செவ்வாய், 29 ஏப்ரல், 2014

நிலைத்தகவல்iiஉப்பு இருக்கான்னு பார்க்கிறேன், வெந்துடுச்சான்னு பார்க்கிறேன் என அடுப்படியையே சுற்றிவர ஆளில்லா வீடுகளில் அசைவம் சமைக்க விரும்புவதில்லை பெண்கள்.

குழந்தைக்கு பிசையப்படும் சோற்றில் நாசி நிறைப்பதை தாய் மணம்(மனம்) என்று சொல்லலாம் #நெய்மணம் என்றும் சொல்லலாம்.

அம்மா, காதலி, மனைவி, மகள், பேத்தி என பெறப்படும் முத்தங்களை கொண்டும் கணக்கிடலாம் ஆணின் பருவங்களை.

குழந்தைத்தனம் என்பதை இப்பல்லாம் குழந்தைங்ககிட்ட கூட பார்க்க முடியிறதில்லை # டெர்ரர் குட்டீஸ் சுட்டீஸ்

ஏழாம்அறிவுல டாங்லி போட்டு தள்ளுன கெட்ட ப்ரபசர் தான் ஏற்வமாட்டின் விக்கிறாரு. யாரும்  கவனிச்சிங்களா?

என் சொந்த ஊரில் மாடர்ன்னாகவும், பணியிடத்தில் மண் மணம் மாறாத நேட்டிவிட்டியோடும் இயல்பாய் நடிக்கக்கற்றுதந்திருக்கிறது வாழ்க்கை.

முன்னெல்லாம் வேட்பாளர் சரியில்லேன்னா நம்ம ஊருப்பக்கம் துடைப்பத்தை காட்டுவாங்க, இந்த முறை வேட்பாளரே துடைப்பத்தோடு வந்ததை சொல்லிச்சொல்லி அப்பத்தா ஆத்துபோராக.


கல்யாண வீடுகளில் பம்பரமாய் சுற்றி வேலை பார்ப்பவர் மணப்பெண்ணினால் அண்ணன் ஆக்கபட்டவராகவும் இருக்கலாம்.

சேகுவேரா டீ.ஷர்ட் எடுத்துத்தரட்டுமா என்றேன். பெரியார் படம் போட்டு வரட்டும் என்கிறான் என் சகோதரன்.

பரபரப்பான காட்சிக்கிடையே வரும் விளம்பரம் போல் சட்டென தூங்கிவிடுகிறார்கள் குழந்தைகள் # பயணப்பொழுதுகள்பி.கு;
மே மாதம் முழுக்க net fasting. so blogக்கு லீவ். நாளை மட்டும் தான் வருவேன். நாம் சொந்தபந்தங்களோடு மனதை ரீசார்ஜ் செய்துவிட்டு ஊர்த்திருவிழா கதையோடு திரும்ப வருகிறேன். அதுவரை have a nice time மக்களே(நோ, நீ கிளம்பிட்டா nice டைம் தானேன்னுலாம் சொல்லக்கூடாது :)))

35 கருத்துகள்:

 1. ஓ வலை விரதமோ
  கோடை விடுமுறையினை மகிழ்வோடு கழிக்க வாழ்த்துக்கள் சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 2. #மே மாதம் முழுக்க net fasting. so blogக்கு லீவ். #
  உறுதியாய் சொல்கிறேன் ,உங்களால் இந்த விரதத்தை கடைப் பிடிக்க முடியாது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் பகவான்ஜீ எப்பவுமே சரியாத்தான் சொல்வார்.
   நான் இதை வழிமொழிகிறேன். இல்லன்னா உண்ணாவிரதம், போராட்டம், ப்ளாக் (நெட்)மறியல் போராட்டத்தால் வலையுலகமே ஸ்தம்பிச்சுடும். வேணாம்.. சொலலிட்டேன்...அழுதுறுவேன்...ஆமா...

   நீக்கு
  2. ஏன் மக்களே! ஏன் இந்த கொலைவெறி@#@#
   நெட் இல்லாத இடத்திற்கு போக போகிறேன்! நடுவே முயற்சி செய்கிறேன் அண்ணா:))

   நீக்கு
 3. நிலைதகவல் அருமை.அப்பத்தாவின் ஆற்றாமை அசத்தல்.
  மகிழ்ச்சிகரமான விடுமுறையாக அமையட்டும். வாழ்த்துக்கள்.


  பதிலளிநீக்கு
 4. அருமையான பகிர்வு...

  கோடை விடுமுறை - மிக்க மகிழ்ச்சி..... புத்துணர்வுடன் திரும்பி பதிவிட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வெங்கட் அண்ணா! நல்ல வேளை பகவான் பாஸ் போல் நெகட்டிவா சொல்லாம விடீன்களே!

   நீக்கு

 5. ///நீ கிளம்பிட்டா nice டைம் தானேன்னுலாம் சொல்லக்கூடாது :)))///

  சரி அப்படி சொல்லல ஆனா நீங்க ஊருக்கு போன அங்க உள்ளவங்களுக்கு கெட்ட டைமாமே???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்க உள்ளவங்க என் உள்ளத்தில் உள்ளவங்க, so நோ BAD டைம்ஸ் :))

   நீக்கு
 6. என்னங்க இப்படி திடுதிப்புன்னு லீவு எடுக்குறிங்க....இதெல்லாம் நல்லா இல்லீங்க சொல்லிப் புட்டேன்..இப்படி லீவு எடுக்குறதுக்கு முதலில் பெர்மிஷன் வாங்கனுமுங்க அப்படி நீங்க செய்யாததால் உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாமுன்னு மூத்த பதிவர்கள்கிட்ட ஆலோசனைப் பண்ணிட்டு வந்து பேசுறேன். நடவடிக்கை எடுக்குறதுக்கு முன்னால் மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு போட்டுடுங்க்....இப்படிக்கு மதுரை நாட்டாமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க ஆஆஆஆ,
   லெட்டர் கொடுக்காம லீவ் எடுக்கிறவங்க எப்டிதான் ரூல்ஸ் பேசுறாங்களோ :)))
   நெட் பாஸ்டிங் எல்லாம் உங்க ஐடியா தான் பாஸ்!!

   நீக்கு
  2. இப்படிபட்ட உரிமையான நட்புகள் கிடைத்தது வலைப்பூவின் தயவால் தான். மிக்க நன்றி சகோ! மீண்டும் வருவேன்!!

   நீக்கு
 7. Summa Narukunu sonnenga.. குழந்தைத்தனம் என்பதை இப்பல்லாம் குழந்தைங்ககிட்ட கூட பார்க்க முடியிறதில்லை # டெர்ரர் குட்டீஸ் சுட்டீஸ்..

  பதிலளிநீக்கு
 8. ஆஹா பயணமா தோழி, விடுமுறையை சந்தோஷமாக கழித்துவிட்டு வாருங்கள் தோழி . have a nice time with ur family. வரும் போது நிறைய தகவல்களோடு வாருங்கள் காத்திருக்கிறோம். மிக்க மகிழ்ச்சி !
  வாழ்த்துக்கள் ....! குட்டீஸ் இருவரும் குதிப்பார்களே.

  பதிலளிநீக்கு
 9. நிலைத்தகவல் ஒவ்வொன்றும் மனம் ஈர்த்து ரசிக்கவைக்கின்றன. விடுமுறையை மகிழ்ச்சியாய்க் கொண்டாடிவந்து நிறையத் தகவல்களைப் பகிருங்கள்.

  பதிலளிநீக்கு
 10. விடுமுறையை சந்தோஷமாக கழிக்க வாழ்த்துக்கள் தோழி.

  குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோ! இனியா, காவியாவை கேட்டதாக சொல்லவும்!

   நீக்கு
 11. 'அம்மா, காதலி, மனைவி, மகள், பேத்தி என பெறப்படும் முத்தங்களை கொண்டும் கணக்கிடலாம் ஆணின் பருவங்களை'.-
  This is Mythili.
  Now Im with my Grn.dtr. 'Semmozhi'
  Cho....cute Poem.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செம்மொழி !!!!!! என்ன அருமையான பெயர்!
   பார்க்க ஆவலாக இருக்கிறது!!
   மகிழ்ச்சி அண்ணா!

   நீக்கு
 12. நிலைதகவல்ii - நிலைத்தகவல் என வந்திருக்க வேண்டும்
  ஒற்றுப் பிழை காரணமாக “மே மாதம் முழுக்க net fasting. so blogக்கு லீவ்“ என்னும் இந்தப் பகுதி நிராகரிக்கப் படுகிறது. ரைட்? ஒழுங்கு மரியாதையா இந்த லீவ் லெட்டரை கேன்சல் பண்ணும்படி அறிவுறுத்தப் படுகிறீர்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருத்திட்டேன் அண்ணா! ப்ளீஸ் உங்கள் மருமகள்களை மனத்தில் வைத்து விடுப்பு வழங்க தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்:((
   சந்திப்போம் அண்ணா! உங்கள் பாதையில் என்னும் என் பணி முடியவில்லை என்றே கருதுகிறேன்! மீண்டும் வருவேன். தாய் வீட்டிற்கு வந்த பெண்ணை இன்னும் ரெண்டு நாள் இருந்துவிட்டு போ என்பது போல் இருக்கிறது உங்கள் அன்பு!

   நீக்கு
 13. மிக அருமை தோழி..அப்பத்தாவின் ஆற்றாமை, கல்யாண வீட்டில் வேலை செய்பவர், குழந்தைகளின் தூக்கம் இவை மிக அருமை..மாடர்ன் மற்றும் மண் மனம் எனக்குப் பொருந்துவதாகத் தோன்றுகிறது.. :)

  என்ன இப்டி குண்ட போட்டுடீங்க..லீவுன்னு? மே மாதம் எனக்கும் தொடர்ந்து வர முடியாது..ஆனா அப்பப்போ சவுண்ட் குடுப்பேன் :)
  விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாட வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. அண்ணன் ஆக்கப்பட்டவரும் ,பயணப்"போ"ழுதுகளும் :) - நல்லாருக்கு

  பதிலளிநீக்கு
 15. இப்ப நீங்க மணப்பாறையில்தான் இருக்க வேண்டும் அபத்தாவையும் அத்தையையும் பார்த்துக்கோங்க நான் விசாரித்ததாகக் கூறவும் விடுமுறை
  முழுவதும் விரதம் இருக்காதுன்னு நினைக்கிறேன், பாத்துக்கிட்டு வாங்க.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம்

  தங்களின் விடுமுறை சிறப்பாகஅமையட்டும்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 17. அருமையான படிவுகள் சகோதரி!

  மதுரைத் தமிழன் மட்டும் லீவுலெட்டர் கொடுக்காம லீவு எடுப்பாராம்....என்ன டீச்சர் கண்டுக்காம இருக்கீங்க!

  நாங்களும் வலைத்தளம் வர இயலாமல் போய்விட்டது! பல பணிகள் காரணமாக! நாங்கள் வரும் சமயம் நீங்கள் லீவில்! ம்ம்ம்ம்ம்....பரவாயில்லை! சாதிசனம் எல்லாம் பாத்துப்புட்டு நல்லா குலாவிட்டு வாங்க டீச்சர் மேட்டரோட.......Enjoy!....

  பதிலளிநீக்கு
 18. விடுமுறை இனிதாகட்டும் சகோதரியே,,,,,
  Killergee
  www.Killergee.blogspot.com

  பதிலளிநீக்கு
 19. அருமை . ரசனையான பதிவு வாழ்த்துக்கள் மா

  பதிலளிநீக்கு
 20. ஓகோ... டீச்சர் லீவு மேலே பூட்டீங்களா...? அப்பால வந்து கண்டுக்றேன்...

  பதிலளிநீக்கு
 21. என்ன தோழியே செளக்கியமா? சொந்தபந்தங்களோடு மனதை ரீசார்ஜ் செய்துவிட்டீர்களா?
  மே மாதம் முழுக்க net fasting. so blogக்கு லீவின்னு சொல்லீட்டீங்க. இப்ப வந்து பார்த்தா நீங்க இன்னும் வரல..ஒகே நீங்க நெட் இல்லாத கிராமதிற்கு போனதாலா. உங்களுக்கு விஷ்யம் தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை. இந்த வருஷசத்தில் இருந்து மே மாதத்திற்கு 15 நாட்கள் மட்டுமே.. ஜுன் மாதம் 45 நாட்கள் என்று மாற்றிவிட்டார்கள். அதனால சொன்ன வாக்கு தவரமா இப்பவே வந்துடுங்க
  have a nice time இது உங்களுக்கு சொன்னதா அல்லது எனக்கு நானே சொன்னதா என்று கேள்வி எல்லாம் கேட்க கூடாது

  பதிலளிநீக்கு