புதன், 28 ஆகஸ்ட், 2013

ஜெயாம்மாவும்,கண்ணன் கதையும்.


           இது ஒரு நட்புக்கு, நட்பான இதயத்துக்கு சமர்ப்பணம். ஒப்பனை மனிதனின் தெய்வம் எழுதியவள் கண்ணன் கதை எழுவது விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி போல் ஸ்டான்ட் என்று தோன்றலாம். ஆனால் அதற்கு முன் ஜெயாம்மா.
 
               பொதுவாக எல்லோர்க்கும் அவர்  A.E.E.O அம்மா. எனக்கு ஜெயாம்மா. அவரிடம் ஒரு அசாத்திய திறமை உண்டு. அது மேடைப்பேச்சு. அதிலும் அவர் கதை சொல்ல தொடங்கினால் நான் குழந்தையாகி விடுவேன். அப்படி அவர் சொன்ன ஒரு கதை தான் கண்ணன் வெண்ணை திருடிய இந்த கதை. படித்து பாருங்கள் மற்றொரு முறை எங்கு கண்ணனை பார்த்தாலும் ஜெயாம்மா நினைவுக்கு வருவார். ஆனா அம்மா அளவுக்கு சொல்வேனான்னு தெரியல. ட்ரை பண்றேன்.
         

 
                   
கண்ணனுக்கு உரியில தொங்குற வெண்ணெய் மேல ஒரு கண்ணு. 
யசோதா எப்போ வெளில போவான்னு காத்துட்டு இருக்கான். யசோதாவுக்கா தெரியாது  கண்ணன் இதுக்காக காத்திருக்கான் என்று. அவள் மும்மரமாய் ஒரு மணியை கட்டுற அப்போதானே கண்ணன் வெண்ணையை எடுத்தா சத்தம் கேட்கும். கண்ணன் நண்பர்களுக்கு கவலை இனிவெண்ணெய் எப்படி கிடைக்கும். கண்ணன் மணியிடம் மணியே  நாங்கள் எங்களுக்கு வேண்டிய வெண்ணையை எடுக்கும் வரை ஒலி எழுப்ப வேண்டாம் என வேண்டினான். மணியும் அவனுக்கு உதவுவதாய் உறுதியளித்தது. கண்ணனின் ஒவ்வொரு நண்பர்களாக சாப்பிட்டனர். மணியும் அமைதியாக இருந்தது. இறுதியாக கண்ணன் வெண்ணையை எடுத்து வாயில் வைத்தானோ இல்லையோ மணி ஒலிஎழுப்பதொடங்கி விட்டது.
                                 கண்ணன் மாட்டிக்கொண்டான். யசோதா வலிக்கிற மாதிரியா அடிப்பாள். நம் அன்புக்குரியவர்களை காயப்படுத்தினால் நமக்கு தானே அதிகம் வலிக்கும். சும்மா ரெண்டு அடி வச்சுட்டு போய்டா. இப்போ கண்ணன் மணியை கேட்கிறான் ஏன் என்னை அடிவாங்க வைத்தாய். மணி சொல்லுச்சு கண்ணா என்னை மன்னிச்சுக்கோ. நான் வேணும்னே உன்னை காயப்படுதல. என் இயல்பு. என் கடமை உணர்ச்சி என்னை மீறி செய்துட்டேன். எப்போ உனக்கு நைவேத்தியம் பண்ணாலும் நான் ஒலி எழுப்புவேன் இல்லையா? அதே போல இன்னைக்கும் செய்துட்டேன் சொன்னதாம்.
        
           இந்த கதை யாருக்கு புரியுதோ, இல்லையோ திவ்யா !

           என்ன யாரையும் காணோம். அவங்களாம் கதை ஆரம்பிக்கும் போது போறாங்களா? நடுவுல போறாங்களா?முதல அதை நோட் பண்ணனும்.....................
                                                              கஸ்தூரி

6 கருத்துகள்:

 1. முயற்சி செய்கிறேன் என்று சொல்லி விட்டு முழுக்கதையும் முழுவீச்சில் சொல்லி விட்டீர்களே! அருமை,.வாழ்த்துக்கள் சகோதரி. நகைச்சுவை கூடுதல் சுவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துக்களுக்கும் ,வருகைக்கும் நன்றி !

   நீக்கு
 2. மணியான கதை , புராணங்களில் இன்றைய நகைச்சுவை மசாலாவை தூவிய எழுத்தாளுமை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துக்களுக்கும் ,வருகைக்கும் நன்றி !

   நீக்கு
 3. கதை ஏற்கெனவே தெரிந்தது தான்.
  ஆனா, அதைச் சொன்ன விதம் அழகு.
  ஆனா...திவ்யா யாரு? புரியலயே!
  இருந்தாலும்,
  ”என்ன யாரையும் காணோம் .அவங்களாம் கதை ஆரம்பிக்கும் பொது போறாங்களா?நடுவுல போராங்களா?முதல அத நோட் பண்ணனும்...” என்ற வடிவேலுவை சரியான இடத்தில் புகுத்திய அழகை ரசித்தேன்.
  கவிஞர் மட்டுமல்ல ஒரு திறமையான கதாசிரியரும் உனக்குள் ஒளிந்து கிடக்கிறார் என்று புரிகிறது... கஸ்தூரியின் ராட்சஷன் கதை அப்படித்தான் எனக்குப் பிடித்தது.. கவிதை, கதை எனத் தொடரும் உன் படைப்புலகம் இன்னும் விரிந்து பரந்து வளர அண்ணனின் உளப்பூர்மான வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சும்மா வடிவேல் டயலாக் அண்ணா ,வாழ்த்துக்களுக்கு நன்றி

   நீக்கு