புதன், 24 ஜூலை, 2013

தன்னை தொலைத்தல்


கைபேசி தொலைத்தல்
என்பது நாட்குறிப்பை
தொலைத்தல் போல் தான்


தொலைத்த நொடியில்
நண்பர்கள் யாவரும்
தொடர்பு எல்லைக்கு வெளியே


பெருநகரின் தனிமைகளில்
பெருந்துயரில் வருகின்ற
மெல்லிசையை தொலைத்தல்


தாய்மையடைந்ததாய்
பகன்ற தோழியின்
குறுஞ்செய்திப்புன்னகையை தொலைத்தல்


குழந்தைகளின் ,குடும்பத்தின்
குறுநகை உறைந்த
குறும்புகளை 'குதுகலத்தை தொலைத்தல்

எண்களை மட்டுமல்ல பலவேளைகளில்
தன்னையும் தொலைதல் போல் தான்
கைபேசி தொலைத்தலும்
                                             -கஸ்தூரி           -








  

3 கருத்துகள்:

  1. கவிதை நல்லா வந்திருக்கு.
    இன்னும் கூட சற்றே நீளலாம்.
    கவிஞர் தங்கம் மூர்த்தி கூட,
    “செல் இலார்க்கு இவ்வுலகமில்லை” என்று எழுதியிருக்கிறார். கவிதைக்குத் தலைப்பும், முடிப்பும்தான் ரொம்ப முக்கியம். இதில் முடிப்புக்கூடப் பரவாயில்லை. தலைப்பு இன்னும் யோசித்தால் இன்னும் பொருத்தமாக வைத்திருக்கலாம்.
    நான் கட்டுரைகளுக்கே ரொம்ப யோசித்து, அதில் உணர்ச்சியுடன் வந்த சொற்களைக் கோத்து வைத்துவிடுவேன்.
    Any How, a goog and sharp poem, keep it up!
    (English Teacherulla?)
    அன்பு அண்ணன், நா.மு.

    பதிலளிநீக்கு
  2. அண்ணா good தானே சொல்லவந்திங்க .ஏன் கேட்கிறேன்னா goog அப்படினா ஆஸ்திரேலிய பேச்சு வழக்கில் முட்டை என்று பொருள்.மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  3. அம்மா தாயி, எனக்கு ஆஸ்திரேலிய மொழியில் அதுவும் வழக்கு மொழியெல்லாம் தெரியாது. சத்தியமா குட் னுதான் தட் னேன் அது குக் னு வந்திருச்சு. எழுத்துப் பிழைதான் “சொல்லில் பிழையிருந்தால் மன்னிக்கலாம்“ னு நக்கீரரே ஏபி நாகராஜனா வந்து சொல்லியிருக்காரு... நீ மன்னிக்கக் கூடாதா? இனிமே கவனமா எழுதறேன்.(பாட்டெழுதிப் பெயர்வாங்கும் புலவர்கள் குற்றங்கண்டுபிடித்தே... நீ ரெண்டு வகையாவும் இருக்கியே?)
    GOOD - சரியா?

    பதிலளிநீக்கு