புதன், 29 ஏப்ரல், 2020

வெள்ளுடை தேவதைகள்

வெள்ளுடையில் இருந்ததால் அவர்கள் தேவதைகள் என்பதிலேதும் யார்க்கும்
ஐயம் இல்லை


ஆனால் அந்த நாட்களிலும்
வெள்ளை உடுத்துவது
அத்தனை சௌகர்யமானதா என்ன!!

சிஸ்டர் என்று தான்
அழைக்கப்படுகிறார்கள்
பலரும் சிஸ்டராக
நினைக்கப்பட்டது இல்லை

யாரோ இனிப்பு திண்ண
யாரோ விசம் குடிக்க
இரவெல்லாம் கண்விழிக்கும்
இவர்கள் நைட் டுயூட்டி
நன்றிகளை எதிர்பார்ப்பதில்லை ஆனாலும் தான் நம்
நகைச்சுவைத்துணுக்களில்
என்னே கிளுகிளுப்பு

ஏன் இப்படி என்றேன்
எல்லோரையும் தொடுகிறார்களே
என்றவர் பாவம்
தாயின் ஸ்பரிசமே அறியாதவர் போல

காயத்தின் சீழை சற்று முகம் மாறாமல் துடைக்க கற்ற இவர்கள்
உள்ளத்தின் சீழை ஒருபோதும்
லட்சியம் செய்ததில்லை!

ஊரே அஞ்சி உள்ளொடுங்கும்
இவ்விரவிலும் பணிமேவ
இதோ எப்போதும் போல்
வெள்ளுடையில் கிளம்புகிறார்கள்
செவிலியர் எனும் அந்த
சிறுதெய்வங்கள்!!

13 கருத்துகள்:

  1. இவர்கள் வெள்ளுடை தேவதைகள் அல்ல தெய்வங்கள் அதனால்தான் யார் பேச்சையும் கிண்டலையும் காதில் வாங்கி கொள்ளாமல் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நர்ஸை கிண்டல் பண்ணுற Jokes படிக்கும் போது நொந்து வரும் சகோ! நன்றி!

      நீக்கு
  2. செவிலியர் எனும் அந்த சிறு தெய்வங்கள்....

    எல்லா நேரத்திலும் போற்றப்பட வேண்டியவர்கள்.

    அவர்களின் உழைப்பும், தன்னலமற்ற சேவையையும் மதிக்கத் தெரிய வேண்டும் நம் மக்களுக்கு.

    நல்லதொரு கவிதை. பாராட்டுகள் மைதிலி.

    பதிலளிநீக்கு
  3. சேவையே சிறந்தது என்று வாழும் தெய்வங்கள்...

    பதிலளிநீக்கு
  4. மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள் உங்கள் கவி நடையில், சகோதரி மைதிலி.

    செவிலியர் பணி என்பது மிக மிகச் சிரமமான உன்னதமான பணி. மக்கள் அவர்களை மதிக்கக் கற்க வேண்டும்.

    நலம்தானே? நாங்கள் நலம். எல்லோரையும் போல் ஊரடங்கில்.

    துளசிதரன்

    இப்போது மருத்துவர்களையும் விட இவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் கண்டிப்பாகத் தெய்வங்கள்தான். தொற்றுபற்றியவர்களை செவிலியர்கள் தான் அருகில் சென்று கவனிப்பது எலலமே. அது போன்று மருத்துவமனை சுகாதார ஊழியர்கள்..இன்னும் சொல்ல இருக்கிறது. வேண்டாம் இங்கு..

    சிறுதெய்வங்கள்? நோ....பெரிய தெய்வங்கள்!

    அருமை மைத்து

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவரும் தனித்தனியே கருத்திட்டிருக்கிறீர்கள்!! மிக்க நன்றி கீது & துளசி அண்ணா, நீங்க சமீபத்தில் C.M fundக்கு Donate பண்ணினதை பார்த்தேன். Hats off அண்ணா!

      நீக்கு
  5. பதில்கள்
    1. தமிழ் மொழி கொடுக்கும் ஆதரவு!!!! மிக்க நன்றி!

      நீக்கு
  6. யதார்த்தங்களை வடித்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  7. எல்லா வேலைகளையும் எல்லாரும் மனமுவந்து செய்ய முடியாதுங்க. எல்லாருக்கும் பசிக்கும். வேளைக்கு சாப்பிடனும். ஆனால் வேலையினு வரும்போது ஒரு சிலரால் ஒரு சில வேலைகள இலகுவாக செய்ய இயலும். ஒரு சிலரால் அது முடியாது. டாக்டர், நர்ஸ் தொழிலெல்லாம், அதற்கேற்ற மனநிலை உள்ளவங்கதான் அந்த வேலைக்கு படிக்கனும், போகனும். இங்கே யு எஸ்ல் டாக்டர், ப்ரஃபெஸர் எல்லாம் தன் பிள்ளயும் அதே தொழில் பண்ணனும்னு எதிர்பார்க்க மாட்டாங்க. அவங்க பேசும்போது அதிசயமா இருக்கும். அவங்களுக்கு எந்தத் தொழில் ரசித்துச் செய்ய இயலுதோ அதை செய்யட்டும் என்பார்கள். நாம் ரசித்து செய்யும், நம்மலால இகுவாக செய்ய இயலும் வேலைக்குத்தான் போகனும் என்பார்கள். நர்ஸாகனும்னா அதற்கேற்ற மனநிலை இருக்கனும். பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி ஏற்படும் மனநிலை பெற்றவர்களாக இருக்கனும். பணம் சம்பாரிக்க டாக்டர் ஆவது, குடும்ப சூழலை சமாளிக்க நர்ஸாவதெல்லாம் நடக்கத்தான் செய்கிறது. அதுபோல் சூழலுக்காக இவ்வேலைகளில் அவர்கள் சென்றால், பிர்ச்சினை அவர்களுக்குத்தான். விருப்ப மில்லாத ஒரு வேலையை, தன்னால சகிக்க முடியாத ஒரு வேலையை எடுக்கும்போது வாழ்க்கை முழுவதும் அவங்களுக்கு சித்ரவதை தான்.

    People are different. Two wonderful people have different level of tolerance, motivation etc. One has to choose her/his career carefully based on who and what she/he really is.

    பதிலளிநீக்கு