வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஒரு நொடி மறதி !

(ஷேக்ஸ்பியர் ALL THE WORLD IS A STAGE படித்ததன் பாதிப்பில் ஏழெட்டு வருடத்திற்கு முன் எழுதியது )
       வீழ்வதும் ,விலகுவதுமாய் திரைகள்
       ஒவ்வொரு நொடியும்!
       தோன்றுவதும் ,மறைவதுமாய் மேடையில்
       ஒப்பனை மனிதர்கள் !!

       சிலருக்கு வாழ்த்தும்,சிலருக்கு வசவுமாய்
       மாறிக்கொண்டே இருக்கும் காட்சிகள் !!

       வசனம் மறக்கும் சிலர்
       தலைகுனிவர் சபையில்
       விஞ்சிய நடிப்பில் சிலர்
       வீழ்த்திடுவர் எவரையும் !!

       சாமர்த்திய நடிகர்களோ
       வாங்கி குவிப்பார் நல்லவர் விருது
       ஒப்பனைக்கு சுமந்த கிரீடத்தை
       உண்மையென்றே நம்புவர் சிலர் !!

       எவரும் ஏதேனும் ஒரு நொடியில்
       உணர்ந்தாலும் மறப்பர் ஒன்றை
       "உலகம் ஒரு நாடக மேடை "
                                                -  கஸ்தூரி  

27 கருத்துகள்:

 1. அருமையான ஒரு நாடக மேடையை கண்முன்னே நிறுத்திவிட்டீர்கள்.

  "// "உலகம் ஒரு நாடக மேடை "//" - அருமையான வரிகள். வாழ்த்துக்கள் சகோதரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார் தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் !

   நீக்கு
 2. அருமை..அழகாக எழுதியுள்ளீர்கள் மைதிலி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிராஸ் வெகு நாட்களுக்கு பின் தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது .தங்களும் குடும்த்தாரும் நலம் தானே?சகோ பாண்டியன் அவர்களின் பின்னூட்டத்தில் தங்கள் வார்த்தைகள் மனதிற்கு நெருக்கமாயை உணர்த்தின .உங்களை போன்ற இனிய நட்பு கிடைத்தற்கு வைபூவிற்கு,கூகுளுக்கு நன்றி !

   நலமே நாடும் தோழி
   மைதிலி

   நீக்கு
  2. எனக்கும் மகிழ்ச்சி தான் மைதிலி. அனைவரும் நலம்.
   நீங்களும் மதுவும் சில நாட்களிலேயே வலைத்தளம் மூலமாகவே நெருக்கமாய் உணர வைத்திருக்கிறீர்கள். நீங்கள் தோழியாகக் கிடைத்த மகிழ்ச்சியுடன் நானும் இணையத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. நன்றி அண்ணா தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் !

   நீக்கு
 4. எங்க ரெண்டுநாளாக் காணோமேன்னு பார்த்தேன்... கவிதை நல்லாத்தான் (7,8வருடம் முன்பே) எழுதியிருக்கே.. நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்களே? எனக்கு ரொம்பப் பிடிச்சது-
  “தாசில்தார் வீட்டு நாய் செத்துப் போனா ஊரே திரண்டு வருவாய்ங்க.. தாசில்தாரே செத்துப் போனா... ஒரு நாய்கூட வராது” - பதவிகளின் நிலையாமைத் தன்மையை முகத்தில் அறைந்து சொல்லும் பழமொழி. மனித வாழ்க்கையும் ஒரு பதவியான நாடகம்தான். இந்தப் பின்னணியில் உன் -
  ”ஒப்பனைக்கு சுமந்த கிரீடத்தை
  உண்மையென்றே நம்புவர் சிலர்” என்னும் வரிகள் அற்புதமானவை. மேடம் பிஸியா இருந்தாலும் ”உன் கவிதை என்ற இன்ப வெள்ளத்தில் நீந்திட வந்த இந்த அண்ணன் போலும் ரசிகர்களை ஏமாற்றிவிடாதே தங்கச்சி” எழுதும்மா தொடர்ந்து எழுது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா !
   பழமொழிக்கு பழமொழி !!
   தங்களை போன்றோரின் தமிழும்,
   அன்பும் இருக்கும் வரை
   எழுதும் கிறுக்கு எனக்கும் இருக்கும் !

   நீக்கு
 5. ஒப்பனைக்கு சுமந்த கிரீடத்தை
  உண்மையென்றே நம்புவர் சிலர்//
  சத்திய வார்த்தை.

  பதிலளிநீக்கு
 6. உண்மை வரிகள் தோழி. அழகான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 7. ஒப்பனைக்கு சுமந்த கிரீடம்
  அற்புதமான வரிகள்
  டெம்பஸ்ட்டில் சேக்ஸ்பியரின்
  அருமையான கவிதையை நினைவுறுத்திப் போகிறது
  தங்கள் அழகான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அய்யா !
   தாங்கள் தவறாக எண்ணவில்லைஎனில்
   ஒரு சின்ன திருத்தம் இது ஷேக்ஸ்பியரின் As you like it என்ற ப்ளேயில் வருகிறது .தங்கள் வருகைக்கும் ,வாழ்த்திற்கும் மிகுந்த நன்றி

   நீக்கு
 8. பதில்கள்
  1. புரியல சார் .தங்கள் வருகையை பதிவுசெய்தமைகாக நன்றி !

   நீக்கு
 9. பிளஸ் ஒன்னில் படித்த கவிதை அது! இப்போது வரிகள் நினைவில்லை! உங்கள் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சுரேஷ் சார் தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் !!

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி
   சிறப்பான கவிதை. இணைய கோளாறு மீண்டும் வருவேன். நன்றி.

   நீக்கு
 10. //ஒப்பனைக்கு சுமந்த கிரீடத்தை
  உண்மையென்றே நம்புவர் சிலர் !!//

  அருமை. சிலர் மட்டுமல்ல, பலரும் தான் ...... பாலாபிஷேகமே செய்து கோயில் கட்டி கும்பிடுவதாகக் கேள்வி.

  //எவரும் ஏதேனும் ஒரு நொடியில்
  உணர்ந்தாலும் மறப்பர் ஒன்றை
  "உலகம் ஒரு நாடக மேடை " //

  உண்மை தான். அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 11. நன்றி அய்யா தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும்!

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  சகோதரி

  சாமர்த்திய நடிகர்களோ
  வாங்கி குவிப்பார் நல்லவர் விருது
  ஒப்பனைக்கு சுமந்த கிரீடத்தை
  உண்மையென்றே நம்புவர் சிலர் !!

  நீங்கள் சொலவது உண்மைதான் இந்த மாய உலகத்தில் எத்தனை விசித்திரங்கள் மேடை ஏறுகிறது... அதை நம்பும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது சிறப்பாக கவிதையில் சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரூபன் சகோ தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் !

   நீக்கு
 13. அருமையான கவிதை. சிறப்பாகச் சொன்ன உங்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு