வியாழன், 5 செப்டம்பர், 2013

என் கோப்பை நிரப்பும் உன் கோபங்கள் !


கோபமெனும் பனித்துண்டுகளால்
என் கோப்பை நிரப்புகிறாய்

உன்னை அறியாமல் அது உருகும் நாளில்
தெளிந்த திரவத்தில் உன் நேசம்


கொத்துமலர்களோ
கொட்டும் கவிதையோ அல்ல
உன் கோபங்கள் தான் காட்டுகின்றன
எனக்கான உனதன்பை

மீளமுடியாத உன் கோபச்சுழலில்
மீளும் வழி தெரிந்தும்
மீண்டும் மீண்டும் சிக்கிகொள்கிறேன்
வெயில் நாடும் குயில் போல -கஸ்தூரி

8 கருத்துகள்:

  1. சில நேரங்களில் கோபத்தைக்கூட ரசிக்க தானே செய்கிறோம் கோபப்படுபவர் நம் அன்புக்குரியவர்களாக இருந்தால்..மீளும் வழி தெரிந்தும் மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்வது அழகு தான். சகோதரிக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மீதான அக்கரையில் வரும் கோபங்களை நாம் பெரும்பாலும் புரிந்து கொள்வதில்லை என்றே கருதுகிறேன்.தங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சகோதரரே!கருத்துக்கள் படைப்பாளியை ஊக்குவிக்கும்.மிக்க நன்றி.

      நீக்கு
  2. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பது தவறான முன்னுதாரணம் என்றாலும் அதில் ஓர் உளவியல் உண்டு. தன்னை விரும்பும் காதலி-லன் விரும்பாதது போல் நடிக்கும்போது அதைக்கண்டுபிடிக்கப் பெரும்பாலும் காதலி-லன்கள் கையாளும் உத்தி இந்த உளவியல்தான். ஆனாலும் காதலில் அன்றி வேறு சமயங்களில் -குடும்பத்தில் கூட- இதை ஏற்க முடியாது-கூடாது என்பதே என் கருத்து
    - அன்புடன் அண்ணன் நா.மு.
    பி.கு.பனித்துண்டை பணிதுண்டாகவும், கோபச்சுழலைக் கோபசுழலாகவும் வரும் எழுத்து மற்றும் வல்லொற்றுப் பிழைகளைக் கொஞ்சம் கவனிக்கலாகாதா என் கவித்தங்கை? ”சொல்லில் பிழையில்லை இருந்தாலும் அது மன்னிக்கப் படலாம்”-திருவிளையாடல் தமிழ்த்திரைப்படத்தில் நக்கீரனாக வரும் ஏ.பி.நாகராஜன்

    பதிலளிநீக்கு
  3. அண்ணா பிழையை திருத்தி விட்டேன் .மாறுபட்ட உங்கள் சிந்தனை மகிழ்ச்சி அளிக்கிறது .இந்த தவறுக்காக கவித்தங்கை என்றீர்களே அது மந்தியை குறிக்கவில்லை தானே?

    பதிலளிநீக்கு
  4. அன்பை வளர்ப்பதில் சிறு கோபங்களுக்கு பெரும் பங்குண்டு.கவிதை சிறப்புடன் உள்ளது

    பதிலளிநீக்கு
  5. This poem sounds like "very personal" one! :-)

    கோபம் என்னும் பனித்துண்டுகளை எங்கேயோ உருக்கிக் கொண்டு வந்து குளிரில்லா நீரால் இக் குடுவையை நிரப்பாமல், கோபம் என்னும் பனிக்கட்டிகளால் தான் நன்கறிந்த "இக்குடுவையை" நிரப்புவது நன்று. Because he/she does know, this cup can withstand "ice" as well as "steam" and it is "unbreakable"! The one who pours ice-cubes in this cup is a very wise person, imho :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. that is my style to give personal touch to my close friends:)) there are only two types of friends I've . (boy and girl. nope) friends and close friends:)) that's all:)) thank you so much for spending time your precious time here Varun:)).

      நீக்கு