வெள்ளி, 25 டிசம்பர், 2015

கைப்பை - 7

சாக்லேட்
       என் பள்ளி இறுதி காலத்தில் என் தோழிகள் தல,தளபதி புகைப்படங்களுக்காக காத்துக்கொண்டிருக்க, செய்தித்தாள் வந்ததும் நான் தேடியது வேற்றொரு புகைப்படத்தை.

   அது அப்போது பெரம்பளூர் ஆட்சியராக இருந்த ராஜேஷ் லக்கானி அவர்களது படம். எனக்கு வியப்பாக இருக்கும். தினமும் மாவட்டச்செய்தி பகுதில் அவர் புகைப்படம் இருக்கும். அட! ஒரு பொதுக் கழிவறையையாவது ரிப்பன் வெட்டிக்கொண்டிருப்பார். அப்படி ஒரு செயல்புயல் திரு லக்கானி அவர்கள். சில வருடங்களுக்குப் அவர் பெயரை மறுபடி கேட்கத் தொடங்கியிருக்கிறேன். இம்முறை அவர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி. மிகுந்த இடரான பாதை தான் ஆனாலும் லக்கானி அவர்களது செயல்திறனும், ஆர்வமும் ஒளியாய் இருந்து அவருக்கு உதவட்டும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. ராஜேஷ் லக்கானி அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

க்ரீடிங்க கார்டு 


பதக்கம்
 பள்ளியில் பயின்ற காலங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு, வகுப்பை சுத்தமாய் வைத்துகொள்வதற்கு, ஸ்போர்ட்ஸ் பெர்பாமான்ஸ்  பேட்ச் என பதக்கங்களை தவறவிட்டிருக்கிறேன்(அம்புட்டையும் வாங்கிட்டேனா நினைசீங்க!!!) blog எழுதத் தொடங்கியதில் இருந்து ஒரு காட்டமான எதிர்வினை கூட வந்ததில்லை. ச்சே!! நம்மளை எல்லாம் ஆட்டையிலே சேர்த்துக்கலை போல என வருந்தியதுண்டு. இதோ வந்தே விட்டது அப்படி ஒரு எதிர்வினை. 

மனநிலை பாதிக்க பட்ட ஒரு பெரியவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வதென்பது மிகப் பெரிய விஷயம்...௨ங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.... ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது. - "தந்தை பெரியாரின் அறிவுரை 100' என்ற நூலிலிருந்து. மரியாதைக்குறிய அடிவருடிகளே! பெரியாரின் புகழ் பாடுவதற்கு முன், இந்த அறிவுரையை பின்பற்றும் பெரியாரின் அடிவருடிகளா நீங்கள்? என்பதை தெளிவுபடுத்தவும்... on தந்தை போற்றுதும்!!    vrkumar18


போங்கப்பா !! இதுக்கெல்லாம் டென்ஷன் ஆனா நாங்க பெரியாரை பின்பற்றோம்னு சொல்வதே தப்பு. நாலு பேருக்கு நல்லது சொல்லணும்னா, செய்யணும்னா இப்படி கல்லடியும், சொல்லடியும் கிடைக்கத்தான் செய்யும் (அப்பா! நாமளும் அறிக்கை விட்டாச்சு)

பென்டிரைவ்


இம்முறை உத்தாரா உன்னிக்கிருஷ்ணனின்  தேன் குரலில்


மீண்டும் சிந்திப்போம்:))

28 கருத்துகள்:

  1. அப்பாடா! ரொம்ப நாளைக்கு அப்பறமா கைப்பையைத் திறந்து கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரி அள்ளி வழங்கிய அன்புத் தங்கைக்கு வாழ்த்துகள்.. அப்பறம் அந்த “மனநிலை பாதிக்கப்பட்ட” முதியவரின் கேள்விக்கு அங்கே போய் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறேன். வாதத்துக்கு மருந்துண்டு, விதண்டா வாதத்துக்கு மருந்து ஏது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரி அள்ளி வழங்கிய அன்புத் தங்கைக்கு வாழ்த்துகள்**
      ஹஹஹா , நன்றி அண்ணா!
      வாதத்துக்கு மருந்துண்டு, விதண்டா வாதத்துக்கு மருந்து ஏது? கரெக்டுண்ணா! அதனால் தான் நானும் சுருக்கமா முடிச்சுகிடேன், நன்றி அண்ணா!

      நீக்கு
  2. யாரோ கடுப்பாக்கி இருக்காங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரோ எவரோ? ஆனால் தீவிர காவி என்பது தெரியுது அபி:)

      நீக்கு
  3. அன்புச் சகோதரி,

    பெரியார் ‘ஆணுக்கொரு நீதி... பெண்ணுக்கொரு நீதியா...? அப்படிச் செய்ய ஆண்கள் அனுமதிப்பார்களா...? சிந்தியுங்கள்...!’ என்பதற்காகக் கூறியது.

    உத்தாரா உன்னிக்கிருஷ்ணனின் அருமையான மிகவும் இனிமையான குரலில் ஆனந்த யாழை மீட்டுகிறாள்...!

    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை போல தெளிந்த அறிவும், திறந்த மனமும் உள்ளவர்கள் இதை புரிந்துகொள்வார்கள் அண்ணா:)

      நீக்கு
  4. அருமை...ஆண்ட்டீ...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. லக்கானி பணிகளை இனிதான் பார்க்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  6. கைப்பையில் கண்ட அனைத்தும் நன்று. பெரியார் பற்றி எழுதி ஏன் வீணாக எதிர்வினை பின்னூட்டங்கள்? கைப்பையில் இன்னும் இடமிருக்கும் போல் இருக்கிறதே. நிறைய வில்லை என்கிறேன் இது எதிர்வினைப் பின்னூட்டமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பாடுற குழந்தையை ஏன் சட்டுன்னு நிறுத்திட?? இன்னும்பாடு என சொல்வது எதிர்வினையா? போங்க சார்,,,இது போங்கு:)) நன்றி சார்!

      நீக்கு
  7. "//blog எழுதத் தொடங்கியதில் இருந்து ஒரு காட்டமான எதிர்வினை கூட வந்ததில்லை. //" - டீச்சர் அம்மா அடிச்சுட்டாங்கன்னா என்ன பண்றது அப்படின்னு பயம் தான் எல்லோருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா! இப்படி நீங்க கலாய்த்து எவ்ளோ நாள் ஆச்சு?? எங்கே போய்டீங்க?? நலமா?

      நீக்கு
  8. உத்ராவின் பாடலும், மற்ற தகவல்களும் நன்று. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கைப்பை :) அருமை சாக்லெட்டுடன் .
    பதக்கம் ! இன்னும் எனக்கு பதக்கம் வரல்லியே :) ஆனா அங்காங்கே கமெண்ட் போடறதாலே குறிப்பா இப்போ லேட்டஸ்ட் பாட்டு controversy க்கு பிறகு 158 எண்ணிகையில் இருந்து ப்ளாக் followers 146 க்கு வந்தாச்சு ..இதுவும் பதக்கத்தில் சேர்த்தியா :)

    உத்தாரா குரலில் தேனினிமை !

    பதிலளிநீக்கு
  10. Hi there, mythili teacher! Long time since I visited here.

    ***எழுதத் தொடங்கியதில் இருந்து ஒரு காட்டமான எதிர்வினை கூட வந்ததில்லை. ச்சே!! நம்மளை எல்லாம் ஆட்டையிலே சேர்த்துக்கலை போல என வருந்தியதுண்டு. இதோ வந்தே விட்டது அப்படி ஒரு எதிர்வினை. ***

    I always look at any issue in two opposite views. Both are mine. But I usually express only one. When you write something which needs some "ethirvinai", it would be one of my two views only. So, I let it go, as it is hard to find a good friend like you! How is it? lol

    பதிலளிநீக்கு
  11. அந்தக் குமாருக்கு நானே பதிலளிக்க நினைத்தேன். ஆனால், உங்கள் தளத்தில், உங்கள் இடுகை பற்றி அவர் எழுப்பிய கேள்விக்கு, முதலில் நீங்கள் பதிலளிப்பதுதான் சரியாக இருக்கும் என்பதால் அப்படிச் செய்யவில்லை. இதோ, நீங்கள் பதிலளித்து விட்டீர்கள். முத்து நிலவன் ஐயாவும் பதிலளித்து விட்டார். இனி என் முறை.

    பதிலளிநீக்கு
  12. இப்படிப்பட்டவர்களுக்கு அவரவர்களின் கருத்துரைகளிலேயே பதிலளிக்காமல், இப்படித் தனிப் பதிவு போட்டு அவர்களை உயர்த்தி விடாதீர்கள்!

    பதிலளிநீக்கு
  13. அட! கைப்பை வந்துருச்சு அருமையான செய்திகளுடன். ஆம் லக்கானி அவர்களின் தலைமையில் தேர்தல்....நல்ல மனிதர்...வாழ்த்துவோம். பயணத்தில் இருந்ததால் (இருவருமே) தாமதம்.

    உத்தரா கேட்டுவிட்டோமே..இப்போது உங்கள் பகிர்விலும்...என்ன ஒரு குரல் இல்லையா..

    கீதா: எனக்கு அந்தக் குட்டிப் பெண் குருவாகிவிட்டார்!!!!

    பதிலளிநீக்கு
  14. அருமையான தகவல்கள் கைப்பையில் நிறையவே ,,,

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. சொல்லும் விசயத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல்.. சரி சரி விட்டுடுவோம் :-)
    கைப்பை கலக்கல் டியர்.

    பதிலளிநீக்கு