வெள்ளி, 24 அக்டோபர், 2014

கைப்பை -4

டைரி:

கடந்த பதிவை படிச்சீங்களா? இல்லைனா கொஞ்சம் இங்க சொடுக்கி படிச்சுடுங்களேன். இல்லன்னா கன்டியுவிட்டி மிஸ் ஆகும் அதனால சொல்லுறேன். என்னது நீங்க ஏற்கனவே படிச்சாச்சா. அப்போ கண்டின்யூ பண்ணுங்க.

     திங்கள் கிழமை அந்த மழையை பார்த்த உற்சாகத்தில் ஒரு கவிதையை பதிவேற்றிவிட்டு, திரும்பிபார்த்தால் வழக்கமாக என் பதிவுகளை நம் நண்பர்கள் கலாய்ப்பார்கள். இந்த முறை செம பல்பாய் அந்த வருணபகவான் கலாய்ச்சுட்டார். அட, ஆமாங்கோ. மழை நின்னுபோச்சு! என்னை மேலும் கலாய்ப்பது போல ஈரோடு கதிர் அண்ணா google பிளஸ் ல மழையா நிறுத்துறதுக்கு தமிழன் ரெண்டு வேலை பண்ணுறான். ஒன்னு கவிதை எழுதுறான் இல்லாட்டி ஸ்கூல்க்கு லீவ் விடுறாங்க என பகிர்ந்து என்னை நூடில்ஸ் ஆக்க, இதோ மூணு நாளாய் மழை பெய்கிறது, நான் ஒரு கவிதை எழுதலையே, நம்ம புதுகை ஆட்சியரும் அந்த ஸ்டேடஸ் சை படிச்சுட்டார் போல அவரால் ஆனா முயற்சியா தீபாவளிக்கு முதல் நாள் , மறுநாள் விடாது மழை பெய்தும் கூட அவரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை.

ஒரு வார்த்தை
       நான் ஏழாவதோ ,எட்டாவதோ படித்துக்கொண்டிருந்த பொழுது சுஜாதா மூலம் தெரிந்துகொண்ட ஒரு வார்த்தை அனாமிகா (பெயரற்றவள்). ரொம்ப அழகான வார்த்தையா அது இருந்தது. இப்போ பதிவுலகம் பழகியபின் கலகக்காரனுக்கு மறுபெயராய் இங்கே அனானி புழங்கப்படுவதை பார்கிறேன்.
இந்த சூழலில் இந்த ரிஷேர் என்னை வெகுவாய் கவர்ந்தது
இதன்மொழிபெயர்ப்பு

 பரிந்துரைக்கபடுபவரை நான் ஏற்பதில்லை

தலைவர்களை நான் அடையாளம் கண்டுகொள்வதில்லை

வல்லமையை நான் பொறுப்பதில்லை

அவர்கள் சட்டங்களை நான் ஆதரிப்பத்தில்லை

அதிகாரங்களை நான் மதிப்பதில்லை

பணம் பற்றி எனக்கு அக்கறையில்லை

அவர்கள் குற்றேவல்களுக்கு நான் அடிபணிவதில்லை

நான் சுதந்திரமானவன்

நான் ஒரு பெயரிலி:))))
(நல்ல பெயர்த்திருக்கேனா?)

அழைப்பிதழ்

பதிவர் சந்திப்பு அன்று அக்கா தென்றல் கீதா தன் ஒரு கோப்பை மனிதம் புத்தகத்தை வெளியிடுறாங்க.


நம்ம கிரேஸ் டியரும் தன் துளிர் விடும் விதைகள் புத்தகத்தை வெளியிடுறார்.

கரந்தைஜெயக்குமார் அண்ணாவும் தனது கரந்தை மாமனிதர்கள் புத்தகத்தை வெளியிடுகிறார்.


அந்த ஸ்டால்ல நிலவன் அண்ணாவின் புத்தகங்களும், பாலாஅண்ணாவின் புத்தகங்கள் கிடைக்கும். சரிதாயணத்தை நூலாக படிக்கப்போகிறேன் என்பது மகிழ்ச்சி.

பென் டிரைவ்ஹிப் ஹாப் தமிழன் என்றாலே பசங்க "க்ளபுல மப்புல " என தாளம் தட்ட தொடங்கிவிடுகிறார்கள். ஒரு சேன்ஜ் க்கு இதை கேளுங்க. எனக்கு மிக பிடித்த ஒரு ஹிப் ஹாப்.

21 கருத்துகள்:

 1. வணக்கம்
  சகோதரி
  சொல்லிய வார்த்தைகளும் மொழி பெயர்ப்புக்களும் நூல்ஆசிரியர்கள் பற்றிய பார்வையும் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அன்புச்சகோதரி,

  தங்களின் பரிந்துரை ஏற்கப்படுகிறது...

  அனாமிகா...!

  ’என் பெயரே மறந்து போன இந்த வனாந்திரத்தில்...

  என்னைப் பெயர் சொல்லி அழைத்தது யார்? நீயா?’

  திருமதி.சுகாசினி ஒரு திரைப்படத்தில் பேசுவது நினைவிற்கு வந்தது...!

  தென்றல் கீதா தன்‘ ஒரு கோப்பை மனிதம்’ புத்தகத்தை வெளியிடுவதையும்...
  கிரேஸ் தன்‘ துளிர் விடும் விதைகள்’ புத்தகத்தை வெளியிடுவதையும் அறிந்தோம்.

  மகிழ்ச்சி... அவர்களின் நூல் வெளியீடு வெற்றியடைய வாழ்த்துகள். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நல்ல மொழி பெயர்ப்பு சகோதரி!

  வாழ்த்துக்கள் புத்தகங்கள் வெளியிடும், தென்றல் கீதா சகோதரி, தேன்மதுரகிரேஸ் அவர்களுக்கும்! மேலும் மேலும் அவர்கள் புத்தங்கங்கள் வெளியிட வாழ்த்துவோம்! - துளசி, கீதா

  என்னப்பா மைதிலி இப்படி நீங்களும் அழகான ஹிப்ஹாப் போட்டு என் பாட்டு ஜுரத்தைக் கூட்டி ஜன்னி காண வைச்சுட்டீங்க! கஸ்தூரிய சொல்லிருந்தேன் ....இப்ப நீங்களும்....ரொமப்வே நல்லாருக்குப்பா....ரசித்தேன்......- கீதா

  பதிலளிநீக்கு
 4. ****இதன்மொழிபெயர்ப்பு

  பரிந்துரைக்கபடுபவரை நான் ஏற்பதில்லை

  தலைவர்களை நான் அடையாளம் கண்டுகொள்வதில்லை

  வல்லமையை நான் பொறுப்பதில்லை

  அவர்கள் சட்டங்களை நான் ஆதரிப்பத்தில்லை

  அதிகாரங்களை நான் மதிப்பதில்லை

  பணம் பற்றி எனக்கு அக்கறையில்லை

  அவர்கள் குற்றேவல்களுக்கு நான் அடிபணிவதில்லை

  நான் சுதந்திரமானவன்

  நான் ஒரு பெயரிலி:))))
  (நல்ல பெயர்த்திருக்கேனா?)***

  இதில் வேடிக்கை என்னவென்றால், பதிவுலகில், சுஜாதாவே, சுஜாதானு ஒரு கருத்தை நாகரிகமாக்ச் சொல்லீட்டு, அவரே அனானியாக வந்து அநாகரிகமாக இன்னொரு கருத்தைச் சொல்லலாம். This does happen in the internet world! Never think that anonymous guy is some "cheap guy". It is possible that you may be having highest regards for the same guy when he/she responds in his "original name"! It is much more complicated than what people imagine!

  Anyway, எதுக்குமே ஒரு விலை இருக்கு..

  அனானியாக வர்ரவரை வரவேற்காமல், அந்த ஆப்ஷனை தூக்கலாம். பலர் அதை செய்வதில்லை! Our own people encourage such culprits! For what? for getting few more responses in their post!

  அனானியாக வருபவரை என்ன சொல்லி திட்டினாலும் அவர் அவருக்காகவே திரும்பி வாதம் செய்ய முடியாது! Because he is a LEAST RESPECTED human being as he is anonymous! So, there is a big price one pays for that too!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனானியாக வருபவரை என்ன சொல்லி திட்டினாலும் அவர் அவருக்காகவே திரும்பி வாதம் செய்ய முடியாது! Because he is a LEAST RESPECTED human being as he is anonymous! So, there is a big price one pays for that too! - நூற்றில் ஒரு வார்த்தை வருண். கருத்து வேறுபாடுகளை வரவேற்கலாம், சொல்வதில் நாகரிகம் இருந்தால். சொல்முறையே கேவலமாக இருந்தால்... வருண் சொல்வதை நான் வரவேற்கிறேன்.

   நீக்கு
 5. புத்தகங்களை வாங்கி ஆதரிக்க வேண்டியது பதிவர்களின் கடமை !நல்ல அறிமுகம் ,ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள்!
  த ம 3

  பதிலளிநீக்கு
 6. பாராட்டு உன்னை பாதிக்கவில்லை என்றால் நீ வளர்கிறாய் என்று பொருள். பெயரிலிகளின் (நல்லபெயர்தான்) வெற்றுத்தூற்றல் உன்னைப் பாதிக்கவில்லை என்றால் நீ வளர்ந்துவிடடாய் என்று பொருள். போற்றினாலும் தூற்றினாலும் நம் படைப்பின் உண்மைத்தன்மை நமக்குத் தெரியும். சொல்வோரின் தரத்தைக் காட்டுவதாகவே புரிந்துகொள்ள வேண்டும். வலை அரசியல்ல இதெல்லாம் சகஜமம்மா...! மீண்டும் கண்ணதாசன்தான் - போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்“.. உன் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. சிறந்த கருத்துப் பகிர்வு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 8. அந்த hip-hop துள்ளலிசைப் பாடல் அருமை.

  பதிலளிநீக்கு
 9. நல்ல மொழிபெயர்ப்பு தோழி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 10. தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
  http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

  பதிலளிநீக்கு
 11. மொழி பெயர்ப்பு நன்றே !
  பதிவர் சந்திப்பு அன்று அக்கா தென்றல் கீதா தன் ஒரு கோப்பை மனிதம் புத்தகத்தை வெளியிடுறாங்க.
  நம்ம கிரேஸ் டியரும் தன் துளிர் விடும் விதைகள் புத்தகத்தை வெளியிடுறார்.கரந்தைஜெயக்குமார் அண்ணாவும் தனது கரந்தை மாமனிதர்கள் புத்தகத்தை வெளியிடுகிறார்.
  அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ....! மேலும் பல நூல்கள் வெளியிட வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ...!
  அம்முவும் வெகு விரைவில் நூல் வெளியிட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன் ..!
  சரிதாயணத்தை நூலாக படிக்கப்போகிறேன் என்பது மகிழ்ச்சி. ஆஹா இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே அம்மு. நிகழ்ச்சியை வீடியோ எடுத்து பதிவேற்றினால் நாமெல்லாம் பார்ப்போம் இல்லடா. எனிவே நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற என் வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 12. அருமையான மொழிப்பெயர்ப்பு.

  புத்தகங்கள் வெளியிடும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. பெயரிலியை மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கீங்க மைதிலி. பாராட்டுகள். நட்புகளின் புத்தகவெளியீடுகள் மகிழ்வைத் தருகின்றன. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. மொழிபெயர்ப்பு அருமை..
  பகிர்வுகள் நிறைவு..பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
 15. இனிமை...
  மொழிபெயர்ப்பு அருமை...
  புத்தக ஆசிரியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. பெயரிலி...அருமை அருமை
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. அனைத்து நூல்களும் கைவசம் இன்னும் படிக்கவில்லை காரணம் பதிவர் சந்திப்பு பதிவை பதிவிடும் வேலை.........
  மதுரையில் தங்களை குடும்பசகிதம் சந்தித்தமைக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 18. பெயரிலி - சூப்பர்! இந்தப் பதிவை நான் ரொம்ப லேட்டா பாக்குறேன்..நன்றி டியர்.

  பதிலளிநீக்கு
 19. இந்த பதிவு எப்படியோ என் கண்ணில் இருந்து தப்பி விட்டது....

  மதுரை மல்லிகைக்கு மயங்கி இப்போதுதான் இந்த அம்மா மயக்கம் தெளிந்து வருகிறீர்களோ?

  பதிலளிநீக்கு