புதன், 31 ஜூலை, 2013

------------------------------------------------




தந்தை போன துக்கத்தில் தனயன்
சொத்தை பிரித்து விட்ட திருப்தியில்
சொட்டு கண்ணீரோடு மருமகள்

தோள் கொடுக்க இருந்த ஒரே சொந்தத்தை
தொலைத்துவிட்ட துயரில் தங்கை

அழைக்க ஒரு மாற்றில்லாத குறையில்
அழுது புலம்பும் மனைவி -இவர்களுக்கிடையே

தப்பிசைக்கு தனை மறந்து
தாளத்தில் லயித்தாடும்
கொட்டுக்கார ச்சிறுவனை
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா ?  
                                                  -கஸ்தூரி
.

2 கருத்துகள்:

  1. ஆமாம்மா.. கொட்டுக்காரச் சிறுவன் மட்டுமல்ல, சிலநேரம் “பெரிய சாவு” என்னும் அரிதான நிகழ்வுகளில் உறவினரும்கூட... நம் தமிழர்கள் சாவைக்கூடக் கொண்டாடுகிறார்களே என்று நான் நினைத்ததுண்டு. பெரிசுகளின் கருமாதியில் கறிவிருந்து, தடபுடல் எல்லாம் வேறென்ன..? உன் கவிதை இந்தச் சிந்தனைகளைக் கிளறி விட்டது. கவிதை வாழ்வியலோடு விஷூவலாகவும் இருந்தால் ஜெயித்துவிடும் என்னும் என் கருத்துக்கு இந்தக் கவிதை நல்ல சாட்சியாக உள்ளது. வாழ்த்துகள். ஆமா நல்லாத்தான எழுதுற? நெறயப் பேரு பாக்க வேண்டிய இணைப்பு தருவதற்கென்ன? உடன் செய்க.

    பதிலளிநீக்கு
  2. நன்றி அண்ணா ,தங்கள் கருத்துக்களை கவனத்தில் கொள்கிறேன் .





























    பதிலளிநீக்கு