ஞாயிறு, 16 நவம்பர், 2014

கனவில் வந்த காந்தி 4

           

           அதென்ன காந்தி நாலு?? ஒன்னுமில்லங்க கில்லர்ஜி அண்ணா ஒரு பதிவு போட்டிருந்தார் கனவில் வந்த காந்தி 1. படிச்சுக்கிட்டு வரும்போதே ஒருவேளை காந்தி என்னையும் கேள்வி கேட்டுவிடுவாரோ என சிறுமூளை எச்சரிக்க, ஓடி போய் பார்த்தேன். தொடர் பதிவு தான் என்ற போதும் பெரிய மனசு பண்ணி, அண்ணா என்னை அந்த பதிவில் சேர்க்கவில்லை. அவர்க்கு அங்கேயே நன்றி சொல்லிவிட்டு, ஒரு fake லீவ் லெட்டரை சமர்ப்பித்துவிட்டு வந்தேன். அந்த லெட்டரை  தில்லையகம் சகாஸ் நம்பிய போதும் ........விதி வலியது பாருங்க. கரந்தை அண்ணா நம்பல.  இதுல லிங்கி ருக்கார்.
   
       நீங்கள் எந்த சனாதானத்தை கைவிடாமல் சமத்துவத்தை கொண்டுவந்துவிட முடியும் என்று கருதுகிறீர்களோ, அதுவே  உங்களுக்கு எதிராய்அமைந்துவிட போகிறது என காந்தியை எச்சரித்த பெரியாரின் வழி செல்ல நினைப்பவள் தான்.  தவிர்க்க முடியாமல் காந்தியோடு உரையாடும்படி ஆகிற்று. மேல படிங்க!! அட !! தொடர்ந்து படிங்கன்னு சொன்ன திரும்ப மேலயா படிப்பீங்கள்!!




01.   நீ மறு பிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
     எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை கிடையாது!
02.   ஒரு வேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
         முதல்வன் படம் பார்த்திருக்கீங்களா? கடைசியாய் ஒரு அட்டகாசமான வசனம் வரும்." என்னையும் இப்படி அரசியல்வாதி ஆக்கிவிட்டீர்களே?" எனும் அர்ஜுனின் வசனத்தை நினைத்துப்பார்க்கிறேன்:))
கியுபா போல கல்வியறிவில் முன்னேறிய நாடாக்க முயற்சிப்பேன். வெளியுறவுக்கொள்கைகளில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவேன்.
03.   இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால்? என்ன செய்வாய்?
          இதை அவர்கள் மெச்சவே செய்வார்கள் :)
04.   முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
         முதியோர் எல்லோரும் அவசியம் கத்தி படம் பார்க்கவேண்டும் என கட்டளை இடுவேன்(அவ்வவ், இருங்க காந்திஜி, brain பாட்டரி down ஆகிடுச்சு!! கில்லர்ஜி அண்ணாவின் பதிவை படிச்சு சார்ஜ் ஏத்திகிட்டு வரேன்)

ம்ம்ம் ! தொடரலாம் ஜி
05.   அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?
(விட மாட்ராரே)ஒவ்வொரு வாரத்தில் ஒரு நாளேனும் தனது தொகுதியின் கிராமங்களில் அந்த கிராம மக்களாகவே சென்று தங்கி, அவர்களோடு வாழ்ந்து அவர்களது வாழ்கையை படிக்கச்செய்வேன் (என் அப்பா செய்தததை தான் சொல்கிறேன், அவர் இன்று தொகுதி அந்தஸ்தை இழந்துவிட்ட மருங்காபுரி யின் குளித்தலை வட்டம் எம்.எல்.ஏ வாக எண்பதுகளில் பணியாற்றினார்)
06.   மதிப்பெண் தவறென, மேல்நீதி மன்றங்களுக்குப் போனால்?
ஒ! அதுக்கு மதிப்பெண் கொடுக்கவேண்டுமே!! நாங்க grade முறைக்கு மாறி ரொம்ப நாள் ஆச்சு காந்திஜி ! நேரம் கிடைக்கையில் தமிழக அரசுப்பள்ளிகளை வந்து பாருங்க!
07.   விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா?
    காப்புரிமை முதலான விஷயங்கள் இலகுவாக இருந்தால் அவர்களில் பலர் வெளிநாட்டுக்கு போகமாட்டார்கள் என்பதே என் கருத்து!!
08.   இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?

             என்னG.O போட்டாலும் அதில் சந்துபோந்துகளை கண்டுபிடித்துத்தரும் சட்டப்பெருமக்கள் அப்படி செய்யாதிருக்க சட்டத்தில் நல்லதேர்ச்சியுள்ள நல்ல மனம் படைத்த மேதைகளை அணுகுவேன்.
09.   மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக?
                தனி நபர் பணம் வைத்துகொள்ள முடியாதபடி செய்துவிடுவேன், கைப்பொருள் என்பது திறனும், உழைப்பும் தான் எனும் நிலையை கொணர்வேன்
காந்திஜி:அது எப்படி சாத்தியம்??
நான்: கில்லர்ஜி அண்ணாவின் பதிவில் கேட்காத கேள்வியை ஒரு தொடர் பதிவில் இடையில் கேட்பது தவறு என்பதை அய்யாவிற்கு நான் சுட்டிக்காடலாமா!!
10.   எல்லாமே சரியாக சொல்வது போல் இருக்கு. ஆனால் நீ மானிடனாய் பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்?
              கண்ணை கசக்கிக்கொண்டு விழித்துவிடுவேன்:))

இவ்வினியப் பதிவினைத் தொடர, நான் அழைக்கும் தோழி 
Geraldine 

இவங்க சாதாரண ஆளுன்னு நினைக்காதீங்க. டைம்ஸ் 2011 ஆண்டுக்கான உலகின் நம்பர் ஒன் ப்ளாகரா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கார். அவர் ஒரு ஆள் பதில் சொன்ன நூறு பேர் சொன்ன மாதிரி(பின்ன உள்ளூர் பதிவர்களை கோர்த்துவிட்டால் காண்டாகுறாங்களே:((

கில்லர்ஜி அண்ணா இந்த பதிவின் நகைச்சுவைகளை தங்கள் வெள்ளை, பிள்ளை மனதோடு கோபிக்காமல் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்:))

48 கருத்துகள்:

  1. வணக்கம்
    வினாவுக்கான பதில் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, நல்லாவே கலாய்ச்சிட்டு இருக்கீங்க,,,, அதுசரி எங்கள்ட்டதான் இப்படி பேசுறீங்கன்னா…. காந்திஜி கிட்டேயும் இப்படித்தானா ? எல்லாமே ரசிக்கும்படியாகவே இருந்தது.

    குறிப்பு - தயவுசெய்து தங்களின் தலைப்பின் இலக்கத்தை 4 என மாற்றவும் ஐயா திரு. B. ஜம்புலிங்கம் அவர்கள் உங்களுக்கு முன்பே 3 வெளியிட்டு விட்டார்.

    பதிலளிநீக்கு
  3. நாம் இருவருமே வரிசை எண்.3ஐத் தந்துள்ளோம் என நினைக்கிறேன். கில்லர்ஜி ஆரம்பித்துவைத்துவிட்டார். அவரைத் தொடர்ந்து கரந்தை ஜெயக்குமார் எழுதியிருந்தார். நான் 3 என்று கொடுத்துவிட்டு வந்தால், தாங்களும் அந்த எண்ணையே தந்ததைக் கண்டு வியந்தேன். எப்படியோ, இருக்கட்டும். மறுமொழிகளைக் கண்டேன். பதிவினைத் தொடர முக்கியமான பதிவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. என்னது "கத்தி" படம் பார்க்கணுமா...? ஹா.. ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட அதல தானே முதியோர்கள் சமுதாயத்திற்காக போராடுவதாய் காட்டுறாங்க:))

      நீக்கு
  5. ஆத்தாடி இதென்ன புதுசாருக்கு ..ஆனா நல்ல ரசிச்சேன்மா

    பதிலளிநீக்கு
  6. கில்லர்ஜியின் பந்துக்கு உங்க உதை பிரமாதம் :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  7. அட... கோலிவுட்...பாலிவுட் தாண்டி ஆலிவுட் போயாச்சா...
    அப்பப்ப இந்த அண்ணனையும் மறந்திடாத தாயீ!
    ( அது ஆரு..? சகோதரி ஜெரால்டினா? சரிசரி... நல்லா இருந்தாச் சரி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மா கில்லர் அண்ணாவை கலாய்க்கலாம்னு போட்டேன். அவங்கள எனக்கு நல்ல தெரியும் but அவங்களுக்கு தான் என்னைய தெரியாது:))

      நீக்கு
  8. ஒன்றிரண்டு பதில்கள் (அடுத்தபிறவி, சம்பளம் கிடையாது-பணம் கிடையாது) உன்பதில்களோடு ஒத்துப்போனதில் ஆச்சரியமில்லை எனக்கு. ஆனா..என்னவிட வழக்கத்துக்கு மாறாக நீ கொஞ்சம் சீரியஸாவே பதில் சொன்னதாத் தோணுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா
      இப்போ அரசியல்வாதிகள் தான் காமெடி பண்ணுறாங்க, நாமளும் ஏன் அரசியலை வச்சு காமெடி பண்ணனும்னு ஒரு சமூக அக்கறை:)) (எப்புடி எல்லாம் சாமாளிக்க வேண்டியிருக்கு......அவ்வ்வ்வ்)

      நீக்கு
    2. அதான பாத்தேன்..
      கடைசி அடைப்புக்குறிக்குள் அடிச்சியே சிக்சரு..! இப்ப நா அம்பேல்!

      நீக்கு
  9. அசத்தல் சகோ!
    நகைச்சுவையாயும் நறுக்கெனவும் சூப்பர் பதில்கள்!..

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. சிரியஸான சிந்தனையைத் தூண்டும் பதில்கள்தான் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புடியா அண்ணா!! அதை தான் நிலவன் அண்ணாவும் சொன்னாங்க!!

      நீக்கு
  11. உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லையா? அல்லது ஒரு பிறவியே போதும் என்கிற திருப்தியா?

    --------------------
    ****ஒ! அதுக்கு மதிப்பெண் கொடுக்கவேண்டுமே!! நாங்க grade முறைக்கு மாறி ரொம்ப நாள் ஆச்சு காந்திஜி !***

    நல்லவேளை காந்தி இந்தக்கேள்வியைக் கேட்டதாலேதான் எனக்கு இந்த "மாற்றம்" நடந்தது தெரிந்தது. நன்றி, காந்தி! :)

    -------------------------

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))
      **நல்லவேளை காந்தி இந்தக்கேள்வியைக் கேட்டதாலேதான் எனக்கு இந்த "மாற்றம்" நடந்தது தெரிந்தது. நன்றி, காந்தி! :)** c.c.e எனும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பற்றி மேலும் தெரிந்துகொள்ள http://makizhnirai.blogspot.com/2013/08/blog-post_16.html இந்த பதிவை டைம் கிடைக்கையில் பாருங்க:))

      நீக்கு
  12. அட, இப்படி கூட ஒருத்தரை மட்டும் மாட்டிவிட்டுட்டு, அவர் 100 பேருக்கு சமம்னு சொல்லலாமா!!!
    (அப்பாடா எனக்கு ஒரு வழியை காமிச்சிட்டீங்க!!!!)

    பதிலளிநீக்கு
  13. காந்தி கேட்ட கேள்விகளுக்கு நடிகை காந்திமதி சொன்ன பதில் போல இருக்கே

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் சொல்ல வந்ததை உங்கள் பதிவில் உள்ள வடிவேலு சொல்லி விட்டார் என்று நினைக்கிறேன்..
    Tha.ma.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாயிண்ட் டை கேட்ச் பண்ணிடீங்க அண்ணா!! அதே !! அதே!

      நீக்கு
  15. தொடர்பதிவு விளையாட்டா !நடக்கட்டும் நன்று!

    பதிலளிநீக்கு
  16. ரசிக்க வைத்தது.
    அதென்ன கத்தி படத்தை காட்டி புத்திய தீட்ட வைக்கிறீங்களா?
    அருமை...

    பதிலளிநீக்கு
  17. முதியோர் எப்படி கத்தி படம் பாக்கமுடியும் . கத்தாமதான் பாப்பாங்க.

    பதிலளிநீக்கு
  18. பதில்கள்
    1. உங்களையும் பலரில் இதில் கோர்த்திருக்கிறார்கள் டியர்!!

      நீக்கு
    2. ஆஹா அப்படியா? பார்க்கிறேன்..ஓரிரு நாட்கள் ஆகும் என் கனவில் காந்தி வர..:)

      நீக்கு
  19. கில்லர்ஜீயை வாசித்துவிட்டு வந்து பார்த்தால்.
    அப்படியே எதிர்வினை ... அசத்தல்...

    பதிலளிநீக்கு
  20. அடப் பாவமே! டீச்சருக்கே அல்வா கொடுத்துருக்கீங்க!!ஹஹ்ஹ் அதாங்க உங்க ஃபேக் லீவ் லெட்டரத்தான்.....நிஜமாவே உங்களுக்கு உடம்பு சரியில்லையோனு ....ம்ம்ம்ம் சரிதான் மது (கஸ்தூரி) சொன்னது.....நீங்களும் எல்கேஜி தான்...ஹஹாஹஹ்......பின்ன அவரு உங்க கூடவே இருக்காருல்ல தெரியாமயா போகும்....நாங்க ரொம்ம்ம்ம்ப பாவங்க....ஃபேக் நு தெரியாம பேக்கு ஆயிட்டோம்....ஹஹாஹ்

    பதிலளிநீக்கு
  21. சூப்பர்! 2வது பதில்....ஏக் தின் ராஜா அதாங்க முதல்வன்.. லாஸ்ட் ரொம்ப ரசித்தோம்.......அயையோ கத்தி படமா....ஹை நாங்க தப்பிச்சோம்...இன்னும் முதியவர் ஆகல...ஹஹாஹ்ஹ இது ரொம்ப ஓவரோ?!!!

    பதிலளிநீக்கு