சனி, 18 ஏப்ரல், 2020

காணாமல் போன கவிதைகள்!

 கறுப்புநிறத்து
இதயவடிவ பலூன் ஒன்றை
மணிக்கட்டில் கட்டியபடி
சென்று கொண்டிருந்தவனுக்கு  அதிகபட்சம் பதினாறு வயதிருக்கும்



சேலையின் நிறத்திலேயே
காதருகே ரோஜாக்கள் சூடும்
நவரோஜ் டீச்சரை நினைவுபடுத்துகிறது
அவன் சட்டை

கொடுப்பதற்காக
ரோஜாக்கள் சுமப்பவனுக்கான நளினமும், தயக்கமும் போலன்றி
ரோஜாக்கள் பெற்றுவந்தவனுக்கான
கர்வம் இருந்தது
அவன் நடையில்

விண் நோக்கி நின்ற
அந்த ஹீலியம் பலூன்
ஒரு செங்கோலைப்போல்
உயர்ந்திருந்தது

அலுவலகக் காலையில்
கைபேசிக்கேமராவில்
சிறைசெய்ய முடியாத அவனை
அந்திமாலையில்
ஒரு கவிதைக்குள்ளேனும்
வரைய முயல்கிறேன்

அந்த கறுப்பு நிற
இதயவடிவ பலூனை
நுகர்ந்தபடி சென்று
இன்னும் வீடு திரும்பாத
என் கவிதைகள் ஒன்றேனும்
உங்கள் கண்ணில் பட்டால்
நான் காத்திருப்பதாக சொல்லி
அனுப்பிவையுங்கள்
நண்பர்களே!!


17 கருத்துகள்:

  1. திண்டுக்கல்லுக்கு வந்துள்ளது...

    கவிதைகளை ரசித்து விட்டு அனுப்புகிறேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ!! அங்கயும் வந்ததா!!! அனுப்பி வெச்சுடுங்க அண்ணா!!😃

      நீக்கு
  2. நல்லாருக்கு மைத்து, கவிதைகள் ஒன்றென்ன எல்லாமே கண்ணில் பட்டு அனுப்பி வைச்சோமே இன்னும் வீடு வரலியா!!! ஓ அதுக்கும் ஊரடங்குச் சட்டமோ?!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. கவிதைகளைத் திருப்பி அனுப்ப மனம் வரவில்லையே..எங்கள் வீட்டிலேயே மகிழ்வைப் பரப்பட்டும்..அதில் நானும் கற்றுக்கொள்கிறேன் டியர் :)

    பதிலளிநீக்கு
  4. கொஞ்சம் பொறூமையா இருங்க. ஹீலியம் ஸ்ளோவாக எஸ்கேப் ஆனதும் பலூன் கீழே வந்துவிடும், கவிதைகள் சுயநினைவுக்கு வந்து உங்களத் தேடி வரும். :)

    பதிலளிநீக்கு
  5. இந்த மாதிரி Rationalஆ scientificஆ ஆற்றுப்படுத்த உங்களால தான் முடியும் வருண்!! Moreover imho chemistry is your cup of tea😄

    பதிலளிநீக்கு