மீசை விழுந்துவிடுமோ மேடையை விட்டு இறங்கும் வரை
அச்சமாய் இருந்தது பாரதிக்கு
முன்னிருக்கை சண்டையில்
மூழ்கியிருந்தனர் காந்தியும், புத்தனும்
ஆத்திசூடியை ஆங்கிலத்தில் எழுதி
மனனம் செய்தது ஔவைச்சிறுமி
கால்சிலம்பை தொலைத்தற்கு
கடிந்து கொண்டார் கண்ணகியின் தந்தை
எல்18 ரக உதட்டுச் சாயத்தில் வெற்றிலைக்கறை கொண்டுவந்ததை
வெற்றியென கதைத்தபடி குறத்தியின் தாய்.
தீவிர நட்பில் திளைத்தபடி
திருடனும் போலிசும்
முடியெல்லாம் நரைத்திருக்க முன்பல் நீண்டிருந்தது
விரல் சூப்பி கலாமிற்கு
இத்தனைக்கும் இடையே என்னைக் கவர்ந்தது
வள்ளுவர் கையில் காலக்ஸி
-கஸ்தூரி
ஹாஹா எல்லாம் அருமைங்க...மாற்றுடைப் போட்டியை கண் முன் கொண்டுவந்தீர்கள் :)
பதிலளிநீக்குநன்றி கிரேஸ் தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்
நீக்குசகோதரிக்கு வணக்கம்..
பதிலளிநீக்குஅத்தனையும் ரசிக்க வைக்கிறது. கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்கள் 2008 ஆம் ஆண்டே அவரது மகனும் நமது சகோதரர் விஜய் நெருடா அவர்களின் திருமணத்தின் போது தாம்பூலப் பைக்கு பதிலாக ஒரு நூலை கொடுத்துள்ளார். அதில் திருவள்ளுவர் கணினி முன் அமர்ந்திருப்பார். தங்களின் சிந்தனை அன்றே அவருக்கும் வந்துள்ளது. நல்ல சிந்தனை சகோதரி. வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்..
ஆஹா ,இது தெரியாதே எனக்கு .நன்றி சார்
நீக்குஆகா அருமை சகோதரியாரே அருமை.
பதிலளிநீக்குநன்றி சகோதரரே !தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும்
நீக்குஅடடா.... :)))
பதிலளிநீக்குசிரிச்சு ஓயலை எனக்கு..:)
என்ன ஒரு கற்பனை! அசத்திட்டீங்க..
வாழ்த்துக்கள் தோழி!
நீக்குநன்றி இளமதி ,ஆனால் தங்களது க்வளிங் அடித்திக்கொள்ளமுடியாது ,அசத்துறிங்க
கண்ட காட்சியை
பதிலளிநீக்குகவியாக்கிய விதம் அருமை...
நிகழின் மாற்றங்களுக்கு ஏற்ப
இலக்கியங்களும் இலக்கணங்களை
மாற்றிக்கொண்டன...
அழகான குழந்தைகளின் மாறுவேடப் போட்டி
விழிகளுக்கு முன் நிழலாடுகிறது..
வாழ்த்துக்கள் சகோதரி.
==
என் தளம் வரை வந்து என்னை வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல.
தொடர்கிறேன் உங்கள் பதிவுகளை..
வரவேற்கிறேன்.தங்கள் வாழ்த்திற்கும் ,வருகைக்கும் மிக்க நன்றி
நீக்குஇந்தக் காட்சிகளெல்லாம் ஏற்கெனவே பார்த்தது தான், ஆனாலும் அதைச் சொன்ன விதத்தில்தான் கவிதை அள்ளுகிறது! இதிலும் “ஆத்திசூடியை ஆங்கிலத்தில் எழுதிப் படித்த ஔவைக் கிழவி“தான் மறக்கமுடியாத எதார்த்தம். நண்பர் பாண்டியன் சொன்னது போல,வள்ளுவர் கணினியில் திருத்துவதும், பில்கேட்ஸ் திருக்குறள் படிப்பதுமான படம் என் மகள் திருமணத்தின்போது நான் சொல்லி எழுதச்சொன்ன கற்பனை! நீ என் தங்கையல்லவா? அண்ணனின் அதே கற்பனை வருவதில் தவறென்ன? வாழ்த்துகள் பா! (இன்னும் கிராமத்து வள்ளி திருமண நாடகத்தின் இடையில் மேடைக்குப் பின்னால் வள்ளியும் முருகனும் ஒரே பீடியை மாற்றி மாற்றி இழுப்பதை நீ பார்த்திருக்க வேண்டுமே!..அடாடா!)
பதிலளிநீக்குgreat people think alike ,do alike என்பார்கள் .உங்கள் உயரத்துக்கு என்னால் சிந்திக்கமுடிந்தால் !!!!!!!!!!மிக்க மகிழ்ச்சி அண்ணா .
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅண்ணா இந்த கருத்தை உங்கள் தம்பியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் .இப்ப okயா ?
நீக்குதிருப்தியான ஓ.கே.னு சொல்லமாட்டேன், பரவாயில்லாத ஓ.கே. சரிவிடுன்னு சொல்ல மனசு வரல. அடுத்த முறை இன்னும் முயற்சி செய்
நீக்குநவீன திருவள்ளுவர் மிக ரசனையுள்ளவர் போலும் புதிய கலக்சியில்:)) வாழ்த்துக்கள் சகோதரி கவிதைக்கு!
பதிலளிநீக்குமிகுந்த மகிழ்ச்சி சகோதரர் நேசன் அவர்களே !உங்கள் புதிய படைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
நீக்கு
பதிலளிநீக்குஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
தங்களது முதல் வருகை
நீக்குஅதுவும் இனிக்கும் தமிழில் வாழ்த்துடன்
மிகுந்த நன்றி அய்யா
தங்கள் வருகையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்
வாழ்த்திற்கும் ,வருகைக்கும் மிக்க நன்றி !!!
வணக்கம் சகோதரி மிகவும் ரசித்தேன் ,கண்முன் அனைவரும் நிழலாய்.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் ,வாழ்த்திற்கும் மிகுந்த நன்றி சகோதரி!
நீக்குநேற்று எங்கள் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின நிகழ்ச்சியில் இந்த உன் கவிதைத் தொடர்ச்சி போல... இன்னொன்று நடந்ததுப்பா...
பதிலளிநீக்குமேடைக்கு வந்த வீராபாண்டிய கட்டபொம்மன் வந்த வேகத்தில் (வசனத்தை மறந்துவிட்டதால் பயக சிரிச்சிட்டாய்ங்கன்னு...) அழுதுகொண்டே -புறமுதுகு காட்டி- ஓடியே போய்விட்டான்! பிறகு அவனைச் சமாதானப் படுத்தப் பெரும்பாடு பட்டோம் போ!
பாவம் அந்த வீரபாண்டியன் .ஹா ஹா !
நீக்குஆஹா அற்புதம்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் ,வாழ்த்திற்கும் மிகுந்த நன்றி சகோதரி!
நீக்குகண் முன்னே கவிதையில் கொண்டு வந்த காட்சிகள் அருமை அருமை நன்றாக ரசித்தேன். கற்பனை வளமும்....ம்...ம்.. அசத்திட்டீங்க....
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் ,வாழ்த்திற்கும் மிகுந்த நன்றி சகோதரி!
நீக்குஆஹா, அருமையான ஒரு மாறுவேட நிகழ்ச்சியில் நடந்தவைகளை எல்லாம் கண் முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள் சகோதரி.
பதிலளிநீக்கு"//ஆத்திசூடியை ஆங்கிலத்தில் எழுதி
மனனம் செய்தது ஔவைச்சிறுமி//"
இங்கும் வெகு சில குழந்தைகள், நாடகத்தில் வரும் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு மனனம் செய்வார்கள். உங்களுடைய அந்த வரியைப் படித்தவுடன் அந்த நியாபகம் தான் வந்தது.
நன்றி சகோ, உடன் படித்து கருத்திட்டமைக்கு!
பதிலளிநீக்கு