ஞாயிறு, 24 ஜனவரி, 2016

வீதியில் சந்தித்த பயணச்சித்தர் !!

                சில நாட்களுக்கு முன் தொடர்பதிவு ஒன்றை தொடங்கி இருந்தேன். பயணம் பற்றிய அந்த பதிவுச் சங்கிலியில் கோர்க்கப்பட்ட வெங்கட் நாகராஜ் அண்ணா, தான் நீண்ட விடுப்பில் செல்லபோவதால் வெளியிடுகிறேன் என உடனே பயணங்கள் முடிவதில்லை பதிவை வெளியிட்டார். பயணம் நன்கு அமைய வாழ்த்துக்கள் என வாழ்த்துச் சொன்ன போது நான் துளியும் நினைத்துப் பார்க்கவில்லை இந்த பயணத்தில் அவரை சந்திப்பேன் என்று!! புதுகை கணினித் தமிழ் சங்கத்தில் தான் முதன் முதலில் வலைசித்தரை சந்தித்தேன். நிலவன் அண்ணா புத்தக வெளியீட்டு விழாவில் புகைபடச்சித்தரின் தரிசனம் கிடைத்தது. இன்று இருபத்திமூன்றாம் வீதி கூட்டத்தில் நம் பயணச்சித்தர் வெங்கட் நாகராஜ் அண்ணாவை பார்க்க முடிந்தது அத்தனை சந்தோசம்.

அண்ணாவின் fruit சாலட் போல இந்த வீதியில் நிறைய பேரை பார்க்கமுடிந்தது. நம்ம புதுகை வலைபதிவு குடும்பம் தவிர்த்து நான் சந்தித்த புதிய நபர்களை தான் நான் குறிப்பிடுகிறேன். கவிஞர் நிலா பாரதி, கிருஷ்ண வரதராஜன் இவங்க ரெண்டு பேருமே புதுகையை சேர்ந்தவர்கள் என்றாலும் எனக்கு இத்தனை அத்தனை பரிட்சயம் இல்லாதவர்கள். அனு வரதராஜன் வந்திருப்பார்கள் என எதிர்பார்த்தேன். வரவில்லை. தமிழ் இளங்கோ அய்யா வந்திருந்தார். ஓகே இப்போ ஓவர் to வெங்கட் அண்ணா.


வெங்கட் நாகராஜ் அண்ணாவோடு கஸ்தூரியும், நானும், மகி குட்டியும்.


    
கூட்ட அரங்கத்துக்குள் நுழைந்து, இருக்கையில் அமர்ந்த பின் நம்மை அடையாளம் தெரியுமா என்ற ஐயமும், சரி கஸ்தூரியோடு உள்ளே நுழைந்தோம், அதனால் அடையாளம் கண்டுகொள்வார் என்ற நம்பிக்கையோடும் வணக்கம் வைத்தேன். வெங்கட் அண்ணா அத்தனை உற்சாக புன்னகையோடு வணக்கம் வைத்தார்.  கூட்டத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். சிறப்புரை ஆற்ற தொடங்கிய போது அரங்கமே ஒரு விசயத்தை ஒரே மனதாக கூறிய கருத்து. உங்க கூட பயணம் செய்தது போல இருந்தது என்பதுதான் அது. நானும் வழிமொழிந்தேன். உங்கள் பதிவுகளை போலவே உங்க பேச்சும் ஒரு நிறைவான பயண உணர்வை தந்தது என்றேன்.  நிகழ்ச்சி முடிந்த பின் சில மணித்துளிகள் அண்ணாவோடு பேசிகொண்டிருந்தேன். பேச்சு தமிழ் வலை உலகை முழுவதுமாக சுற்றி வந்தது. எனக்கு ஆச்சர்யமான விஷயம் என்வென்றால் இதுவரை யாரிடம் பேசினாலும் எஸ்.ரா ஒரு புத்தகத்தில் என்றோ, சுஜாதா என்றோ, வண்ணதாசன் என்றோ மேற்கோள் சொல்லி பேசக் கேட்டிருக்கிறேன். வெங்கட் அண்ணா வலை உலக நண்பர்களின் பதிவுகளில் இருந்து  அத்தனை நுணுக்கமாக மேற்கோள் காட்டி பேசினார். ஒன்பது மணி முதல் ஒன்பது மணிவரை வேலை என்கிறார். எப்படித்தான் இப்படி துடிப்பாய் வலைத்தளத்தில் இயங்குகிறாரோ!!! 


பொதுவாக வெங்கட் அண்ணாவின் பதிவுகளை தொடர்ந்து வசிப்பவர்கள் அதில் இடம்பெறும் புகைப்படங்களுக்கு விசிறியாகிவிடுவார்கள். ஆனால் அப்படியான அருமையான புகைப்படங்களை எடுக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அதிலும் முக்கியமாக பழங்குடி பெண்களை புகைப்படம் எடுக்கும் வேளையில் ஏற்படும், சந்திக்கும் பிரச்சனைகளை மிக நகைசுவையாக எடுத்துக்கூறினார். ஷங்கர் பட மேகிங் பார்த்தது போல இருந்தது. பயணத்தை பற்றி ரசித்து ரசித்து பேசினார். ஆலங்குடி நீலா அக்கா அவர்களது உணவு அங்காடியில் இருந்து வாழைப்பூ வடையும், வரகரிசி பாசயமும் தருவித்திருந்தார்கள். நிகழ்வின் சுவையை அது மேலும் கூட்டியதெனலாம். கவி வைகறை அண்ணாவும், தென்றல் கீதா அக்காவும் மிக அருமையாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். நிலவன் அண்ணா வலைபதிவர் கையேடு அடங்கிய தோள்பையை அன்பளித்தார். நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. இனி வெங்கட் அண்ணாவின் பதிவுகளை படிக்கையில் உற்சாகமான அந்த வெள்ளை புன்னகை நினைவு வந்துகொண்டே இருக்கும்.

டிஸ்கி; சொல்ல மறந்துட்டேன். இது என் இருநூற்றி ஒன்றாவது பதிவு.

29 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. 201க்கு முதலில் வாழ்த்துக்கள்...

    வெங்கட் அண்ணாவைச் சந்தித்த தங்களின் மகிழ்ச்சி பகிர்வில் தெரிகிறது... நாங்களும் அங்கிருந்த சந்தோஷம்...

    பதிலளிநீக்கு
  3. பேஸ்புக்கில் சுடச்சுட படித்தேன்!உலகத்தை கைகளுக்குள் சுருக்கிக்கொண்டது என்பது இதைத்தான்!

    நிகழ்வுகளை அருமையாக அழகாக தொகுத்த விதம் அருமை.

    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஷாக்கா முகநூலில் படித்ததை இங்கு நினைவுகூர்ந்தமைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  4. கஸ்தூரி அண்ணா குட்டையாய்த் தெரிகிறாரே :-)))
    வெங்கட் அண்ணாவோடு உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சி.. இரட்டை சதத்தைத் தாண்டியதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் டியர். ஆயிரங்களைத் தாண்டுங்கள் :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இருவரையும் நேரில் பார்த்து அதை தான் நினைத்தேன் டியர்:) மிக்க நன்றி!

      நீக்கு
  5. பயணச்சித்தர்! நல்ல பட்டம்.

    சுவாரஸ்யமான சந்திப்புதான். அவர் பயணக் கட்டுரைகளுக்கும், அதைவிட புகைப் படங்களுக்கும் நானும் ரசிகன்தான்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா சகோ வெங்கட் அண்ணாவின் பயணப்பதிவுகள் படிப்பவர்களை அந்த இடத்துக்கே அலைதுச்சென்றுவிடும்:) மிக்க நன்றி

      நீக்கு
  6. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    பயணச்சித்தர் பட்டம் பொருத்தம்தான்
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. பயணச் சித்தர்.... அட இது கொஞ்சம் ஓவர்... :)

    உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் சற்று நேரம் இருக்க முடியவில்லை என்ற வருத்தமும்.

    வீதியில் உங்கள் அனைவரையும் சந்தித்த நினைவுகள் இன்னும் நெஞ்சோடு.....

    நன்றி நண்பர்களே....

    பதிலளிநீக்கு
  8. 201வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய நிறைய எழுத வேண்டும்...
    பயணச்சித்தர் தான் அண்ணாவுக்கு சரியான பெயர்...

    பதிலளிநீக்கு
  9. 201-வது பதிவு.....

    மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பல பதிவுகள் எழுதிடவும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. பலரும் ஃபேஸ்புக்கை நோக்கி நகர்ந்து விட்டபோதிலும், இன்னும் விடாப்பிடியாக உங்களது தனித்தன்மையோடு வலையுலகில் வலம் வரும், சகோதரி அவர்களின் 201 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    புதுக்கோட்டையில் நேற்று (24.01.16) நடைபெற்ற – வீதி கலை இலக்கியக் கள கூட்டத்தினைப் பற்றி , நேற்றே சுடச்சுட பகிர்ந்தமைக்கு நன்றி! நானும் நேற்றே உங்கள் பதிவினைப் படித்து விட்டேன்.

    என்னைப் புகைப்படச் சித்தர் என்று சொல்லி இருக்கிறீர்கள். வலையுலகில் சகோதரி ராமலஷ்மி போன்றவர்களோடு ஒப்பிடும்போது நான் ஒன்றுமே இல்லை. மேலும் நான் முன்பு Yashika FX3 Super பயன்படுத்தியபோது வெளிக்காட்டிய திறமை இப்போது இல்லை. இப்போதுள்ள கேமராக்களை ஒரு சிறு குழந்தை கூட பயன்படுத்தி நன்றாகவே எடுக்கலாம். எனவே என்னைப் புகைப்படச் சித்தர் என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா புகைபடசித்தர் என்ற பட்டதை நானெல்லாம் கொடுக்கவில்லை அண்ணா! பதிவர் சந்திப்பு பதிவுகள் பலவற்றில் அப்டிதான் உங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் அப்படி சொல்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இனி தவிர்த்துவிடுகிறேன் அய்யா! மன்னியுங்கள்.

      நீக்கு
  11. அருமை மைதிலி! அழகாக உணர்வுப் பூர்வமாக எழுதிவிட்டாய்! இதை எனது வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றிடா.

    பதிலளிநீக்கு
  12. இனிமையான சந்திப்புகள். பயணச்சித்தர்...பொருத்தமான பட்டம் தான்.மேலும் பதிவுகள் தொடர வாழ்த்துகள்.தம +1

    பதிலளிநீக்கு
  13. 201 என அறிந்து மகிழ்ச்சி. மென்மேலும் பதிவுகள் தொடரவும், சிறப்பாக அமையவும் வாழ்த்துகள். சந்திப்பினைப் பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  14. 201 வது பதிவு வாழ்த்துகள் முதலில் சகோ!! தொடருங்கள்! தொடர்வோம்

    ம்ம்ம் பயணசித்தர்! அட அழகா இருக்கே பொருத்தமான பெயரும்தான். வெங்கட்ஜியின் பதிவுகளுக்கு மயங்காதவர்கள் இருப்பார்களா என்ன!!! புகைப்படங்கள் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அத்தனை அழகாக இருக்கும்..அருமையான சந்திப்பு சகோ!

    பதிலளிநீக்கு
  15. பகிர்வுக்கு நன்றி! 201வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. திரு வெங்கட் நாகராஜ் அவர்களை சந்தித்ததை பகிந்ததமைக்கு நன்றி மைதிலி! வர வர புதுக்கோட்டைக்கு உங்களால் பெருமையா இல்லைனா உங்களுக்கு புதுகையில் இருப்பதால் அதிகப் பெருமையா?னு சந்தேகம் வருது. :) எதாவது வம்பாகச் சொன்னால்தான் பின்னூட்டம் எழுதிய திருப்தி வருது எனக்கு. :)

    பதிலளிநீக்கு
  17. வந்த வேளையை கரக்டா பார்த்துடீங்க வருண்:))

    சந்தேகமே இல்லாமல் புதுகையில் இருப்பதால் எனக்கு பெருமை, முன்னதற்கு இன்னும் சில காலம் ஆகலாம், ஆகாமலும் போகலாம்:)

    பதிலளிநீக்கு
  18. 201-ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். நண்பர் வெங்கட்டை சந்தித்ததுபற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சித்தர்..பித்தர்.. என்று பட்டம் வேறு! ப்ரமாதம்!
    புகைப்படம் நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  19. இருநூற்றியோராவது பதிவுக்கு என் அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள் முதலில்!

    வலைப்பதிவுகளிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசுவது என்பது புருவம் உயர்த்த வைக்கிறது! இப்...படி ஒரு பதிவரா!! இனி அவரையும் படிக்கிறேன். பொதுவாக, வலையுலகில் நீங்கள் அறிமுகப்படுத்துபவர்கள் எனக்கு நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள். வெங்கட் நாகராஜ் அவர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் வலைப்பூவுக்குச் சென்றதாக நினைவில்லை. இதோ, இந்தப் பதிவைப் படித்துவிட்டு இப்பொழுதுதான் அவர் வலைப்பூவுக்கு முதன்முறை செல்கிறேன்.

    பதிலளிநீக்கு