ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

எங்கள் விடுமுறை நாட்கள் !


நான்கு ரெட்டைகிளி, ஒரு விமானம் தீப்பெட்டி
கொடுத்தால் கிடைக்கும் ரஜினி பிலிம் 
அண்ணன்களோடு ஓடும் சனி,ஞாயிறு 


கூடிபொருள் சேர்த்து கூடஞ்சோறு 
பம்பரம், பட்டம் விட்டு 
பறந்து போகும் கால் பரீட்சை லீவு 

மருதாணி அரைத்து,மார்கழி கோலத்துக்கு 
மண் சலித்துககொடுத்து,
வாடகை சைக்கிளோடு 
மறைந்து போகும் அரையாண்டு லீவு 

காப்பு கட்டி தான் தொடங்கும் 
முழு ஆண்டு விடுப்பு,
கச்சேரி பார்த்து 
நீர்மோரும் பானக்கமும் குடித்து
கும்மி கொட்டி,காப்பறுத்து முடியும்
விடுமுறையும், திருவிழாவும் 


என் அன்புமகள்களின்  எல்லா விடுமுறைகளும் 
சொல்லி வைத்தது போல்
அவதாரில் தொடங்கி 
குங் ஃபூ பாண்டா வில்  தான் முடிகிறது 

                                                                       -கஸ்தூரி 

7 கருத்துகள்:

 1. Super,nabagam varuthu papaya enbamana natkal,mentum antha kaalam kudu eriva

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/06/blog-post_13.html?showComment=1402631677376#c4771738721863922113
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. வலைச்சரத்தின் மூலம் வந்தேன் வாழ்த்துக்கள்.
  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் கஸ்தூரி - படமும் அருமை - கவிதையும் அருமை - வலைச்சர அறிமுகம் வேறு - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 5. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு
 6. வலைச்சர அறிமுகத்தால் உங்களை தளம் எனக்கு அறிமுகமானது. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு