ஞாயிறு, 10 மே, 2015

அமுதுக்கு செம்மொழி என்று பேர்!குத்தகைக்கு எடுத்தாளா-இல்லை

கொள்முதல் விலைக்கே
வாங்கினாளா தெரியவில்லை
பால்குளத்தில் நீந்த விட்டிருக்கிறாள்
விழிமீன்கள் இரண்டையும்!சிணுங்கிச் சிணுங்கி அறையை
கடந்து செல்கிறாள் செம்மொழி
சிதறிக்கொண்டே இருக்கிறது
செவியெல்லாம்
தேன் துளி!

வரவேற்பறை, படுக்கையறை
என அந்த ஒளிப் பூ பரப்பிச்செல்லும்
மகரந்தத்துகள்களை
கைகொள்ளத் தெரியாமல்
திகைக்கிறது என் மனத்தும்பி!

பாடு பாடு என கெஞ்சிய பின்
இரண்டு வரி பாடிவிட்டு
முகம் மூடிக்கொள்கிறாள்
மீதப் பாடலுக்காய் கன்னத்தில்
கைவைத்துக்காத்திருக்கிறது
பன்னீர்நுகர்ந்த காற்றும்!

படபடத்த விழிகளையும்
சுழித்து மீண்டஇதழ்களையும்
பார்த்துக்கொண்டே இருந்தபின்
பசிக்குமா என்ன?
அமுதிற்கு ஏற்ற பெயர்தான்
செம்மொழி!

அண்ணன் வீட்டுச் சீதனமாய்
விழி நிறைய
மனம் நிறைய
அள்ளிவந்திருக்கிறேன்
அவர் பேத்தியின் புன்னகையை!டிஸ்கி
 கவிதையே கொஞ்சம் காலம் எழுதவேண்டாம் என தான் நினைத்தேன். இந்த நிலவன்அண்ணாவின் பேத்தி செம்மொழி எனும் கவிதை தான் இதை எழுதவைத்துவிட்டது;)

40 கருத்துகள்:

 1. அருமை சகோ அமுத மொழிக்கவிதை அருமை
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! வெகு நாள் கழித்து கில்லர்ஜி அண்ணா !! வாங்க!
   நன்றி அண்ணா!

   நீக்கு
 2. தேனில் நனைந்த கனியாய்
  தித்திக்கின்றது - கவிதை!..

  வாழ்க செம்மொழி..
  வளர்க செம்மொழி!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வாழ்த்து அவளுக்குக் கிடைப்பதே எனக்கு அத்தனை உவப்பாய் இருக்கிறது. மிக்க நன்றி அய்யா!

   நீக்கு
 3. உங்களின் 'செம்மொழி'யே போதும் ,அந்த அழகு நிலா ,மனவானில் அழகாய் தெரிகிறது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை பாஸ்! அவள் அழகாய் நான் பாதி கூட பாடவில்லை:) நன்றி பாஸ்!

   நீக்கு
 4. உன் மனம் நிறைந்த வாழ்த்துக் கவிதை ஆயிரம் கோடி நாள்கள் (வரலாற்றில்) அவள் வாழ வழிசெய்யும் என் அன்புத் தங்கையே!
  என் பேத்தி, கிட்டத்தட்ட இந்தப் படத்தில் உள்ள சிறுமியைப் போலத்தான் இருப்பாள் எனில், உன் அன்பிற்கு ஈடேது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த படத்தில் உள்ள சிறுமி செம்மொழியை விட அழகு கம்மிதான். என்ன துறுதுறுப்பு!!! என்ன பேச்சு!! முக்கியமாய் இந்த பெண்ணிற்கு செம்மொழிபோல் தித்திப்பாய் தமிழ் பேசத் தெரியாதே:))) இப்போ வரை கண்ணுக்குள்ளேயே நிற்கிறாள் அண்ணா:)

   நீக்கு
  2. கவிதையைச் செதுக்குவதுபோல, செம்மொழியின் படத்தையும் செதுக்கியிருப்பது போலத் தெரிகிறது.. நல்லா இருக்குப்பா.

   நீக்கு
 5. வணக்கம்
  கவிதையில் செம்மொழி வீசுகிறது... அருமையாக கவிபாடியமைக்கு நன்றி.
  த.ம 5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. அருமை
  வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம +1

  பதிலளிநீக்கு
 7. உயிரோவியம்........
  மொழியினூடே...

  பின்

  செம்மொழி ஆயிற்றே....

  முடியாதா என்ன ..?

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதையாவே பின்னூட்டமா!! மிக்க நன்றி அண்ணா!

   நீக்கு
 8. கவிதையே கொஞ்சம் காலம் எழுதவேண்டாம் என தான் நினைத்தேன். இந்த நிலவன்அண்ணாவின் பேத்தி செம்மொழி எனும் கவிதை தான் இதை எழுதவைத்துவிட்டது;) ஏன்மா கவிதையோட என்ன கோபம் .....
  ம்..ம்..ம் செம்மொழிக்கு தான் நன்றி கூறவேண்டும். இப்படி ஒரு கவிதை எமக்கு கிட்டியதற்கு .இன்னும் வருகிறேன் இதை ரசிக்க அம்மு அசத்தல் எங்கேடா ஒளிச்சு வைச்சீங்க இதெல்லாம். என்னே கற்பனை wow wow wow ...

  கொஞ்சு தமிழைக் கண்டு குலைநடுங்கி
  அஞ்சி எனைஓட வைத்தாளே வஞ்சியிவள்
  மிஞ்சும் வகையினில் கற்பனையும் சொற்பதமும்
  விஞ்சு தமிழும் வியந்து !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்..ம் படம் மாத்தியாச்சா. so cute

   செம்மொழியின் விழிகள்
   தான் எத்தனை மொழிகள்
   பேசுகின்றது.

   அவள் கண்களில் இருந்து
   கவிகளை அள்ளியதில் வியப்பேது

   கொள்ள அழகு அவள் குறும்பு
   கோடி கொடுத்தாலும்
   கிடைக்காத புன்சிரிப்பு

   நீக்கு
  2. இனியாச்செல்லம்!! படம் மாற்றிய பிறகும் பொறுப்பா கமெண்ட் போட்டிருகீங்களே!! செல்லம் ன செல்லம் தான். நன்றிடா!

   நீக்கு
 9. பாடு பாடு என கெஞ்சிய பின்
  இரண்டு வரி பாடிவிட்டு
  முகம் மூடிக்கொள்கிறாள்
  மீதப் பாடலுக்காய் கன்னத்தில்
  கைவைத்துக்காத்திருக்கிறது
  பன்னீர்நுகர்ந்த காற்றும்!
  ஆம் அதற்கும் கொஞ்சம் வெக்கம் காட்டுவாளே அது, அழகான கவிதை.
  தமிழ் கொஞ்சி நிற்கிறது கவியில்.

  பதிலளிநீக்கு
 10. அண்ணன் பேத்தி குறித்த கவிதை
  கண்ணைத் திறந்து படித்தேன்!
  சிறந்த பாவரிகள்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 11. செம்மொழி அளவிற்கு இல்லை என்றாலும் கவிதை அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை அழகா? மொழி அழகா?
   கண்ணிலே அன்பிருந்தால்
   கவிதையில் செம்மொழி வரும்...அன்பை விடச் சிறந்த அழகேது?

   நீக்கு
  2. ஆமா, சகா எனக்கும் அப்படிதான் தோணுச்சு, நன்றி @ கஸ்தூரி

   ஆஹா! ரொம்ப நன்றி அண்ணா!@நிலவன் அண்ணா!

   நீக்கு
 12. செம்மொழி எனும் கவிதையின் அறிவும் வசீகரமும் மறுநாள் நேரில் பார்த்த என்னையும் ஈர்த்துக்கொண்டே.........தான் இருக்கிறது! வாழ்வாங்கு வாழ வேண்டும் இந்த அழகு கவிதை!

  பதிலளிநீக்கு
 13. செம்மொழியை முதன்முதலில் என்கையில் ஏந்திய பொழுது புதிய உலகை, அவள் அந்த கண்களைச் சுழற்றி சுழற்றி பார்த்தபொழுது, நான் எவ்விதம் ஆனந்தப்பட்டேனோ அதையே தங்களின் கவிதையைப் படிக்கும் போதும் உணருகிறேன்...

  மிக்க நன்றி!!!

  பதிலளிநீக்கு
 14. சகோ!! செம்மொழியை இன்னும் இன்னும் பாடலாம்:) அவளை முழுமையாக பாடுவது கடலை கைக்குள் அடக்கும் முயற்சி என்றே தோன்றுகிறது! படித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ:)

  பதிலளிநீக்கு
 15. செம்மொழி போலிந்தச்
  செம்மொழியும் நலம்பெறட்டும்
  உம்கவியின் உயிரோட்டம் போல !

  அருமை சகோ
  வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  பதிலளிநீக்கு
 16. //மீதப் பாடலுக்காய் கன்னத்தில்
  கைவைத்துக்காத்திருக்கிறது
  பன்னீர்நுகர்ந்த காற்றும்!// - ஆகா!... ஆகா!... ஆகா!...

  பதிலளிநீக்கு
 17. செம்மொழி! இனிக்காமல் இருக்குமா என்ன?!!!!! செம்மொழியும் இனிக்கின்றாள்! செம்மொழியால் விளைந்த கவிதை மொழியும் இனிக்கின்றது! அருமை சகோதரி!

  பதிலளிநீக்கு
 18. நிலவன் ஐயா தங்களின் பேத்தி நிஜமாகவே "செம்"மொழிதான்! குழந்தைக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 19. பாராட்டுக்கள் சகோ...அழகான கவிதைக்கு

  பதிலளிநீக்கு
 20. wow! என்ன அழகா எழுதியிருக்கீங்க! அப்போ செம்மொழி எப்படி ஒரு இனிய குழந்தை! நீங்க மட்டும் பாத்துட்டு வந்துட்டு.. (புகை :) )
  உங்களுக்கும் செம்மொழிக்கும் அன்பான வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 21. கொள்ளை அழகு பாப்பாவும் உங்கள் பாவும்!
  ஐயா பாரதிதாசனின் அறிமுகச் சுட்டலால்
  ஓடி வந்தேன்!

  மிக மிக அருமை தோழி!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு