ஒவ்வொரு பின்னிரவும் வெளிப்படுகிறது
உறங்கும் முன் நாட்குறிப்பில்
தேக்கிய உணர்வுகள்
இசையாய் கசிந்து
இரவை மீட்டும் சில
அலையாய் சுழன்று
அறையைமூழ்க்கும் சில
சொல் புதைந்த மௌனத்தால்
சுமை தாங்காது படபடக்கும்
சில வெற்றுத்தாள் நாட்களில்
என்னோடு விழித்திருக்கும் இரவு
-கஸ்தூரி
சகோதரிக்கு வணக்கம்
பதிலளிநீக்குகனமான கருவை சுமந்து நிற்கும் கவிதையைத் தாங்கள் வடித்துள்ளதைக் கண்டு பூரித்து போனேன். மிக அழகு. ஒருமுறைக்கு இருமுறை படித்தேன்.
------
//சொல் புதைந்த மௌனத்தால்
சுமை தாங்காது படபடக்கும்
சில வெற்றுத்தாள் // இந்த இடம் தங்கள் சொல்லாட்சிக்கான சான்று.
-----
தங்களுக்கும் எனது சகோதரருக்கும் மற்றும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி..
so இந்த முறை சட்டென புரியாத மாதிரி எழுதிவிட்டேனோ?
நீக்குசில வார்தைகள் என்னை இழுத்து வந்து எழுதச்சொல்லும் .
அப்படியான வார்த்தையை பாராட்டியிருகிரீர்கள் நன்றி சகோ
அருமை.....
பதிலளிநீக்குநன்றி சார் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நீக்குரோஷனி எப்படி இருக்கிறாள் ?
புத்தாண்டு வாழ்த்துக்கள் !
//சொல் புதைந்த மௌனத்தால் //
பதிலளிநீக்குஅருமை சகோதரியாரே அருமை
நன்றி அண்ணா ,சே கட்டுரை அசத்திவிட்டீர்கள் !
நீக்குகனவை ரசித்தேன்...
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நன்றி அண்ணா ,தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
நீக்குஉணர்வுமிக்கது
பதிலளிநீக்குநன்றி அய்யா தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்
நீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவிதையும் முளைக்கும் வெளிச்சத்தால்! உள்ளப்
புதையல் உணர்ந்தே புரி!
அருமையான கவிதை தோழி!
அசத்திவிட்டீர்கள்!
வரிகள் மனதை உருவிச் சென்றன...
வாழ்த்துக்கள்!
வருக தோழி புத்தாண்டு நல்லபடியாய் தொடங்கட்டும்
நீக்குவாழ்த்துக்களுக்கு நன்றி
படித்தவுடன் புரியும் வரிகள் சில...
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள் சில...
மீண்டும் மீண்டும் படித்த பிறகும் இன்னும் “ஏதோ இதுல இருக்கு போலயே...“ என்று மயக்கும் சில... கவிதா ரகசியத்தை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியுமா என்ன? அருமைடா! (ரெண்டுநாளா வலைப்பக்கம் வரமுடியல... அதான்...)
அண்ணா எத்தனை நாள் கழித்து வந்தாலும் ,அண்ணன் கருதிடாமல் அடுத்த பதிவிற்கு போவேனா என்ன ?மிக்க நன்றி அண்ணா
நீக்குகவிதை என்னவோ வேட்ஸ்வொர்த் சொன்னது போல் தன்னால்(overflow) வந்தது தான் .தலைப்பு பிடிக்க தான் இருபது நிமிடம் ஆனது.அதை பற்றி சொல்லவே இல்லையே ?
தலைப்பு Aptஆ வந்திருக்கு (நாங்களும் அப்பப்ப இங்கிலீசு பேசுவம்ல?) கடைசி வரி மிக அருமை. படத்தின் கீழ் உள்ள வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையில் உள்ள வெற்றிடத்தை எடுத்துவிடு.
நீக்குஆச்சு அண்ணா .கடைசி வரி மட்டும் பதிவிட்ட பின்பு மறுநாள் மாற்றினேன்
நீக்குDDஅண்ணா கனவு ரசித்தேன் என கருத்திட்டிருப்பார் பாருங்கள்
நீங்க சொன்னது போல் அடுத்த முறை நிதானமாய் எழுதிப்பார்த்து பதிவிட வேண்டும்
//////சொல் புதைந்த மௌனத்தால்
பதிலளிநீக்குசுமை தாங்காது படபடக்கும்
சில வெற்றுத்தாள் நாட்களில்
என்னோடு விழித்திருக்கும் இரவு//////
அழுத்தம் தெரிக்கிற வரிகள்.மேடம்.வாழ்த்துக்கள்.
நன்றி விமலன் சார் ,
நீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள் !!
மிகவும் அருமையான உள்ளடக்கம்.கவிதையில் நேர்த்தி வருகின்றது வாழ்த்துக்கள் மா
பதிலளிநீக்குநன்றி சகோதரி
நீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள் !
படிப்போரும் உணரும் வண்ணம்
பதிலளிநீக்குவடித்த கவிதை அருமை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்கள் முதல் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா
கருத்திட்டமைக்கும் ,வாழ்த்தியமைக்கும் நன்றி
அருமை தோழி. ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து படித்து அனுபவித்து இரசித்தேன். வாழ்த்துகள் தோழி.
பதிலளிநீக்குநன்றி தமிழ் தங்களது வலைப்பூ எப்போதும் எனை வியப்பில் ஆழ்த்துகிறது
நீக்கு//சொல் புதைந்த மௌனத்தால்
பதிலளிநீக்குசுமை தாங்காது படபடக்கும்// எவ்வளவு அழகாக இரு வரிகளில் சொல்லிவிட்டீர்கள்!
கவிதையும் தலைப்பும் மிக அருமை. சொல்லாடலும் அருமை மைதிலி!
நன்றி கிராஸ் !
பதிலளிநீக்குநல்ல கவிதை! எனக்கு இரண்டு மூன்று முறை படித்த பிறகுதான் புரிந்தது. 'மூழ்க்கும்' - புதுமையான சொல்லாட்சி!
பதிலளிநீக்குமூழ்கடிக்கும் என்பதை விட சுருக்கமாய் சொல்லவிரும்பினேன்:))
நீக்குரசித்தமைக்கு நன்றி சகா!!
பதிவின் இறுதியில் 'கஸ்தூரி' என இருக்கிறதே! அப்படியானால், இது நீங்கள் எழுதியதில்லையா?
பதிலளிநீக்குமுன்பு நான் என் கணவர் பெயரை புனை பெயரை பயன்படுத்தினேன். google பிளஸ் இணைத்த வுடன் அது தொடக்கத்தில்
நீக்குமைதிலி கஸ்தூரி ரெங்கன் என காட்டிவிட்டதால் இப்போ பெயர் குறிப்பிடாமலே விட்டு விட்டேன். ஆனால் என் கணவர் ப்ரோபிலை யே திருத்தி இன்னமும் என் pet name மில் தான் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆம் நீங்கள் மது என பார்ப்பது தான் அந்த கஸ்தூரி ரெங்கன்:)) என் கணவர்:)
ஓ! சரி.
நீக்கு