திங்கள், 30 மார்ச், 2020

முகமற்ற குரல்கள்

காலத்தின் சன்னல் இருக்கையில்
அமர்ந்திருக்கிறது தேவதை

அதன் முகத்தருகே நீட்டப்பட்ட கைக்குட்டையால்
இடம்பிடித்து வைக்க

முண்டியடித்து
இருக்கைநாடி
மூச்சு சீரான பின்
பேசத்தொடங்கியது
சாத்தான்



நமக்கு எந்த ஊரு?
இங்கதான் பக்கமா.

எந்த சாமி கும்பிடுவீங்க?
எல்லா சாமியும்

அட!! மிருகத்திலும்
சாதி இருக்கு
நீ சிங்கமா? நாயா?
நான் தேவதை.

கல்யாணம் ஆகிட்டா?
உம், காதல் திருமணம்.
தெய்வீகக்காதலா
நாடகக்காதலா??
கேள்வியை முடிக்கும் முன்
குலுங்கி அதிர்கிறது காலம்

ஏன் வண்டி கொடசாயுது?
ஏதோ வேகத்தடையாம் வைரஸாம்!!

உருண்டோடுகிறது
சக்கரம் முறிந்த காலம்
வேண்டுதல் குரல்களில்
எது தேவதை எது சாத்தான்
என்றேதும் புரியவில்லை!!

16 கருத்துகள்:

  1. அருமையாக சொல்லி விட்டீர்கள்...

    அனைத்துமே புரியும் நேரமிது...

    பதிலளிநீக்கு
  2. ஆம்..   எல்லாமே தடுமாறிய நிலை!

    பதிலளிநீக்கு
  3. One interesting thing about this corona virus is that it does not discriminate rich or poor, white or black, low-caste or high-caste, England Prince or American senator, gay or straight. It loves everybody's lung cells. Gets into lung cells and multiplies, by making several daughter viruses. Poor viruses, they can not live on their own and so they use human lung cells for their survival. We are not perfect either. We are all sinners or not? Humans steal milk from cows, honey from bees, kill animals and plants for their survival. They created God for forgiving them for all the sins they do. Viruses must have created by the same God- according to God-believers. Why blame the poor viruses? Let us talk to the God. Everybody wants to live. So are the viruses. They do what they have to do for their survival. They dont care. Neither do we. Let us blame the God, the creator of viruses and bacteria. Or not?

    பதிலளிநீக்கு
  4. Hi வருண் ! எப்படியும் மனிதர்களை விட கொரோனா far better இல்லா ! thanks Varun for the whole hearted moral support you continuously giving for my write up for past five years though I am busy or lazy and I was down or energised!

    பதிலளிநீக்கு