சமீப காலமாக இயல்பாய் படமெடுக்கிறேன் பேர்வழின்னு மூணு மணி நேரமும், டிக்கெட் காசும் தண்டமோ என நொந்து போக செய்யும் படங்கள் பல. கொஞ்சம் ஊன்றி கவனித்தால், கதையை தப்பான ட்ரீட்மென்டில் படமாக்கி இருப்பார்கள். அல்லது சுமார் கதையை திரைக்கதையால் தூக்கி நிறுத்துகிற படங்களும் உண்டு.
படங்கள் தான் இப்படி என்றால் சீரியல்கள். அடேயப்பா!!! மிடியல சாமி. ஏன் பாக்குறீங்க என கேட்பவர்கள் கண்டிப்பாக வீட்டின் அப்படக்கராக தான் இருப்பீர்கள். பின்ன இங்க என்னைபோல எத்தனைபேர் அம்மாவுக்காகவும், மனைவிக்ககும் வேறு வழியில்லாமல் இரவு உணவை அந்த சீரியல் கொடுமைகளோடு முடிக்கவேண்டியிருக்கிறது. நம் வீட்டில் அத்தைக்காக இந்த அட்ஜஸ்ட்மெண்ட். வெள்ளி,செவ்வாய் ன விளக்கு ஏத்துறியா? என என்னை கேட்காத அத்தைக்காக இன்னும் பல சீரியல் கொடுமைகளை கூட அனுபவிக்கலாம் இல்லையா.
இந்த சீரியலில் டார்ச்சர்களில் கமர்சியல் ப்ரேக் தான் என் இளைப்பாறல். அதிகபட்சம் ஐந்து நிமிட விளம்பரத்துக்கு என்னமா வேலை பார்க்கிறார்கள்!! ப்ரண்ட் பெயரை நினைவில் நிறுத்தும் அவர்கள் முயற்சியில் சில சமயம் கலைநயமும், பொதுஅறிவும் இன்னும் பிற இலவச இணைப்புகளும் கிடைக்கும். அதுபோல கடந்த சில நாட்களாக ரெண்டு விளம்பரங்களை குறிப்பிடத் தோணுது.
எனக்கு மட்டும் ஏன் இப்படி என யாராவது தொடங்கினாலே எரிச்சல் வரும் எனக்கு. முடிந்தவரை அந்த எண்ணத்தில் இருப்பவரை அதில் இருந்து வெளியே கொண்டுவர ஆறுதல் கூறுவேன். முடியலேன்னா எஸ்கேப். காதுக்கு பில்டர் மாட்டிகொண்டுதான் அவர்களோடு பேசத்தொடங்குவேன். இப்படி பட்ட எனக்கு இந்த இன்சுரன்ஸ் விளம்பரம் ரொம்ப , ரொம்ப பிடிக்கத்தானே செய்யும். மனைவி இறந்து போகிறாள். மகனோ ஆட்டிசம் குழந்தை அவனை குறைவில்லாமல், சலித்துக்கொள்ளாமல், அந்த அப்பா வளர்கிற விதத்துக்கு நூறு லைக்ஸ்.
தீபிகாவை ஆக்சிஸ் பாங்க் விளம்பரத்தில் பார்த்தவுடன் மறுபடி ஒரு கிளாமர் டால் விளம்பரம் என்றே கடக்க நினைத்தேன். ஆனால் அந்த பாங்கின் ஒவ்வொரு சேவையையும் சொல்லும் ஒவ்வொரு விளம்பரமும் சூப்பர். வெற்றி பெற்று, பிரபலமான பின் ஒருவர் நண்பர்களோடு எப்படி, இயல்பா பழகவேண்டும் என்பதை ரொம்ப எளிமையா சொல்லிருக்காங்க. ஈரமான இதுபோலும் விளம்பரங்கள் ஏற்படுத்தும் மென் அதிர்வுகள் நீர்வளையங்கள் போல விரியட்டும்.
தீபிகாவை ஆக்சிஸ் பாங்க் விளம்பரத்தில் பார்த்தவுடன் மறுபடி ஒரு கிளாமர் டால் விளம்பரம் என்றே கடக்க நினைத்தேன். ஆனால் அந்த பாங்கின் ஒவ்வொரு சேவையையும் சொல்லும் ஒவ்வொரு விளம்பரமும் சூப்பர். வெற்றி பெற்று, பிரபலமான பின் ஒருவர் நண்பர்களோடு எப்படி, இயல்பா பழகவேண்டும் என்பதை ரொம்ப எளிமையா சொல்லிருக்காங்க. ஈரமான இதுபோலும் விளம்பரங்கள் ஏற்படுத்தும் மென் அதிர்வுகள் நீர்வளையங்கள் போல விரியட்டும்.
அந்த முதல் விளம்பரம்...!! அது விளம்பரமே இல்லை. குறும்படம்! இப்பொழுதுதான் முதன்முறை பார்க்கிறேன். அருமை! அருமை! பகிர்ந்ததற்கு நன்றி!
பதிலளிநீக்குஇரண்டாவது விளம்பரம், பார்த்ததுதான். தீபிகா படுகோன் நடிக்கும் ஆக்சிசு வங்கி விளம்பரம் இதே போல் இன்னொன்று இருக்கிறது; கண்டிப்பாகத் தாங்கள் பார்த்திருப்பீர்கள். தீபிகா அவர்களின் மேலாளரோ அல்லது உதவியாளரோ தெரியாது, தனக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாகக் கூறி இனிப்புக் கொடுக்க வருவார். மிகவும் மகிழ்ச்சியடைந்து, அப்படியானால், விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகும்படி தீபிகா சொல்வார். ஆனால் அவரோ, வங்கிக்குப் போக வேண்டும் என்று (அல்லது அது போல் ஏதோ ஒன்று) கூறி விடுமுறை எடுக்க மறுப்பார். உடனே, "அதனாலென்ன, வங்கியை இப்பொழுது கைப்பேசியிலிருந்தே அணுகலாம்" என்று கூறிக் கட்டாய விடுமுறை கொடுத்து அவரை அனுப்பும் தீபிகா, அவர் சற்று நகர்ந்தவுடன் திரும்ப அழைத்து "மகள் பிறந்திருக்கிறாளல்லவா" என்று கூறிப் புன்சிரித்தபடி, அப்பொழுதுதான் இனிப்பையே எடுத்துக் கொள்வார். அந்த விளம்பரம் கூட மிக மிக நன்றாக இருக்கும். பெண் குழந்தைகள் பிறப்பதைக் கொண்டாட வேண்டும் என்று துளிக்கூடப் பரப்புரைத்தனமே இல்லாமல் கூறும் அந்த விளம்பரம் மெச்சத்தகுந்த மேதாவித்தனம் கொண்டது! இருவருமே அருமையாக நடித்திருப்பார்கள்.
வேலைக்குப் போகும் மனைவிக்காகக் குழந்தையைத் தான் பார்த்துக் கொள்ளும் கணவரை நாயகனாகக் கொண்ட ரேமண்ட்சு விளம்பரம், கால் இல்லாத தன் பெண்ணை நாட்டிய வகுப்பில் சேர்த்துப் பெருமிதம் கொள்ளும் தந்தையைக் காட்டும் இன்னொரு காப்பீட்டு நிறுவன விளம்பரம், தன் மகனின் தாய் ஏக்கத்தைத் தீர்த்து வைப்பதற்காக இரவோடிரவாக மனைவியின் இருப்பிடத்துக்கு மகனை அழைத்துச் செல்லும் அப்பாவின் தந்தைமை காட்டும் மகிழுந்து விளம்பரம் என அண்மைக்காலமாகச் சில விளம்பரங்கள் வெகுவாகவே கருத்தைக் கவர்கின்றன.
இதில் வியப்பு என்னவென்றால், நான் ஏறத்தாழ ஒரு மாதமாகச் சில மோசமான விளம்பரங்களை விமர்சிக்கும் பதிவு ஒன்றை எழுத எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு நேர்மாறாகத் தாங்கள் விளம்பரங்கள் பற்றி இப்படி நேர்மறையாகப் பதிவு வெளியிட்டிருக்கிறீர்கள்! ஆனால், இதுவும் உண்மைதான். :-)
வாங்க சகா, வெகு நாள் கழித்து வந்திருகிறீர்கள்!! மிக்க மகிழ்ச்சி!
நீக்கு**அது விளம்பரமே இல்லை. குறும்படம்!** ஆம் சகா. நானும் எட்டாம் வகுப்பின் கற்றல் குறைபாடுகள் தொடர்பான பாடம் ஒன்றிற்கு இந்த விழியத்தை கற்றல் ஊக்கியாக பயன்படுத்தினேன்.
தீபிகாவின் அந்த விளம்பரமும் பிடித்திருந்தபோதும், திரும்பத்திரும்ப பெண்ணியம் பேசுகிறேன் எனும் வட்டத்துக்குள் சிக்குவதை தவிர்க்க இப்படி செய்தேன். ஆனா நீங்க அந்த விளம்பரத்தை குறிபிட்டுவிட்டீர்கள்:)
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில விளம்பரங்களை நான் தவறவிட்டிருக்கிறேன்:(( பார்த்துவிட்டு சொல்கிறேன்.
**
இதில் வியப்பு என்னவென்றால், நான் ஏறத்தாழ ஒரு மாதமாகச் சில மோசமான விளம்பரங்களை விமர்சிக்கும் பதிவு ஒன்றை எழுத எண்ணிக் கொண்டிருந்தேன்.** நிலவன் அண்ணாவின் கருத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள் சகா:)) விரிவான, அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி சகா!
//வெகு நாள் கழித்து வந்திருகிறீர்கள்!!// - அவ்வளவு நாள் ஆகிவிட்டதா?
நீக்கு//நிலவன் அண்ணாவின் கருத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்// - கண்டிப்பாக!
என்னமாதிரிதான் நீங்களுமா ? தினந்தோறும் இந்த சன்டீவி கொடுமைய பார்க்கமுடியாம உள்ளுக்குள்ளே கதறி ஆளும் ஆட்களில் நானும் ஒருவன் . என்ன செய்ய ? 10 மாதம் சுமந்த தாய்க்காக தினமும் 1 மணிநேரம் அந்த கொடுமையை சுமக்கவேண்டியுள்ளது . விளம்பரங்களைப்பார்த்தால் டி.ஆர்.பி எகிறி , இவனுங்க இஷ்டத்துக்கு இன்னும் நாடகத்தின் வழியே என்னை ரத்தஅழுத்தநோயாளியாக மாற்றிவிடுவார்கள் என பயந்து , விளம்பரங்களை ஸ்கிப்பிவிடுவேன் . விளம்பரங்களில் இருக்கும் கலைநயத்தை வெளிக்காட்டியமைக்கு நன்றி .
பதிலளிநீக்குதம+
வாங்க சகோ
நீக்கு**என்னமாதிரிதான் நீங்களுமா ? தினந்தோறும் இந்த சன்டீவி கொடுமைய பார்க்கமுடியாம உள்ளுக்குள்ளே கதறி ஆளும் ஆட்களில் நானும் ஒருவன் ** ஹா..ஹா...y blood ?? same blood:))
**என்ன செய்ய ? 10 மாதம் சுமந்த தாய்க்காக தினமும் 1 மணிநேரம் அந்த கொடுமையை சுமக்கவேண்டியுள்ளது** தங்கமான பிள்ளை !! வாழ்த்துகள் சகோ:)
வணக்கம்
பதிலளிநீக்குவிளம்பரம் இல்லாமல் எந்தப்பொருட்களும் விலை போகாது என்பார்கள்... விளம்பரத்தால் கவரப்படுவர்கள்தான் இன்று அதிகம் நல்ல கருத்தை சொல்லி இரசிக்கவைக்கும் குறும்படம்
த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் சகோ:)
நீக்கு//இப்படி பட்ட எனக்கு இந்த இன்சுரன்ஸ் விளம்பரம் ரொம்ப , ரொம்ப பிடிக்கத்தானே செய்யும். மனைவி இறந்து போகிறாள். மகனோ ஆட்டிசம் குழந்தை அவனை குறைவில்லாமல், சலித்துக்கொள்ளாமல், அந்த அப்பா வளர்கிற விதத்துக்கு நூறு லைக்ஸ்.//
பதிலளிநீக்குபொறுமையான பொறுப்புள்ள தகப்பன்.
மிகவும் அருமையான காணொளி.
பகிர்வுக்கு நன்றிகள்.
வாங்க சார்
நீக்குஆம் அவர் எவ்ளோ பொறுப்பான அப்பா இல்லையா!!
மிக்க நன்றி சார்!
விளம்பரங்கள் வந்தாலே உடனே அடுத்த சானல்ஸ் தாவும் நம்ம ஆளுங்க மத்தியில் அதை ரசிக்கும் வித்தியாச அனுபவம்.
பதிலளிநீக்குவாங்க சார்
நீக்குமிக்க நன்றி!
ரெண்டு மூணு நாளா இந்த சீரியலில் என்ன தான் இருக்கு என்ற ஆராய்ச்சியின் பொருட்டு ஒவ்வொரு சீரியலை பார்த்துக் கொண்டு வருகின்றேன்.
பதிலளிநீக்குஅடடா!!! உங்களுக்குமா இந்த நிலை:((( ஏன் அண்ணா இந்த தற்கொலை முயற்சி!!! :)))) வெகுநாள் கழித்து கருத்து சொன்னதற்கு மிக மிக நன்றி அண்ணா!
நீக்குசீரியல்களில் மூழ்கியவர்கள் அம்மாவுக்காகவும் மனைவிக்காகவும் என்றாலும் இங்கும் எங்கள் அறையில் ஒருவர் இரவ பனிரெண்டு மணியானாலும் நாதஸ்வரம் பார்க்காமல் படுப்பதில்லை... சரி...
பதிலளிநீக்குஇரண்டு வீடியோக்களும் அருமை தங்கை.
அட கொடுமையே!! அங்கேயுமா நாதஸ்வர கொடுமை!!:(((
நீக்குமிக நன்றி அண்ணா!
சில சமயங்களில் இது போன்ற மனத்தைக் கவரும் விளம்பரங்கள் வந்து விடுகின்றன. கின்லி தண்ணீர் விளம்பரப் படமும் நன்றாக இருக்கும். தந்தையிடம் பொய் சொல்லிவிட்டு சுற்றுலா செல்லும் பெண் உண்மையை மறைக்க முடியாமல் தந்தையிடம் சொல்லி விடுவது எனும் கரு. சமீபத்தில் நான் ரசித்த விளம்பரம் அது.
பதிலளிநீக்குகின்லி தண்ணீர் விளம்பரத்துக்கு நான் கொடுத்த கமென்ட்"பசங்க தண்ணிய போட்டா உண்மையா சொல்லுவாங்க, இந்த பொண்ணு தண்ணி குடிச்சுட்டு உண்மையா சொல்லுதுப்பா:)))) எனக்கும் பிடித்த விளம்பரம் சகா:) மிக்க நன்றி!
நீக்குமுதல் விளம்பரம் கலங்க வைத்தது...
பதிலளிநீக்குஆம் அண்ணா கலங்க வைத்தது. கருத்துக்கு நன்றி அண்ணா!
நீக்குஒவ்வொரு விளம்பரமும் சிறு சிறு குறும்படங்களே அவைகள் வியக்கவும் வைக்கும் நெகிழவும் வைக்கும்
பதிலளிநீக்கு**ஒவ்வொரு விளம்பரமும் சிறு சிறு குறும்படங்களே அவைகள் வியக்கவும் வைக்கும் நெகிழவும் வைக்கும்**ஆம் சகா!!
நீக்குரொம்ப பிஸியா??? இப்படி திருக்குறள் பின்னூட்டம் அளிக்கிறீர்களே, அதனால் கேட்டேன். ஜஸ்ட் kidding :))
சில விளம்பரங்கள் ரசனையோடு வருவதைக் காணமுடிகிறது. சில விளம்பரங்கள் பார்க்கவே மோசமாக உள்ளது. இரு நிலைகளையும் விளம்பரங்களில் காணமுடிகின்றன.
பதிலளிநீக்குவாங்க சார்
நீக்குஆமா ! ரெண்டு மாதிரியான விளம்பரங்களும் வருது:) மிக்க நன்றி!
'ப்ரண்ட் பெயரை நினைவில் நிறுத்தும் அவர்கள் முயற்சியில் சில சமயம் கலைநயமும், பொதுஅறிவும் இன்னும் பிற இலவச இணைப்புகளும் கிடைக்கும்' - ஆமாம் மைதிலி! பிர்லா சன் ஆயுள் காப்பீட்டுக் கழக விளம்பரம் மனசைத் தொட்டுவிட்டது. திரைமொழியில் தேர்ந்த இயக்குநர் இதைச் சாதித்திருக்கிறார். நண்பர் ஞானப்பிரகாசம் சொன்னது போல நானும் இதுபற்றி எழுத வேண்டும்னு இருந்தேன். நீ முந்திக்கிட்டு நான் நினைத்ததை விட அருமையாக எழுதிவிட்டாய். மோசமான விளம்பரம் ஒன்றைப்பற்றிக் கடுமையாக எழுதி நான் ஒரு பதிவு போட்டிருந்தேன் நினைவிருக்கா? ஒரே நாளில் சுமார் 1500பேர் வந்து பார்த்துவிடடார்கள்! (http://valarumkavithai.blogspot.com/search? ஏப்ரல்30, 2014.) அப்ப நினைச்சேன் ஆகா..மோசமான விளம்பரத்துக்கு நாமளும் ஒரு விளம்பரம் குடுத்துட்டமே னு. என்ன செய்ய? இந்த ரெண்டு நிறுவனங்களும் கூடத் தனியார் விளம்பரங்கள்தான்.. அரசு நிறுவனங்களில் எப்பவும் விளம்பரத்தில் மட்டுமல்ல விற்பனையிலும் முன்னிற்கும் நிறுவனம் அமுல் தான்! இது நிற்க.
பதிலளிநீக்குஇப்ப வரும் விளம்பரங்களில் என் மனசைத் தொட்ட வேறு இரண்டு விளம்பரங்களும் உண்டு “சாவி தொலைஞ்சிடுச்சா..? வாங்களேன் டீ போடுறேன்..சாவி கிடைக்கிற வரை என் வீட்டுல இருங்க..” என்று இந்துக் குடும்பத்தை அன்போடு அழைக்கும் இசுலாமியச் சகோதரி-ப்ரூக்பாண்ட் தேநீர் விளம்பரம். பிறகு ஒரு மல்யுத்தம் செய்து வெற்றிபெறும் வீராங்கனை பற்றிய காட்சியின் பின்னணியில் நெல்லை மொழியில் “பொம்பளைங்க எல்லாம் ஆம்பள கிழிச்ச கோட்டத் தாண்டக் கூடாதுவே!“ அற்புதம்..இரும்புக் குழும விளம்பரம். இதுபற்றியும் எழுதநினைத்திருந்தேன்.. கர்ர்.. நீ எழுதிட்டே..
சரி விடுரா விடுரா.. நீ எழுதினா என்ன தங்கச்சி எழுதினா என்ன? நமக்கு இருக்கவே இருக்கு தமிழ்நாட்டு மேடைகள்..
ஆமா.. உனக்குள் இருக்கும் கவிஞர் இப்படி உரைநடையா அப்பப்ப எட்டிப் பார்க்குறது உனக்குத் தெரியுதா? எனக்குத் தெரியுது. நன்றிடா.
அண்ணா
நீக்குஉங்களது அந்த விளம்பரப்பதிவு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அமுல் விளம்பரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா! அரசு விளம்பரங்கள் என்றாலே வரும் மொக்கை ஒளிப்பதிவு,மற்றும் பின்னணி இசைக்கு விதிவிலக்கு அமுல் விளம்பரம். அந்த த்ரீ ரோசஸ் விளம்பரமும் அட்டகாசமான விளம்பரம் இல்லையா அண்ணா!!
கவிதை............ ஏனோ என்னுடன் ஊடலில் இருக்கிறது. இன்னும் ஐந்து நாட்களில் தயாராகிவிடும் என நினைக்கிறேன்:)))) மிக்க நன்றி அண்ணா! நீண்ட பின்னூட்டத்திற்கும், ஆழ்ந்து ரசித்தமைக்கும்:)
த.ம. ப்ளஸ் ஒன்னு.
பதிலளிநீக்குமிகக் நன்றி அண்ணா!
நீக்குwhatsapp's பகிர்வு செய்ய பட்ட அருமையான விளம்பரம், உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்
பதிலளிநீக்குhttps://www.youtube.com/watch?v=xOeFLfBmH8o
வாங்க ராஜ்
நீக்குஉங்கள் முதல் பின்னூட்டதிற்கு நன்றி! அந்த காணொளியை அவசியம் பார்க்கிறேன்:) மிக்க நன்றி!
வீட்டில் பிள்ளைகள் கையில் ரிமோட் இருக்கும் பொழுது,
பதிலளிநீக்குஎப்படி உங்களால் விளம்பரங்களை பார்க்க முடிந்தது.என்பது வியப்பாக இருக்கிறது நண்பரே
தம +1
ஹா,,,,ஹா...ஹா...அண்ணா மறுபடி குழம்பிவிட்டீர்கள்!! இது மது அல்ல >>>மைதிலி:)) மிக்க நன்றி அண்ணா!
நீக்குவித்தியாசமான பதிவுகள்!! வாழ்த்துக்கள் டியர்
பதிலளிநீக்குவாங்க டியர்,
நீக்குநலம் தானே!:)) மிக்க நன்றி டியர்:)
முதல் படம் கலங்க வைத்துவிட்டதம்மா...அருமை..இன்று வகுப்பில் ஈக்குவல் ஈக்குவல்னு ஒரு விளம்பரம் பற்றி குழந்தைகளிடம் பேசினேன்...
பதிலளிநீக்குகுழந்தைகள் வரும் விளம்பரம் எல்லாமே சூப்பரா தான் இருக்கு இல்லையா அக்கா:)) மிக்க நன்றி!
நீக்கு***தீபிகாவை ஆக்சிஸ் பாங்க் விளம்பரத்தில் பார்த்தவுடன் மறுபடி ஒரு கிளாமர் டால் விளம்பரம் என்றே கடக்க நினைத்தேன். ஆனால் அந்த பாங்கின் ஒவ்வொரு சேவையையும் சொல்லும் ஒவ்வொரு விளம்பரமும் சூப்பர். வெற்றி பெற்று, பிரபலமான பின் ஒருவர் நண்பர்களோடு எப்படி, இயல்பா பழகவேண்டும் என்பதை ரொம்ப எளிமையா சொல்லிருக்காங்க. ஈரமான இதுபோலும் விளம்பரங்கள் ஏற்படுத்தும் மென் அதிர்வுகள் நீர்வளையங்கள் போல விரியட்டும்.**
பதிலளிநீக்குஅடடா உங்க "வீக்னெஸ்" தெரிஞ்சு "செண்டிமெண்ட்டாலா" உங்கள டச் பண்ணிட்டாங்க போல இருக்கு! :-)
வாங்க வருண்
நீக்குலேபல் பண்ணும் போது தீபிகா படுகோன் என சேர்த்தது work out ஆய்டுச்சே:)))) பின்ன ரொம்ப நாள் காணாமல்போன வருணை இப்போ கண்டுபிடுச்சுடோம்ல:))) ஹே! just kidding yaar:)) how do you do:))
இதற்கு மேல் ஆரோக்கியமாய் தொடமுடியாது மனசுகளை! வாழ்த்துகள்டா
பதிலளிநீக்குவிளம்பரங்கள் எடுப்பது ஒரு கலை . அதில் சமூக அக்கறையும் இருந்தால் நிச்சயம் அனைவரையும் கவரும். அவற்றை தேடி எடுத்து ரசித்து போட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஞானப் பிரகாசம் அருமையாக கருத்திட்டிருக்கிறார்
இணையத்தில் ரொம்ப போர் அடிச்சா யு டியுப் போய் உலக அளவில் சிறப்பான அவிலம்பரப் படங்களைப் பார்ப்பது என் வழக்கம்... பெரியபடம் குறும்படம் எடுப்பதை விட அதிகமாக விளம்பரப் படம் எடுப்பதில் தான் உழைக்கனும்ன்னு ஒரு பெரிய இயக்குனர் ஒருவர் பேட்டியில் படிச்சு இருக்கேன்...
பதிலளிநீக்குஅன்புச் சகோதரி,
பதிலளிநீக்கு‘மனிதம் பேசும் விளம்பரங்கள்’ பார்த்தேன். பொதுவாகவே விளம்பரங்கள் வருகின்ற பொழுது ஏனோ தானோ என்றுதான் பார்ப்பேன். ஒரு சில விளம்பரங்கள் நம்மைக் கவரும்!
Birla Sun Life Insurance வரும் ஆட்டிசம் குழந்தை நெஞ்சைக் கனக்க வைக்கிறான். நல்ல அப்பா... நன்றாக எடுக்கப்பட்ட( விளம்பரப்) படம்.
Axis Bank விளம்பரம் பார்த்த பொழுது... எனக்கு திருச்சி IDBI வங்கி நினைவுக்கு வந்தது. இன்முகத்துடன் (கோபப்படாமல்) உடனுக்குடன் பணியை முடித்துக் கொடுக்கும் இரண்டு பெண் ஊழியர்களைக் கண்டு (ஒருவர் மாற்றுத்திறனாளி) வியந்து போனேன்.
நன்றி.
விளம்பரப் படங்கள் பார்ப்பதில் ஒரு அலாதியான சுகம் இருக்கத்தான் செய்கிறது.
பதிலளிநீக்குபல சமயங்களில் you tube-இல் இப்படி விளம்பரங்களைத் தேடித் தேடிப் பார்ப்பது மிகவும் பிடித்த விஷயம்.
விளம்பரங்களில் மோசமானவற்றை விட்டு நல்லதை மட்டும் ரசிப்போம்... :)
ஆமாம்பா நானும் பார்த்தேன்நீங்கள் பகிர்ந்து கொண்டது அருமை.
பதிலளிநீக்குஇந்த விளம்பர பதிவை அன்றே பார்த்தும் கருத்து கொடுக்க முடியாமல் போனது எங்கள் இணையம் வேலை செய்யவில்லை, கருத்துரை இட முடியாமல்...
பதிலளிநீக்குஅருமையான விளம்பரங்கள்...நாங்களும் ரசித்துள்ளோம்....
தொலைக்காட்சியில் வருகின்ற நெடுந்தொடர் குறித்து எனக்கும் பல வருத்தங்கள் உண்டு. ஆனால் தற்போது அறுபது வயதுக்கு மேலே ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பெரியவர்களுக்கும் இந்த நெடுந்தொடர்கள் தான் ஊட்டச்சத்தாக இருக்கின்றது. ஊர் முதல் உள்ளூர் வரைக்கும் அத்தனை பேர்களிடமும் பார்த்து விட்டேன்.
பதிலளிநீக்கு