வெள்ளி, 18 மார்ச், 2016

நம்பிக்கை நட்சத்திரம்.

ஆயிஷா- என் முக்காடு இட்ட பூக்காடே!!
ஒற்றை தூறலுக்குப் பின்
ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும்
பட்டமரம் போல துளிர்க்கிறது
சிறகுதிர்ந்த என் நம்பிக்கை
சின்னவள் உன் குரல் கேட்டு!

படித்த பெண்கள் இன்று பலருண்டு
உன் போல் படிக்கும் பெண்கள்
தான் சொற்பம்!!

அழகுக்குறிப்பு,ஐந்தாறுவகை கூட்டு
ரங்கோலி மற்றும் ராசிபலன் என
அடுக்கிய பெண்ணிதழ்கள் கண்டு
அயர்ந்திருந்த வேளையிலே
இலக்கியம் பேசும் உன் இனிய குரல் கேட்டு
கண்நிறைய பார்க்கின்றேன்- என்
கரும்பலகையில் விரிந்திருக்கும் வெண்மலர்களை!!

கண்ணுக்கு மைபூசி
கருங்கூந்தல் நெய்பூசி
பெண்ணுக்கு அணிசெய்யும்
பெற்றோர்கள் வரிசையிலே ..

கைகளிலே நூட்கள் தந்து
கருத்தினிலே நுட்பம் விதைத்து
மாறுபட்டு நிற்கும் உன் பெற்றோருக்கு
கூறும் என் நன்றிகள் !!

வெகு சிறியது தான் உன் நூல் அறிமுகம்
ஆனால் அதன் தாக்கம் பாதித்திருக்கிறது
என் வேர் வரை !

நிலோபர், தஸ்லிம்
ஆஷா பானு என
என் செல்லங்கள் அத்தனையும்
கண்டுவிட்டேன் உன் வடிவில் !!

ஒரு சின்ன விடியலை
எனக்குமட்டும் நிகழ்த்திக் காட்டிய
நட்சத்திரமே!! உன்னால்
இனி பெண்கல்வி பேசுவேன்
புதிய தெம்போடு !!

 கூலாங்கற்கள் நூலைஅறிமுகம் செய்யும் ஆயிஷாவின் லிங்க்

பி.கு
அந்த விடியோ வை கேட்ட நொடியே என்னை மலர்த்திய, என் பேனாவை பேசவைத்த ஆயிசாவுக்கு என் அன்புப்பரிசு:)










17 கருத்துகள்:

  1. நல்ல கவிதை வாழ்த்துகள் சகோ விரைவில் எனது விமர்சனம் கூழாங்கற்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆயிஷாவுக்கு எங்கள் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றாக பேசுகிறார் ஆயிஷா...அவருக்கு எனது வாழ்த்துகளும்....

    கவிதையும் நன்றாக இருக்கிறது.... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் உதவியால் ஆயிஷா செல்லத்தின் அழகிய குரலில் கூழாங்கற்கள் நூலறிமுகம் கேட்டேன். நன்றி மைதிலி. அதற்கான உங்கள் கவிதை வரிகள் அற்புதம்... தாக்கத்தை மிக துல்லியமாய்ப் பதிவு செய்திருக்கும் விதத்துக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. ஆயிஷாவிற்கு வாழ்த்துக்கள்... அதை பாராட்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  6. ஆயிஷாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! அழகாகச் சொல்லியிருக்கிறாள்...நீங்கள் கவிதை வடிவில் சொல்லியிருப்பது உட்பட..முதலில் ஆயிஷா என்பதைப் பார்த்ததும் ஒரு புத்தகம் வந்தது மேலையூர் ராஜா அவர்கள் தனது தளத்தில் பகிர்ந்திருந்தார். மனதை நொறுக்கிய ஒன்று. அதைத்தான் தாங்கள் எழுதியிருக்கிறீர்களோ என்று நினைத்தோம்.

    கூழாங்கற்கள் பற்றிய விமரசனம் பல தளங்களிலும் பகிரப்படுகிறது. இன்று சகோ கீதமஞ்சரி கூட எழுதியிருந்தார் அழகான ஆழ்ந்த கருத்துடைய விமர்சனத்தை.

    பதிலளிநீக்கு
  7. ஆஹா 'அமுதும் தேனும் எதற்கு..? ஆயிஷாவின் குரலும்' சொல்லிய விதமும் அருமை.!
    "முக்காடிட்ட பூக்காடு"..ஒற்றைத் தூறலுக்குப் பின்
    ஒட்டுமொத்தமாய் துளிர்க்கும்
    பட்டமரம் போல,..ஒரு சின்ன விடியலை
    எனக்குமட்டும் நிகழ்த்திக் காட்டிய
    நட்சத்திரமே!...என்ன அற்புதமான வார்த்தை வார்ப்புகள்!வாழ்த்துகள் தங்கையே!

    பதிலளிநீக்கு
  8. அழகுநடை ....வாழ்த்துக்கள் ...

    ஆயிஷாவிற்கும்..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரி...

    நீண்ட நாட்களாகிவிட்டது ! நலமா ?

    இந்த பதிவை கண்டு சற்றே திகைத்தேன் !... எனது புதிய பதிவில், பல ஆண்டுகளுக்கு மின்னர் படித்த " சிறுமி ஆயீஷா பீபியின் உலகம் " என்ற கவிதையை குறிப்பிட்டிருந்தேன்... நீங்கள் ஆயிஷாவை பற்றி கவிதை பதிந்திருக்கிறீர்கள்...

    அன்று நான் படித்த, " இரண்டு தெருவுக்குள் " வாழ்ந்து முடித்த ஆயிஷாவிலிருந்து இன்று உங்களின் இலக்கியம் பேசும் ஆயிஷாக்கள் கடந்திருப்பது பெருமைபடத்தக்க, நீண்ட தூர பயணம்.

    உங்களை போன்ற ஆசிரியர்களுடன் பெற்றோர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே பெண்கல்வி வெற்றி சாத்தியம்.

    சிறுமி ஆயிஷாவுக்கு என் பெருமையான வாழ்த்துகள்.

    ( சகோ... உங்கள் தூண்டுதலால் நான் எழுதிய " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் " பதிவினை படித்து கருத்திட வேண்டுகிறேன்... இந்த பதிவினை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும் சகோ ! )

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  10. பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ !...

    சாமானியன்

    பதிலளிநீக்கு
  11. குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதுதான் தமிழ் அழியாமல் காக்கும் வழி என நம்புபவன் நான். ஆனால், இங்கு ஒரு குழந்தையே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. இதை விட வேறென்ன வேண்டும் மகிழ, நிறைய?

    வழக்கம் போல், அருமையான கவிதை! குறிப்பாக, "படித்த பெண்கள் இன்று பலருண்டு
    உன் போல் படிக்கும் பெண்கள்
    தான் சொற்பம்!!" என்ற வரி அருமை!!

    பதிலளிநீக்கு
  12. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு