புதன், 9 ஏப்ரல், 2014
சனி, 5 ஏப்ரல், 2014
புதன், 2 ஏப்ரல், 2014
தீராத கதை சொல்லும் இரவு-ஆட்டோகிராப் பக்கங்கள் iii
ஒரு பெண்ணுக்கு இரவுப்பயணம் சாத்தியமா ?அதுவும் பதினெட்டு வயதில்! எல்லா பெண்களுக்கும் இதுகுறித்து சிறு ஏக்கமாவது இருக்கும். ஆனால் எனக்கு வாய்த்தது!
பள்ளி சுற்றுலா போறதுனா ரொம்ப பிடிக்கும். ஆனா அப்பா அனுமதிச்சதே இல்லை. எனக்கும் ரெண்டாம் முறை கேட்க சுயமரியாதை(நாங்கல்லாம் அப்பவே அப்டி!) தடுக்கும். ஆனால் ட்ரைனிங் காலத்தில் கட்டாய சுற்றுலாவாக டெல்லி செல்லும் வாய்ப்பு கிடைத்தது! டெல்லி போறோம், ஆக்ரா போறோம் கிரதவிட முதன்முறையாக தோழிகளோட ஒருவாரம் ஔடிங் !!! எங்கள் இன்ஸ்டிட்யுட் நடத்திய அமைப்பு ஒரு தொடர்வண்டியையே வாடகைக்கு எடுத்திருந்தது! so, ஸ்டேஷன்க்கு ஸ்டேஷன் ட்ரைன் நின்றாலும் வேறு புது நபர் ஏறவோ, இறங்கவோ போவதில்லை என்ற கூடுதல் பாதுகாப்பு வேறு. அந்த ஏழு நாட்களை மறக்கவே முடியாது.
அதுவொரு அழகான நவம்பர் மாதம். எனக்கு ரொம்ப பிடித்தமாதம், மழை மாதமல்லவா! தொடர்வண்டி காவிரிக்கு மேல நகர்ந்து கொண்டிருந்தது, ஹெட் போனை எடுத்து காதுக்கு கொடுத்தேன். உன்னிமேனன் நதியே !நதியே! என தாலாட்ட தொடங்க, கண் சொருகவிடாமல் மென்சாரல் முகத்தில் மோதிக்கொண்டிருக்க இறக்காமல் சொர்க்கம் செல்லும் வரம்! அதுதான் நான் அந்த பாடலை கேட்ட முதன்முறை. இப்போ அந்த பாடலை கேட்டாலும் கண்கள் மூடிக்கொள்ள, காவிரி மீது பயணித்த அந்த காலைப்பொழுதுக்கு டைம் மெசின் இல்லாமல் சென்று திரும்புவேன்.
பயணித்த இரவெல்லாம் இரவோடு விழித்திருக்கும் பந்தயம் வைத்துவைத்து த் தோற்று போவேன். உதயத்தில் சிறு அரவத்திலும் விழித்துக்கொள்ளும் என்னை பார்த்து பரிகாசம் செய்தபடி புலரும் வானம்! தனக்காக விழித்திருக்கும் எனக்காய் தீராத கதை சொல்லும் இரவு. அள்ளி அள்ளி பருகிய பின்னும் தாகம் அடங்காத விழிகள் இரவோடு உறவாடிய படியே இருக்கும்! மெள்ள மெள்ள என் தலை கோதி உறங்கவைத்துவிடும் ஒரு அன்னையை போல். ஒரு தொடர்வண்டியின் சன்னல் இருக்கையைவிட ரசனையான ஒன்று இருக்கமுடியுமா என்ன? அதுவும் மௌனம் மட்டுமே பேசு இரவில்!! இரவுக்கு ஒரு தனிமொழி உண்டு. இரவுக்கு தனி வாசனை உண்டு. இரவுக்கென ஒரு இசை உண்டு. இரவுக்காக மட்டுமே விழித்திருந்து பார்ப்போருக்கு ஒரு விருந்தோடு காத்திருந்து காத்திருந்து ஓய்கிறது இரவு! பல நேரம் அர்த்தமற்ற அக, புறகூச்சல்களில் அடங்கிபோய்விடுகிறது விசும்பும் இரவின் மௌனம்! இன்றும் அந்த சுற்றலா புகைப்படங்களில் புன்னகைக்கும் தோழிகள் எவரையும் விட வசீகரமான புன்னகையை சுமந்து நினைவுகளிலேயே தங்கிவிட்ட தோழி இரவு ! எப்போதும் அவளை நேசித்துக்கொண்டே இருக்கிறேன்!
பி.கு:சில நாட்களுக்கு முன் விகடனில் என்போலவே எண்ணம்கொண்ட ஒரு பெண்ணின்(பாதுகாப்பற்ற) இரவுப்பயனத்தின் கதை(சபீதா) மனக்குளத்தில் வீசிய கல்லால் மேலெழுந்த நினைவலைகள்!
இசை கேட்க
இதை படிச்சுட்டு இதுக்கு முந்தினபதிவை தேடும் தைரியசாலிகளுக்கு

சனி, 29 மார்ச், 2014
மின்னொளி அணைத்து மண்ணொளி காப்போம்!!(earth hour)
வணக்கம் நண்பர்களே!
இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 7000நாடுகளில் Earth Hour கொண்டாடப்படுகிறது. sunday ,monday என்பதே மறந்து போக்கும் அளவுக்கு விதவிதமான டே கள் கொண்டாடப்படும் இன்றைய சூழலில் அர்த்தமுள்ள சில கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று .

புதன், 26 மார்ச், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)