புதன், 9 ஏப்ரல், 2014

தேவதைகள் வளர்ப்பவளின் குறிப்புகள்!

மலர்ச்செடி வளர்த்தலுக்கும்
மருதாணி இடுத்தலுக்கும்
சற்றும் குறையாதது
மகள் வளர்த்தல்!!


தளிர் சிவப்பு பாவடையில்
தங்க இழை நெளிய
குட்டி மகள்கள் எட்டுவைக்க
படத்தில் இருப்பவர்கள் மாடல்களே ?!
அதிசயத்து நிற்கும் கோயில்ரதம்!

பிஞ்சு காதுகளில் கொஞ்சும்
பிறைவடிவ கம்மல்
புன்னகைக்கும்
பிறவிப்பயன் அடைந்தெண்ணி!

அடுக்கி அடுக்கிப்பார்த்து
அயர்ந்து போகிறார் வளையல்காரர்
அவள் கைகளைவிட
அழகான வளையல் தேடி!!

அவர்கள் நடைபழகியபின் தான்
அறைகள் பூசிநிற்கின்றன
அழகியதொரு தேவதை சாயல்!!

வளரும் மலர்ச்செடியாய்
வரையும் மருதாணியாய்  -கண்ணெதிரே
வளர்கிறார்கள் மகள்கள்!!                          

36 கருத்துகள்:

 1. அட..அட..அருமையோ அருமை!!! உங்கள் செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்!
  இப்பொழுது விடுமுறையா? கலக்குங்கள் மகள்களுடன் :)
  //வரையும் மருதாணியை// 'மருதாணியாய்' தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கிரேஸ் ! இன்னும் பெரியவளுக்கு பரீட்டை முடியலை:((

   நீக்கு
 2. அன்பின் சகோதரிக்கு வணக்கம்
  ஆஹா! பிஞ்சுக்குழந்தைகளின் கொள்ளை அழகை கண்முன்னே காட்டியுள்ளீர்கள். கடினமான சூழலில் கூட அவர்களின் மலரை ஒத்த முகம் பார்க்க வேதனைகள் ப(ம)றந்து போகும் அதியசம் இதுவரை வியப்பு தானே சகோதரி. ஒரு தாயாய் குழந்தைகளின் செயல்களை ரசித்து கவியாய் தந்துள்ளீர்கள். மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ! எல்லாம் உங்க மருமகள்களை பற்றி தான்!

   நீக்கு
 3. உண்மையில் கலக்கி விட்டீர்கள். குழந்தையைப் போலவே கவிதையும் அழகு. வாரத்தைப் பிரயோகங்கள் அசத்தல்.தலைப்பு மட்டும் இன்னும் கொஞ்சம் கவிதைத் தனமாய் இருந்திருக்கலாம்
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ! //தலைப்பு//நிலவன் அண்ணாவும் இதை தான் சொல்லப்
   போகிறாரோ?

   நீக்கு
  2. இதை யாராவது சொல்லமாட்டார்களா என்றுதான் காத்திருந்தேன். (நான் மட்டுமே சொல்லிக்கொண்டு திரிவதாக ஓர் உறுத்தல் இருந்தது) நன்றி முரளி அய்யா. நான் சொன்னாக் கேட்டாத் தானே? இப்ப முரளி அய்யா சொன்னதும்தான் எனக்கு நிறைவு. இப்பயாவது கேட்டுக்கப்பா. கவிதை அழகு..என் மருமகள்களோ அழகோ அழகு. அதுக்குப் பொருத்தமா தலைப்பு வைக்கணும்னா சிரமம்தான். ஆனா அதுல தானே பொறுமையும் திறமையும் வேணும். இன்னும் யோசி

   நீக்கு
  3. முரளி அண்ணா கவனித்தீர்களா? ஏன் இளைத்த மாதிரி இருக்கிற என யாரேனும் விசாரிக்கும் போது நல்ல சொல்லுங்க சாப்பிட்டாதானே என அலுத்துக்கொள்ளும் தாயின் பரிவோடு வரும் அண்ணாவின் கருத்தை, நன்றி அண்ணா!

   நீக்கு
 4. உண்மை தான் தோழி குட்டி தேவதைகளே தான். மகள்கள் வளர்த்தல், எவ்வளவு ஆனந்தமான விடயம். நொடியில் எல்லா கவலைகளையும் மறக்கடித்துவிடும். அனுபவித்து எழுதியுள்ளீர்கள். நல்ல சிந்தனை, அழகிய வார்த்தைக் கோர்வை தோழி நன்றி !தொடர வாழ்த்துக்கள்...!
  அடுக்கி அடுக்கிப்பார்த்து
  அயர்ந்து போகிறார் வளையல்காரர்
  அவள் கைகளைவிட
  அழகான வளையல் தேடி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி இனியா! ஒரு தொழின் வருகை என்றென்றும் இனிமையானதே !

   நீக்கு
 5. பெண் குழந்தைகளை வளர்த்தலின் சுகத்தை அழகான கவிதையாய் படிக்கையில் மனம் குதூகலித்தது, நன்று,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோ , உங்களுக்கும் ஒரு தேவதை இருக்கிறாளோ?
   நன்றி அண்ணா!

   நீக்கு
 6. "எண்ணமும் வண்ணமும்" சோக்காக் கீதும்மே...!

  பதிலளிநீக்கு
 7. வளரும் மலர்ச்செடியாய்
  வரையும் மருதாணியாய் -கண்ணெதிரே
  வளர்கிறார்கள் மகள்கள்!!

  கொள்ளை அழகாய் கவிதை..!

  பதிலளிநீக்கு
 8. குழந்தைகள் கொள்ளை அழகு. அவர்கள் குட்டி தேவதைகள் தான்.
  என்ன தான் சொல்லுங்கள் பெண் குழந்தை பெண் குழந்தை தான்.

  "//அடுக்கி அடுக்கிப்பார்த்து
  அயர்ந்து போகிறார் வளையல்காரர்
  அவள் கைகளைவிட
  அழகான வளையல் தேடி!!//" -

  உங்கள் கவிதையும் அழகு தான்.
  வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 9. பசங்க ரெம்பப் பாவம் - கவிதையில கூட சிலாகிக்க மாட்டேங்குறாங்கப்பா ... பெண்ணியம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ அப்டிலாம் இல்ல, what to do? எனக்கு அவ்ளோ குட்டி பையனை வளர்த்த அனுபவம் இல்லையே!

   நீக்கு
 10. <>

  excellent lines sister," this galaxy is not beautiful with out children, especially girl children....."

  பதிலளிநீக்கு
 11. அழகுடன் வலிமையும் தருவோம் மா அருமை

  பதிலளிநீக்கு
 12. பிறைவடிவ கம்மலின் புன்னகையை ரசித்தேன் !

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/06/teachers-in-web-world.html?showComment=1403974193240#c6401072316413391899

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 14. எனக்கு இரண்டு மகள்கள். எனக்காகவே எழுதப்பட்டுள்ளதைப்போல் உள்ளது. மிக.......... மிக.......அருமை............பலமுறை படித்து ரசித்தேன். தேவதைகள் குடியிருக்கும் இடம் மகள்கள் இருப்பது. பகிற்தலுக்கு மிக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு