ஆஷா எதையோ மறைத்தாள். யே! காட்டுடா என்றேன். போங்க மிஸ் என்று தயங்கினாள். என்கிட்டேயே காட்டமாட்டிலே? வழக்கமான பாஸ் வேர்டை போட்டவுடன், ச்சே, ச்சே இல்ல மிஸ் என்று அவள் காட்டியது பதிவின் இறுதியில்.
என் ஏழாம் வகுப்பில் ஒரு நாள். மூன்று ஆசிரியர்கள் கொண்ட ஒரு குழு வினாடிவினா போட்டிக்கு வகுப்பு வாரியாக பெயர் சேர்த்துக் கொண்டிருந்தார்கள் .நானும் ஆர்வத்தோடு எழுந்து நின்றேன். ஆசிரியர் குழு ஏதோ சந்தானம் காமெடி பார்த்தது போல் "கொல்" என சிரித்தனர். ஏனென்றால் மெட்ரிக் பள்ளிகளில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் பிள்ளைகள் தான் இதிலெல்லாம் கலந்து கொள்ளமுடியும் என்பது அவர்கள் நம்பிக்கை .
வருகை பதிவை தவிர என் பெயர் உச்சரிக்க படாத பல பள்ளி நாட்களை கடந்த சராசரி மதிப்பெண் எடுக்கும் மாணவி நான். எனவே என் ஆசிரியர்களுக்கு தெரியாது என் அப்பாவோடு சேர்ந்து நான் நக்கீரன் உட்பட அவர் வாசிக்கும் புத்தகமெல்லாம் சோறுதண்ணி இல்லாமல் வசித்து தீர்ப்பது. அவர்கள் சிரித்தது எனக்கு அவமானமாய் இல்லை. பழகிபோனதுதானே?
ஒரு நிமிடம் ( என் நெருங்கிய நண்பர்கள் படிக்கிறீர்களா என்ன? உங்களுக்கு நூறு முறை சொன்ன கதைதான். எத்தனை முறை சொன்னாலும் எனக்கு அலுக்காது, so இங்க stop பண்ணிட்டு கடைசி பத்தியில join பண்ணிக்குங்க ) சரி நீங்க continue பண்ணுங்க .
ஒன்பதாம் வகுப்பில் ஒரு நாள் புதுசா ஒரு தமிழ் சார் (தமிழ் மட்டும் நடத்த போகிறாரா?!) எங்கள் வகுப்புக்கு வந்தார். "உங்கள் கை எழுத்தை பார்க்கணும் எல்லோரும் தமிழில் ஒரு வரி, ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதிட்டு வாங்க" என்றார். இந்த முதல் ரேங்க் எடுக்கிற பிள்ளைகள் தொல்லை தாங்க முடியாது. பேப்பர்லே சுத்தி கட்டமெல்லாம் போட்டு என்னனென்னமோ எழுதுச்சுங்க. நான் கொஞ்சம் கிறுத்திருவமா பேப்பரை ஓலை சுவடி மாதிரி கிழித்து aim at star shoot at least tree, இறைவனின் கையில் நாம் விளையாட்டு பொம்மைகள் என எழுதினேன் (அர்த்தமுள்ள இந்து மதத்தின் விளைவு).
எல்லாவற்றையும் படித்துக்கொண்டே வந்த சார் கடைசியில் என்னை எழுப்பி எல்லோரையும் கைத்தட்ட சொன்னார். உங்கள் கை எழுத்தை பார்ப்பதற்காக இல்லை உங்களை அளவிடவே எழுதச்சொன்னேன் என்றார். எல்லோரும் பாடப்புத்தகத்தில் உள்ளதை மட்டுமே எழுதியிருந்தீர்கள் மைதிலி மட்டும் விதிவிலக்கு என்றார். எனக்கு புரியவே இல்லை அப்பாவை தவிர எல்லோரும் "கண்டதையும் படித்து நேரத்தை வீணாக்குகிறாய் " என்று திட்டுவதையே பார்த்தவளுக்கு, முதன் முதலாய் வகுப்பில் கைதட்டல் வாங்குபவளுக்கு, முதன்முறையாக வகுப்பின் நடுவே பாராட்டப்படுபவளுக்கு இந்த புதிய அணுகுமுறை எப்படிபுரியும் ?!
அப்புறம் சும்மா சும்மா பேசச்சொல்லி மேடையில் ஏற்றிவிடுவார். தமிழ் மன்றத்தில் என் அப்பா மட்டுமே கவிதை என்று நம்பிய என் சொல் தொகுப்பை வாசிக்கச்செய்வார். தப்பித்தவறி நானும் சில கவிதைகள் எழுத தொடங்கினேன்.
இப்போ பதினோராம் வகுப்பில் ஓர் நாள். வினாடிவினா நிகழ்விற்கு பெயர் சேர்க்க ஆசிரியர்கள் குழுமியிருந்தனர். நான் கொடுக்காமலே என் பெயர் பட்டியலில் இருந்தது. பதினோராம் வகுப்பு என்பதால் என் குழுவிற்கு நான் துணை தலைவி. முன்பு என்னை பார்த்து கிண்டல் செய்த ஆசிரியை என் கைகளை பற்றிக்கொண்டு "மைதிலி, நீ இருக்கிற தைரியம் தான் எனக்கு, நம்ப டீமை காப்பாத்திரு "என்றார்கள் .(அண்ணா ரவி சார் இந்த சீன் உங்களுக்கே தெரியாது but YOU ARE GREAT)இது அவரால் சாத்தியமானது.
சார் பற்றி தெரியாமல் ஏன் ஆங்கிலம் கலந்து எழுதுற என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள் .அய்யா MA ENGLISHஉம் படிச்சிருந்தார்ல. எல்லா டீச்சரும் போர்சன் முடித்து ரிவிசன் பண்ணும் போது அய்யா பொறுமையாய் ஒரு பக்கத்தை மூணுநாள் கூட நடத்துவார். நிலவன் அண்ணா blog ல யாரோ கேட்ட மாதிரி இலக்கியம் மணக்க மணக்க எல்லாம் கிடையாது, எங்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான எல்லா முற்போக்கு, மற்றும் உலக தகவல்களை கொட்டுவார் .அரசியலை அலசுவார். எங்களுக்கு அவர்தான் Wikipedia.
தமிழ் பாடல்களை உருபோட்டு ஒப்பித்தல் தான் சிறந்த தமிழ் பேச்சு என்ற மாயை உடைத்தவர் அண்ணா சார். வாழ்க்கைக்கான பாதையை வெளிச்சம் போட்டுகாட்டியவர்.
ஒரு மொழி ஆசிரியருக்கு முன் உதாரணம் அவர் . இப்போதும் தொலைபேசியிலோ, நேரிலோ என் தமிழ் சாரை தொல்லை செய்வதுண்டு. கஸ்தூரியின் மாணவர் ஒருவர் திருமண அழைப்பிதழ் தந்துவிட்டு காலைத் தொட்டு வணங்கி போது, அதிர்ந்து போன கஸ்தூரிக்கு சொன்னேன்" காசுகட்டி படிச்சாலும்(மதிப்பெண்ணை மட்டுமே மதிக்கும்) மெட்ரிக் பள்ளி யில் ஒரு மனத்துக்கு நெருக்கமான நண்பன் போன்ற ஆசான் கிடைக்க பெற்றவர்களுக்கு தான் அந்த ஆசான்களின் உயரம் தெரியும் . (மெட்ரிக் பள்ளியை குறை சொல்லும் நோக்கம் இல்லை. அன்றைய ஆசிரிய மனோபாவம் அப்படி இருந்தது) இன்றும் எனக்கு அண்ணா ரவி சார் ஏற்படுத்திய மாற்றம் போல் நான் ஒரே ஒரு மாணவனுக்கு நம்பிக்கை ஒளி ஏற்றினால் கூட போதும் என்றே நினைக்கிறேன் .
நீண்ட பதிவிட்டு உங்கள் பொறுமையை சோதித்துவிட்டேனா? மன்னியுங்கள். அப்புறம் ஆஷா எதை ஒளித்தாள் தெரியுமா .சுட்டி விகடன் புத்தகத்தின் ஒரு பக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் பகுதியில் ஒரு சின்ன வெற்றிடத்தில் என் பெயரை எழுதியிருந்தாள். நன்றி ஆஷா உன் நம்பிக்கையை நான் காப்பாற்ற முயல்கிறேன். அண்ணா ரவி சார் எனக்கு வழிகாட்டியிருக்கிறார் .(சார் முடிந்தால் இந்த பதிவை படித்து கருத்திடுங்கள் .வழக்கம் போல் "கருவிலே திரு" "தம்மில் தம்மக்கள்" என்று டபாய்க்க கூடாது.)
பி.கு
கஷ்டப்பட்டு,இஷ்டப்பட்டு பெரிய பதிவு எழுதிட்டேன். நிலவன் அண்ணா பிழை இருந்து உங்களை கோவப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும் வேண்டுகிறேன். பாத்து பண்ணுங்க
மைதிலி கஸ்தூரி ரெங்கன்

அன்பு சகோதரிக்கு
பதிலளிநீக்குகடந்த வாரம் முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா, முத்துநிலவன் ஐயா, மகாசுந்தர் ஐயா ஆகியரோடு அண்ணாரவி சார் இல்லத்திற்கு நானும் சென்றேன். அவரது அன்பான முகம் இன்னும் என் சிந்தையில் சித்திரமாய் பதிந்துள்ளது. அவர் இல்லத்து விருந்தோம்பல் எங்களை நெகிழ வைத்தது. அவரைப் பற்றி பதிவு இட்டதும், நீங்கள் அவர் மாணவி என்பதையும் படிக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி பிறக்கிறது. நல்ல மனிதரை ஆசிரியராகப் பெற்றது கொடுத்து வைத்த விடயம். தங்கள் திறமையை இனம் கண்டு வெளிப்படுத்த தங்களைத் தூண்டிய விதம் கவிதை போல் இருந்தது. சிறந்த படைப்பாளியை உருவாக்கிய, வெளிப்படுத்திய அண்ணா சார்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆயிசா செயல் இன்ப அதிர்ச்சியைத் தங்களுக்கு தந்திருக்கும். இப்படிப்பட்ட மாணவர்களுக்காவது நாம் இன்னும் உழைக்க வேண்டுமெனும் ஆசை ஏற்படுகிறது சகோதரி. அழகான பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.
மு.க.அ அய்யாவின் அந்த பயணக்கட்டுரையை படித்த விழைவு தான் சகோ இந்த பதிவு.
நீக்குஉண்மைதான் இப்படிப்பட்ட ஆசிரியர் கிடைப்பது பெரும் பேரு .ஆஷா வை போல நம்மேல் நம்பிக்கை வைக்கும் மாணவர்க்காக நாம் இன்னும் உழைக்கலாம் சலிக்காமல் !!
நல்ல நடைமா.சிறுகதை போல உண்மை நிகழ்வு,மாணவர்கள் விரும்பும் ஆசிரியராய் இருப்பது பெரும் பேறு.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி டீச்சர் தங்கள் வாழ்த்து எனக்கு பெருமிதமும்,பொறுப்புணர்வும் கூட்டுகிறது
நீக்குசுவாரஸ்யமாக இருந்தது....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
நன்றி அண்ணா
நீக்குஉண்மைதான் மா! குழந்தைகள்தான் நமக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள் - நாம் எப்படி இருக்கவேண்டும் என்று. சில நேரம் என் மாணவர்களை அடித்து விட்டு நான் அழுதிருக்கிறேன். (இன்று வடஇந்தியாவில் பொறியாளராக இருக்கும் மணிமாறன் நினைவில் நிற்கிறான்) உன் ஆஷாவைப்போல் என் மாணவன் இர்ஃபான், மற்றும் இன்றைய மருத்துவர் மா.அன்புமணி இருவரும் என்னை உயர்த்திய என் மாணவ மணிகள். பார்க்க - 27-09-2012 தேதியிட்ட எனது வலைப்பதிவு http://valarumkavithai.blogspot.in/2012/09/blog-post.html. உனக்கு அண்ணா ரவி அற்புத மனிதர், எனக்கு எங்கள் தமிழ்க்கடல் தி.வே.கோ(எனும் கோபாலய்யர்).
பதிலளிநீக்குநம் ஆசிரியர்களால் இன்று நாம் இருக்கிறோம்,
நம் மாணவர்களால் இனி என்றும் இருப்போம். ஆஷா உள்ளிடட கண்மணிகளுக்கு என் வாழ்த்துகளைச் சொல். உன்னை என் தங்கை என்பதைத் திருமயம் மலையின் உச்சிமேல் ஏறி உரக்கக் கத்திச் சொல்லிக் கொள்ளப் பெருமைப் படுகிறேன்.
நீ நல்லா இருக்கணும் தாயி.
ரொம்ப நன்றி அண்ணா !
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_10.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தகவலுக்கு நன்றி அண்ணா
நீக்குஅருமையான ஆரம்பம்
பதிலளிநீக்குகுடத்துள் விளக்காய் ஆகாமல் குத்து விளக்காய் மாற்றிட்டார்.
வாழ்த்துக்கள்....!
நன்றி தோழி தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்
நீக்குசொன்னதும் சொல்லிச் சென்றவிதமும் அருமை
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
அருமையான ,எளிய நடை கொண்ட தெளிவான கவிதை அதீதம் .தங்கள் வருகை எங்க பெருமை அளிக்கிறது ,நன்றி அய்யா
நீக்குநேர்த்தியான மனவோட்டம் சிறப்பான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறுகதையைப் போன்று அழகாக எழுதப்பட்டிருக்கும் இப்பதிவில் ஒரு நல்மாணாக்கரின் ஒரு நல்லாசிரியரின் பண்புகள் சிறப்பாக காட்டப்பட்டுள்ளன. பலருடைய வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றும் மாண்புமிகு ஆசிரயப் பெருந்தகைகளுக்கு அன்பார்ந்த வணக்கம். பகிர்வுக்குப் பாராட்டுகள் மைதிலி.
பதிலளிநீக்குமிகுந்த நன்றி தோழி
நீக்குஉங்களை போன்ற கூர்மையான எழுத்துக்கு
தெளிவான இலக்கிய பார்கைக்கு சொந்தக்காரகளுடன்(நிலவன் அண்ணா ,பாண்டியன் சார்,DD அண்ணா ,கரந்தை சார் ,கீதா டீச்சர் இன்னும் பலர் ) நட்பு பாராட்டும் வாய்ப்பே இந்த எழுத்தின் மூலம் (அண்ணா சார் மூலம் )கிடைத்தது தானே
சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்....
பதிலளிநீக்குநன்றி சகோ,பொங்கல் வாழ்த்துக்கள்!
நீக்குவணக்கம் தோழி இன்று தான் தங்களின் எழுத்துப் படைப்புகளைக் காணக் கிடைத்தது .தொடர்கின்றேன் இனிக்கும் புத்தாண்டில் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு ......
பதிலளிநீக்குஇனிய பொங்கல் தினத்தில் உங்கள் முதல் வரவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.பொங்கல் வாழ்த்துக்க்கள் .நன்ற தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்!
நீக்குஅன்பின் மைதிலி - அண்னா ரவி சார் - ஆட்டோ கிராஃப் - நன்று -இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு***ஆசிரியர் குழு ஏதோ சந்தானம் காமெடி பார்த்தது போல் "கொல்" என சிரித்தனர்.***
பதிலளிநீக்குநம்ம ஊரில் வாத்தியார்களுக்குத்தான் முதலில் "மேனர்ஸ்", "பொலைட்னெஸ்" எல்லாம் கற்றுக்கொடுக்கணும்! :(
--------------
***சுட்டி விகடன் புத்தகத்தின் ஒரு பக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியர்கள் பகுதியில் ஒரு சின்ன வெற்றிடத்தில் என் பெயரை எழுதியிருந்தாள். நன்றி ஆஷா உன் நம்பிக்கையை நான் காப்பாற்ற முயல்கிறேன். ***
டீச்சரிடம் மறைத்த ஆஷாவின் அந்த 4 வார்த்தைகள் அர்த்தமுள்ள ஆயிரம் பின்னூட்டங்கள் பெறுவதைக்காட்டிலும் உயர்வானது- as it comes from straight her heart! :)
Nice write-up, mythily! :)
அன்புள்ள சகோதரிக்கு,
பதிலளிநீக்குவணக்கம். அருமையான பதிவு. வாழ்த்துகள்.
அண்ணா ரவி எங்கு இருக்கிறார் என்பதை தயவு செய்து தெரிவிக்கவும். .
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in