இந்த இரண்டாம் பருவம் தொடங்கும் போது வழக்கமான குறுஞ்செய்தியில் கூடுதலாக ஒரு தகவலை அனுப்பியிருந்தன பல ஆசிரியர் சங்கங்கள் .அது 'joy of giving week' கொண்டாட வேண்டும் என்பதே.அறிக்கை சமர்ப்பிக்க கோரப்படததால் பலரும் அதனை கவனித்தார்களா என தெரியவில்லை.
அது என்ன என தெரிந்துகொள்ளும் ஆவலில் wiki ஐ கேட்டேன்.காந்தி ஜெயந்தியை தொடர்ந்து ஒரு வாரம் 2.அக்டோபர் முதல் 8 அக்டோபர் வரை கொடைமனம் வளர்ப்பதற்காக கொண்டாடப்படுகிறதாம் .
'கொடுக்குற நோக்கம் உறுதியாயிட்ட எடுக்குற அவசியம் இருக்காது' என்ற வரிகள் மனதில் மின்னலிட என் வகுப்பில் 'joy of giving week' பற்றி பகிர்ந்து கொண்டேன் .மிஸ் பணம் தான் கொடுக்கணுமா ?என்றாள் அபி .இல்லை அபி அதை நிறைய வச்சுருக்கற பெரியவங்க பாத்துப்பாங்க நம்மால் முடிந்த சின்னபொருளை,உதவியை,ஏன் ஒரு தோழியின் முகத்திற்கு ஒரு புன்னகையை கூட பரிசளிக்கலாம் என்றேன்.
நோட்டு போட்டு எழுதவே தொடங்கி விட்டார்கள் என் வண்ணத்துப்பூச்சிகள் .அவனுக்கு சாக்லேட் ,அவளுக்கு பேனா ,பாட்டிக்கு உதவி ,என நீண்ட அவர்களது பட்டியலில் எனக்கு ஒரு ஜோக்கை குறுஞ்செய்தி அனுப்பி எனது புன்னகையையும் சேர்த்திருந்தனர்.
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்க கற்று கொடுப்பது தானே மொழி ஆசிரியரின் பணி .இன்றோடு இந்த கொடுத்தல் வாரம் நிறைவு பெறுவதால் உங்களுக்கு பிடிச்சதை சொல்லுங்க மிஸ் என்று ஒரே அனத்தல்.

மாணவர்களிடம் இப்படியொரு பண்பை வளர்த்து விட்டு விட்டால் ஏது இவ்வுலகில் வன்முறைக் காட்சிகள்? என் வண்ணத்துப் பூச்சிகள், பக்கீஸ், டார்லிங்ஸ் அம்மாடியோவ்! மாணவர்களை நேசிக்கிற அழகிய மனம் படைத்த ஆசிரியர் எங்ககிட்டேயும் இருக்காங்கப்பா! சிறப்பான தகவலுக்கும், அழகிய பகிர்வுக்கும் நன்றிங்க சகோதரி.
பதிலளிநீக்குசெய்வன திருந்தசெய்வதை விட செய்வன விரும்பிச்செய் என்பது அவசியம் தானே ?நன்றி சார்
நீக்குரசித்தேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றிகள்
நீக்குகல்வித்துறையின் இந்த யோசனை குழந்தைகளிடையே “பகிர்தல்“பண்பை வளர்க்கும் என்று இரண்டாண்டுகளுக்கு முன்பே எங்கள் பள்ளி முதல்வரிடம் ஒரு யொசனையாகச் சொன்னேன்... என்னை லூசு மாதிரி பாத்துட்டு விட்டுட்டாரு... அது இருக்கட்டும். அனுபவத்தைச் சொன்ன விதமும் நல்லா இருக்கு. கடைசிவரிகளில் கவிதை வந்து எட்டிப்பாத்துருச்சு... வாழ்த்துகள் பா. சொல்லாம கொள்ளாம ஒரு நாள் உங்க பள்ளிக்கூடத்துக்கு வரணும்போல இருக்குப்பா.. வர்ரேன்..
பதிலளிநீக்குதங்கள் வருகை என் பாக்கியம் .அவசியம் வரணும் அண்ணா
நீக்குஅவசியம் படிக்கிறேன்
பதிலளிநீக்குவணக்கம் தோழி!
பதிலளிநீக்குஎன் வலைப்பூவில் உங்கள் வருகை கண்டு தேடி வந்தேன்...மிக்க நன்றி உங்களின் வருகைக்கு!...
ஆகா... அற்புதமாக மகிழ்நிறைவாகவே இருக்கின்றதே உங்கள் தளமும்!..
அழகும் அருமையுமிக்க பதிவுகள்!
இங்கு இப்பதிவில் நீங்கள் பகிர்ந்த விடயங்கூட
மனதிற்கு அத்தனை நிறைவாயிருக்கு...
இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும்
அவசியமானதே... மிக மிகச் சிறப்பு!.
வாழ்த்துக்கள்!
ஒரு புதிய தோழியின் நட்பு மலர்வதில் மிக்க மகிழ்ச்சி .நன்றி தோழியே
நீக்குமைதிலி ஆசிரியராக இருக்கீங்களா? ஹையோ எனக்குப் பிடித்த வேலை. அதன் அனுபவங்களைப் பற்றி எழுதுங்களேன். என் மூத்த சகோதரி தலைமையாசிரியராக இருக்கின்றார்கள். பள்ளத்தூர் சிட்டாள் ஆச்சியில் படித்தவர்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு,, குழந்தைகளை மெருகேற்ற சிறப்பான திரைப்பாடல்களும் இருக்கின்றன..
பதிலளிநீக்குசகோதரி உடன் வர முடியவில்லை. என்கணனி தொல்லை கொடுத்து
பதிலளிநீக்குஇப்போது தான் சரியாக்கியுள்ளது. சொல்லவே பயமாக உள்ளது.
மறுபடி மக்கர் பண்ணுமோ என்று.
சரி தங்கள் பதிவிற்கு வருகிறேன் மிக மகிழ்வாக இருந்தது.
மிக எளிமையாக எழுதியுள்ளீர்கள். அருமை. மீண்டும் சந்திப்போம்.
(என்னைப்பற்றி வலையில் இருக்கிறது.
வாசிக்கலாம்.டெனிஸ் மொழியில் 3 வருடங்கள் படித்து
14 வருடங்கள் பிள்ளைகளோடு வேலை செய்தேன்.)
வேதா. இலங்காதிலகம்.