உங்களில் எத்தனை பேர் selfie எடுப்பீங்க? நம்ம ஆட்களில் பலர் பாஸ்போர்ட் போட்டோ மாதிரி தான் selfie எடுக்கிறோம். பொண்ணுங்க உதட்டை குவித்தோ, ஆண்கள் முறைத்தபடியோ இந்த சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைத்த செல்பி க்களை கடந்த ஆண்டில் ஒருமுறை கூட பார்த்ததில்லைனா நீங்க போன வருடம் முழுக்க பக்திமலரோ, பங்குச்சந்தையோ மட்டுமே படித்திருக்கிறீர்கள். ஓகே ஓகே. மேட்டர் இது தான் இந்த கொஞ்சம் English முழுக்க selfie terms அப்புறம் கொஞ்சம் selfie tips.
SMIZE
உதடுகளால் சிரிக்காமல், கண்களால் சிரிக்கும் முறையை smize வகை selfie என்கிறார்கள். அதாவது smile with eyes.
DUCK FACE உதடுகளை வாத்து போல குவித்து எடுக்கும் selfie தான் duckface. அது எல்லோருக்கும் பொருந்துதா என்ன?? பல பேரை அந்த pose ல பாக்க சகிக்கலை. எனக்கென்னவோ இது குழந்தைகளுக்கு தான் அவ்ளோ அழகா பொருந்துதுன்னு தோணுது.
SQUINCH இது எல்லோருமே try பண்ணலாம். out of fashion என்றாலும் மிக அழகான செல்பிக்கு உத்திரவாதம். அதாவது கேமராவை முறைத்துப்பார்க்காமல் கொஞ்சம் கண்ணை ஓரத்தில் சுருக்கி, கனிவாய் பார்த்ததே squinching. இந்த வகை செல்பியில் கொஞ்சம் tough ஆன ஆட்கள் கூட நட்பாய் தெரிவார்கள்.
TEEJ மேல் பல்வரிசை தெரிவது போல, நாக்கை பல்லுக்குப் பின் அழுத்தி சிரிப்பது teejing. தமிழ் சினிமா ஹீரோயின்கள் பல காலமாய் செய்வது.
PRUNING prun எனும் சொல்லை உச்சரித்த படி selfie எடுப்பது pruning. உங்களுக்கு SAY CHEESE நினைவுக்கு வருகிறதா? அதெல்லாம் black and white காலம்:)
FISH GAPE இது தான் இந்த வருட ஹாட் ஹோட்டஸ்ட் செல்பிவகை. மீன் வாயை திறந்திருப்பது போல சற்றே உதடுகளை திறந்தபடி மேல் பல் வரிசை தெரியும்படி, கண்களை squinch செய்து எடுக்கும் selfie தான் fish gape.
ஜோலி படம் போடமா ஒரு ஜோலியும் முடியமாட்டேங்குது:( |
சரி நமக்கு smize, அப்புறம் squinch தான் ஒத்துவரும்ன்னு பலரும் முடிவு பண்ணிருப்பீங்க என்னை போல:) இப்போ ரெண்டே ரெண்டு tips
1.செல்பி எடுக்கும் போது கேமராவுக்கு நடுவே வருவது போல நிக்காதீங்க. வலது ஓரத்தில் சற்றே முகத்தை ஏதேனும் ஒருபுறம் திருப்பி (வலது புறமோ, இடது புறமோ உங்களுக்கு எந்த பக்கம் திருப்தி தருகிறதோ அந்த பக்கம்) லேசாக புன்னகைத்தபடி படத்தை எடுங்கள்.
2. நாம நம்மள மாதிரி இருக்கிறது தான் அழகு, so எந்த style தேர்ந்தெடுத்தாலும் அதில் நாம அவங்கள மாதிரி இருப்போமா என குழம்பாமல், தன்னம்பிக்கையோட செல்பிஎடுங்க. நம்மை நாமே மதிக்கலைனா, கொண்டாடலேன்னா அப்புறம் யாரு மதிச்சா தான் என்ன?
கொஞ்சம் English part xi க்கு இங்கே சொடுக்குங்க
தங்கள் பதிவுகள் மனதை இலேசாக்குகின்றன சகோதரி.நன்றி
பதிலளிநீக்குஅம்புட்டு காமெடியாவா இருக்கு!?!?! ஹஹஹ. நன்றி அண்ணா.
நீக்குவாக்களிச்சுட்டேன்! இன்று என்னமோ தம சீக்கிரமே வாக்கு விழுந்துடுச்சு! பெரும்பாலும் சுத்திகிட்டே இருக்கும்!
பதிலளிநீக்குநான் selfie பெரும்பாலும் எடுப்பதில்லை. எப்போதாவது எடுத்தாலும் என் மகன் "இப்படி ரொம்ப 'க்ளோஸ் அப்'ல எடுக்காதப்பா" என்பான்! ஒரு கையில் எடுக்கத் தெரியாது எனக்கு. இரண்டாவது கையின் உதவியும் வேண்டும்!
Selfie tips இன்னும் நிறைய இருக்கு. படிப்பவர்களுக்கு Bore அடிக்குமேன்னு தான் விட்டுட்டேன். இப்போ ஒரு கையால் செல்பி எடுக்க Selfie stick எனும் சாதனம் கிடைக்கிறதே சகோ.
நீக்குzombie selfie பற்றி எதுவும் குறிப்பு இல்லையா?
பதிலளிநீக்குஅந்த teejing பெண்களுக்கு மட்டுமே உரித்தானது போலும்.
சுவாரஸ்யமாக இருந்தது. பாராட்டுக்கள்.
Zombie, sparrow pout ரெண்டையுமே விட்டுட்டேன். Funny face என்றும் ஒரு option. இருக்கு. கொஞ்சம் தயக்கத்தோடே எழுதிய பதிவு சகோ. but நல்ல Response. மிக்க நன்றி அண்ணா
நீக்குஎல்லா ஆசிரியர்களும் களத்தில் இறங்கி போராடி ஜெயிலுக்கு சென்று கொண்டிருக்கும் போது இந்த டீச்சர்மட்டும் பாடம் நடத்துகிறார். இவருக்கு போராட்டக் குழுவினர்(மது) சார்பாக கடும் கண்டணத்தை தெரிவித்து கொள்கிறோம்
பதிலளிநீக்குநேத்து போராட்டத்துக்கு போய்ட்டு வந்து தான் பதிவு எழுதினேன். இப்போ கைது செய்யப்பட்ட நிலையில் பதில் கொடுக்கிறேன். எது எப்படி இருந்தாலும் பாடம் முக்கியம் boss. :)
நீக்குபோராட்டத்தில் கலந்து கொண்டதற்கான போட்டோ ஆதாரங்கள் தேவை
நீக்கு’செல்பி’ - ஆர்வக் கோளாறு அதிகம் இருந்தால், உயிருக்கே ஆபத்தான விஷயம்.
பதிலளிநீக்குஎதுவும் அளவோடு இருந்தால் ஆபத்தில்லை தானே அய்யா :)
நீக்குஅந்தப் புள்ள செல்வி என்னடா பாவம் பண்ணிச்சு என்ற விஜய்காந்த் படம் போட்டு வந்த ஒரு Image தான் நினைவுக்கு வருகிறது.....
பதிலளிநீக்குஅந்த போட்டோவும் போடலாம்னு தான் இருந்தேன் அண்ணா :)
நீக்குவித்தியசமான பதிவு .........
பதிலளிநீக்குநன்றி சகோ :)
நீக்குநமக்குத் தெரிந்ததெல்லாம் - அந்தக் கால B/W (CHEESE) தான்..
பதிலளிநீக்குஇருந்தாலும் நிறைந்த தகவல்கள்..
வாழ்க நலம்..
.மிக்க நன்றி அய்யா.
நீக்குஎனக்குப் பிடிக்காத ஒன்று!
பதிலளிநீக்குஆனா, இன்றைய பலருக்கும் பிடிச்சுருக்கே!
நீக்குவிதம் விதமாய் செல்பி என்று தலைப்பு வைத்திருக்கலாமே ,வாக்கை அள்ளியிருக்கலாம் :)
பதிலளிநீக்குஇனியாச்சும் மாத்துறேன். எதிர்கால சந்ததிகள் வரலாறை தெரிஞ்சுக்கட்டும். தேங்க்ஸ் பாஸ்!
நீக்குசெல்ஃபி!! நாங்கள் இருவருமே எடுத்ததில்லை...ஆர்வம் அவ்வளவு இல்லை....இருவர் ஃபோனும் அப்படி...ஆனால் மற்றவர்கள் எடுக்கும் போது சேர்ந்ததுண்டு. ஸோ இந்த வார்த்தைகள் எல்லாம் புதுசு..
பதிலளிநீக்குகீதா: ஹஹஹ செல்ஃபி எல்லாரும் எடுக்கத்தான் செய்வாங்க ஆனா நீங்க பதிவே போட்டுட்டீங்க...இன்னும் இருக்கே செல்ஃபி வார்த்தைகள் அதெல்லாம் பார்த்ததுண்டு. ஆனால், அனுபவம் இல்லை. மற்றவர்களுடன் நின்றதுண்டு. அதுவும் ரொம்ப அரிது. ஃபோட்டோ பிறரை, இயற்கையை எல்லாம் எடுப்பேன் ரொம்பப் பிடிக்கும். ஆனால் என்னைப் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இல்லை. பிறர் அழைத்தாலும் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்...ஏனோ தெரியலை...
ஆனாலும் காலத்துக்கு ஏத்த மாதிரி மாறணும்ல அதான் இந்த வார்த்தைகளை எல்லாம் அறிந்ததுண்டு...செல்ஃபி நு கூகுள் தட்டினாலே வந்து விழுதுப்பா எக்கச்சக்க தகவல்கள்...புகைப்படங்கள் உட்பட..
விஜயகாந்த் ஃபோட்டோ போட்டுருக்கலாமோ...செம காமெடியா இருந்துருக்கும்...இல்ல
பதிலளிநீக்குகீதா
செல்ஃபி அது இதுனு சொல்றீங்க. எனக்கு ஒண்ணும் புரியலைனு சொல்லி நான் தப்பிச்சுடுறேன் :)))
பதிலளிநீக்குஆஹா காலத்திற்கு ஏற்ற பதிவா மா,,
பதிலளிநீக்குநல்லா விதவிதமா இருக்கு,
மிக நல்ல கட்டுரை! ஸ்க்வின்ச் பற்றிச் சில நாட்களுக்கு முன் மேற்படி அதே படத்துடன் 'ஆனந்த விகட'னில் படித்தேன். ஆனால், இன்னும் இத்தனை வகைகள் இருப்பது இப்பொழுது நீங்கள் சொல்லித்தான் தெரியும். நன்றி!
பதிலளிநீக்குஆனால், ஓர் ஐயம்! (அதுதானே பார்த்தேன்!) ஆங்கிலம் கற்றுக் கொடுக்க இவ்வளவெல்லாம் வினைகெட (மெனக்கெட) வேண்டியிருக்கிறதா என்ன? ஆங்கிலம் இன்று தவிர்க்க முடியாத மொழி. நீங்கள் எவ்வளவுதான் வறட்சியாகக் கற்றுக் கொடுத்தாலும் பாடுபட்டுக் கொற்றுக் கொள்ள நம்மவர்கள் ஆயத்தமாய் இருக்கிறார்களே! (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்). ஒருவேளை, அப்படி இருந்தாலும் சுவைபடக் கற்பிப்பது நல்லதாயிற்றே என நினைக்கிறீர்களோ?
நமக்கெல்லாம் அடுத்தவர் பார்த்துப் பார்த்துப் புகைப்படம் எடுத்தாலே முகம் வெகு அழகாயிருக்கிறது (!). இதில் தாமி (selfie) வேறா! சரி, முயன்று பார்ப்போம்!
செல்விக்கு இத்தனைப் பெயர்களா!! :-)
பதிலளிநீக்குLearn English with the latest trend! Awesome dear!
சிரிப்பில் இத்தனை வகைகளா.அருமை
பதிலளிநீக்குசெல்ஃபி மோகத்தில் உயிரையே பறி கொடுத்தவ்ர்கள் பற்றி குமுதத்தில் படித்தேன்.
குல்பி விரும்பும் குழந்தைக்கும் ஏறியதே
செல்ஃபி மோகம் தலைக்கு
ஆஹா இவ்ளோ இருக்காம்மா இதுல..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசெல்ஃபி பத்தி அருமையான பதிவு....
செல்ஃபி பத்தி இவ்வளவு விஷயங்கள்
தெரியப்படுத்தியமைக்கு நன்றி...
அன்புடையீர் வணக்கம்! என்னுடைய வலைத்தளத்தில் ‘தொடரும் தொடர் பதிவர்கள்’ என்ற வலைப்பதிவினில் உங்களது வலைத்தளம் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
பதிலளிநீக்கு