சனி, 5 ஏப்ரல், 2014

ஒரு ஐடியா சொல்லுங்க


"கதிர், முருகவேல், சுதாகர், ஸ்வேதா எல்லோரும் பிரசன்ட்டா?" என்றபடி வந்தான் தீபக். "எப்படீடா மச்சான் லேட்டா வந்தாலும் சின்சியர் மாதிரியே சீன்  போடுற?"  என்று கலாய்த்த கதிரை அசடு வழிய பார்த்துவிட்டு "மேட்டரைச் சொல்லுடா" என்றான் தீபக்.

"ஏற்கனவே சொன்னதுதான். சுரேஷ் நிஷாகிட்ட லவ்வை ப்ரொபோஸ் பண்ண புதுசா ஒரு   ஐடியா வேண்டும்", என்றாள் டீமின் ஒரே பெண் ஸ்வேதா.

"ஐடியாதானே முன்னாடியே ஒரு SMS அனுப்பியிருந்தா  நம்ம அபார்ட்மென்ட்  வாசலிலேயே நல்ல மொபைல் கடை இருக்கே, ஒரு ஐடியா கார்டை கையோட கொண்டாந்திருபேன்." என்று சுதாகர் முடிக்கும் முன்னரே அலறினான்.  கொலைகாரி, கொலைகாரி, செல்போனால் அவன் தலையில் கபடியாடிவிட்டு கோபம் குறைந்த ஸ்வேதா "காதலைச் சொல்ல ஒரு வழி சொல்லுங்க சாமிகளா" என்று செந்தமிழில் செப்பினாள்.

கவிதையா ஒரு லெட்டர் பெட்டரா இருக்குமா? இது முருகவேல், சித்தப்பு அது முரளி சார்  இதயம் காலத்து ஸ்டைல், இப்ப அதர்வாவே வந்துட்டார்.   ஒரு சிகப்பு ரோஜா ஒரு வாழ்த்து அட்டை means  க்ரீடிங் கார்ட் என்ன ஸ்வேதா ஒ.கேவா? என்றான் தீபக்.

இது மட்டும் என்ன காதலர் தினம் காலத்து டிரண்டு. பேசாமல் ஒரு S.M.S அனுப்பச் சொல்லலாம் என்றான் சுதாகர். நீ S.M.S  பண்ணுவதிலேயே இரு. ரொமான்டிக் ஐடியா சொல்லுங்கப்பா என்ற ஸ்வேதா ஆமா ஒரு பட்டுப் புடவை அல்லது நகை கிப்ட் கொடுக்க சொல்லாமா? என்று முடித்தாள்.

இதுதாண்டா பொண்ணுங்க புத்தி, இதை சாக்கா வச்சுட்டு தி.நகர்ல ஒரு ரவுண்டு வரலாம்  என்று திட்டமா? என்று ஆளாளுக்கு சவுண்டு கொடுக்க.

ரத்தத்தில் ஒரு இதயம் வரைந்து கொடுக்கலாமா? என்றான் கதிர். டே! அவனவன் நாக்கை, மூக்கையெல்லாம் வெட்டிக் கொடுக்கிற அளவு போயிட்டான் என்று அடங்கினான் சித்தப்பு முருகவேல்.

ஸ்வேதா தொண்டையை செருமிவிட்டு சொல்லத் தொடங்கினாள், "ஒரு அழகான டெடிபேர் வாங்கி நிஷாகிட்டே சுரேஷ் கொடுக்கிறான்".

இடைமறித்த தீபக் "எந்த குழந்தைக்கு என்று நிஷா நோஸ்கட் பண்ணுறா ?"
என்றான்.

ஸ்வேதா தொடர்ந்தாள், " நீ சம்மதித்தால் நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம் அடுத்த வருடம் நம் குழந்தைக்கு இந்த டெடியைக் கொடுக்கலாம் என்று சுரேஷ் சொல்வான்." இந்த அதிரடி அப்ரோச் எல்லோருக்கும் பிடித்திருந்தது.நாளைய சந்திப்புக்காக சுரேஷுக்கு ட்ரெஸ் தேர்ந்தெடுக்கப் போனான் தீபக். மீட்டிக் ஸ்பாட்டுக்காக  ஒரு ரொமாண்டிக் காட்டேஜ் ரிஸார்ட் கண்டுபிடித்தான் சித்தப்பு முருகவேல்.

பிங்க் வண்ணத்தில் அழுத்தினால் பாடல் வரும் ஒரு அழகிய டெடியை  நாளெல்லாம் தேடி வாங்கியிருந்தாள் ஸ்வேதா.

மறுநாள். சுரேஷ்க்கு ஐடியாவை விளக்கி, அவன் கையில் அந்த அழகிய பிங்க் டெடியைக் திணித்தான் கதிர். அளவான அடிகளில், இனிய புன்னகை சுமந்து நின்ற நிஷாவை சுரேஷ் நெருங்கினான். மென்மையாய் அவள் கரம் பற்றி பிங்க் வண்ண டெடியைக் அவள் கையில்....


"கட் கட் " என்று டைரக்டர் "யாருய்யா அது ஹீரோ கையில் வாட்ச் எங்கயா?"  கண்டினுவிட்டி மிஸ்ஸாகாதா? அசிஸ்ட்டென்ட் டைரக்டர்பயலுக எங்கே தொலைஞ்சீங்க என்று ஏக வசனத்தில் சத்தமிடத் தொடங்கினார். "யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை எல்லாம் என் தலையில் தான் விடியுது" என்று டைரக்டரின் கத்தலை சகித்தப்படி கதிர் அண்ட் கோ வாட்சை தேடிக்கொண்டிருந்தது ஹீரோவின் கேரவன் முழுதும்.

38 கருத்துகள்:

 1. காதல் சொல்ல வந்த நேரம் சரியில்லைப் போலிருக்கே !

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரி
  அடே சாமி இப்படி ஒரு கதையை நான் எங்கும் கேட்டதில்லை சகோதரி. சும்மா. கட்டுரை போட்டிக்கான நினைவூட்டல் பதிவிற்காக நான் விட்ட கதையை விட இது ஜோரோ ஜோர். நன்றாக இருந்தது ரசித்து படித்தேன் கடைசியில் வச்சூட்டீங்களே சஸ்பென்ஸ். நன்று. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி...

  பதிலளிநீக்கு
 3. ஹா... ஹா... ஹா...

  அருமை.... வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்

  வித்தியாசமான சிந்தனையாகத்தான் உள்ளது......நல்ல சிந்தனைகள் மலர்ந்து நல்ல பதிவுகள் உருவாக வாழ்த்துக்கள்


  நன்றி
  அன்புடன்
  ரூபன்  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. என்னம்மா தோழி நானும் ஏதோ பிள்ளை ஐடியா கேட்குதே என்ன கொடுக்கலாம் என்று
  மூளையை போட்டு குழப்பினால் .....அப்புறம் ஆஹா என் அருமை தோழி படம் பண்ணப் போறாங்களோ அப்படியும் நினைத்தேன் அதுவும் இல்லையா...... அதுவும் இல்லாமல் தங்களுக்கு கடமை தானே பிரதானம் காதலை விடவும் இல்லையாம்மா என்று பார்த்தால்ம்..ம்..ம்..ம் பாண்டியனை விடவும் மிஞ்சி விட்டது இது ..... ரசித்து சிரித்தேன் தோழி..!
  வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
 7. அடடா...இப்படி திருப்பிட்டீங்களே மைதிலி :)
  நல்ல கதை.

  பதிலளிநீக்கு
 8. ரெண்டுவாட்டி படிச்ச பிறகு தான் வெளங்குச்சு ...! இதற்குப் பேர்தான் வித்தியாசமான கதையோ ...?

  டீச்சர் இந்த மாதிரி கதையல்லாம் பசங்களுக்கு சொன்னீங்க பாவம் பசங்க :(

  மூன்றாவது பத்தியில் ன் /ல் சரிதானா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ச்சே ச்சே , இந்த ரிஸ்க் எல்லாம் ஸ்கூல் ல எடுத்தா அப்புறம் சென்னை உமா மகேஸ்வரி டீச்சர் கதை தான். நம்ம சகோக்கள் என்கிற தைரியம் தான்:)

   நீக்கு
 9. சுவையான கிளைமாக்ஸ்! சுவாரஸ்யமான கதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. சகோ, என்ன நீங்க கண்டினுவிட்டி பத்தியெல்லாம் எழுதுறீங்க?

  முதல்ல என்னமோ கதை போலன்னு படிக்க ஆரம்பிச்சா, கடைசியில சினிமா சூட்டிங்ல வந்து முடியுது.

  கூடிய சீக்கிரம் புதுகையிலிருந்து ஒரு பெண் இயக்குனரை கோடம்பாக்கம் வரவேற்கப் போகுதுன்னு சொல்றீங்க. நீங்க இயக்கப் போகிற படத்துல கதாநாயகன் பாத்திரம் எனக்குத்தான் சொல்லிபுட்டேன் ஆமா...

  இந்த பதிவை நீங்கள் எழுதினதுல எனக்கு ஒரு பிரியோஜனம் - உன்னுடைய திரைப்பட அனுபவத்தின் கடைசி பாகத்தை சீக்கிரம் எழுதுடான்னு சொல்லாம சொல்லிட்டீங்க. இந்த வாரத்தில் அதை எழுதி விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட இப்பவாச்சும் புரிஞ்சதே .சீக்கிரம் பதிவை போடுங்க சகோ:)

   நீக்கு
 11. நல்ல கதை! :))))

  கடைசில சினிமான்னு சொல்லிட்டீங்களே!

  பதிலளிநீக்கு
 12. காலச்சுவடு இதழின் நிறுவனரும் பிரபல தமிழ் எழுத்தாளருமான சுந்தர ராமசாமி சொன்னதில் ஒரு விடயம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் - “தமிழின் நல்ல எழுத்தாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள், விற்பனை எழுத்தாளர்கள் எந்திரம் போல எழுதித் தள்ளுகிறார்கள்” நீ நல்ல எழுத்தாளர் வகைதானே”? நல்ல கதையை நல்லவிதமாகச் சொல்லக் கொஞ்சம் உழைக்கணும்... அதைவிட்டுட்டு யோசனை சொல்லுங்கன்னா? குட்டிக்குட்டிக் கதையா யோசிச்சா இப்படித்தான்.. “பெரிதினும் பெரிதுகேள்” ஆசான் பாரதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது கொஞ்சம் ரிலாக்ஸ்சுக்கு. நீங்க மகிழ்ச்சி அடையிறமாதிரி ஒரு படைப்போட வருவேன் அண்ணா! மன்னுசூ

   நீக்கு
 13. அந்த டீமே மண்டைய உடைச்சுட்டு ஐடியா போட்டுக் கொடுத்தது கதையின் நாயகனுக்காக... அது சினிமா ஷுட்டிங் என்கிற க்ளைமாக்ஸ் அட்டகாசம். அசத்திட்டேள் போங்கோ மைதிலி!

  பதிலளிநீக்கு
 14. க்ளைமாக்ஸ் சூப்பர்! கதையின் ட்விஸ்டே அதுதானே! அருமை! அதுவரைக்கும் மெய்யாலுமே ஃப்ரென்ட்ஸ் ஏதொ ஐடியா செய்யுறாங்க போலனு நினியச்சு படிச்சுகிட்டு வந்து சரி டெடி பேர் வாங்கும் னிழாஎன்ன சொல்லப் போகுதோனு னினியச்சுகிட்டு இருக்கும் போது 'கட்'! அடடா...நல்ல சீன் பார்த்துகிட்டு இருக்கும் போது கரன்ட் "கட்" சொல்லுவது போல.......சகோதரி சொன்ன விதம் சூப்பர்!போங்க!

  பதிலளிநீக்கு
 15. மிக நன்றாக எழுதியிருக்கிறீங்க. கதை எழுதின விதம் மிக அருமை தோழி.வாழ்த்துக்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம்!

  ஆறுபோல் ஓடும் அழகிய சிந்தனைக்குக்
  கூறுகிறேன் வாழ்த்தைக் குவித்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 17. மிக்க நன்றி அய்யா! வருகைக்கும் ,கருத்திற்கும்!

  பதிலளிநீக்கு
 18. எண்டுல வச்சிக்கினிங்களே ஒரு டுஸ்ட்டு... சூப்பர்மே...!
  ஓகோ... அப்ப சீக்கிரமே வெள்ளித் திரை காண்டி கண்டுக்லாமா ஒங்கள...? வாய்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 19. சொல்ல மறந்துக்கினேனே... அந்த தீக்குச்சி படம் மெய்யாலுமே சோக்காக் கீதும்மே...!

  பதிலளிநீக்கு