வியாழன், 26 மார்ச், 2020

கை கழுவுங்க

கொஞ்சம் தண்ணீர்
இருபத்தியிரண்டு நொடிகள்
சிறு சோப்புக்கட்டி போதும்
அவர் கைகழுவி விட்டார்
நீங்களும் கைகழுவுங்கள்



இதற்கு முன் யாரும்
கை கழுவிப் பார்த்ததில்லையா

இளஞ்சிவப்பில்
இரண்டாயிரம் ரூபாய்
நோட்டை நினைத்துக் கொள்க

ரோஜா வண்ண
சோப்பு மட்டுமே
நினைவுக்கு வரவேண்டும்
உங்களுக்கேன்
ஏ.டி.எம் கள்
நினைவுக்கு வருகின்றன
விரைந்து கை கழுவுங்கள்

நீட்டாய் கை கழுவிய
சிந்தனையாளர்களை
நினைவுபடுத்துக் கொள்க
பலரும் பலவாறு
கைகழுவி விட்டார்கள்

நீங்களும் கைகழுவுங்கள்
நினைவாய் கிருமிநாசினிகளை
பத்திரப்படுத்துங்கள்!!

20 கருத்துகள்:

  1. நல்ல கவிதை.

    கை கழுவுதலின் அவசியம் சொல்லும் கவிதை சிறப்பு.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
  2. ஊரணித் தண்ணீரில் கை கழுவலாமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரையே கை கழுவி விட்டார். நீங்க என்னமோ கேள்வி கேட்குறீங்களே!!

      நீக்கு
  3. முதல் இரண்டு வரிகளில் சொன்ன மாதிரியே கையை கழுவுகிறோம் சகோ.

    பதிலளிநீக்கு
  4. // நீட்டாய் கை கழுவிய
    சிந்தனையாளர்களை
    நினைவுபடுத்துக் கொள்க //

    இன்னும் நிறைய பேர்கள் உள்ளனரே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்னை சொன்னா மத்தது நினைவு வருதுல்ல அண்ணா! அது தான் வேண்டும்

      நீக்கு
  5. கிருமிநாசினிகள் கிடைத்தால் அல்லவா பத்திரப்படுத்த?  எல்லோரும் அல்ரெடி வாங்கி பத்திரப்பப்படுத்திட்டாங்க போல...!

    பதிலளிநீக்கு
  6. Hand-washing would certainly help but this virus is airborne. This virus is spreading through AIR, mythili. It is impossible to control its spreading in our country as we are densely populated. It is spreading so fast in Italy, Spain, USA, UK, Germany and France but it is not spreading fast in India. Let us not look at the positive cases, let us look at the deaths. We have only 10-15 deaths so far. It is much less when you compare that with Italy or Spain or USA or UK. It is ONLY possible if Indians' immune system somehow fights off this virus. The lock down for 21 days is only for bringing some awareness. That will not stop spreading through air in India. I grew up in India and I know it is impossible to control spreading through air even if you lock down for one year. However, the weather and immunity can save Indians. Certainly not lock down. Lock down can bring some awareness and certainly will help to some extent. So will hand-washing. Above all immunity and weather could save us.
    SARS did not spread in India also. That was another respiratory viral disease. This one is also somewhat similar one. Let us see what happens.

    பதிலளிநீக்கு
  7. தற்போதைய கொரோனாவைக் கைகழுவ வேண்டும் விரைவாய்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. செம பகடி
    நல்லா வருதும்மா
    இனி தொடர்ந்து வாசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து மிகவும் உற்சாகம் அளிக்கிறது ஐயா! மிக மிக நன்றி! மீண்டும் வருக!

    பதிலளிநீக்கு