மண்டே முதல் கிளாஸ் கதை சொல்லுங்க" என அகிலா ஆரம்பிக்க "ஆமா மிஸ் " என ஒரு கோரஸ் .

நான்:  பாரதியார்னு மனசுல நெனைச்ச உடனே என்ன ஞாபகம் வரும்?
ஜான் : மீசை, முண்டாசு.
நான்:ஓகே "காந்தினா"
அபி:கைத்தடி அப்புறம் சட்டை போட்டுக்கமாட்டாரே.
நான் : "அம்பேத்கார்
விக்கி :" வட்ட கண்ணாடி ,ஹ்ம்ம் கோட் போட்டுடிருப்பார் .
சார்லி சாப்ளீன் .
கீர்த்தி : மிஸ் அவர் குட்டி மீசை வைச்சிருப்பார்,
 இப்போ நீங்க கதை சொல்லமாட்டீங்களா ?
சொல்றேன் சொல்றேன், இவங்கள பத்தி தான் சொல்லப்போறேன்.

பாரதியார்

                  பார்பனர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதோ அதையெல்லாம் செய்த கலகக்காரர் பாரதி. உங்கள் பழைய கட்டுகளை தகர்ப்பேன் என்னும் ஞான செருக்கோடு மீசை நீவியவர். காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற ஈரமனசு கொண்ட கவிஞன். பெரியாருக்கு இணையாக சமத்துவம் பேசிய புரட்சிக்கவி

காந்தி

                பார்றா தென் அமரிக்கா வில் இருந்து கோட்டும் சூட்டுமா வந்தவரை எல்லாத்தையும் உருவிட்டு ஒரு வேட்டியோட சுத்தவைச்ச பெருமை நம் தமிழகத்தை தான் சேரும். அதுவும் மதுரைக்காரர்களுக்கே சேரும் (சத்தியமா இதில எந்த உள்குத்தும் இல்லை.என் வாத்தியாரும் எனக்கு அப்டிதான் நடத்துனார்) விடுதலை போராட்டத்தை தொடங்குறதுக்கு முன்னால நம்ம இந்தியா முழுக்க கோட்டும் சூட்டுமா சுத்தி பார்த்த காந்தி மதுரை அருகே இருந்த கிராமங்களில் அரையாடையோடு பணிசெய்யும் உழவர்கள் பார்த்து "நம் தேசத்துக்கே உணவளிக்கும் விவசாயிக்கு இல்லாத உடை எனக்கு தேவையில்லை " என அரையாடை உடுத்தத்தொடங்கினார்.

அம்பேத்கர்

               ஒடுக்கப்பட்ட சமூகத்தில் தடை தகர்த்து, நீ மட்டுமே அணிய தகுதியானதா இந்த உடை? இதோ  நானும் அணிகிறேன் பார்  என தன்னை தாழ்த்திப்பார்க்க விரும்பியோற்கு சவாலையும், நீயும் படி சகோதரனே என்னை போல உயரமுடியும் எனும் பாடத்தையும் வாழ்நாளெல்லாம் பறைசாற்றிகொண்டிருந்தது அவரது கோட். சரி ஒரு விஷயம் தெரியுமா? அம்பேத்கர் என்பது அவருக்கு சொல்லிகொடுத்த ஆசிரியர் அவரும் ஒரு பார்பனர். இதை ஏன் குறிப்பிடுறேன்னா மனிதர்களை அவங்க கொள்கையை வைத்து தான் மதிக்கணும் குலத்தை வைத்தல்ல, அவரோட பேரு  என்ன ? நாளைக்கு சொல்லுங்க. 

சாப்ளின்

            உலகமே ஹிட்லரை பார்த்து பயந்து ஒதுங்கிய காலத்தில் அவரைப்போலவே மீசை வைத்து , அவரையும்  அவரது ஆட்சியையும் கேலிசெய்த துணிச்சல்காரர். சாப்ளின் படங்களில் அவர் செருப்பை கடித்துத்தின்பது உனக்கு ஜோக்கா இருக்கும் ஆனால் அதுதான் அன்றைய ஜெர்மனியின் நிலையாய் இருந்தது.

                 உங்களுக்கு யாரை ரொம்ப பிடுச்சுருக்கு. ஆளுக்கு பதில் சொல்ல எனக்கு சாப்ளின் நை பிடித்திருக்கு என்றான் விக்கி. சரி விக்கி இவங்க எல்லாம் தான் உடை மூலம் ஒரு விஷயத்தை, கொள்கையை காட்டினாங்க. நீ உலகம் உன்ன பத்தி என்ன நினைக்கணும் னு யுனிபார்ம் பட்டனை போடாமல் வந்த? உன்னை கண்டு எல்லாரும் பயப்படனும்னா ? அதுக்கு கல்விதகுதியே தேவையில்லயே !

அதற்கு பின் விக்கியை அப்டி பட்டன் போடாமல் நான் பார்க்கவில்லை.

//ஆமா இதுக்கு பேரு இங்கிலீஷ் கிளாசா? // உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது . நான் எட்டாம் வகுப்புக்கு சோஷியலும் எடுக்குறேங்க !

           

40 கருத்துகள்:

  1. உடைகள் சொல்லிச்செல்லும் கதைகளாய் இங்கு நிறையவே/

    பதிலளிநீக்கு
  2. அநேகமாக யுனிபார்மில் பட்டன்களை எடுத்து விட்டு பனியன் போல மாற்றி விடுவார்கள்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் டீச்சரு....! ரொம்பவே சுவாரஸ்யமா இருக்குது உங்க கிளாஸ்!

    பதிலளிநீக்கு
  4. என்ன நடக்குது தோழி இங்கே !
    எனக்கும் சேர்த்து கிளாஸ் எடுத்தமைக்கு ரொம்ப நன்றி ! திரும்ப எல்லாம் நினைவு படுத்தியமைக்கு தான் அது சரி. இங்கிலீஷ் கிளாஸ் ல சோஷல் எல்லாம் எடுக்கிறீன்களா. ரொம்ப கில்லாடி தான் நீங்க. ஆமா சோஷல இங்கிலீஷ் ல சொல்லிக் கொடுத்தா சரி தானே.ஹா ஹா .....(.சும்மா)

    கல்வியை விளையாட்டாக சொல்லிக் கொடுப்பது நல்ல முறையே அவர்கள் சுமையாகவும் வெறுக்காமலும் இருக்க உதவும் தானே. எனவே நல்ல முறை தான் தோழி தொடருங்கள். வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி ! இது உங்களுக்கு வகுப்பில்லை சும்மா நினைவூட்டல்
      உங்கள் வகுப்பறைகளை !

      நீக்கு
  5. பதில்கள்
    1. கிரேஸ் நன்றி நன்றி !
      என் பாடத்தையும் ,என்னையும் பாராட்டியமைக்கு !

      நீக்கு
  6. சூப்பர் க்ளாஸ்ங்க! In fact நாங்க முதல்ல...English teacher class ல தமிழ் பேசறாங்களே ....தமிழ் எடுக்கறாங்க போல அப்படினு நினைச்சோம்....
    பையன் ஒரு பட்டன் போடாம வந்ததுக்கு இவ்வளவு அருமையா ஒரு விளக்கம் கொடுத்து dress code விளக்கி நல்ல காலம் விக்கிகு விக்கல் எடுக்காம புரிய வைத்ததுக்கு பாராட்டுக்கள்!!!!!!

    அருமையான டீச்சர்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒ! தோழி முதன்முறையாக தனியா கருத்து சொல்லிருக்கிங்க !
      உங்கள் வரவு நல் வரவாகட்டும் !
      அப்புறம் நம்ம ஸ்கூல் ஒரு ரூரல் ஸ்கூல் அங்க தமிழையே அவங்க தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யவேண்டிருக்கும் !!

      நீக்கு
  7. இது போன்ற வகுப்புகள்தான் மாணவர்களின் மனதைத் தொட்டு, உண்மையினை உணர்த்தும் வல்லமை வாய்ந்தவவை. அருமை சகோதரியாரே அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா. நீங்க எல்லாம் முன்னோடியா இருக்கிங்களே !!

      நீக்கு
  8. 1987 முதல் 1998 வரை நான் எனது அலுவலகத்திற்கு செல்லும்போது வெள்ளை பான்ட் வெள்ளை ஷர்ட் தான் அணிந்து இருந்தேன். ஹெச் ஆர் மானேஜராக இருந்தபோதும் பிறகு எங்கள் பயிற்சி கல்லூரியில் துணை முதல்வராக பணி புரிந்த போதும் இந்த வெள்ளை உடை அணிவதை நிறுத்தவில்லை.

    ஆயினும், கடைசியில் ஒரு நாள் வகுப்புக் சென்றபோது ( அது நேரடியாக முதல் நிலை அலுவலர்களுக்கான துவக்க பயிற்சி வகுப்பின் இறுதி நாள். ஆறு மாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தது )
    ஏதோ ஒரு மன வருத்தம் காரணமாக கலர் பேன்ட் கலர் சட்டை அணிந்து சென்றேன். கடைசி நாள் என்பதால், அவர்களுக்கு அவர்கள் இனி தத்தம்பணிகளுக்கு, நிலைகளுக்குச் செல்லும்போது மன நிலை எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு மணி நேரம் பேசி முடித்தபின்,

    என்ன புரிந்து கொண்டீர்கள் எனக் கேட்டேன்.
    எங்களால் நீங்கள் சொல்வதில் கவனம் செலுத்த இயல வில்லை என்றார்.ஏன் எனக் கேட்டேன்.
    உங்கள் மன நிலை என்று பொதுவான உங்கள் மன நிலையிலிருந்து மாறு பட்டு இருக்கிறது என்று சொன்னார்.

    ஆள் பாதி, ஆடை பாதி என்ற வசனம் நினைவுக்கு வந்தது.

    இன்று ஆடைகள் தான் நமது இமேஜை நிறுவுகின்றன. நிலை நிறுத்துகின்றன .

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா சொன்னீங்க சுப்பு சார் !
      அவ்ளோ பொறுமையா படிச்சு ,ஆழமான கருத்தும் தெரிவிச்சு இருக்கீங்க !
      இந்த ஜூனியர் உங்ககிட்ட கத்துக்க பல விஷயங்கள் இருக்கு !
      ரொம்ப ரொம்ப நன்றி!

      நீக்கு
  9. நல்ல கருத்தை சொல்ரேன்னு அறுக்காம மிக சுவராஸ்யமாக சொல்லி சென்று இருக்கிறீர்கள், பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  10. உங்களை மாதிரி ஒரு நல்ல டீச்சர் எனக்கு கிடைச்சிருந்தா நான் மிகவும் நல்லபையனாக இருந்து இருப்பேன். ஹும்ம்ம்ம் கொடுத்து வைக்கலை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு ஏழை தொழிலாளியும் வாங்கும் தீப்பெட்டி போன்ற பொருளில்கூட அவர்கள் செழுத்தும் வரிதான் எங்களுக்கு ஊதியம் என்பதை உணர்கிறேன். அந்த ஊதியத்திற்கு நான் நேர்மை செய்யாவிட்டால் என்னால் உறங்க முடியாது சகோ! அவ்ளோ தான்

      நீக்கு
  11. உங்க மேல எனக்கு கோபம் பெரிய தலைங்களை பற்றி சொல்லிய நீங்க என்னை மட்டும் சொல்லாம வீட்டுடீங்க..... இப்ப எனக்கு அழுகையாய் வருது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்: மதுரை தமிழன் என்றவுடன் என்ன நினைவுவருகிறது ?
      ராஜியக்கா :பூரிக்கட்டை
      டி.டி அண்ணா:பூரிக்கட்டை
      உஷா சகோ,சொக்கன் சகோ,தில்லை சகோ,பாண்டியன் சகோ :பூரிக்கட்டை .ஓகே ஓகே கோரஸை நிறுத்துங்க !
      what to do sago? (just for fun)

      நீக்கு
    2. ஹாஹாஹா ஆமாங்க! டீச்சர் தோழி நீங்க மதுரைத் தமிழன பத்தி சொல்லாம விட்டது தப்புதாங்க! அவர் ஃபோட்டோ பாருங்க.!....கைகட்டி பவ்வியமா அப்படியே இன்னொசென்ட் பையனா நிக்கிறாரு பாருங்க! உங்க க்ளாஸ் ரூம் வாசல்ல! டிரெஸ்ஸ பாருங்க! சொல்லிருக்கணும்ல?!!! என்ன சொல்லப் போறீங்க!?!? - கீதா (ஓகேயா?! இப்ப)

      நீக்கு
    3. என் தானைத் தலைவன் மதுரைத் தமிழனைப் பற்றி நீங்கள் எப்படி சொல்லாமல் விடலாம். குறைந்தது பூரிக்கட்டையின் புகைப்படத்தையாவது நீங்கள் போட்டிருக்க வேண்டும்.

      நீக்கு
    4. ஷட்டரை ஏறக்கவேண்டியதுதான் ! ஆஹா கூட்டமா தான் கிளம்பிருக்கிங்களா ?!

      நீக்கு
  12. பிள்ளைகளுக்கு பள்ளிக்கல்வியுடன் வாழ்க்கைக்கல்வியும் கற்றுத்தரும் ஆசிரியரே நல்லாசிரியர். படித்துப் பட்டம் பெற்றாலும் முறையாக வாழத்தெரியாமல் வாழ்க்கையை இழந்து தவிக்கும் எத்தனையோ இளைய தலைமுறையினரைப் பார்க்கிறோம். பள்ளியிலிருந்தே விளையாட்டாய், வேடிக்கையாய் வாழ்க்கையைப் பற்றியும் வாழ்ந்துகாட்டிய தலமுறையினரைப் பற்றியும் அறியச் செய்யும் தங்கள் கற்பித்தலுக்குப் பாராட்டுகள் மைதிலி.

    அரையாடை - இதை மட்டும் கொஞ்சம் சரிபார்க்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா மேடம் ! இதுபோன்ற உற்காகமூட்டல்கள் பொறுப்பை அதிகமாகுது!

      நீக்கு
  13. நல்லாவே வகுப்பு எடுக்கறீங்க! இதே மாதிரி சொல்லிக்கொடுத்தால் பிள்ளைகளிடம் ஒழுக்கம் தானாக வளரும்! அம்பேத்கரின் இயற்பெயர் பீமாராவ். சரிதானே! அருமையான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. நன்றி! தோழி! இந்தத் தோழி, தோழனின் முகவரியிலும் கருத்து தெரிவிப்பது உண்டு! (புரிந்து விட்டதா நான் யாரென்று!!?? (திலைஅகம்தான்....) நாங்கள் இருவரும் எங்கள் இரு முகவரியையும் மாற்றி மாற்றி உபயோகிப்பது வழக்கம். எந்த முகவரி ஓபன் ஆகி யிருக்கிறதோ அங்கிருந்து பதில் வந்து விடும்!. துளசியின் முகவரியில்தான் ப்ளாகர்....அவரிடம் தமிழ் எழுத்துரு சரியாக வேலை செய்யவில்லை. ஆதலால் இங்குஇருந்துதான் எல்லாமே பதிவேற்றம்!...பெரும்பாலும் இருவரும் பேசிவிட்டு/தர்கம் செய்துவிட்டு பின்னூட்டம்.....இல்லையென்றால் தனிக் கருத்தாகவும் இருக்கும். துளசி என்னைக் கோபித்துக் கொள்வது உண்டு...இடுகைகளில் கூட என் பெயரைப் போடாமல் வெளியிடுவதற்கு....அவர் முகவரியானாலும் என் பெயரை வெளியிடவேண்டும் என்பார்.....வாக்குவாதம் வரும்...ஆனால் நான் மறுத்து விடுவது உண்டு! அதற்குப் பல காரணங்கள் உண்டு! சில சமயம் வேறு வழியின்றி அவருக்காக என் பெயரைப் போடுவதுண்டு.

    நானே கவனிக்க வில்லை! கண்டு பிடித்துவிட்டீர்களே! நன்றி! நாங்கள் இருவருமே உங்கள் எழுத்துக்களை ரசிப்பவர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஒரு நட்பு கிடைப்பதே பெரிய பரிசுங்க !
      நீங்க ஒரு சிறந்த முன்மாதிரி (வாழ்விலும்)!!
      நன்றி தோழி!

      நீக்கு
  15. அது எப்படிங்க நான் கொஞ்சம் படிச்சுக்கிட்டு வரும்போதே, என் மைண்ட் வாய்ஸ் எப்படியிருக்கும்னு கண்டுப்பிடிச்சு, அதுக்கு பதிலும் சொல்லிட்டீங்க???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூத்துக்கணக்கான எங் மைன்ட் ஸ் கிட்ட பத்து வருசமா குப்பை கொட்டுறேனே ! அந்த அனுபவம் தான் ! நன்றி சகோ!

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி
    தங்கள் பதிவுக்கு பின்னூட்டம் கலகலப்பாக நகர்வது மகிழ்ச்சியாய் இருக்கிறது. அதும் துளசி ஐயா, கீதா மேடம் பண்ற ஆள்மாறாட்டம் இருக்கே ரசிக்க வைக்கிறது! ம்ம்ம் பதிவு பற்றி சொல்லவில்லையே தவறுகளை மாணவர்களுக்கு நேரடியாக சொல்வது பிடிப்பதில்லை. இது போன்ற கதைகள் மூலம் புரிய வைப்பதை அவர்கள் என்றும் மறப்பதில்லை. நல்ல மாணவர்கள் உங்களால் உருவாக்கப்படுவது உண்மையில் உளம் மகிழ்கிறேன். நமது உழைப்பிற்கு மாணவர்கள் கொடுக்கும் அன்பே நாம் விரும்புவது. நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  17. மிகவும் அருமையான கிளாஸ், ஆனா எட்டாவது பையனா சட்டை பட்டன் போடாம வற்றாங்க, நாங்க படிக்கும் போதே பரவாயில்ல போலயே! நீங்கள் சொன்னவர்களில் எனக்குப் பிடித்தவர் காந்தியை தவிர மற்ற அனைவரும்!
    வாழ்த்துகள் டீச்சர்!!!

    பதிலளிநீக்கு



  18. அருமையான கருத்துக்கள் தோழி.என் கல்லூரி மாணவர்களுக்கு என் வகுப்பில் எடுத்துரைத்தேன்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  19. இப்படிப்பட்ட விதயங்களையும் பிஞ்சு நெஞ்சங்களில் பதிய வைக்க முயலும் நீங்கள் உண்மையில் சிறப்பான ஆசிரியர்! தனியார் பள்ளியில் பணியாற்றுகிறீர்களா அல்லது அரசுப் பள்ளியிலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ!
      நான் ஒரு அரசுப்பள்ளி ஆங்கிலப்பட்டதாரி ஆசிரியர்:)

      நீக்கு
    2. ஓ! மிக்க மகிழ்ச்சி! இப்படி நல்ல ஆசிரியராக இருக்கும் நீங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்திருந்தால் நன்றாக இருக்குமே என்பதற்காகத்தான் கேட்டேன்.

      நீக்கு